புதிய ஏழு உலக அதிசயங்கள்

உலகின் புதிய ஏழு அதிசயங்கள் (New 7 Wonders of the World, 2000-2007) என்பது உலகின் பழைய ஏழு அதிசயங்களின் யோசனையை புதிய அதிசயங்களின் ஒரு பட்டியலைக் கொண்டு புதுப்பிப்பதாகும்.

நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை என்னும் தனியார் நிறுவனம் பிரபலமுற்றவைக்கான கருத்துக்கணிப்பு ஒன்றினை ஏற்பாடு செய்தது, வெற்றி பெற்றவை 2007 சூலை 7 அன்று போர்த்துக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் அறிவிக்கப்பட்டன

புதிய ஏழு உலக அதிசயங்கள்
இடமிருந்து வலமாக, மேலிருந்து கீழாக: சிச்சென் இட்சா, மீட்பரான கிறித்து, சீனப் பெருஞ் சுவர், மச்சு பிச்சு, பெட்ரா, தாஜ் மகால், கொலோசியம் (ரோம்).

100 மில்லியன் பேருக்கும் அதிகமானோர் தங்கள் வாக்குகளை இணையம் வழியாக அல்லது தொலைபேசி வழியாக பதிவு செய்ததாக சுவிட்சர்லாந்து நாட்டை மையமாகக் கொண்டு செயல்படும் நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை தெரிவிக்கிறது. ஒருவரே பலவாக்குகளை பதிவு செய்வதை தடுக்க வழியில்லாததால், இந்த கருத்துக்கணிப்பு "தீர்மானமாக அறிவியல் பூர்வமற்ற" ஒன்றாகக் கருதப்படுகிறது. வாசிங்டனை மையமாகக் கொண்டு செயல்படும் கருத்துக்கணிப்பு நிறுவனமான ஜோக்பி இன்டர்னேஷனல் நிறுவனரும் தற்போதைய தலைவர்/தலைமை செயல் அதிகாரியுமான ஜான் ஜோக்பியின் கூற்றுப்படி, நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை "இதுவரை பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் மிகப் பெரிய கருத்துக்கணிப்பை" நடத்தியிருக்கிறது.

இந்த திட்டம் பரவலான வீச்சில் அதிகார பூர்வ எதிர்வினைகளைப் பெற்றது. சில நாடுகள் தங்களின் இறுதித்தேர்வுக்குக் கூடுதலான வாக்குகள் சேகரிக்க பிரயத்தனப்பட்டன, ஏனையவை இந்தப் போட்டியை அலட்சியம் செய்தன அல்லது விமர்சித்தன. பரப்புரையின் தொடக்கத்தில் நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளைக்கு ஆதரவளித்து அதிசயங்கள் தேர்வு செய்வதில் ஆலோசனைகளை எல்லாம் வழங்கிய ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) 2007 இல் இந்த ஸ்தாபனத்தில் இருந்து தள்ளி நின்று கொண்டது

கூடுதலான நினைவுச் சின்னங்கள் அவற்றுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இணைய தளங்கள் மூலம் அல்லது தேசிய இணைய தளங்களிலான வலிமையான ஆதரவு விளம்பரங்கள் மூலம் ஆதரிக்கப்பட்டன. பல நாடுகளில் தேசிய தலைவர்களும் பிரபலங்களும் நியூ7ஒன்டர்ஸ் பரப்புரைக்கு ஊக்கமளித்தனர். பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மற்றும் பதிவு செய்த வாக்காளர்களின் புவியியல் ரீதியான மற்றும் கலாச்சார ரீதியான பன்முகத் தன்மையைக் கொண்டு பார்த்தால், உலகளாவிய பேச்சு வார்த்தை மற்றும் கலாச்சார பரிவர்த்தனை என்னும் தனது நோக்கம் சாதிக்கப்பட்டிருப்பதைக் காண்பதாக நியூ7ஒன்டர்ஸ் தெரிவித்துள்ளது.

