கெய்ரோ: எகிப்தின் தலைநகரம்

கெய்ரோ (Cairo, அரபு மொழியில்:القاهرة‎ - அல்-காஹிரா) எகிப்து நாட்டின் தலைநகரம் மற்றும் நாட்டின் மிகப்பெரிய நகரம் ஆகும்.

அரபு உலகிலும் ஆப்பிரிக்காவிலும் இதுவே மிகப் பெரிய நகராகும். பெரும் கெய்ரோ எனப்படும் மாநகரப் பகுதி உலகில் 16வது பெரிய நகரப்பகுதியாக விளங்குகிறது. இந்நகரம் நைல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்கு 15 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இந்த நகரம் கிபி 969இல் நிறுவப்பட்டது. இங்குள்ள இசுலாமிய கட்டிடக் கலையைக் குறிக்கும் முகமாக ஆயிரம் மினராட்டுகளின் நகரம் என்று செல்லப் பெயரிடப்பட்டுள்ள இந்நகரம், இந்தப் பகுதி மக்களின் பண்பாட்டு மற்றும் அரசியல் வாழ்வில் மையமாக இருந்துள்ளது. தவிரவும் இது தொன்மைக்கால எகிப்தின் நகரங்களான மெம்பிசு, கீசா, பூசுடாட் ஆகியவற்றிற்கு அருகில் உள்ளது. மேலும் பெரிய ஸ்பிங்ஸ், கீசாவின் பிரமிடுகளுக்கும் வாயிலாக உள்ளது.

கெய்ரோ
القـــاهــرة (அரபு)
தலைநகரம்
அல்-காஹிரா
மேல் இடப்புறம்: கெய்ரோ நகர்மையம்; மேல் வலப்புறம்: இபின் துலுன் மசூதி; நடுவில்: கெய்ரோ சிடாடெல்; கீழ் இடப்புறம்: நைல் ஆற்றில் பெலுக்காப் படகு; கீழ் நடுவே: கெய்ரோ கோபுரம்; கீழ் வலது: மூயிசு சாலை
மேல் இடப்புறம்: கெய்ரோ நகர்மையம்; மேல் வலப்புறம்: இபின் துலுன் மசூதி; நடுவில்: கெய்ரோ சிடாடெல்; கீழ் இடப்புறம்: நைல் ஆற்றில் பெலுக்காப் படகு; கீழ் நடுவே: கெய்ரோ கோபுரம்; கீழ் வலது: மூயிசு சாலை
கெய்ரோ: வரலாறு, புவியியல், சுற்றுலா மையங்கள்

கொடி
கெய்ரோ: வரலாறு, புவியியல், சுற்றுலா மையங்கள்

சின்னம்
அடைபெயர்(கள்): ஆயிரம் மினாரட்டுகளின் நகரம், அரபுலகின் தலைநகரம்
கெய்ரோ is located in Egypt
கெய்ரோ
கெய்ரோ
எகிப்த்தில் அமைவிடம்
கெய்ரோ is located in ஆப்பிரிக்கா
கெய்ரோ
கெய்ரோ
கெய்ரோ is located in அரபு உலகம்
கெய்ரோ
கெய்ரோ
அரபு உலகில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 30°02′40″N 31°14′09″E / 30.04444°N 31.23583°E / 30.04444; 31.23583
நாடுகெய்ரோ: வரலாறு, புவியியல், சுற்றுலா மையங்கள் எகிப்து
கவர்னரேட்கெய்ரோ கவர்னரேட்
அரசு
 • ஆளுநர்கலீத் அப்தெல் ஆல்
பரப்பளவு
 • தலைநகரம்214 km2 (83 sq mi)
 • Metro3,085.12 km2 (1,191.17 sq mi)
ஏற்றம்23 m (75 ft)
மக்கள்தொகை (2021-census)
 • தலைநகரம்10,025,657
 • அடர்த்தி3,249/km2 (8,410/sq mi)
 • பெருநகர்21,323,000
நேர வலயம்கி.ஐ.நே (ஒசநே+2)
 • கோடை (பசேநே)கி.ஐ.கோ.நே (ஒசநே+3)
தொலைபேசி குறியீடு(+20) 2
இணையதளம்www.cairo.gov.eg
அலுவல் பெயர்வரலாற்று சிறப்புமிக்க கெய்ரோ
வகைCultural
வரன்முறைi, v, vi
தெரியப்பட்டது1979
உசாவு எண்89

