பெய்சிங்: சீன மக்கள் குடியரசின் தலைநகரம்

பெய்ஜிங் (சீனம்: 北京, அல்லது வட தலைநகரம்) சீன மக்கள் குடியரசின் தலைநகரமாகும்.

இது வட சீனாவில் அமைந்துள்ளது. சீனாவில் சாங்காய் நகரத்திற்கு அடுத்து மக்கள் தொகை மிகுந்த நகரம் இதுவேயாகும்.

பெய்ஜிங்
Beijing

北京
மாநகராட்சி
பெய்ஜிங் மாநகராட்சி • 北京市
தியனன்மென், பெய்ஜிங் தேசிய அரங்கம், சுவர்க்கக் கோவில், பெய்ஜிங் நகரப் பகுதி,
தியனன்மென், பெய்ஜிங் தேசிய அரங்கம், சுவர்க்கக் கோவில், பெய்ஜிங் நகரப் பகுதி,
பெய்சிங்: பெயர்க்காரணம், வரலாறு, புவியியல்
நாடுமக்கள் சீனக் குடியரசு
பிரிவுகள்
 - County-level
 - Township-level

16 மாவட்டங்கள், 2 கவுண்டிகள்
289 நகரங்களும் கிராமங்களும்
அரசு
 • வகைநகராட்சி
 • கட்சிச் செயலர்லியூ சி
 • நகர முதல்வர்குவோ சின்லொங்
பரப்பளவு
 • மாநகராட்சி16,801.25 km2 (6,487.00 sq mi)
ஏற்றம்43.5 m (142.7 ft)
மக்கள்தொகை (2010)
 • மாநகராட்சி1,96,12,368
 • அடர்த்தி1,200/km2 (3,000/sq mi)
 • சீனாவில் தராதரம்Population: 26வது;
Density: 4வது
இனங்கள்Beijinger
முக்கிய இனக்குழுக்கள்
 • ஹான்96%
 • மஞ்சு2%
 • ஹூய்2%
 • மங்கோலியர்0.3%
நேர வலயம்சீன தர நேரம் (ஒசநே+8)
அஞ்சல் குறியீடு100000 – 102629
தொலைபேசி குறியீடு10
GDP2010
 - மொத்தம்CNY 1,377.79 பில்.
US$ 209.3 பில். (13வது)
 - நபருக்குCNY 70,251
US$ 10,672 (3வது)
 - வளர்ச்சிபெய்சிங்: பெயர்க்காரணம், வரலாறு, புவியியல் 10.2%
மவசு (2008)0.891 (2வது) – high
இலக்கத்தகடுகள்京A, C, E, F, H, J, K, L, M, N, P
京B (வாடகைக்கார்கள்)
京G, Y (நகருக்கு வெளியே)
京O (காவல்துறை)
京V (சிவப்பில்) (இராணுவம்,
நடுவண் அரசு)
நகர மரங்கள்Platycladus orientalis'
 Pagoda tree
நகரப் பூக்கள்சீன ரோசா
 கிறிசாந்திமம்
இணையதளம்www.ebeijing.gov.cn

பெயர்க்காரணம்

கடந்த 3000 ஆண்டுகளாக பெய்ஜிங் நகரம் பல பெயர்களால் வழங்கப்பட்டு வந்திருக்கின்றது. பெய்ஜிங் என்பது சீன மொழியில் வடதலைநகரம் என பொருள்படும். தென்தலைநகரம் என பொருள்படும் சான்ஜிங்கிலிருந்து வேறுபடுத்தும் நோக்கில் 1403 இல் மிங் வம்சத்தினரால் இந்நகருக்கு இப்பெயர் சூட்டப்பட்டது.

வரலாறு

பெய்சிங்: பெயர்க்காரணம், வரலாறு, புவியியல் 
பெய்ஜிங்கில் சோக்கோடியன் எனும் குகைப்பகுதியிலுள்ள அருங்காட்சியகம்

பெய்ஜிங் நகரம் 250,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இந்நகரிலுள்ள ஒரு கிராமத்திலுள்ள குகையொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்களிலிருந்து, பீக்கிங் மனிதன் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. பெய்ஜிங்கின் முதல் மதில் சூழ்ந்த நகரமாக, கி.மு.11ஆம் நூற்றாண்டு முதல் கி.மு.7ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் 'ஜி' எனும் நகரம் விளங்கியது. தற்போதைய நகரத்தில் பெய்ஜிங் மேற்கு புகையிரத நிலையத்திற்குத் தெற்காக இந்த ஜி நகரம் அமைந்திருந்தது. பல்வேறு சீன ஆட்சியாளர்களால் பெயர் மாற்றங்களுக்குள்ளான இந்நகரம் 1949 அக்டோபர் முதலாம் திகதி மா சே துங்கினால் மக்கள் சீனக் குடியரசு பிரகடனப்படுத்தப்பட்டபோது மீண்டும் பெய்ஜிங் என பெயரிடப்பட்டது.

புவியியல்

கிட்டத்தட்ட முக்கோண வடிவம் கொண்ட வட சீன சமவெளியின் வடக்குக் கோணத்தில் பெய்ஜிங் அமைந்துள்ளது. இது வடக்கு, வடமேற்கு மற்றும் மேற்கே மலைகளால் சூழப்பட்டுள்ளது.

அரசு

பெய்ஜிங் மாநகராட்சி சீனப் பொதுவுடமைக் கட்சியினால் ஆட்சி செய்யப்படுகின்றது. இந்நகரம் 16 நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 14 மாவட்டங்களாகவும் 2 கவுண்டிகளாகவும் விளங்குகின்றன.

