வெள்ளீயம்: 50 ஐ அணு எண்ணாகக் கொண்டத் தனிமம்

வெள்ளீயம் அல்லது தகரம் (ஆங்கிலம் Tin) என்பது ஒரு வேதியியல் தனிமம்.

50 இண்டியம்வெள்ளீயம்ஆண்டிமனி
Ge

Sn

Pb
வெள்ளீயம்: குறிப்பிடத்தக்க பண்புகள், சேர்மங்கள் மற்றும் வேதியியல், தோற்றம்
பொது
பெயர், குறி எழுத்து,
தனிம எண்
வெள்ளீயம், Sn, 50
வேதியியல்
பொருள் வரிசை
குறை மாழைகள்
நெடுங்குழு,
கிடை வரிசை,
வலயம்
14, 5, p
தோற்றம் பளபளப்பான வெண்சாம்பல்
வெள்ளீயம்: குறிப்பிடத்தக்க பண்புகள், சேர்மங்கள் மற்றும் வேதியியல், தோற்றம்
அணு நிறை
(அணுத்திணிவு)
118.710(7) g/mol
எதிர்மின்னி
அமைப்பு
[Kr] 4d10 5s2 5p2
சுற்றுப்
பாதையிலுள்ள
எதிர்மின்னிகள்
(எலக்ட்ரான்கள்)
2, 8, 18, 18, 4
இயல்பியல் பண்புகள்
இயல் நிலை திண்மம் (இயற்பியல்)
அடர்த்தி
(அறை வெ.நி அருகில்)
(வெள்ளை) 7.265 கி/செ.மி³
அடர்த்தி
(அறை வெ.நி அருகில்)
(சாம்பல்) 5.769 கி/செ.மி³
உருகுநிலையில்
நீர்மத்தின் அடர்த்தி
6.99 g/cm³
உருகு
வெப்பநிலை
505.08 K
(231.93 °C, 449.47 °F)
கொதி நிலை 2875 K
(2602 °C, 4716 °F)
நிலை மாறும்
மறை வெப்பம்
(white) 7.03 கி.ஜூ/மோல்
(kJ/mol)
வளிமமாகும்
வெப்ப ஆற்றல்
(white) 296.1 கி.ஜூ/மோல்
வெப்பக்
கொண்மை
(25 °C)
(white)
27.112 ஜூ/(மோல்·K)
J/(mol·K)
ஆவி அழுத்தம்
அழுத் / Pa 1 10 100 1 k 10 k 100 k
வெப். நி / K 1497 1657 1855 2107 2438 2893
அணுப் பண்புகள்
படிக அமைப்பு செவ்வகப் பட்டகம்
ஆக்சைடு
நிலைகள்
4, 2
(இருமுக ஆக்ஸைடு)
எதிர்மின்னியீர்ப்பு 1.96 (பௌலிங் அளவீடு)
மின்மமாக்கும்
ஆற்றல்
1st: 708.6 kJ/(mol
2nd: 1411.8 kJ/mol
3rd: 2943.0 kJ/mol
அணு ஆரம் 145 பிமீ
அணுவின்
ஆரம் (கணித்)
145 pm
கூட்டிணைப்பு ஆரம் 141 pm
வான் டெர் வால்
ஆரம்
217 பி.மீ (pm)
வேறு பல பண்புகள்
காந்த வகை தரவு இல்லை
மின்தடைமை (0 °C) 115 nΩ·m
வெப்பக்
கடத்துமை
(300 K) 66.8
வாட்/(மீ·கெ) W/(m·K)
வெப்ப நீட்சி (25 °C) 22.0 மைக்.மீ/(மி.மீ·கெ) µm/(m·K)
ஒலியின் விரைவு
(மென் கம்பி)
(அறை வெ.நி) (உருட்டியது) 2730 மீ/நொ
யங்கின் மட்டு 50 GPa
Shear modulus 18 GPa
அமுங்குமை 58 GPa
பாய்சான் விகிதம் 0.36
மோவின்(Moh's) உறுதி எண் 1.5
பிரிநெல் உறுதிஎண்
Brinell hardness]]
51 MPa (மெகாபாஸ்)
CAS பதிவெண் 7440-31-5
குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள்
தனிக்கட்டுரை: வெள்ளீயம் ஓரிடத்தான்கள்
ஓரி இ.கி.வ அரை
வாழ்வு
சி.மு சி.ஆ
(MeV)
சி.வி
112Sn 0.97% Sn ஆனது 62 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
114Sn 0.66% Sn ஆனது 64 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
115Sn 0.34% Sn ஆனது 65 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
116Sn 14.54% Sn ஆனது 66 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
117Sn 7.68% Sn ஆனது 67 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
118Sn 24.22% Sn ஆனது 68 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
119Sn 8.59% Sn ஆனது 69 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
120Sn 32.58% Sn ஆனது 70 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
122Sn 4.63% Sn ஆனது 72 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
124Sn 5.79% Sn ஆனது 74 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
126Sn செயற்கை ~1 E5 y Beta- 0.380 126Sb
மேற்கோள்கள்