எகிப்தியர்கள் இந்த நகரத்தின் தாக்கத்தினை முன்னிட்டு கெய்ரோவை பெரும்பான்மையும் எகிப்தின் அராபிய பலுக்கலான மஸ்ர் (مصر) என்றே அழைக்கின்றனர். இதன் அலுவல்முறையானப் பெயர் القاهرة அல்-காஹிரா, "வாகையாளர்" அல்லது "வெற்றி கொண்டான்" எனப் பொருள்படும்; சிலநேரங்களில் பேச்சுவழக்கில் இது كايرو காய்ரோ எனப்படுகிறது. மேலும் உலகின் தாயகம் எனப் பொருள்படும் உம் அல்-துன்யா, என்றும் குறிப்பிடப்படுகின்றது.

கெய்ரோவில் அரபு உலகின் மிகவும் பழமையானதும் பெரியதுமான திரைப்படத்துறை இயங்குகிறது. இங்குதான் உலகின் மிகப் பழைமையான கல்விநிறுவனங்களில் இரண்டாவதாக உள்ள உயர்கல்வி நிறுவனமான அல்-அசார் பல்கலைக்கழகம் உள்ளது. பல பன்னாட்டு ஊடக, வணிக, பிற அமைப்புகளின் வட்டாரத் தலைமையகமாக கெய்ரோ விளங்குகிறது. அரபுநாடுகள் கூட்டமைப்பின் தலைநகரமாகப் பெரும்பாலும் இருந்துள்ளது.

453 சதுர கிலோமீட்டர்கள் (175 sq mi) பரப்பளவில் 6.76 மில்லியன் மக்கள்தொகையடன் கெய்ரோ எகிப்தின் மிகப்பெரிய நகரமாக விளங்குகிறது. நகரின் புறநகர்ப் பகுதிகளில் வாழும் கூடுதலான 10 மில்லியன் மக்களுடன் ஆப்பிரிக்காவிலும் அரபு உலகிலும் உள்ள மிகப்பெரிய நகரமாக கெய்ரோ மாநகரப்பகுதி விளங்குகிறது. நகரப் பரப்பளவிலான மாநகரப் பகுதிகளில் பத்தாவது மிகப் பெரும் நகரமாகவும் விளங்குகிறது. மற்ற பெருநகரங்களைப் போலவே, கெய்ரோவிலும் கூடுதலான போக்குவரத்து நெரிசலும் சூழல்மாசடைவும் உள்ளது. கெய்ரோவின் பாதாளத் தொடர்வண்டி, கெய்ரோ மெட்ரோ, உலகின் பதினைந்தாவது போக்குவரத்துமிக்க தொடர்வண்டி அமைப்பாக விளங்குகிறது. இதை ஆண்டுக்கு 1 பில்லியனுக்கும் கூடுதலான பயணிகள் பாவிக்கின்றனர். பொருளியலில் கெய்ரோ மத்திய கிழக்கு நாடுகளில் முதலாவதாகவும் உலகளவில் 43வதாகவும் உள்ளது.

வரலாறு

கெய்ரோ: வரலாறு, புவியியல், சுற்றுலா மையங்கள் 
ஏ. எசு. ராப்போபோர்ட்டின் "எகிப்திய வரலாறு" நூலில் பியூசுடாட்டின் ஓவியம் "

மெம்பிசைச் சுற்றியுள்ள தற்கால கெய்ரோவின் பகுதி, நைல் ஆற்றுப்படுகையின் மேற்புறத்தில் அமைந்துள்ளதால் பண்டைய எகிப்தின் மையப் பகுதியாக விளங்கியது. இருப்பினும் இந்த நகரத்தின் துவக்கம் முதலாம் நூற்றாண்டின் இறுதியில் தொடர்ச்சியாக ஏற்பட்ட குடியேற்றங்களால் உருவானது. நான்காம் நூற்றாண்டில், மெம்பிசின் புகழ் குறைந்து வந்தபோது உரோமானியர்கள் நைல் ஆற்றின் கிழக்குக் கரையில் கோட்டை ஒன்றைக் கட்டி நகரத்தை உருவாக்கினர். பாபிலோன் கோட்டை என அறியப்பட்ட இந்தக் கோட்டை நகரத்தின் மிகவும் தொன்மையான கட்டிடங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்தக் கோட்டையைச் சுற்றியே கோப்து மரபுவழி சமூகத்தினர் வாழ்கின்றனர். கெய்ரோவின் பழங்கால கோப்து தேவாலயங்கள் இந்தக் கோட்டையின் சுவர்களை ஒட்டியே அமைந்துள்ளன;இப்பகுதி கோப்துக்களின் கெய்ரோ என அறியப்படுகிறது.