2001 இல் நிறுவப்பட்ட இந்த நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை தனியார் நன்கொடைகள் மற்றும் ஒளிபரப்பு உரிமைகள் ஆகியவற்றைக் கொண்டே இயங்கியது, எந்தப் பொதுப் பணத்தையோ அல்லது வரி செலுத்துவோர் பணத்தையோ ஏற்றுக் கொண்டதில்லை. முடிவு அறிவித்த பிறகு, இதன் மூலம் தமக்கு எந்த வருவாயும் கிட்டவில்லை என்றும் தனது முதலீடுகளையே ஓரளவுக்குத் தான் மீட்க முடிந்தது என்றும் நியூ7ஒன்டர்ஸ் தெரிவித்தது.

உலகின் புதிய ஏழு அதிசயங்களுக்கான வாக்கெடுப்பை, மனிதகுல வரலாற்றில் முதலாவது உலகளாவிய ஜனநாயக நடைமுறை என்று அழைத்தார் நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை தலைவரான பெர்னார்டு வெபர். 2007 இல் இயற்கையின் புதிய ஏழு அதிசயங்கள் (New7Wonders of Nature) என்றழைக்கப்பட்ட இதே மாதிரியான ஒரு போட்டியை இந்த அறக்கட்டளை துவக்கியிருக்கிறது, தேர்வு விண்ணப்பங்கள் 2011 நவம்பர் 11 வரை ஏற்றுக் கொள்ளப்பட்டன. நியூ7ஒன்டர்ஸ் நகரங்கள் (New7Wonders Cities) என்பது தற்போது நடைமுறையில் உள்ள திட்டம் ஆகும். இதற்கான வாக்கெடுப்பு சூலை 2014 வரை இடம்பெறும்.

வரலாறு

உலகின் ஏழு அதிசயங்கள் குறித்த சிந்தனையின் மூலம் ஹீரோடோடஸ் (Herodotus) (கிமு 484 - கிமு 425) மற்றும் காலிமாசஸ் (Callimachus) (கிமு 305 - கிமு 240) காலத்தை நோக்கி பின்செல்கிறது, இவர்கள் கிசாவின் பெரும் பிரமிடு , பாபிலோனின் தொங்கும் தோட்டம் ஒலிம்பியா சியுசு சிலை , எபசசில் (Ephesus) உள்ள ஆர்திமிஸ் கோவில், ஹலிகர்னாசசில் உள்ள மசோலோஸ் நினைவுச்சின்னம், ரோட்ஸ் பேருருவச்சிலை (Colossus of Rhodes) மற்றும் அலெக்சான்ட்ரியா கலங்கரை விளக்கம் ஆகியவை அடங்கிய பட்டியலை தயாரித்தனர். கிசாவின் பெரும் பிரமிடு மட்டும் தான் இன்னும் நிற்கிறது. ஏனைய ஆறும் நிலநடுக்கம், தீ, அல்லது பிற காரணங்களால் அழிக்கப்பட்டு விட்டன.

புதிய ஏழு உலக அதிசயங்கள் 
புதிய ஏழு அதிசயங்களுக்கான இறுதித் தேர்வுகள்.