அத்துடன் ஒரு உலோகமாகவும் இருக்கிறது. இது தனிம அட்டவணையில் Sn என்னும் குறியீடு கொண்டது. இலத்தீனில் வெள்ளீயத்திற்கு சிடான்னம் (stannum) என்பதால் Sn என குறியீடு. வெள்ளீயத்தின் அணுவெண் 50 ஆகும். வெள்ளீயத்தின் அணுக்கருவில் 69 நொதுமிகள் உள்ளன. வெள்ளீயம் எளிதில் வளையக்கூடிய குறை மாழை வகையைச் சேர்ந்த தனிமம். இது எளிதில் காற்றில் ஆக்ஸைடு ஆகாத, அரிப்படையாத ஒரு பொருள். இதனால் இதனை பிற மாழைக்கலவைகளில் செய்த பொருட்களுக்கு பூச்சாக இடுவதுண்டு. வெள்ளீயத்தை செப்புடன் கலந்து வெண்கலம் என்னும் வலிமையான மாழைக்கலவை செய்யப்படுகின்றது. ஒலி எழுப்பும் மணி இம் மாழைக்கலவையால் செய்யப்படுகின்றது. வெள்ளீயம் பெரும்பாலும் கேசிட்டரைட்டு என்னும் கனிமத்தில் இருந்து பிரித்தெடுக்கப்படுகின்றது.

வெள்ளீயம்: குறிப்பிடத்தக்க பண்புகள், சேர்மங்கள் மற்றும் வேதியியல், தோற்றம்
The alchemical symbol for tin
வெள்ளீயம்: குறிப்பிடத்தக்க பண்புகள், சேர்மங்கள் மற்றும் வேதியியல், தோற்றம்
வெள்ளீயத்தின் தாது கேசிட்டரைட்டின் மாதிரி
வெள்ளீயம்: குறிப்பிடத்தக்க பண்புகள், சேர்மங்கள் மற்றும் வேதியியல், தோற்றம்
சுரங்கத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட கேசிட்டரைட்டு மணிகள்

குறிப்பிடத்தக்க பண்புகள்

வெள்ளீயம் வளையக்கூடிய, தகடாக்கக்கூடிய வெண்சாம்பல் நிறம் உள்ள படிகநிலை கொள்ளும் மாழை. இப்படிகம் செவ்வகப் பட்டகம் (tetragonal) என்னும் வகையைச் சேர்ந்தது. தடிப்பான தூய வெள்ளீயக் கம்பியை வளைத்தால் "படபட" என படிக உடைவு ஒலி கேட்கும். நீர் போன்ற பொருட்களில் இருந்து அரிப்பைத் தடுத்தாலும், கடும் காடிகளும் காரக் கரைசல்களும் இம் மாழையைத் "தாக்க"வல்லது (வேதியியல் வினையால் அரிக்க வல்லது).