கி.பி. 640 இல் முஸ்லீம்களின் வெற்றியைத் தொடர்ந்து, வெற்றிபெற்ற அமர் இபின் பாபிலோன் கோட்டையின் வடக்குப் பகுதியில் அல் ஃபுஸ்தாத் என அழைக்கப்பட்ட ஒரு பிரதேசத்தில் குடியேறினார். துவக்கத்தில் கூடார முகாம் (ஃபுஸ்தாத் (fusta) என்பதன் பொருள் "கூடாரங்களின் நகரம்" என்பதாகும் ) ஃபுஸ்தாத் நிரந்தர குடியிருப்பாகவும் பின்னர் இஸ்லாமிய எகிப்தின் முதல் தலைநகரமாகவும் மாறியது.

கி.பி 750 இல், அப்பாசியரால் உமையா கலீபகம் தூக்கியெறியப்பட்ட பின்னர், புதிய ஆட்சியாளர்கள் தங்களின் சொந்த தலைநகரமாக மாறிய ஃபுஸ்தாத்தின் வடகிழக்கு பகுதிக்கு தங்கள் குடியிருப்பை உருவாக்கினர். இது அல்-அஸ்கார் (பாசறை அல்லது பாளையம்) என அழைக்கப்பட்டது, இங்கு ஒரு இராணுவ முகாம் போடப்பட்டு இருந்தது.

கி.பி. 869 இல் அஹ்மத் இபின் துலானின் கிளர்ச்சிக்குப் பிறகு அல் அஸ்கார் கைவிடப்பட்டு, மற்றொரு குடியிருப்பானது கட்டியெழுப்பப்பட்டது. இது ஆட்சியாளரின் இடமாக ஆனது. இது ஃபாஸ்டாதின் வடக்கில், ஆற்றுக்கு நெருக்கமாக அல் குத்தாவை ("குவார்ட்ஸ்") என்ற பெயருடன் இருந்தது. அல் குத்தாவையானது செர்மானியல் பள்ளிவாசல் பகுதியின் மையமாக இருந்தது, இப்போது இது இபின் துலுன் மசூதி என்று அழைக்கப்படுகிறது.

கி.பி. 905 ஆம் ஆண்டில் அப்பாஸ்கள் நாட்டின் கட்டுப்பாட்டை மீண்டும் தங்கள் கைகளில் கொண்டுவந்தனர் மேலும் அவர்களின் ஆளுனர் ஃபுஸ்தாத்துக்குத் திரும்பினார்.

கி.பி 969 இல், பாத்திம கலீபகத்தின் வெற்றியைத் தொடர்ந்து மற்றொரு குடியிருப்பு நிறுவப்பட்டது, இந்தக் குடியிருப்பானது மேலும் வடக்கே உருவானது இது அல் கஹிரா ("வெற்றியாளர்") என அழைக்கப்பட்டது. எவ்வாறாயினும், கி.பி 1168 ஆம் ஆண்டு வரை ஃபுஸ்தாத் தலைநகரமாகவே இருந்தது, பின்னர் பிஸ்டாத் தீயினால் அழிந்ததால் அப்போதைய ஆட்சியாளரான விஜிவரால் அரசு தலைமையகத்தை அல் கஹிராவுக்கு மாற்றினார்.

இதன்பிறகு அல் கஹிராவின் முந்தைய குடியிருப்புகள் விரிவாக்கப்பட்டன, பின்னர் இது கெய்ரோ நகரின் பகுதியாகவும் விரிவடைந்து பரவியது; இவை இப்போது "பழைய கெய்ரோ" என்று அழைக்கப்படுகின்றன.