நியூ7ஒன்டர்சின் மைல்கற்கள் பக்கத்தின் படி, சுவிசிலிருந்து இயங்கும் கனடா நாட்டவரான திரைப்பட இயக்குநர் மற்றும் விமான ஓட்டியான பெர்னார்டு வெபர் இந்த திட்டத்தை செப்டம்பர் 1999 இல் தொடங்கினார். இந்தத் திட்டத்தின் இணைய தளம் 2001 இல் தொடங்கப்பட்டது. கனடாவில் இருந்து இயங்கும் தளத்திற்கு வெபர் $700 தொகையை அளித்தார். இந்தப் புதிய பட்டியலில் சேர்க்கப்பட வேண்டுமென்றால், அதிசயங்கள் மனிதனால் படைக்கப்பட்டதாய் இருக்க வேண்டும், 2000 ஆண்டுக்குள் முடிக்கப்பட்டதாக இருக்க வேண்டும், ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் பாதுகாக்கப்பட்டு வருவதாக இருக்க வேண்டும். 2005 நவம்பர் 24 வரையில், 177 நினைவுச் சின்னங்கள் பரிசீலனைக்கு வந்தன. 2006 சனவரி 1 இல் இந்தப் பட்டியலில் இருந்து 21 தளங்கள் மட்டும் ஐந்து கண்டங்களில் இருந்தான உலகின் தலை சிறந்த கட்டிடக்கலை நிபுணர்கள் ஆறு பேர், சாகா ஹதித், சீசர் பெல்லி, டடோ ஆன்டோ, ஹாரி சீட்லர், ஆசிஸ் டேயோப், யுங் ஹோ சாங், கொண்ட ஒரு குழு மற்றும் அதன் தலைவரான யுனெஸ்கோவின் முன்னாள் பணிப்பாளர் ஜெனரல் பேராசிரியர் பெட்ரிகோ மேயர் ஆகியோர் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக நியூ7ஒன்டர்ஸ் கூறியது. பிறகு உலகின் ஏழு பழைய அதிசயங்களில் எஞ்சியிருப்பதான கிசா பிரமிடுகள் வாக்கெடுப்பில் இருந்து நீக்கப்பட்டு பட்டியல் 20 ஆகக் குறைக்கப்பட்டது, கிசா பிரமிடுக்கு மதிப்பார்ந்த நியூ7ஒன்டர்ஸ் தகுதியாளர் என்ற கவுரவம் அளிக்கப்பட்டது.

சீனப் பெருஞ்சுவரின் விடாமுயற்சி, தாஜ் மஹாலுக்கு காதல், ஈஸ்டர் தீவு சிலைகளின் பிரமிப்பு என ஒவ்வொரு இறுதித் தேர்வுக்குமான காரணங்களை இந்த திட்டம் முடிவு செய்தது.

இடையில் 7 வெற்றிச் சின்னங்களையும், கூடுதலாக அக்ரோபோலிஸ், ஈஸ்டர் தீவு, மற்றும் ஈபிள் கோபுரம் இவற்றை அடக்கிய ஒரு முதல் 10 பட்டியல், புள்ளிகள் கொண்டு வெளியிடப்பட்டது.

யுனெஸ்கோவின் முன்னாள் பணிப்பாளர் ஜெனரலான பெட்ரிகோ மேயர் திட்டத்தின் நிபுணர்குழுவில் தனிநபர் தலைவராக இருந்தார். நியூ7ஒன்டர்ஸ் யுனெஸ்கோவுடன் தொடர்புடையதல்ல.

பரப்புரையின் அடிப்படை இலக்கு உலகளாவிய பரிமாற்றத்தையும் கலாச்சாரங்களுக்கு இடையிலான போற்றலை ஊக்கப்படுத்துவதும் ஆகும் என்று அமைப்பாளர்கள் தெரிவித்தனர். இது தவிர, "உலக நினைவு" என்று நியூ7ஒன்டர்ஸ் அழைப்பதான ஒன்றும் உருவாக்கப்பட்டது. இதன் பொருள் உலகமெங்கிலும் ஒவ்வொருவரும் நினைவில் கொண்டிருக்கும் பகிர்ந்து கொள்ளும் 7 விடயங்கள் என்பதாகும். உலகமறிந்த நினைவுச் சின்னங்கள் இடையிலான போட்டி, அதன் மீதான வருங்கால வாக்கெடுப்புகள், தொடர்பான வியாபாரங்கள், மற்றும் வாக்காளர் தரவுத்தள பயன்பாடு இவற்றில் இருந்து வரும் வருவாயின் ஒரு பகுதியை, உலகின் பல்வேறு மீட்சி திட்டங்களை உருவாக்க, அல்லது அவற்றுக்கு உதவ பயன்படுத்துவதற்கும் நியூ7ஒன்டர்ஸ் விரும்புகிறது. உலகின் தனித்துவமிக்க கலாச்சார பண்பாட்டு தளங்கள் குறித்த விழிப்புணர்வை வளர்ப்பது என்பது எப்போதும் நியூ7ஒன்டர்சின் ஓர் இலக்காக இருந்து வந்திருக்கிறது. "இந்த உணர்வை வளர்ப்பது அதனளவிலேயே ஓர் அதிசயமாகத் திகழும்" என்கின்றன ஜூலை 5, 2007 தினத்தின் நியூஸ்விக் மற்றும் MSNBC.

