அட்சய திருதியை (அல்லது அக்ஷய தீஜ்) என அறியப்படுவது இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும்.
அது தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும்.முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய திருதியை ஆகும்.
பிரித்தானிய இந்திய அரசினால் வெளியிடப்பட்ட ஒரு அணாக் காசில் முதற் சமணத் தீர்த்தங்கரான ரிசபநாதர் மன்னன் சிரேயான்சிடமிருந்து கரும்புச்சாற்றைப் பெறும் காட்சி | |
கடைபிடிப்போர் | இந்துக்கள் சமணர்கள் |
---|---|
வகை | அட்சய திருதியை Akshaya Tritiya |
கொண்டாட்டங்கள் | ஒரு நாள் |
அனுசரிப்புகள் | விஷ்ணுவை வழிபடல், தங்கம் பெற்றுக்கொள்ளல்,தானம் செய்தல் |
தொடக்கம் | சித்திரை |
நாள் | ஏப்ரல் கடைசி அல்லது மே ஆரம்பத்தில் |
இந்து மதத்தில் குறிப்பிடப்படும் காக்கும் கடவுளான திருமாலால் ஆளப்படுவதாகும். மேலும் இந்து புராணங்களில் குறிப்பிடப்படும் முனிவரான பரசுராமரின் பிறந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது, அவர் திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறார். இந்து இதிகாசங்களின்படி, அட்சய திருதியை நாளில் திரேதா யுகம் தொடங்கியது, மேலும் பகீரதன் தவம் செய்து இந்தியாவின் மிகப் புனிதமான புண்ணிய நதியான கங்கை நதி சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வரவழைத்தது இந்நாளில்தான் எனக் கூறப்படுகிறது. சமணர்களை பொறுத்தவரை தீர்த்தங்கரர்களுள் ஒருவராகிய ரிசபதேவரின் நினைவாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
"அட்சயா" எனும் சொல் சமசுகிருதத்தில் எப்போதும் குறையாதது எனும் பொருளில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக மங்களகரமான நீண்டகால சொத்துக்களான தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு-மனைகள் போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. மரபியல் வழிவந்தவர் அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் எனக் கூறுகின்றனர். ஆகையால் ஒரு வணிகத்தினைத் துவங்குவது, கட்டடம் கட்ட பூமி பூசையிடுவது போன்ற புதிய முயற்சிகளை அட்சய திருதியை நாளில் செய்ய பலர் விரும்புகின்றனர்.
இந்து மதத்தின் நல்ல நேரம் (முகூர்த்தம்) பார்க்கும் சோதிடத்தின் படி மூன்று பௌர்ணமி நாட்கள் (திதிகள் ) மிக மங்களகரமானவையாகக் கருதப்படுகின்றன. இவை மூன்றரை திதிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. அவை: சித்திரை மாத வளர்பிறையின் முதல் திதி புது வருட துவக்கமாகவும், ஆவணி மாதத்தின் வளர்பிறையின் பத்தாம் திதி விஜய தசமியாகவும், வைகாசி மாதத்தின் வளர்பிறையின் மூன்றாம் திதி ’’அட்சய திருதியை யாகவும்’’ (பரசுராமர் ஜெயந்தி) கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாதத்தின் வளர்பிறையின் முதல் திதி அரை திதியாகக் கணக்கில் கொண்டு இவை "மூன்றரை (3 1/2) முழுத்தங்கள்" என்று அழைக்கப்படுகின்றன. முதல் மூன்று திதிகள் முழுமையான திதிகளாகவும் கடைசி திதி அரை திதியாகவும் கணக்கிடப்படுகின்றன. இவை மொத்தம் சேர்ந்து மூன்றரை முழுத்தத்தை வழங்குகின்றன. சோதிட சாத்திரத்தின்படி இந்நாளில் சூரியனும் சந்திரனும் சம அளவு உயரொளியுடன் விளங்கும் என நம்பப்படுகிறது.
அட்சய திருதியை நவன்ன பர்வம் எனவும் அழைக்கப்படுகிறது. அட்சய திருதியை ரோஹிணி நட்சத்திரத்துடன் வரும் நாள் மிக மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
சமணத்தில், அட்சய திருதியை சமணத்தின் முதற் தீர்த்தங்கரரான ரிசபநாதர் தமது ஓராண்டு கடுந்துறவு வாழ்வை நிறைவுசெய்து தமது குவிந்த கைகளில் ஊற்றப்பட்ட கரும்புச் சாற்றைப் பருகிய நாளாகக் கருதப்படுகிறது. சில சமணர்கள் இவ்விழாவை வர்சி தப எனும் பெயரால் குறிப்பிடுகின்றனர். சமணர்கள் இந் நாளில் உண்ணாநோன்பு மற்றும் துறவு வழமைகளைக் கடைப்பிடிக்கின்றனர். குறிப்பாக பாலிதானா (குசராத்) போன்ற புனிதப் பயண இடங்களில் இது கடைப்பிடிக்கப்படுகிறது.