புவியியல்

காலநிலை

கெய்ரோவிலும், நைல் ஆற்றுப் பள்ளத்தாக்கிலும், சூடான பாலைவன சூழலில் உள்ளது. (கோப்பென் காலநிலை வகைப்பாடு முறையின் படியான ), ஆனால் பெரும்பாலும் மத்தியதரைக் கடல் மற்றும் நைல் வடிநிலத்திலிருந்து மிக அதிகமான தொலைவில் இல்லாததால் அதிக ஈரப்பதத்துடனான காலநிலை உள்ளது. காற்று புயல்கள் அடிக்கடி ஏற்பட்டு, சகாரா பாலைவன மண்ணை நகரத்திற்கு கொண்டு வருகின்றன, சில நேரங்களில் மார்ச் முதல் மே வரை காற்று அடிக்கடி அசவுகரியமாக உலர்வுத் தன்மையை உண்டாக்குகிறது. குளிர்கால வெப்பநிலையானது அதிகபட்சம் 14 முதல் 22 °C (57 முதல் 72 °F வரை) இருக்கும், அதேசமயம் இரவு நேர வெப்பநிலை 11 °C (52 °F) க்கு குறைவாக இருக்கும், பெரும்பாலும் 5 °C (41 °F). கோடைக் காலத்தில், அதிகபட்சம் 40 °C (104 °F) ஐ விட அதிகமாகவும், 20 டிகிரி செல்சியஸ் (68 °F) வரை குறைந்தும் காணப்படும். மழைப்பொழிவு மிகக் குறைவு மேலும் குளிர்ந்த மாதங்களில் மட்டுமே பொழிகிறது, ஆனால் திடீர் மழை காரணமாக கடுமையான வெள்ளம் ஏற்படுகிறது. பனிப்பொழிவு மிகவும் அரிது; 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ம் தேதி கெய்ரோவின் கிழக்குப் புறநகர்ப்பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட்டது, முதல் முறையாக கெய்ரோ பகுதியில் பல தசாப்தங்களுக்குப் பிறகு இந்த வகையான மழைப்பொழிவை பெற்றது. மிகவும் வெப்பமான காலம் சூன் மாதம் ( 13.9 °C (57 °F) ) முதல் ஆகத்து ( 18.3 °C (65 °F) ) வரை நிலவும்.

தட்பவெப்ப நிலைத் தகவல், Cairo
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 31
(88)
34.2
(93.6)
37.9
(100.2)
43.2
(109.8)
47.8
(118)
46.4
(115.5)
42.6
(108.7)
43.4
(110.1)
43.7
(110.7)
41
(106)
37.4
(99.3)
30.2
(86.4)
47.8
(118)
உயர் சராசரி °C (°F) 18.9
(66)
20.4
(68.7)
23.5
(74.3)
28.3
(82.9)
32
(90)
33.9
(93)
34.7
(94.5)
34.2
(93.6)
32.6
(90.7)
29.2
(84.6)
24.8
(76.6)
20.3
(68.5)
27.7
(81.9)
தினசரி சராசரி °C (°F) 13.6
(56.5)
14.9
(58.8)
16.9
(62.4)
21.2
(70.2)
24.5
(76.1)
27.3
(81.1)
27.6
(81.7)
27.4
(81.3)
26
(79)
23.3
(73.9)
18.9
(66)
15
(59)
21.38
(70.49)
தாழ் சராசரி °C (°F) 9
(48)
9.7
(49.5)
11.6
(52.9)
14.6
(58.3)
17.7
(63.9)
20.1
(68.2)
22
(72)
22.1
(71.8)
20.5
(68.9)
17.4
(63.3)
14.1
(57.4)
10.4
(50.7)
15.8
(60.4)
பதியப்பட்ட தாழ் °C (°F) 1.2
(34.2)
3.6
(38.5)
5
(41)
7.6
(45.7)
12.3
(54.1)
16
(61)
18.2
(64.8)
19
(66)
14.5
(58.1)
12.3
(54.1)
5.2
(41.4)
3
(37)
1.2
(34.2)
பொழிவு mm (inches) 5
(0.2)
3.8
(0.15)
3.8
(0.15)
1.1
(0.043)
0.5
(0.02)
0.1
(0.004)
0
(0)
0
(0)
0
(0)
0.7
(0.028)
3.8
(0.15)
5.9
(0.232)
24.7
(0.972)
ஈரப்பதம் 59 54 53 47 46 49 58 61 60 60 61 61 56
சராசரி பொழிவு நாட்கள் (≥ 0.01 mm) 3.5 2.7 1.9 0.9 0.5 0.1 0 0 0 0.5 1.3 2.8 14.2
சூரியஒளி நேரம் 213 234 269 291 324 357 363 351 311 292 248 198 3,451
Source #1: World Meteorological Organization (UN) (1971–2000), NOAA for mean, record high and low and humidity
Source #2: Danish Meteorological Institute for sunshine (1931–1960)