வென்றவை

அதிசயம் அமைவிடம் படம் ஆண்டு
கிசா நெக்ரோபோலிசு
(சிறப்புத் தகுதி)
أهرامات الجيزة
கிசா, எகிப்து புதிய ஏழு உலக அதிசயங்கள்  கிமு 2589
சீனப் பெருஞ் சுவர்
万里长城
Wànlǐ Chángchéng
சீன மக்கள் குடியரசு புதிய ஏழு உலக அதிசயங்கள்  கிமு 700
பெட்ரா
البتراء
Al-Batrā
ஜோர்தான் புதிய ஏழு உலக அதிசயங்கள்  கிமு 312
கொலோசியம் (ரோம்)
Colosseo
உரோமை நகரம், இத்தாலி புதிய ஏழு உலக அதிசயங்கள்  கிபி 70
சிச்சென் இட்சா
Chi'ch'èen Ìitsha'
மெக்சிக்கோ புதிய ஏழு உலக அதிசயங்கள்  கிபி 600
மச்சு பிச்சு
Machu Picchu
பெரு புதிய ஏழு உலக அதிசயங்கள்  கிபி 1438
தாஜ் மகால்
ताज महल
تاج محل
ஆக்ரா, உத்தரப் பிரதேசம், இந்தியா புதிய ஏழு உலக அதிசயங்கள்  கிபி 1632
மீட்பரான கிறித்து
Cristo Redentor
இரியோ டி செனீரோ, பிரேசில் புதிய ஏழு உலக அதிசயங்கள்  கிபி 1926

பண்டைய உலக அதிசயங்களில் இன்றும் அழியாமல் இருக்கும் எகிப்தின் கிசா நெக்ரோபோலிசு சிறப்பு விருதைப் பெற்றது.

எதிர்வினைகள்

ஐக்கிய நாடுகள்

2007 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் மிலேனிய மேம்பாட்டு இலக்குகளை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளுக்கான அங்கீகாரமாக ஐநாவுடன் ஒரு கூட்டுசெயல்பாட்டு ஏற்பாட்டை நியூ7ஒன்டர்ஸ் செய்துகொண்டது. ஐநா கூறியது:

யுனெஸ்கோ

ஐக்கிய நாடுகள் கல்வி,அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ), 2007 சூன் 20 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில், இந்த "தனியார் முன்முயற்சி"யில் தனக்கு தொடர்பு இல்லை என்று மறுபடியும் உறுதிப்படுத்தியது, இந்த கருத்துக்கணிப்பு "இணையத்திற்கு அணுகல் உள்ளவர்களின் கருத்தை மட்டுமே" பிரதிபலிப்பதாக இருப்பதாக அது தெரிவித்தது.