விளையாட்டு

பெய்ஜிங்கில் பல சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் முக்கியமானது. இது தவிர 2001இல் உலகப் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டிகள் மற்றும் 1990இல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் என்பனவும் இங்கு நடைபெற்ற முக்கிய விளையாட்டு நிகழ்வுகளாகும்.

போக்குவரத்து

வட சீனாவில் மிக முக்கியமான போக்குவரத்து மையமாக பெய்ஜிங் விளங்குகின்றது. இது ஒன்பது அதிவேக நெடுஞ்சாலைகள், பதினொரு தேசிய நெடுஞ்சாலைகள், இரு அதிவேக புகைவண்டிப் பாதைகள் மற்றூம் ஒன்பது சாதாரண புகைவண்டிப் பாதிகள் ஒன்றிணையும் இடமாக இந்நகரம் திகழ்கின்றது. பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையம் நகர மத்தியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்திலுள்ளது. இது உலகில் அதிகளவு பயணிகள் வந்துசெல்லும் விமான நிலையங்களின் பட்டியலில் இரண்டாமிடத்திலுள்ளது.

பொருளாதாரம்

சீனாவில் சிறந்த பொருளாதார வளர்ச்சி பெற்ற நகரங்களில் ஒன்றாக பெய்ஜிங் விளங்குகின்றது. இந்நகரின் முக்கிய பொருளாதார முறையாக சேவைக்கைத்தொழில் திகழ்கின்றது.

முக்கிய இடங்கள்

பெய்ஜிங்கிலுள்ள பேரரண் நகரம் மிகவும் பிரசித்தி பெற்ற பண்டையகால அரண்மனை மற்றும் அருங்காட்சியகத்தைக் கொண்டுள்ளது. மேலும் பெய்ஹாய், சிச்சஹாய், சொஞ்சன்ஹாய், ஜிங்சான், சொங்சான் ஆகிய இடங்கள் உட்பட இந்நகரிலுள்ள பல பூங்காக்கள் சீனத் தோட்டக்கலை மிளிரும் பூங்காக்களாக விளங்குகின்றன.

இரட்டை/சகோதர நகரங்கள்

பெய்ஜிங் பல இரட்டை நகரங்கள் அல்லது சகோதர நகரங்களைக் கொண்டுள்ளது. இவை பெரும்பாலும் அந்தந்த நாடுகளின் தலைநகரங்களாக விளங்குகின்றன.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

பெய்சிங் பெயர்க்காரணம்பெய்சிங் வரலாறுபெய்சிங் புவியியல்பெய்சிங் அரசுபெய்சிங் விளையாட்டுபெய்சிங் போக்குவரத்துபெய்சிங் பொருளாதாரம்பெய்சிங் முக்கிய இடங்கள்பெய்சிங் இரட்டைசகோதர நகரங்கள்பெய்சிங் மேற்கோள்கள்பெய்சிங் வெளி இணைப்புகள்பெய்சிங்சாங்காய்சீன மக்கள் குடியரசுசீன மொழிதலைநகர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பனைசைவ சமயம்மூவேந்தர்பித்தப்பைசீவக சிந்தாமணிதிருக்குறள்தங்க மகன் (1983 திரைப்படம்)மூலம் (நோய்)மரங்களின் பட்டியல்சுற்றுச்சூழல்விஜயநகரப் பேரரசுஅவதாரம்நவரத்தினங்கள்பூலித்தேவன்காச நோய்சோழர்கால ஆட்சிஆடுஜீவிதம் (திரைப்படம்)திருமூலர்தமிழ் இணைய மாநாடுகள்சுற்றுச்சூழல் மாசுபாடுசீறாப் புராணம்அன்னி பெசண்ட்திணைபலாசேக்கிழார்வித்துஇந்திய தேசிய சின்னங்கள்அகநானூறுகருட புராணம்சூரரைப் போற்று (திரைப்படம்)தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்சங்ககாலத் தமிழக நாணயவியல்ஐயப்பன்ஐம்பூதங்கள்தமிழ் எழுத்து முறைமு. வரதராசன்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்இந்து சமயம்தமிழ்நாட்டின் அடையாளங்கள்திரிகடுகம்ஐம்பெருங் காப்பியங்கள்பாரத ரத்னாகொங்கணர்புதிய ஏழு உலக அதிசயங்கள்காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்ஓமியோபதிஇயோசிநாடிகார்த்திக் சிவகுமார்காரைக்கால் அம்மையார்குலசேகர ஆழ்வார்எட்டுத்தொகை தொகுப்புதிருமணம்பழமுதிர்சோலை முருகன் கோயில்நவக்கிரகம்மென்பொருள்தமிழ்நாடு சட்டப் பேரவைஆண்டாள்கணினிஉணவுபைரவர்ஆய்த எழுத்து (திரைப்படம்)அபினிவிலங்குகளின் பெயர்ப் பட்டியல்நெய்தல் (திணை)மஞ்சள் காமாலைமு. மேத்தாமதுரைபெண்களின் உரிமைகள்தாஜ் மகால்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்இங்கிலீஷ் பிரீமியர் லீக்பாரிபால் (இலக்கணம்)ஐங்குறுநூறுதிருவள்ளுவர்பெண்ணியம்கா. ந. அண்ணாதுரைதிருநாவுக்கரசு நாயனார்பிரதமை🡆 More