சுற்றுலா மையங்கள்

புறநகர் பகுதியிலுள்ள சுற்றுலா தலங்கள் பின்வருமாறு.

  • மெம்பிஸ் - பண்டைய எகிப்தின் தலைநகரமாக விளங்கிய இடம் மெம்பிஸ்.தற்பொழுது இங்கு ஒரு அருங்காட்சியகம் மட்டுமே உள்ளது. இரண்டாம் ராமேசஸஸின் இமலாய சிலை இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கபட்டுள்ளது.
  • சக்கார - எகிப்தின் மிக பழமையான பிரமிடுகளில் ஒன்றான ஸ்டெப் பிரமிட் இங்கு தான் இருக்கிறது.
  • கிஷாவின் பிரமிடுகள் வளாகம் - இங்கு தான் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான பெரிய பிரமிட் உள்ளது.

குறிப்புகள்

மேற்சான்றுகள்

Tags:

கெய்ரோ வரலாறுகெய்ரோ புவியியல்கெய்ரோ சுற்றுலா மையங்கள்கெய்ரோ குறிப்புகள்கெய்ரோ மேற்சான்றுகள்கெய்ரோஅரபு மொழிஆப்பிரிக்காஎகிப்துகீசாவின் பெரிய ஸ்பிங்ஸ்நைல் ஆறுபண்டைய எகிப்துமில்லியன்மெம்பிசு, எகிப்து

🔥 Trending searches on Wiki தமிழ்:

பொருநராற்றுப்படைபாக்கியலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்)பத்து தலமூகாம்பிகை கோயில்நவக்கிரகம்மொழிசாகித்திய அகாதமி விருதுஉ. வே. சாமிநாதையர்அரச மரம்சித்திரைத் திருவிழாமருது பாண்டியர்தமிழர் நிலத்திணைகள்நந்திக் கலம்பகம்சிவன்இந்தியாவில் இட ஒதுக்கீடுமார்பகப் புற்றுநோய்திருவரங்கக் கலம்பகம்சித்தர்மாணிக்கவாசகர்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்தமிழக வரலாறுபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தேவிகாஅக்பர்சுரைக்காய்பழமுதிர்சோலை முருகன் கோயில்பணவீக்கம்முத்துராமலிங்கத் தேவர்முலாம் பழம்அட்சய திருதியைநிதி ஆயோக்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்இயற்கை வளம்கொல்லி மலைஅஸ்ஸலாமு அலைக்கும்இரசினிகாந்துரத்னம் (திரைப்படம்)மண் பானைகுழந்தை பிறப்புசுற்றுலாவிராட் கோலிதமிழர் பண்பாடுஇடிமழைபஞ்சாங்கம்தமிழ் எண்கள்மு. வரதராசன்சச்சின் (திரைப்படம்)நம்மாழ்வார் (ஆழ்வார்)கருப்பசாமிகண் (உடல் உறுப்பு)பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுகலிங்கத்துப்பரணிமூலம் (நோய்)புங்கைஆளி (செடி)காயத்ரி மந்திரம்திணை விளக்கம்வெண்குருதியணுமதீச பத்திரனமதுரைக் காஞ்சிஅம்பேத்கர்இந்தியத் தலைமை நீதிபதிதிரு. வி. கலியாணசுந்தரனார்இம்மையிலும் நன்மை தருவார் கோயில்சிறுத்தைசைவத் திருமணச் சடங்குபதிற்றுப்பத்துகண்டம்தரணிகொன்றைதிருநெல்வேலிபீனிக்ஸ் (பறவை)புணர்ச்சி (இலக்கணம்)கருத்துபூப்புனித நீராட்டு விழாதமிழிசை சௌந்தரராஜன்யுகம்🡆 More