சேர்மங்கள் மற்றும் வேதியியல்

II அல்லது IV என்ற ஆக்சிசனேற்ற நிலைகளில் வெள்ளீயத்தின் பெரும்பாலான சேர்மங்கள் காணப்படுகின்றன.

கனிம வேதியியல் சேர்மங்கள்

II மற்றும் IV என்ற ஆக்சிசனேற்ற நிலைகள் இரண்டிலும் ஆலைடு சேர்மங்கள் அறியப்படுகின்றன. Sn(IV) நிலையில் SnF4, SnCl4, SnBr4, SnI4. ஆகிய நான்கு ஆலைடு வகைகளும் அறியப்படுகின்றன. இவற்றில் கன உறுப்பினர்களாகக் கருதப்படும் SnCl4, SnBr4, SnI4 மூன்று ஆலைடுகளும் எளிதில் ஆவியாகக் கூடிய மூலக்கூற்றுச் சேர்மங்களாகும். வெள்ளீயம் டெர்ட்ராபுளோரைடு சேர்மம் மட்டும் பல்பகுதி சேர்மமாகும். Sn(II) நிலையிலும் SnF2, SnCl2, SnBr2, SnI2. ஆகிய நான்கு ஆலைடு வகைகளும் அறியப்படுகின்றன. இவையனைத்தும் பல்பகுதி திண்மநிலை சேர்மங்களாகும். இங்கு குறிப்பிடப்பட்ட எட்டு சேர்மங்களில் அயோடைடுகள் மட்டுமே நிறத்துடன் காணப்படுகின்றன .

வர்த்தக ரீதியாக வெள்ளீய(II) குளோரைடு முக்கியத்துவம் பெற்றுள்ளது. குளோரின் வெள்ளீயம் உலோகத்துடன் வினைபுரிந்து SnCl4 உருவாகிறது. ஆனால் ஐதரோ குளோரிக் அமிலமும் வெள்ளீயமும் வினை புரியும் போது SnCl2 சேர்மமும், ஐதரசன் வாயுவும் தோன்றுகின்றன. மாறாக வெள்ளீயமும் அதன் ஆக்சிசனேற்ற நிலை (IV) சேர்மமான SnCl4 சேர்மமும் இணைந்தும் SnCl2 சேர்மத்தை உருவாக்குகின்றன. இச்செயல்முறையை இணைவிகிதமுறல் செயல்முறை என்பர்.

    SnCl4 + Sn → 2 SnCl2

ஆக்சைடுகள், சல்பைடுகள் மற்றும் பிற சால்கோகெனைடு வழிப்பொருட்களாகவும் வெள்ளீயம் உருவாகிறது. வெள்ளீயத்தை காற்றில் சூடுபடுத்தினால் கேசிட்டரைட்டு (SnO2) என்ற ஈரியல்பு கொண்ட ஈராக்சைடு சேர்மம் உருவாகிறது . அமிலம், காரம் இரண்டிலும் கரையக்கூடிய சேர்மங்கள் ஈரியல்பு சேர்மங்களாகும். [Sn(OH)6]2−, K2[Sn(OH)6], என்ற கட்டமைப்பில் அமைந்த வெள்ளீயம் சேர்மங்களும் அறியப்படுகின்றன. H2[Sn(OH)6] என்ற கட்டமைப்பில் அமைந்த வெள்ளீயம் சேர்மம் ஏதும் அறியப்படவில்லை (II) அல்லது (IV) என்ற ஆக்சிசனேற்ற நிலைகளில் வெள்ளீயத்தின் சல்பைடு சேர்மங்களான வெள்ளீயம்(II) சலபைடு மற்றும் வெள்ளீயம்(IV) சல்பைடு இரண்டும் அறியப்படுகின்றன.

