பண்டைய உலக அதிசயங்கள்

பழங்கால உலகின் ஏழு உலக அதிசயங்கள் (Seven Wonders of the Ancient World) மனிதரால் கட்டப்பட்ட அமைப்புக்களாகும்.

இவ்வதிசயங்களைப் பட்டியலிட்டவர், சிடோனின் அண்டிப்பேற்றர் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. கி.மு 140 அளவில் எழுதப்பட்ட கவிதையொன்றில், இவ்வமைப்புக்களைப் பெருஞ் சாதனைகளாக இவர் குறித்துள்ளார். இதற்கு முன்னரும், ஹீரோடோத்தஸ் என்பவரும், சைரீனின் கல்லிமாச்சுஸ் என்பவரும் இதுபோன்ற பட்டியல்களை உருவாக்கியிருந்ததாகக் கருதப்படுகின்றது எனினும், இவை பற்றிய குறிப்புக்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

பண்டைய உலக அதிசயங்கள்
பண்டைய உலக அதிசயங்கள் (வலமிருந்து இடமாக, மேலிருந்து கீழ்) கிசாவின் பெரிய பிரமிட், பாபிலோனின் தொங்கு தோட்டம், ஒலிம்பியாவின் சேயுஸ் சிலை,எபிசஸ்லில் உள்ள ஆர்ட்டிமிஸ் கோயில், மௌசோல்லொஸின் மௌசோலியம், ரோடொஸின் கொலோசஸ் மற்றும் அலெக்ஸாந்திரியாவின் கலங்கரை விளக்கம் ஆகியவை 16-ம் நூற்றாண்டை சேர்ந்த டச்சு ஓவியர் மார்த்தன் வான் யீம்சூகெர்க் என்பவரால் சித்தரிக்கப்பட்டது.

பின்னணி

துவக்கத்தில் "அதிசயங்கள்" என்பதற்குப் பதிலாக, பண்டைய கிரேக்கர்கள் "தீமட்டா" (θεάματα) என்ற சொல்லைப் பயன்படுத்தினர், அதற்கு "காட்சிகள்", என்று பொருளாகும். வேறுவிதமாகக் கூறினால், "பார்க்க வேண்டியவை" (Τὰ ἑπτὰ θεάματγα τῆς οῆς οῼκ heptà theámata tēs oikoumenēs [gēs] ) என்று பொருள்படும்.பின்னர், "ஆச்சரியம்" ("தௌமடா" θαύματα, "அதிசயங்கள்") என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. எனவே, இந்தப் பட்டியல் பண்டைய உலகின் பயண வழிகாட்டி புத்தகத்தின் இணையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

பண்டைய உலக ஏழு அதிசயங்கள்

தற்போது வழக்கிலுள்ள, அலெக்ஸாந்திரியாவின் கலங்கரை விளக்கத்தை உள்ளடக்கிய, பண்டைய ஏழு உலக அதிசயங்களின் பட்டியல் மத்திய காலத்தில் ஏற்பட்டதாகக் கருதப்படுகின்றது. அண்டிப்பேற்றரின் பட்டியலில், இக்கலங்கரை விளக்கத்துக்குப் பதிலாக, பபிலோனின் சுவர்களே காணப்பட்டது. காலவரிசையில் அமைந்த பட்டியல் இது.

பண்டைய உலக அதிசயங்கள் 
பண்டைய உலக அதிசயங்களில் ஒன்றான கிசாவின் பெரிய பிரமிட் தோற்றம்

இவற்றில் தலா இரண்டு அதிசயங்கள், இன்றைய எகிப்து, கிரீஸ், துருக்கி ஆகிய நாட்டின் எல்லைகளுக்குள்ளும், ஒன்று ஈராக்கிலும் அமைந்திருந்தன. இன்றுவரை தப்பியிருப்பது கிசாவின் பெரிய பிரமிட் மட்டுமே. இவற்றுள் மிகக் குறைந்த காலம் நிலைத்திருந்தது, ரோட்ஸின் கொலோசஸ் ஆகும். நின்றநிலையில் 56 ஆண்டுகள் மட்டுமேயிருந்த இது, பூமியதிர்ச்சியொன்றினால் விழுந்துவிட்டது.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்


பண்டைய உலக அதிசயங்கள்
கிசாவின் பெரிய பிரமிட் | பாபிலோனின் தொங்கு தோட்டம் | ஒலிம்பியாவின் சேயுஸ் சிலை | ஆர்ட்டெமிஸ் கோயில் | மௌசோல்லொஸின் மௌசோலியம் | ரோடொஸின் கொலோசஸ் | அலெக்சாந்திரியாவின் கலங்கரை விளக்கம்

Tags:

பண்டைய உலக அதிசயங்கள் பின்னணிபண்டைய உலக அதிசயங்கள் பண்டைய உலக ஏழு அதிசயங்கள்பண்டைய உலக அதிசயங்கள் இவற்றையும் பார்க்கவும்பண்டைய உலக அதிசயங்கள் மேற்கோள்கள்பண்டைய உலக அதிசயங்கள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆனைக்கொய்யாமகரம்திதி, பஞ்சாங்கம்வெண்பாநாயன்மார்புறப்பொருள்சுவாமிமலைஅரச மரம்தேசிய அடையாள அட்டை (இலங்கை)சங்க இலக்கியம்பொது நிர்வாகம்அன்னி பெசண்ட்நான் அவனில்லை (2007 திரைப்படம்)பூரான்நவரத்தினங்கள்பகவத் கீதைசித்திரகுப்தர் கோயில்அருந்ததியர்எட்டுத்தொகை தொகுப்புதமிழ்போதைப்பொருள்தனுஷ் (நடிகர்)இராசேந்திர சோழன்நரேந்திர மோதிபசுமைப் புரட்சிவேளாண்மைஎ. வ. வேலுதேவேந்திரகுல வேளாளர்ஆயுள் தண்டனைகைப்பந்தாட்டம்ஸ்ரீலீலாபாஞ்சாலி சபதம்தங்கம்சென்னை மாகாணம்மு. களஞ்சியம்புதுப்பிக்கத்தக்க வளம்வேதாத்திரி மகரிசிவிவேகானந்தர்பழமொழி நானூறுஇரட்டைக்கிளவிசுப்பிரமணியசுவாமி கோயில், எட்டுக்குடிதமிழர் நெசவுக்கலைவிருமாண்டிதிருநாவுக்கரசு நாயனார்நாலடியார்சாதிபாம்புநவக்கிரகம்அன்மொழித் தொகைமுருகன்லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்அட்டமா சித்திகள்பிரசாந்த்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)இந்திய தேசிய சின்னங்கள்கேதா மாவட்டம்திருவிழாதிருமலை நாயக்கர் அரண்மனைகண்ணனின் 108 பெயர் பட்டியல்ர. பிரக்ஞானந்தாபொதுவுடைமைகீழடி அகழாய்வு மையம்முதலாம் உலகப் போர்ஆய்த எழுத்து (திரைப்படம்)வாலி (கவிஞர்)பரிதிமாற் கலைஞர்மாத்திரை (தமிழ் இலக்கணம்)சே குவேராகுடும்ப அட்டைஅந்தமான் நிக்கோபார் தீவுகள்கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில்இலட்சத்தீவுகள்உயிரியற் பல்வகைமைஅம்மனின் பெயர்களின் பட்டியல்வினோத் காம்ப்ளிஇந்தியத் தேர்தல் ஆணையம்இந்திய நாடாளுமன்றம்வளையாபதி🡆 More