கோப்பென் காலநிலை வகைப்பாடு (Köppen climate classification) என்பது விளாதிமிர் கோப்பெனால் உருவாக்கப்பட்ட காலநிலை வகைப்பாட்டுக்கான ஒரு முறையாகும்.
ஒரு பகுதியில் வளரும் தாவரங்களை பிரகாரம் கோப்பென் இம்முறையை படைத்தார்.
உலகின் காலநிலை எங்கும் ஒரேமாதிரியாக காணப்படுவதில்லை. பிரதேசத்திற்கு பிரதேசம் வேறுபடுகின்றது. முக்கியமாக காலநிலை அம்சங்களைப் பொதுவாக கொண்டுள்ள பிரதேசங்களை ஒரே பிரிவின் கீழ் வகுத்து ஆராய்வதே காலநிலைப் பிரதேசங்கள் பற்றிய ஆய்வாகும். சூப்பான், கெப்பன், தோன்துவைற், டட்லி ஸ்ராம்ப், மில்லர் முதலான பல அறிஞர்கள் உலகத்தை காலநிலைப் பிரதேசங்களாகப் பிரித்து ஆராய்ந்துள்ளனர். உலகினைக் காலநிலைப் பிரதேசங்களாக வகுப்பதற்கு வெப்பநிலை, மழைவீழ்ச்சி முதலான காலநிலை மூலகங்களைக் குறிகாட்டிகளாகக் கொண்டுள்ளனர்.
ஆனால் கோப்பென் உலகினை காலநிலைப் பிரதேசங்களாக வகுப்பதற்கு சிறந்த குறிகாட்டி தாவரம் என நம்பினார். டி.கண்டோல் என்பவருடைய தாவர வகைப்பாகுபாட்டை அடிப்டையாகக் கொண்டு தனது காலநிலைப் பிரதேசங்களை வகுத்தார்.
டி.கண்டோலின் ஐந்து முக்கிய தாவரப் பிரதேசங்களாவன :
டி.கண்டோலின் தாவரப் பிரிவுகளின் ஒழுங்கில் கெப்பன் உலகினை முதற்கட்டமாக ஐந்து காலநிலைப் பிரிவுகளாக (A,B,C,D,E) வகுத்தார். அவையாவன:
என்றாலும், இப் பரந்த உலகை இந்த ஐந்து பிரிவுகளுக்குள் பிரித்து ஆராய்ந்துவிட முடியாது. எனவே ஐந்து பெரும் பிரிவுகளையும் வேறு குறிகாட்டிகளை ஆதாராமாகக் கொண்டு உப பிரிவுகளாக (f,m,w,S,W,s,T,F) இரண்டாம் கட்டமாக வகுத்தார். மேலும் வேறு சில தனித்த இயல்புகளை அவதானித்த கெப்பன் மூன்றாம் கட்டமாக வேறு சில ஆங்கில எழுத்துக்களைக் (a,b,c,d,h,k,H) கொண்டு வகுத்தார்.
This article uses material from the Wikipedia தமிழ் article கோப்பென் காலநிலை வகைப்பாடு, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.