தன்யூபு ஆறு: ஆறு

தான்யூபு (Danube) (/ˈdænjuːb/ DAN-ewb, மற்ற மொழிகளில் பல்வேறு பெயர்களில்) அழைக்கப்படுகிறது.

இது ஐரோப்பாவின் இரண்டாவது நீளமான ஆறு ஆகும். வோல்கா இதைவிட பெரிய ஐரோப்பிய ஆறாகும். இது நடுவண், கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளது. இது ஜெர்மனியில் உள்ள கருங்காட்டில் இருந்து, பிரிகாக் (Brigach), பிரேகு (Breg) என்னும் இரண்டு சிறு ஆறுகளாகத் தோற்றம் பெறுகின்றது. இவை இரண்டும் இணையும் இடத்திலிருந்தே தான்யூபு ஆறு எனப் பெயர் பெறுகின்றது. இந்த ஆறு, கிழக்கு முகமாக 2850 கிமீ (1771 மைல்கள்) ஓடிப் பல கிழக்கு ஐரோப்பியத் தலைநகரங்கள் ஊடாகப் பாய்ந்து இறுதியில், உருமேனியா, உக்கிரைன் ஆகிய நாடுகளிலுள்ள தான்யூபு கழிமுகத்தினூடாகக் கருங்கடலில் கலக்கிறது.

தான்யூபு ஆறு
River
நாடுகள் செருமனி, ஆசுத்திரியா, சுலோவாகியா, அங்கேரி, குரோழ்சியா, செர்பியா, பல்கேரியா, உரொமேனியா, மால்டோவா, உக்கிரைன்
நகரங்கள் உல்ம், இங்கோசுதாது, உரோகன்பர்கு, லிஞ்சு, வியன்னா, பிராதிசுலாவா, கியோர், புதாபெசுட்டு, துனவூய்வாரோசு, வுகோவர், நோவிசாது, சேமுன், பெல்கிரேடு, பான்செவோ, சுமேதெரவோ, துரோபேட்டா துர்னு-செவெரின்
Primary source பிரேகு
 - அமைவிடம் மர்திசுகபெல்லே, கருங்காடு, செருமனி
 - உயர்வு 1,078 மீ (3,537 அடி)
 - நீளம்
Secondary source பிரிகாக்
 - location புனித கியார்கன், கருங்காடு, செருமனி
 - உயர்வு 940 மீ (3,084 அடி)
 - நீளம்
Source confluence
 - location தோனவுஎசுசிங்கன்
கழிமுகம் தான்யூபுக் கழிமுகம்
நீளம் 2,860 கிமீ (1,777 மைல்)
Depth 1−8 மீ (−25 அடி)
வடிநிலம் 8,17,000 கிமீ² (3,15,445 ச.மைல்)
Discharge for தான்யூபுக் கழிமுகம்முன்பு
 - சராசரி
Discharge elsewhere (average)
 - பாசவு
30கிமீ, நகருக்கு முன்பு
 - வியன்னா
 - புதாபெசுட்டு
 - பெல்கிரேடு
தான்யூபு ஆற்றுத்தடம் சிவப்பில் உள்ளது
தான்யூபு ஆற்றுத்தடம் சிவப்பில் உள்ளது
தான்யூபு ஆற்றுத்தடம் சிவப்பில் உள்ளது
தன்யூபு ஆறு: பெயர்களும் சொற்பிறப்பியலும், புவிப்பரப்பியல், மேற்கோள்கள்
புடாபெஸ்ட்டில் உள்ள மார்கிட் பாலத்திலிருந்து தன்யூப் ஆற்றின் தோற்றம்
தன்யூபு ஆறு: பெயர்களும் சொற்பிறப்பியலும், புவிப்பரப்பியல், மேற்கோள்கள்
தன்யூப் ஆற்றின் பாதை

