அழுத்தம்

அழுத்தம் என்பது ஒரு பொருளின் மீது அதன் ஒரு குறிப்பிட்ட அலகுப் பரப்பில் அதற்குச் செங்குத்தான திசையில் செலுத்தப்படும் விசையாகும்.

அழுத்தத்தை, அழுத்தத்தால் மாறுபடும் ஒரு பண்பைக் கொண்டு ஓர் அளவியால் (ஒரு மானியால்) அளப்பர். அழுத்தமானி கொண்டு அளக்கப்படும் அழுத்தம் சூழ் அழுத்தத்தில் (ambient pressure) இருந்து எவ்வளவு விலகி இருக்கிறது என்று குறிக்கும் அழுத்தம் ஆகும்.

அழுத்தம்
படத்தில் ஒரே எடை உள்ள ஒரே அளவுகள் கொண்ட இரு பருமப் பொருள்கள் காட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு பொருளின் எடையும் 10 கிலோ கிராம் என்று கொள்வோம். அப்பொருளின் அளவுகள் 4 செமீ x 4 செமீ x 8 செமீ என்று கொள்வோம். இடப்புறம் இருக்கும் பொருள் செங்குத்தாக ஒரு (4x4 செமீ)2 சிறிய பரப்பளவு மீது இருப்பதால் 10 கிலோ கிராம் எடையும் அந்த சிறிய இடத்தின் மீது விழுந்து விசையைச் செலுத்துவதால் அழுத்தம் அதிகமாக இருக்கும். அங்கே அழுத்தம் = 10 கிகி/(4x4 (செமீ)2 = 10/16 கிகி/செமீ2 ஆகும்.. வலப்புறம் காட்டப்பட்ட பொருள், அதே 10 கிலோ கிராம் எடை கொண்டு இருந்தாலும், அது 8x4 (செமீ)2) பரப்பளவில் அமர்ந்து இருப்பதால் அந்த 10 கிலோ கிராம் எடையானது அதிக பரப்பளவில் பரந்து விழுந்து விசையைச் செலுத்துவதால், அழுத்தம் குறைவாக இருக்கும். அழுத்தம் = 10 கிகி/ (8x4 (செமீ)2)) = 10/32 கிகி/செமீ2. எனவே வலப்புறம் இருப்பது சரிபாதி அழுத்தம்தான் தருகின்றது. அழுத்தம் என்பது எவ்வளவு விசை ஒரு குறிப்பிட்ட பரப்பில் உள்ளது என்பதாகும்.

ஆங்கிலத்தில், அழுத்தத்தைக் குறிக்க, P என்னும் எழுத்தைப் பாவிப்பர். F என்பது விசையெனவும், A என்பது பரப்பு எனவும் கொண்டால், கணித முறையில், ஒரு குறிப்பிட்ட அளவு பரப்பில் எவ்வளவு விசை செங்குத்தாக விழுகின்றது என்று காண,

    அல்லது

என்று குறிப்பிடலாம். வெப்ப இயக்கவியலில் அழுத்தம் என்பது முக்கியமான ஒரு கூறு ஆகும்.

அலகு

அழுத்தம் 
இரசப் பாரமானி

அழுத்தத்தின் SI அலகு பாஸ்கல் (pascal) எனப்படும். இது ஒரு நியூட்டனுக்கு சதுரமீட்டர் (N/m2 or kg·m−1·s−2) க்குச் சமனாகும். இது பாயிஅமுக்கத்தில் பங்களிப்புச் செய்த அறிவியலாளரான பிலைசு பாஸ்கலின் பெயர்கொண்டு 1971இல் இருந்து SI அலகாக அழைக்கப்படுகின்றது. பார் என்னும் அலகும் பரவலாகப் பயன்பாட்டில் இருக்கும் ஒன்று. ஒரு பார் 100,000 பாஸ்கலுக்குச் சமமானது.

திரவ அழுத்தம்

நீரின் கீழ் நீந்துகின்ற ஒருவர் திரவ அழுத்தத்தை உணருவார். இது உண்மையில் நீந்துபவரின் மேலாக உள்ள நீரின் திணிவு காரணமாக எற்படுத்தப்படும் அழுத்தமாகும். நீந்தும் ஆழம் அதிகரிக்கும் போது அழுத்தமும் அதிகரிப்பதை உணருவர். ஆகவே ஆழம் அதிகரிக்கும் போது அழுத்தமும் அதிகரிக்கின்றது.

திரவ அமுக்கம் இது தவிர திரவ அடர்த்தியிலும் தங்கியிருக்கும். இதன் அடிப்படையில் திரவநிரலால் ஏற்படுத்தப்படும் அமுக்கம் பின்வரும் வாய்ப்பாட்டின் மூலம் தரப்படும்.

    அழுத்தம் 

இங்கு:

    P திரவ அழுத்தம்
    g திரவமேற்பரப்பிலுள்ள புவிஈர்ப்புவிசை
    ρ திரவ அடர்த்தி
    h திரவ நிரலின் உயரம்

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Tags:

அழுத்தம் அலகுஅழுத்தம் திரவ அழுத்தம் மேற்கோள்கள்அழுத்தம் புற இணைப்புகள்அழுத்தம்அழுத்தமானிசூழ் அழுத்தம்விசை

🔥 Trending searches on Wiki தமிழ்:

சங்கம் மருவிய காலம்வாழைப்பழம்இன்னா நாற்பதுபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்பெண்மேல்மாந்தை பெத்தனாட்சி அம்மன்முல்லைப் பெரியாறு அணைஇந்திரா காந்திகாதலிக்க நேரமில்லைஉப்புச் சத்தியாகிரகம்திருக்குர்ஆன்நுரையீரல் அழற்சிதேவநேயப் பாவாணர்புதுமைப்பித்தன்அகமுடையார்சேக்கிழார்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370தமிழ்நாடு அமைச்சரவைமுன்னின்பம்எழுத்து (இலக்கணம்)இராமர்திருத்தணி முருகன் கோயில்சிந்துவெளி நாகரிகம்பாரத ஸ்டேட் வங்கிமரவள்ளிகருப்பைஉவமையணிவரலாறுஅறநெறிச்சாரம்வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்கோ-கோயாழ்கன்னியாகுமரி மாவட்டம்மீனா (நடிகை)ஐம்பூதங்கள்குற்றாலக் குறவஞ்சிமாரியம்மன்திருவண்ணாமலைகாதல் கொண்டேன்முடியரசன்விக்ரம் பிரபுவாதுமைக் கொட்டைசூரைகள்ளுஎங்கேயும் காதல்தொழிற்பெயர்வாணிதாசன்மெட்பார்மின்சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)நெடுநல்வாடைமுகேசு அம்பானிஎஸ். பி. வேலுமணிகளக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்நாயன்மார் பட்டியல்அழகர் கோவில்கண்ணாடி விரியன்கா. ந. அண்ணாதுரைபீட்டர் தமியான்மூதுரைஈ. வெ. இராமசாமிசிதம்பரம் நடராசர் கோயில்முகலாயப் பேரரசுகுலசேகரன்பட்டினம்அஜித் குமார்கார்ல் மார்க்சுசூரரைப் போற்று (திரைப்படம்)தமன்னா பாட்டியாகணியன் பூங்குன்றனார்சுற்றுச்சூழல்தமிழ்த்தாய் வாழ்த்துஅகத்திணைதங்கம் தென்னரசுகாச நோய்தேசிய அறிவியல் நாள் (இந்தியா)தமிழர் கலைகள்இரசினிகாந்துமக்கள் நீதிமன்றம்சுஜாதா (எழுத்தாளர்)🡆 More