எகிப்து

எகிப்து வர்ணனையாளர்கள் இதனை உண்மையான பழைய அதிசயங்களில் (Ancient Wonders) உயிர் பிழைத்திருக்கும் ஒன்றே ஒன்றான கிசாவின் பெரும் பிரமிடின் அந்தஸ்துக்கான போட்டியாக பார்த்தனர். "இதனை எகிப்துக்கு, அதன் நாகரீகம் மற்றும் நினைவுச் சின்னங்களுக்கு எதிரான ஒரு சதியாகக் காணலாம்" என்று முன்னணி அரசாங்க நாளிதழ் ஒன்றில் தலையங்க ஆசிரியர் அல் சயீத் அல்-நகார் எழுதினார். இந்த திட்டம் "அபத்தமானது" என்று கூறிய எகிப்தின் கலாச்சார அமைச்சரான பரூக் ஹோஸ்னி அதனை உருவாக்கிய வெபர், "தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் அக்கறை மட்டுமே கொண்ட" ஒரு மனிதர் என்றார். உலகப் பாரம்பரியக் களங்களின் எகிப்திய நிபுணரான நகிப் அமின், "வர்த்தக அம்சம் தவிர, வாக்கெடுப்பில் எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை" என்பதை சுட்டிக் காட்டினார்.

எகிப்திடம் இருந்தான புகார்களுக்குப் பிறகு, நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை உலகின் 7 பழைய அதிசயங்களில் எஞ்சியிருக்கும் இறுதி ஒன்றான கிசா பிரமிடுகளுக்கு மதிப்பார்ந்த நியூ7ஒன்டர்ஸ் போட்டிச்சின்னம் என்னும் கவுரவத்தை அளித்து, அதனை வாக்கெடுப்பில் இருந்து நீக்கியது. ஆனாலும், கிசாவின் பெரும் பிரமிடு அவர்களின் அதிகாரப்பூர்வ முடிவுகளின் இணையதளத்தில் இடம் பெற்றிருக்கவில்லை.

பிரேசில்

பிரேசில் நாட்டில் வோட் நோ கிறிஸ்டோ (கிறிஸ்துவுக்கு வாக்களியுங்கள்) என்னும் பரப்புரை நடந்தது, இதற்கு தனியார் நிறுவனங்கள் ஆதரவளித்தன, தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் வாக்களிக்க செய்யும் அழைப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கவில்லை. இது தவிர, பான்கோ பிராடஸ்கோ மற்றும் ரெடெ க்ளோபோ உள்ளிட்ட முன்னணி நிறுவன ஆதரவாளர்கள் இந்த சிலை முதல் ஏழு இடத்திற்குள் வாக்களிப்பில் இடம் பிடிப்பதற்கு மில்லியன் கணக்கான டாலர்கள் தொகையை செலவளித்தன.

நியூஸ்வீக்கில் வெளியான ஒரு கட்டுரையின் படி, சுமார் 10 மில்லியன் பிரேசில் நாட்டினர் இந்த போட்டியில் ஜூலையின் ஆரம்பம் வரை வாக்களித்திருந்தனர். இது ஒரு மதிப்பீட்டு எண்ணிக்கை தான், ஏனென்றால் நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை இந்த பரப்புரை குறித்து இதுபோல் எந்த தகவல்களையும் வெளியிடவில்லை.

பெரு

பெரு நாட்டின் வர்த்தக மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் தலைமையில் நடத்தப்பட்ட தீவிரமான பிரச்சாரம் அங்கிருக்கும் ஊடகங்களிலும் அதன் மூலம் பெரு மக்களிடையேயும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது, பெரு மக்கள்தொகையினர் அநேகம் பேருக்கும் வீட்டில் இணைய இணைப்பு இல்லாதிருந்த போதிலும் அவர்கள் தங்கள் தேசிய அதிசயத்திற்கு பெருமளவில் வாக்களித்தனர்.புதிய உலக அதிசயங்கள் குறித்த அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியதோடு மாச்சு பிச்சு தேர்வு செய்யப்பட்டது தேசிய அளவில் கொண்டாடப்பட்டது, குறிப்பாக கஸ்கோ பிரதான சதுக்கத்திலும் லிமாவிலும், அங்கு ஜனாதிபதி ஆலன் கார்சியா ஒரு விழா ஏற்பாடு செய்தார்.