ஐதரைடுகள்

(IV) ஆக்சிசனேற்ற நிலையில் வெள்ளீயம் (SnH4) என்ற ஐதரைடாக உருவாகிறது. ஆனால் இது நிலைப்புத் தன்மையற்று உள்ளது. டிரைபியூட்டைல்வெள்ளீயம் ஐதரைடு (Sn(C4H9)3H) போன்ற கரிமவெள்ளீயம் சேர்மங்கள் அறியப்படுகின்றன . இத்தகைய சேர்மங்கள் நிலைமாறும் இயல்புடைய டிரைபியூட்டைல்வெள்ளீயம் இயங்குறுப்புகளை வெளிவிடுகின்றன. வெள்ளீயம்(III) ஆக்சிசனேற்ற நிலை சேர்மங்களுக்கு இதுவொரு அரிய உதாரணமாகும் .

கரிமவெள்ளீயம் சேர்மங்கள்

கரிமவெள்ளீயம் சேர்மங்கள் சில நேரங்களில் சிடானான்கள் என்று அழைக்கப்படுகின்றன, இவை வெள்ளீயம்-கார்பன் பிணைப்புகளுடன் கூடிய இரசாயனச் சேர்மங்களாகும் . வெள்ளீயத்தின் கரிம சேர்மங்கள் பயனுள்ள வர்த்தக முக்கியத்துவம் பெற்றவையாகக் கருதப்படுகின்றன . கரிமவெள்ளீயம் சேர்மங்கள் நச்சுத்தன்மை மிகுந்திருப்பதால் அவை உயிர்கொல்லிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

1849 இல் எட்வார்ட் ஃபிராங்க்லேண்டு டையெத்திலீன்வெள்ளீயம் டையயோடைடு (C2H5) 2SnI2) என்ற முதலாவது கரிமவெள்ளீயம் சேர்மத்தைக் கண்டு அறிவித்தார்.

பெரும்பாலான கரிமவெள்ளீயம் சேர்மங்கள் காற்று மற்றும் தண்ணீரில் நிலைப்புத் தன்மை கொண்டு திரவங்கள் அல்லது திண்மங்களாக லாணப்படுகின்றன. இவை நான்முக வடிவ கட்டமைப்பை ஏற்கின்றன. டெட்ரா ஆல்கைல் மற்றும் டெட்ரா அரைல் சேர்மங்களை கிரிக்னார்டு வினைப்பொருளைப் பயன்படுத்தி தயாரிக்கலாம் :

    SnCl
    4
    + 4 RMgBr → R
    4
    Sn
    + 4 MgBrCl

மறுபங்கீட்டு வினையின் மூலம் கலப்பு ஆலைடு ஆல்கைல் சேர்மங்களைத் தயாரிக்கலாம். இவை டெட்ராகரிம வெள்ளீயம் சேர்மங்களைக் காட்டிலும் வணிக முக்கியத்துவம் மிக்கவையாகும்.

    SnCl
    4
    + R
    4
    Sn
    → 2 SnCl2R2.

ஈரிணைதிற கரிமவெள்ளீயம் சேர்மங்கள் அசாதாரணமானவையாகும். இருப்பினும் இவை தொடர்புடைய ஈரிணைதிற கரிமசெருமானியம் மற்றும் ஈரிணைதிற கரிமசிலிக்கன் சேர்மங்களைக் காட்டிலும் சாதாரணமானவையாக உள்ளன. அதிக நிலைப்புத்தன்மை கொண்ட Sn(II) "மந்த எலக்ட்ரான் விளைவு" இயல்பைக் கொண்டதாக உள்ளது.

கரிமவெள்ளீயம்(II) சேர்மங்களான சிடானிலின்கள் ( R2Sn), இருசிடானிலின்கள் (R4Sn2) ஆகியவைகளும் அறியப்படுகின்றன. இவ்விரு பிரிவுகளும் அசாதாரண வினைகளை வெளிப்படுத்துகின்றன.

