சிச்சென் இட்சா

சிச்சென் இட்சா (Chichen Itza) என்பது மெக்சிகோ நாட்டின், யுகட்டான் (Yucatán) என்னுமிடத்திலுள்ள, கொலம்பியாவுக்கு முந்தைய சகாப்தம் (ஆரம்ப நவீன காலம்) முற்பட்ட காலத் தொல்பொருளியற் களம் ஆகும்.

இது மாயன் நாகரிகக் காலத்தைச் சேர்ந்தது. தென்பகுதியைச் சேர்ந்த மத்திய தாழ்நிலப் பகுதிகளிலிருந்த மாயன் நாகரிகம் சார்ந்த பகுதிகள் வீழ்ச்சியுற்றபின், கி.பி. 600 ஆம் ஆண்டளவிலிருந்து பெரு வளர்ச்சி பெற்றுவந்த ஒரு முக்கியமான நகரமாக இது விளங்கியது. கி.பி 987 ல், தொல்ட்டெக் அரசனான குவெட்சால்கோட்டில் (Quetzalcoatl) என்பவன் மத்திய மெக்சிக்கோவிலிருந்து படையெடுத்து வந்து, உள்ளூர் மாயன் கூட்டாளிகளின் உதவியுடன், சிச்சென் இட்சாவைப் பிடித்துத் தனது தலைநகரம் ஆக்கிக் கொண்டான். அக் காலத்துக் கட்டிடக்கலைப் பாணி, மாயன் மற்றும் தொல்ட்டெக் பாணிகளின் கலப்பாக அமைந்திருப்பதைக் காணலாம். 1221 ஆம் ஆண்டில் இங்கே ஒரு புரட்சியும், உள்நாட்டுப் போரும் ஏற்பட்டதற்கு அறிகுறியாக, எரிந்த கட்டிடங்களின் எச்சங்கள் தொல்பொருளாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வுகள் சிச்சென் இட்சாவின் வீழ்ச்சிக்குக் காரணமானதுடன், யுகட்டான் பகுதியின் ஆட்சிபீடமும் மாயபான் (Mayapan) என்னுமிடத்துக்கு மாற்றப்பட்டது.

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
சிச்சென் இட்சா
Pre-Hispanic City of Chichen-Itza
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
சிச்சென் இட்சா
வகைகலாச்சாரம் சார்
ஒப்பளவுi, ii, iii
உசாத்துணை483
UNESCO regionஇலத்தீன் அமெரிகா, கரிபியம்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1988 (12வது தொடர்)
சிச்சென் இட்சா
கோட்டையின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள படிகள்
சிச்சென் இட்சா
சுற்றுலாப் பயணிகள் கோட்டை என அழைக்கப்படும் எல் காஸ்ட்டிலோ பிரமிட் மீது ஏறும் காட்சி

சிச்சென் இட்சா அழிபாடுகள் நடுவண் அரசின் சொத்து. எனினும் களத்தைக் காக்கும் பொறுப்பை மெக்சிக்கோவின் மானிடவியல், வரலாற்றுத் தேசிய நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. நினைவுச் சின்னங்கள் இருக்கும் நிலங்கள் 29 மார்ச் 2010 வரை தனியாருக்குச் சொந்தமானதாக இருந்தது. இந்நிலங்களை இப்போது யுக்கட்டான் மாநிலம் விலைகொடுத்து வாங்கியுள்ளது.

யுனெசுகோவின் பாரம்பரியச் சின்னமாக சிச்சென் இட்சா அறிவிக்கப்பட்டது. சிச்சென் இட்சா சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்

வெளி இணைப்புகள்

சிச்சென் இட்சா 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chichén Itzá
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

20°40′58″N 88°34′09″W / 20.68278°N 88.56917°W / 20.68278; -88.56917

Tags:

கி.பி.மாயன் நாகரீகம்மெக்சிகோ

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019பிரேமலதா விஜயகாந்த்கருத்தரிப்புஇரசினிகாந்துதாயுமானவர்காதல் கொண்டேன்கரணம்சூரைகண்டம்கணையம்மு. க. ஸ்டாலின்பொது ஊழிபூக்கள் பட்டியல்இந்திரா காந்திசு. வெங்கடேசன்ஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்மங்கோலியாபசுபதி பாண்டியன்மதயானைக் கூட்டம்பாசிசம்பொறியியல்மாலைத்தீவுகள்இயேசு காவியம்சிலிக்கான் கார்பைடுஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்மாணிக்கம் தாகூர்தமிழ்நாடு சட்டப் பேரவைகட்டுவிரியன்இராமலிங்க அடிகள்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிஇந்திய நிதி ஆணையம்முதுமலை தேசியப் பூங்காமீன்நருடோபெரும்பாணாற்றுப்படைதமிழர் பருவ காலங்கள்எட்டுத்தொகைபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்மாதேசுவரன் மலைஅறுபது ஆண்டுகள்வட சென்னை மக்களவைத் தொகுதிசெயற்கை நுண்ணறிவுஉ. வே. சாமிநாதையர்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்ஆசாரக்கோவைகான்கோர்டுசித்திரைபதிற்றுப்பத்துவிஷ்ணுதிராவிடர்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)செம்மொழிவாய்மொழி இலக்கியம்ஊரு விட்டு ஊரு வந்துஉயிர்மெய் எழுத்துகள்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்வன்னியர்வடிவேலு (நடிகர்)எங்கேயும் காதல்சிறுநீரகம்திராவிட மொழிக் குடும்பம்சிறுநீர்ப்பாதைத் தொற்றுதமிழர் பண்பாடுதமிழச்சி தங்கப்பாண்டியன்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்குலுக்கல் பரிசுச் சீட்டுமக்களாட்சிமுடக்கு வாதம்தமிழ்நாடு காவல்துறைகோயம்புத்தூர் மாவட்டம்தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்ஆற்றுப்படைதிராவிட முன்னேற்றக் கழகம்கேபிபாராஆய்த எழுத்து (திரைப்படம்)ஹாலே பெர்ரிவி.ஐ.பி (திரைப்படம்)🡆 More