அம்மான்

அமான் (Amman அரபு: عمان), ஜோர்தான் இராச்சியத்தில் தலைநகரமும் அதன் முக்கிய வர்த்தக மையமும் ஆகும்.

இதன் மக்கள்தொகை (2005 ஆம் ஆண்டில்) 125,400 ஆகும். ஜோர்தானின் மிகப்பெரிய நகரமும் இதுவாகும். அம்மான் ஜோர்தான் நாட்டின் தலைநகரம் மற்றும் அதிக மக்கள் கொண்ட நகரம் ஆகும்.  வடமத்திய ஜோர்தானின் அமைந்துள்ள அம்மான் நகரமானது அம்மான் கவர்னரேட்டின் நிர்வாகம், நாட்டின் பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார மையமாகும். இந்நகரில் 4,007,526 மக்கள் வசிக்கின்றனர். அம்மான் நகரம் 1,680 சதுர கிலோமீற்றர் (648.7 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டது. நவீனமயமாக்கப்பட்ட அரபு நகரங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. அரபு மற்றும் ஐரோப்பிய சுற்றுலா பயணிகள் மத்தியில் பிரபலமான சுற்றுலாத் தலமாகும்.

அமான்
عمان
அம்மான்
அமான்-இன் கொடி
கொடி
ஜோர்தானில் அமானின் அமைவிடம்
ஜோர்தானில் அமானின் அமைவிடம்
நாடுஜோர்தான்
அரசு
 • மேயர்ஒமார் அல்மானி
பரப்பளவு
 • மொத்தம்1,680 km2 (650 sq mi)
 • நிலம்700 km2 (300 sq mi)
ஏற்றம்773 m (2,356 ft)
மக்கள்தொகை (2005)
 • மொத்தம்21,25,400
இணையதளம்http://www.ammancity.gov.jo

புவியியல்

அம்மான் கிழக்கு கரை பீட பூமியில் அமைந்துள்ளது. மூன்று பெரிய வறண்ட ஆற்றுப்படுகையால் வகைப்படுத்தப்படும் மேட்டுநிலமாகும். ஆரம்பத்தில் இந்நகரம் ஏழு மலைகளினால் கட்டப்பட்டது. உயரம் 700 முதல் 1,100 மீ (2,300 முதல் 3,600 அடி) வரை உயரத்தில் அமைந்திருக்கும் இப்பகுதியின் வடமேற்கில் அல் சால்ட், வடகிழக்கில் அல்-சார்க் என்பன அமைந்துள்ளன. மடாபா, அல்-கரக், மான் என்பன முறையே மேற்கிலும், தென்மேற்கிலும், தென்கிழக்கிலும் அமைந்துள்ளன. அம்மானில் மீதமுள்ள நீருற்றுகளில் ஒன்று சர்கா ஆறுடன் இணைந்து நீர் வழங்குகிறது.

காலநிலை

கோப்பனின் காலநிலை வகைப்பாட்டின் படி மத்திய தரைக்கடல் காலநிலை மண்டலத்திற்கு அருகிலுள்ள அம்மான் அரை வறண்ட காலநிலைக்குள் வகைப்படுத்தப்படுகின்றது. கோடைக்காலம் லேசான வெப்பமாகவும், தென்றலாகவும் இருக்கும். இருப்பினும், ஒன்று அல்லது இரண்டு வெப்ப அலைகள் கோடையில் ஏற்படலாம். வசந்த காலம் பொதுவாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு இடையே தொடங்கி ஒரு மாதம் வரை நீடிக்கும். குளிர்காலம் பொதுவாக நவம்பர் இறுதியில் தொடங்கி மார்ச் தொடக்கத்தில் இருந்து மார்ச் நடுப்பகுதி வரை தொடர்கிறது. வருடாந்திர சராசரி மழைவீழ்ச்சி  300 மிமீ (12 அங்குலம்) ஆகும். அவ்வப்போது வறட்சி ஏற்படுவது பொதுவானது. பெரும்பாலும் அக்டோபர் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் மழை பெய்யும். கடும் மூடுபனி வழக்கமாக வருடத்திற்கு குறைந்தது 120 நாட்கள் காணப்படும்.

பொருளாதாரம்

ஜோர்தானின் பொருளாதாரத்தில் வங்கித்துறை முக்கிய பங்கு வகிக்கின்றது. அரபு வசந்த எழுச்சிகளின் விளைவாக அரபு உலகில் அமைதியின்மை மற்றும் பொருளாதார சிக்கல்கள் இருந்தபோதிலும் ஜோர்தான் அதன் வங்கித்துறை வளர்ச்சியை தக்க வைத்துக் கொண்டது. அம்மான் நகரம் ஐந்து கண்டங்களில் உள்ள 30 நாடுகளில் 600 க்கும் மேற்பட்ட கிளைகளில் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் மத்திய கிழக்கின் மிகப்பெரிய நிதி நிறுவனங்களில் ஒன்றான பன்னாட்டு அரபு வங்கியின் மையமாகும் அரபு வங்கி அம்மான் பங்குச் சந்தையில் 28% ஐக் குறிக்கிறது. மேலும் இந்நகரம் வணிக ரீதியாகவும் வளர்ச்சியடைந்துள்ளது.