தோற்றம்

குறைந்த-முதல்-நடுத்தர நிறை கொண்ட நட்சத்திரங்களில் வெள்ளீயம் நீண்ட எசு- செயல்முறை மூலம் உருவாகிறது. இறுதியாக இண்டியம் போன்ற கனமான ஐசோடோப்புகளின் பீட்டா சிதைவு மூலமாக வெள்ளீய்டம் உருவாக்கப்படுகிறது .

பூமியின் மேற்பரப்பில் கிடைக்கக்கூடிய பொருட்களில் 49 ஆவது மிகுதியான பொருள் வெள்ளீயம் ஆகும். மில்லியனுக்கு 75 பகுதிகள் துத்தநாகம், மில்லியனுக்கு 50 பகுதிகள் தாமிரம், மில்லியனுக்கு 14 பகுதிகள் ஈயம் என்ற அளவுகளுடன் ஒப்பிடுகையில் வெள்ளீயம் மில்லியனுக்கு 2 பகுதிகள் அளவில் கிடைக்கிறது .

வெள்ளீயம் இயற்கையில் தனித்துக் கிடைப்பதில்லை ஆனால் தாதுக்களில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. கேசிட்டரைட்டு (SnO2) என்ற ஆக்சைடு தாது மட்டுமே வர்த்தக ரீதியாக முக்கியத்துவம் மிக்க தாதுவாகக் கருதப்படுகிறது. சிடானைட்டு, சிலிண்டரைட்டு, பிராங்கைட்டு, கேன்பீல்டைட்டு மற்றும் டியலைட்டு போன்ற சல்பைடு தாதுக்களில் இருந்தும் சிறிய அளவில் வெள்ளீயம் பிரித்தெடுக்கப்படுகிறது. வெள்ளீயத்தின் தாதுக்கள் எப்போதும் கிரானைட்டு எனப்படும் கருங்கற்களுடன் 1% வெள்ளீயம் ஆக்சைடாக சேர்ந்தே கானப்படுகின்றன.

80% வெள்ளீயமானது வெள்ளீய டை ஆக்சைட்டின் உயர் தன்னீர்ப்பு காரணமாக முதன்மைச் சுரங்கத்தின் நீரோட்ட திசையில் படிவுகளாகப் படிந்துள்ள கீழ்நிலைத் திட்டங்களின் மூலமாகக் கிடைக்கும் படிவுகளேயாகும். பெரும்பாலும் கடந்த காலங்களில் அடித்துவரப்பட்டு பள்ளத்தாக்குகளிலிலும் அல்லது கடல்களிலிலும் படிய வைக்கப்பட்ட வெள்ளீயமே தற்பொழுது மீட்டெடுக்கப்படுகிறது. தூர்வாரல், உயரழுத்த அகழ்வு அல்லது திறந்தவெளி சுரங்கம் போன்ற சிக்கனாமான முறைகள் வெள்ளீயத்தைப் பிரித்தெடுக்கப் பயன்படுத்தப்படுகின்றன. உலகின் பெரும்பாலான வெள்ளீயம் ஒதுக்குப் படிவுகளில் இருந்தே தயாரிக்கப்படுகிறது, இவற்றில் 0.015% அளவிற்கும் குறைவாகவே வெள்ளீயம் இருக்கக்கூடும் .

