யங்கின் மட்டு

யங்கின் மட்டு (Young's modulus), இழுவைத் தகைப்பு அல்லது மீள்தன்மை மட்டு, என்பது மீள்தன்மையுடைய பொருட்களின் கெட்டித் தன்மையை அளக்கப் பயன்படும் ஒரு கணியமாகும்.

இது ஒரு அச்சின் வழியேயான தகைப்புக்கும் அவ்வச்சின் வழியேயான விகாரத்துக்கும் இடையிலான விகிதமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இவ்வரையறை ஊக்கின் விதிக்கமைவான வீச்சில் மாத்திரமே வலிதாகும். திண்மப் பொறியியலில், தகைப்பு - விகார வளையியின் யாதேனுமொரு புள்ளியிலுள்ள படித்திறன், தான்சன் மட்டு எனப்படும். தகைப்பு - விகார வளையியின் விகிதசம எல்லையினுள் உள்ள தான்சன் மட்டு, யங்கின் மட்டு எனப்படும்.

யங்கின் மட்டு
இறப்பரின் யங்கின் மட்டு மிகவும் குறைவென்பதால் இலகுவில் இழுபடக்கூடியதாக உள்ளது.

19ம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரித்தானிய விஞ்ஞானியான தோமசு யங்கின் நினைவாக இது பெயரிடப்பட்டது. எவ்வாறாயினும், இவ் எண்ணக்கரு 1727லேயே லியனாட் ஒயிலர் என்பவரால் விருத்தி செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பான ஆரம்பப் பரிசோதனைகள் இத்தாலிய விஞ்ஞானியான ஜோர்தானோ ரிக்கார்டியினால் 1782ல் மேற்கொள்ளப்பட்டன.

அலகுகள்

யங்கின் மட்டு தகைவுக்கும் (அழுத்தத்தின் அலகுகள்) திரிபுக்கும் (அலகுகள் அற்றது) உள்ள விகிதம் ஆகும். இதனால் யங்கின் குணகம் அழுத்தத்தின் அலகுகளைக் கொண்டுள்ளது. பன்னாட்டு அலகுகளில் இது பாசுக்கல் (Pa அல்லது நி/மீ2 அல்லது மீ−1·கிகி.செக்−2).

கணித்தல்

ஒரு பொருளின் குறித்த அச்சு வழியேயான தகைப்பை (stress), விகாரத்தால் பிரிப்பதன் மூலம் யங்கின் மட்டைக் கணிக்கலாம். தகைப்பு என்பது குறித்த குறுக்கு வெட்டுப் பரப்பில் தொழிற்படும் இழுவை விசையினால் தரப்படும். விகாரம் என்பது அவ் இழு விசைக்கு உட்படும் போது பொருளின் அச்சு வழியேயான நீளத்தில் ஏற்படும் நீட்சிக்கும், ஆரம்ப நீளத்துக்குமான விகிதத்தால் தரப்படும்.

    யங்கின் மட்டு 
    யங்கின் மட்டைக் கணிக்கும் முறை

இதில்,

    E - யங்கின் மட்டு
    F -இழுவையின் கீழுள்ள பொருளில் தொழிற்படும் விசை;
    A0 -விசை தொழிற்படும் குறுக்கு வெட்டுப் பரப்பு;
    ΔL -பொருளின் நீளத்தில் ஏற்படும் மாற்றம்;
    L0- பொருளின் ஆரம்ப நீளம்.

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024மு. வரதராசன்சிறுபஞ்சமூலம்திருநீலகண்ட நாயனார்சுவர்ணலதாசாகிரா கல்லூரி, கொழும்புசிலேடைஅருந்ததியர்தமிழ்ப் புத்தாண்டுஎல் நீனோ-தெற்கத்திய அலைவுவீரப்பன்கார்த்திக் (தமிழ் நடிகர்)இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்ம. பொ. சிவஞானம்கஜினி (திரைப்படம்)செம்மொழிஇணையம்தினமலர்மேற்குத் தொடர்ச்சி மலைசிறுநீரகம்அக்கினி நட்சத்திரம்வே. செந்தில்பாலாஜிமும்பை இந்தியன்ஸ்ஊராட்சி ஒன்றியம்சித்திரைத் திருவிழாதஞ்சாவூர்கவின் (நடிகர்)வராகிதமிழ்நாடு அமைச்சரவைவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்உளவியல்கண்ணகிவிந்துகரிகால் சோழன்சார்பெழுத்துகருப்பசாமிபால் (இலக்கணம்)வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்ஒலியன்சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம்திராவிட முன்னேற்றக் கழகம்தமிழ் இலக்கண நூல்கள்நந்தியாவட்டைசீறாப் புராணம்மன்னர் மானியம் (இந்தியா)சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்திருப்போரூர் கந்தசாமி கோயில்போயர்ரியோ நீக்ரோ (அமேசான்)வீரமாமுனிவர்திருமந்திரம்வல்லினம் மிகும் இடங்கள்மூவேந்தர்காம சூத்திரம்கொங்கு வேளாளர்இமயமலைதில்லி சுல்தானகம்பெண்ணியம்சின்னத்தாயிஇந்தியன் பிரீமியர் லீக்வெண்பாசீர் (யாப்பிலக்கணம்)கூகுள்வால்மீகிசித்தர்கள் பட்டியல்தினைஅண்ணாமலை குப்புசாமிகவிதைஇலட்சம்அகத்தியர்பக்தி இலக்கியம்விநாயகர் அகவல்முத்துராமலிங்கத் தேவர்பறையர்முடியரசன்மாத்திரை (தமிழ் இலக்கணம்)திருவரங்கக் கலம்பகம்இசை🡆 More