ஓராண்டு முழுவதும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் உண்ணா நோன்பு இருக்கும் வர்சி தப் எனப்படும் நோன்பைக் கடைப்பிடிப்போர், இந்த நாளில் பாரணை செய்து (கரும்புச் சாற்றை அருந்தி) தமது தபசை நிறைவு செய்கின்றனர்.
வருடப்பிறப்பு திதியாக இருந்தால், மதிக்கத்தக்க செயல்"களான பாராயணம் , தவம், கொடைகள்,சடங்கு ரீதியான முழுக்கு , தியாகங்கள், வேள்விசெய்தல் ஆகியன மிகவும் நன்மையளிப்பதாகும். ஆனால் முப்புரிநூல் அணிதல், திருமணம், நோன்பு முடித்தல், வீடு கட்டுதல், புதுமனை புகுதல், கடும் உழைப்பு மற்றும் நடவு நடுதல் போன்ற செயல்களைத் தொடங்குவது/செய்வது சில சமூகங்களில் தடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பெரும்பாலானோர் உறவுகள், வாங்குதல் மற்றும் முடிவு செய்தவற்றை நிறைவேற்றுதல் போன்றவற்றைத் தொடங்குதல்/மீண்டும் தொடங்குதலுக்கு இதை மங்களகரமான நாளாகக் கருதுகின்றனர். சிலரைப் பொறுத்தவரை இது ஆன்மீக நடவடிக்கைகளுக்கே உகந்ததேயன்றி உலகாதாயச் செயல்களுக்கல்ல.
இருப்பினும், இந்த திதியில் உலகாதாய நடவடிக்கைகள் தொடங்குவதும் கூட சிறப்பே. ஆனால் இந்து மதத்தின் நல்ல நேரம் பார்க்கும் சோதிட சாத்திரத்தின் நேரத்துடன் பொருந்தியுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் கோள்களின் நகர்வும் அது போன்ற அம்சங்களும் செயலைச் செய்பவருக்கு சாதகமாக இருப்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இதைப் பின்பற்றுபவர்கள் இந்தத் திதியை குருட்டுத்தனமாக அனைத்து விதமான வாழ்வு-செயற்பாடுகளைத் துவக்கவும் நடத்தவும் பயன்படுத்தக்கூடாது என எச்சரிக்கப்படுகின்றனர். குறிப்பிட்ட நடவடிக்கைக்கான திதிகளின் மங்களாம்சமானது அதே நேரத்தில் நிகழும் பஞ்சாங்க சுத்தி, முழுத்த யோகங்கள் மற்றும் இதர இந்து நல்ல நேரம் பார்க்கும் சோதிடக் கூறுகளின் இருத்தலையும் சார்ந்துள்ளது.
இந்த நாளில் புதிய செயலைத் துவங்குவது அல்லது விலை மதிப்பற்றவைகளை வாங்குவது நன்மையையும் வெற்றியையும் சேர்க்கும் எனக் கருதப்படுகிறது. இந்த நாளில் பரிசுப் பொருட்கள் அளிப்பதன் மூலம் கிடைக்கும் மதமுறையிலான புண்ணியமானது பன்மடங்காகப் பெருகும் எனக் கருதப்படுகிறது. பலர் இந்த நாளில் புதிய தங்க நகைகளை வாங்குகின்றனர். இந்த நாளில் விற்பதற்காகப் பெரும்பாலான நகைக்கடைகள் "லட்சுமி உருவம் பொறிக்கப்பட்ட" தங்க நாணயங்கள், வைர நகைகள் மற்றும் தங்க அணிகலன்கள் உள்ளிட்ட பல கடவுளர்கள் மற்றும் பெண் கடவுளர்களின் படங்களைக் கொண்டுள்ள புதிய நகை மாதிரிகளை இருப்பில் வைக்கின்றனர்.
சில குறிப்பிட்ட கோவில்கள் அட்சய திருதியை நாளன்று வழிபட சிறந்தவையாகக் கருதப்படுகின்றன.
This article uses material from the Wikipedia தமிழ் article அட்சய திருதியை, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.