வெள்ளீயம் உலக இருப்பு (டன்களில், 2011)
நாடு இருப்பு
வெள்ளீயம்: குறிப்பிடத்தக்க பண்புகள், சேர்மங்கள் மற்றும் வேதியியல், தோற்றம்  சீனா 1,500,000
வெள்ளீயம்: குறிப்பிடத்தக்க பண்புகள், சேர்மங்கள் மற்றும் வேதியியல், தோற்றம்  மலேசியா 250,000
வெள்ளீயம்: குறிப்பிடத்தக்க பண்புகள், சேர்மங்கள் மற்றும் வேதியியல், தோற்றம்  பெரு 310,000
வெள்ளீயம்: குறிப்பிடத்தக்க பண்புகள், சேர்மங்கள் மற்றும் வேதியியல், தோற்றம்  இந்தோனேசியா 800,000
வெள்ளீயம்: குறிப்பிடத்தக்க பண்புகள், சேர்மங்கள் மற்றும் வேதியியல், தோற்றம்  பிரேசில் 590,000
வெள்ளீயம்: குறிப்பிடத்தக்க பண்புகள், சேர்மங்கள் மற்றும் வேதியியல், தோற்றம்  பொலிவியா 400,000
வெள்ளீயம்: குறிப்பிடத்தக்க பண்புகள், சேர்மங்கள் மற்றும் வேதியியல், தோற்றம்  உருசியா 350,000
வெள்ளீயம்: குறிப்பிடத்தக்க பண்புகள், சேர்மங்கள் மற்றும் வேதியியல், தோற்றம்  ஆத்திரேலியா 180,000
வெள்ளீயம்: குறிப்பிடத்தக்க பண்புகள், சேர்மங்கள் மற்றும் வேதியியல், தோற்றம்  தாய்லாந்து 170,000
  பிற நாடுகள் 180,000
  மொத்தம் 4,800,000

2011 ஆம் ஆண்டில் மட்டும் மொத்தமாக 253000 டன் வெள்ளீயம் வெட்டியெடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் 110,000 டன், இந்தோனேசியாவில் 51,000 டன், பெரு நாட்டில் 34,600 டன், பொலிவியாவில் 20,700 டன், பிரேசில் நாட்டில் 12,000 டன் வெள்ளீயம் வெட்டி எடுக்கப்பட்டதாக அறியப்படுகிறது .பொருளாதார சாத்தியக்கூறுகள் மற்றும் சுரங்கத் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி ஆகிய காரணங்களால் வெள்ளீயத்தின் உற்பத்தி மதிப்பீடு வரலாற்று ரீதியாக மாறுபடுகிறது . தற்போதைய நுகர்வு விகிதங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் விளைவாக அடுத்த 40 ஆண்டுகளில் பூனியில் வெள்ளீயத்தின் அளவு வற்றிப்போகும் அபாயம் உள்ளதாக மதிப்பிடப்படுகிறது. வெள்ளீய உற்பத்தி வருடத்திற்கு 2% வளர்ச்சியை பெற்றிருந்தால் கூட 20 ஆண்டுகளுக்குள் புவியில் வெள்ளீயத்தின் இருப்பு காணாமல் போகலாம் என்று லெசுடர் பிரௌன் பரிந்துரைக்கின்றார் .

சிக்கனாமாக வெள்ளியம் பிரித்தெடுத்தல்
ஆண்டு மில்லியன் டன்கள்
1965 4,265
1970 3,930
1975 9,060
1980 9,100
1985 3,060
1990 7,100
2000 7,100
2010 5,200

இரண்டாம் நிலை அல்லது பிசிறு வெள்ளீயமும் வெள்ளீயத்தின் முக்கிய ஆதாரமாக இருக்கிறது. இரண்டாம் நிலை வெள்ளீய உற்பத்தி அல்லது பிசிறுகளின் மறுசுழற்சி மூலம் கிடைக்கும் வெள்ளீயத்தின் அளவு அதிகரித்து வருகிறது. 1993 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்கா வெள்ளீயத்தை வெட்டி எடுக்காமலும் 1989 ஆம் ஆண்டு முதல் உருக்கிப் பிரிக்காமலும் உள்ளது. இந்நாடே இரண்டாம்நிலை வெள்ளீயத்திலிருந்து அதிகமாக வெள்ளீயம் உலோகத்தை தயாரிக்கிறது. 2006 ஆம் ஆண்டில் 14,000 டன் அளவுக்கு மறுசுழற்சி செய்யும் மிகப்பெரிய நாடாக அமெரிக்கா இருக்கிறது.