சிலி

ஈஸ்டர் தீவு, மோய்க்கான சிலியின் பிரதிநிதி ஆல்பர்டோ ஹோடஸ் கூறும்போது, மோயிஸ் எட்டாவது இடத்தைப் பிடித்திருப்பதாகவும் இதே புதிய ஏழு அதிசயங்களில் மனோரீதியாக இடம் பிடித்தது போலத்தான் என்று அமைப்பாளரான பெர்னார்டு வெபர் அவரிடம் அளித்த ஒரு கடிதம் கூறுவதாகத் தெரிவித்தார். பங்கு பெற்றவர்களில் இத்தகையதொரு ஆறுதல் கடிதம் பெற்றது தாம் மட்டுமே என்று ஹோடஸ் தெரிவித்தார்.

ஜோர்டான்

ஜோர்டானின் ராணி ரனியா அல்-அப்துல்லாவும் ஜோர்டானின் தேசிய கருவூலமான பெட்ராவை ஆதரிக்கும் பரப்புரையில் இணைந்து கொண்டார். 7 மில்லியனுக்கும் குறைவான மக்கள்தொகை கொண்டிருக்கும் நாடாக இருந்தபோதிலும், அந்த நாட்டில் இருந்து 14 மில்லியன் வாக்குகளுக்கும் அதிகமாக பதிவானதாகக் கூறப்படுகிறது. இது ஒரு மதிப்பீட்டு எண்ணிக்கை தான், ஏனென்றால் நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை இந்த பரப்புரை குறித்து இதுபோல் எந்த தகவல்களையும் வெளியிடவில்லை.

இந்தியா

இந்தியாவில் பரப்புரை வேகம் பிடித்து ஜூலை 2007 ம் ஆண்டு உச்சத்தை எட்டியது, செய்திச் சானல்கள், வானொலி நிலையங்கள், மற்றும் பல பிரபலங்கள் என அனைவரும் மக்களை வாக்களிக்க கேட்டுக் கொண்டனர்.

இறுதிக்கு தேர்வான மற்றவை

பட்டியலில்

அதிசயம் இருப்பிடம் பிம்பம் காலம்
ஏதென்சின் அக்ரோபோலிஸ் புதிய ஏழு உலக அதிசயங்கள் ஏதென்ஸ், கிரீஸ் புதிய ஏழு உலக அதிசயங்கள்  கிமு 447
அல்கம்பிரா புதிய ஏழு உலக அதிசயங்கள் கிரானாடா, ஸ்பெயின் புதிய ஏழு உலக அதிசயங்கள்  கிபி 1333
அங்கூர் வாட் புதிய ஏழு உலக அதிசயங்கள் அங்குர், கம்போடியா புதிய ஏழு உலக அதிசயங்கள்  கிபி 1113
ஈபெல் கோபுரம் புதிய ஏழு உலக அதிசயங்கள் பாரிஸ், பிரான்ஸ் புதிய ஏழு உலக அதிசயங்கள்  கிபி 1887
ஹேகியா சோபியா புதிய ஏழு உலக அதிசயங்கள் இஸ்தான்புல், துருக்கி புதிய ஏழு உலக அதிசயங்கள்  கிபி 360
கியோமிசு-டேரா புதிய ஏழு உலக அதிசயங்கள் கியோத்தோ, ஜப்பான் புதிய ஏழு உலக அதிசயங்கள்  கிபி 1633
மோவாய் புதிய ஏழு உலக அதிசயங்கள் ஈஸ்டர் தீவு, சிலி புதிய ஏழு உலக அதிசயங்கள்  கிபி 1250
நியுஸ்வான்ஸ்டீன் புதிய ஏழு உலக அதிசயங்கள் ஃபியுசென், ஜேர்மனி புதிய ஏழு உலக அதிசயங்கள்  கிபி 1869
செஞ்சதுக்கம் புதிய ஏழு உலக அதிசயங்கள் மாஸ்கோ, ரஷ்யா புதிய ஏழு உலக அதிசயங்கள்  கிபி 1561
சுதந்திரச் சிலை புதிய ஏழு உலக அதிசயங்கள் நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா புதிய ஏழு உலக அதிசயங்கள்  கிபி 1886
ஸ்டோன் ஹெஞ்ச் புதிய ஏழு உலக அதிசயங்கள்  அமெஸ்பரி, இங்கிலாந்து புதிய ஏழு உலக அதிசயங்கள்  கிமு 2400
சிட்னி ஒப்பேரா மாளிகை புதிய ஏழு உலக அதிசயங்கள் சிட்னி, ஆஸ்திரேலியா புதிய ஏழு உலக அதிசயங்கள்  கிபி1959
திம்பக்டு புதிய ஏழு உலக அதிசயங்கள் மாலி புதிய ஏழு உலக அதிசயங்கள்  கிபி 1327