சுற்றுலாத்துறை

அம்மான் நகரம் அதிக பார்வையிடப்படும் 4 வது அரபு நகரம் ஆகும். 2011 ஆம் ஆண்டில் சுமார் 1.8 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் 1.3 பில்லியன் டாலருக்கும் அதிகமாக நகரத்தில் செலவிட்டனர். ஜோர்தான் மற்றும் அம்மான் நகரம் மத்திய கிழக்கின் மருத்துவ சுற்றுலாவின் மையமாகும். அம்மான் ஆண்டுக்கு 250,000 வெளிநாட்டு நோயாளிகளினால் ஆண்டுக்கு 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான வருவாயைப் பெறுகின்றது.

புள்ளிவிபரங்கள்

2015 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின்படி அம்மான் நகரில் 4,007,526 மக்கள் வசிக்கின்றனர். இது ஜோர்தான் நாட்டின் மொத்த சனத்தொகையில் 42% ஆகும். 1,680 கிமீ 2 (648.7 சதுர மைல்) மொத்த பரப்பளவைக் கொண்ட இந்நகரம் ஒரு சதுர கிலோமீற்றர் (6,200 / சதுர மைல்) பரப்பளவிற்கு சுமார் 2,380 மக்கள் அடர்த்தியைக் கொண்டது. 20 நூற்றாண்டின் குடியேற்றங்கள் மற்றும் அகதிகளின் குடியேற்றங்களினால் சனத்தொகை அதிவேகமாக உயர்ந்துள்ளது. இன்று நகரத்தின் இரண்டு முக்கிய  குழுக்கள் பாலஸ்தீனிய அல்லது ஜோர்டானிய வம்சாவளியைச் சேர்ந்த அரேபியர்கள் ஆவார்கள். பிற இனக்குழுக்கள் மக்கள் தொகையில் சுமார் 2% வீதம் உள்ளனர். பாலஸ்தீனிய அல்லது ஜோர்டானிய வம்சாவளியைச் சேர்ந்த மக்களின் விகிதம் குறித்து அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை.

சான்றுகள்

வெளி இணைப்புகள்

குறிப்புக்கள்

Tags:

அம்மான் புவியியல்அம்மான் காலநிலைஅம்மான் பொருளாதாரம்அம்மான் புள்ளிவிபரங்கள்அம்மான் சான்றுகள்அம்மான் வெளி இணைப்புகள்அம்மான் குறிப்புக்கள்அம்மான்அரபு மொழிஜோர்தான்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கிருட்டிணன்கூத்தாண்டவர் திருவிழாநாட்டு நலப்பணித் திட்டம்பெயர்ச்சொல்தேவதாசி முறைமயங்கொலிச் சொற்கள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)வேதநாயகம் பிள்ளைசெக் மொழிஆவாரைசைவத் திருமுறைகள்காவிரிப்பூம்பட்டினம்ஆசிரியர்கண் (உடல் உறுப்பு)மயக்கம் என்னசின்னம்மைபனைதனுசு (சோதிடம்)ராஜா ராணி (1956 திரைப்படம்)குறிஞ்சிப் பாட்டுஆத்திசூடிமுல்லை (திணை)மார்கஸ் ஸ்டோய்னிஸ்பிரசாந்த்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்செங்குந்தர்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ஜிமெயில்சிவாஜி கணேசன்இலங்கையின் மாவட்டங்கள்இந்தியாவில் இட ஒதுக்கீடுபஞ்சபூதத் தலங்கள்கடல்ஐம்பூதங்கள்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்வெ. இறையன்புகிராம ஊராட்சிசுற்றுச்சூழல் பாதுகாப்புவீட்டுக்கு வீடு வாசப்படிஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்அறுபது ஆண்டுகள்இலவங்கப்பட்டைசெம்மொழிஏப்ரல் 24பரதநாட்டியம்கூகுள்கொன்றை வேந்தன்இந்தியக் குடியரசுத் தலைவர்தொழிலாளர் தினம்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்கன்னி (சோதிடம்)வன்னியர்மருதமலை முருகன் கோயில்மகேந்திரசிங் தோனிமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுபவன் கல்யாண்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)வேளாண்மைஆங்கிலம்சிறுகதைஆய்த எழுத்து (திரைப்படம்)யோனிகர்மாசங்க காலம்நன்னூல்அண்ணாமலையார் கோயில்நரேந்திர மோதிபாலை (திணை)அக்பர்மாநிலங்களவைகோத்திரம்சுபாஷ் சந்திர போஸ்கண்ணகிசிவன்வரிசையாக்கப் படிமுறைராமராஜன்அகத்தியர்சித்தர்🡆 More