2009 ஆம் ஆண்டில் கொலம்பியாவில் புதிய வெள்ளீயப் படிவுகள் கண்டறியப்பட்டன . இதேபோல தெற்கு மங்கோலியாவிலும் புதிய படிவுகள் கண்டறியப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

வெள்ளீயம்: குறிப்பிடத்தக்க பண்புகள், சேர்மங்கள் மற்றும் வேதியியல், தோற்றம் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tin
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

வெள்ளீயம் குறிப்பிடத்தக்க பண்புகள்வெள்ளீயம் சேர்மங்கள் மற்றும் வேதியியல்வெள்ளீயம் தோற்றம்வெள்ளீயம் மேற்கோள்கள்வெள்ளீயம் புற இணைப்புகள்வெள்ளீயம்அணுக்கருஅணுவெண்ஆங்கிலம்இலத்தீன்உலோகம்ஒலிகனிமம்கலப்புலோகம்குறை மாழைசெப்புதனிம அட்டவணைதனிமம்நொதுமிவெண்கலம்வேதியியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மருது பாண்டியர்இயற்கைசுப்பிரமணியசுவாமி கோயில், எட்டுக்குடிசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்அகமுடையார்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்ஜே பேபிசிட்டுக்குருவிநீரிழிவு நோய்அறுசுவைவிளையாட்டுகாயத்ரி மந்திரம்கும்பம் (இராசி)தமிழர் அளவை முறைகள்சங்க காலப் புலவர்கள்கவிதைரஜினி முருகன்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019வழக்கு (இலக்கணம்)திருமந்திரம்கள்ளர் (இனக் குழுமம்)திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்கண் (உடல் உறுப்பு)சிவம் துபேகல்வெட்டுஎஸ். ஜானகிதிருநெல்வேலிகுப்தப் பேரரசுபஞ்சாயத்து ராஜ் சட்டம்ஐங்குறுநூறு - மருதம்தமிழ் விக்கிப்பீடியாஉலக மலேரியா நாள்உயர் இரத்த அழுத்தம்நாடோடிப் பாட்டுக்காரன்இந்தியன் பிரீமியர் லீக்நாலடியார்எட்டுத்தொகை தொகுப்புஉமறுப் புலவர்குகேஷ்கல்லணைதிருவள்ளுவர்பாரதிய ஜனதா கட்சிஇயோசிநாடிகலம்பகம் (இலக்கியம்)தமிழ்நாடு சட்ட மேலவைகிழவனும் கடலும்மாசாணியம்மன் கோயில்பட்டினப்பாலைதிருமலை நாயக்கர் அரண்மனைதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்தலைவி (திரைப்படம்)புதினம் (இலக்கியம்)நயன்தாராசெக் மொழிமொழிகண்ணாடி விரியன்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்கமல்ஹாசன்தமிழ்த் தேசியம்மருதமலைமீனாட்சிகாவிரிப்பூம்பட்டினம்மார்கஸ் ஸ்டோய்னிஸ்தமிழ் எழுத்துருக்களின் பட்டியல்முன்னின்பம்உயிர்மெய் எழுத்துகள்நெடுநல்வாடைதொழினுட்பம்உணவுஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்ரா. பி. சேதுப்பிள்ளைஈ. வெ. இராமசாமிமுல்லைக்கலிகாம சூத்திரம்ஜோக்கர்அறுபடைவீடுகள்இந்தியத் தலைமை ஆளுநர்கள் மற்றும் வைஸ்ராய்களின் பட்டியல்சீமான் (அரசியல்வாதி)பூப்புனித நீராட்டு விழா🡆 More