குறிப்புகள்

கூடுதல் பார்வைக்கு

புற இணைப்புகள்

Tags:

புதிய ஏழு உலக அதிசயங்கள் வரலாறுபுதிய ஏழு உலக அதிசயங்கள் வென்றவைபுதிய ஏழு உலக அதிசயங்கள் எதிர்வினைகள்புதிய ஏழு உலக அதிசயங்கள் இறுதிக்கு தேர்வான மற்றவைபுதிய ஏழு உலக அதிசயங்கள் குறிப்புகள்புதிய ஏழு உலக அதிசயங்கள் கூடுதல் பார்வைக்குபுதிய ஏழு உலக அதிசயங்கள் புற இணைப்புகள்புதிய ஏழு உலக அதிசயங்கள்பண்டைய உலக அதிசயங்கள்போர்த்துக்கல்லிஸ்பன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நீதிக் கட்சிகுடலிறக்கம்தமிழ்நாட்டின் நகராட்சிகள்குற்றியலுகரம்சென்னைகௌதம புத்தர்உடன்கட்டை ஏறல்நீர் மாசுபாடுமண் பானைமங்காத்தா (திரைப்படம்)இந்திய தேசிய சின்னங்கள்வீரமாமுனிவர்இலக்கியம்வேற்றுமையுருபுதூது (பாட்டியல்)விஸ்வகர்மா (சாதி)புரோஜெஸ்டிரோன்பொதுவுடைமைமெய்யெழுத்துதிருநெல்வேலிஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)உலக ஆய்வக விலங்குகள் நாள்வெண்பாபள்ளர்உலா (இலக்கியம்)புங்கைஅய்யா வைகுண்டர்நருடோஓமியோபதிபுணர்ச்சி (இலக்கணம்)பிளாக் தண்டர் (பூங்கா)இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்நன்னூல்சப்ஜா விதைவிஜய் (நடிகர்)நெடுநல்வாடைதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்பழமொழி நானூறுவெண்குருதியணுபறவைமதீச பத்திரனசிறுநீர்ப்பாதைத் தொற்றுமகரம்இந்தியத் தேர்தல் ஆணையம்பிக் பாஸ் தமிழ்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்கேரளம்ஸ்டீவன் ஹாக்கிங்அப்துல் ரகுமான்தமிழ்நாடு அமைச்சரவைமறைமலை அடிகள்திருமந்திரம்பாரத ரத்னாதிருமணம்சீர் (யாப்பிலக்கணம்)உவமையணிஅயோத்தி தாசர்போக்குவரத்துகுறவஞ்சிகன்னத்தில் முத்தமிட்டால்இலங்கையின் மாவட்டங்கள்அன்புமணி ராமதாஸ்பணவீக்கம்காயத்ரி மந்திரம்பாரிவிலங்குகளின் பெயர்ப் பட்டியல்தமிழர் கலைகள்திராவிட மொழிக் குடும்பம்சைவத் திருமணச் சடங்குவிஜயநகரப் பேரரசுகார்த்திக் (தமிழ் நடிகர்)இந்திய வரலாறுதமிழர் நெசவுக்கலைகள்ளழகர் கோயில், மதுரைதிருப்பூர் குமரன்முன்னின்பம்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)கடையெழு வள்ளல்கள்நைட்ரசன்🡆 More