தற்போது உள்ளது போலவே தான்யூபு ஆறு பல நூற்றாண்டுகளாக ஓர் முதன்மை வாய்ந்த அனைத்துலக நீர்வழியாக இருந்து வருகிறது. வரலாற்றில், உரோமப் பேரரசின் நீண்ட கால எல்லையாக இருந்துவந்த இது, இன்று பத்து நாடுகளின் ஊடாகப் பாய்ந்து செல்கிறது அல்லது, அவ்வெல்லைகளின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. இந்நாடுகள், செருமனி, ஆசுத்திரியா, சுலோவாக்கியா, அங்கேரி, குரோழ்சியா, செர்பியா, பல்கேரியா, உருமேனியா, மால்டோவா, உக்கிரைன் என்பவையாகும். இவற்றுடன், இதன் வடிநிலம் இத்தாலி, போலந்து, சுவிட்சர்லாந்து, செக் குடியரசு, சுலோவேனியா, பொசுனியாவும் எர்சகோவினாவும், மாந்தெனேகுரோ, மாசிடோனியக் குடியரசு, அல்பேனியா ஆகிய மேலும் பல நாடுகளின் பகுதிகளாக அமைந்துள்ளது.தான்யூபு ஆற்றுப் படுகை ஐரோப்பாவில் உயிர்ப்பன்மைக்குப் பெயர்பெற்றது. இது ஈட்டிமீன், சாந்தர், உச்சன், கெளுத்தி, விலாங்குவகை சார்ந்த நன்னீர் மீன்கள் போன்ற நூற்றுக்கணக்கான மீன் இனங்களுக்கு வாழிடமாக அமைந்துள்ளது. இது கெண்டை, சுறா, சாலமன், திருக்கை ஆகிய மீன்களின் வாழிடமும் ஆகும். தான்யூபு கழிமுகத்திலும் ஆற்றின் கீழ்ப்பகுதியிலும் முழு உவர்மீன்களும் வாழ்கின்றன. இவற்றுள் ஐரோப்பிய விலாங்கு, மடவை கொடுவாய்மீன் ஆகியவை உள்ளடங்கும்.

பெயர்களும் சொற்பிறப்பியலும்

தொல் ஐரோப்பிய ஆற்றுப் பெயர்கள் முன்னிந்தோ- ஐரோப்பிய மொழியின் *தானு எனும் சொல்லில் இருந்து பெறப்பட்டன. இதே வேர்ச்சொல்லில் இருந்து உருவாகிய பிற பெயர்களாக தானுயெக், துவினா/தவுகவா, தான் ஆறு, தானெத்சு, தினீப்பர், தினீசுட்டிர், திசுனா என்பவை அமைகின்றன. இரிக் வேத சமக்கிருதத்தில் தாணு என்றால் பாய்மம் அல்லது ''நீர்த்துளி என்று பொருள்படும். அவெசுத மொழியில், தானு எனும் சொல் ஆறு எனும் பொருளைத் தருகிறது. இரிக் வேதத்தில், தாணு அசுரன் விருத்திரனின் தாயாக ஒருதடவை வருகிறது. தானு எனும் சுசிதிய மொழிச் சொல் ஆறு எனும் பொருள்கொண்டதாகலாம்: தானப்பிரிசு, தானசுதியசுஎன்பவற்றில் இருந்து வந்த சுசிதியச் சொற்களாகிய தினீப்பர், தினீசுட்டிர் என்பவை *தானு அபரா "ஆற்றுக்குச் சேய்மையில்", *தானு நழ்தியா- "ஆற்றுக்கு அண்மையில்" என முறையே பொருள்படும்.

( சமக்கிருதம் 'இசிராஸ் (iṣiras) "விரைந்த") எனும் சொல்லுக்கு நெருங்கிய "கடும் விரைவு" எனப் பொருள்படும் தாகோத்திரேசியச் சொல்லில் இருந்து கடன்பெற்று பண்டைய கிரேக்கருக்கு அறிமுகமாகிய சொல்லாக இஸ்த்ரோஸ் (Ἴστρος) விளங்கியது. இலத்தின மொழியில் தான்யூபு, தான்பியசு, தானுவியசு அல்லது இஸ்தர் எனவெல்லாம் அறியப்பட்டிருந்தது. தேசிய/திரேசிய மொழிப்பெயர், மேற்பகுதி தான்யூபுக்குத் தொனாரிசு எனவும் கீழ்ப்பகுதி தான்யூபுக்கு இஸ்த்ரோஸ் எனவும் வழங்கியது. திராகோ-பிரிகிய மொழிப்பெயர் மதோவாசு ஆகும்.இதன்பொருள் "ஆகூழ்" என்பதாகும்.

இலத்தீனப் பெயர் ஆண்பாலாகும். அற்றுக்கான சுலாவிக மொழிகளின் பெயர்களும் ஆண்பாலாகவே அமைகின்றன. இரைன் ஆற்றின் பெயரும் இலத்தீன மொழியிலும் சுலாவிக மொழிகளிலும் செருமன் மொழியிலும் ஆண்பாலாகவே அமைகிறது. செருமன்பெயராக தோனவு (Donau) (முந்து புத்தியல் செருமன் பெயராக தோனவ், டோனவ் ஆகியவை அமைகின்றன. Middle High German Tuonowe)பெண்பாலாகும். ஈரநிலம் எனப் பொருள்படும் இச்சொல் அவுவே (-ouwe ) எனும் முன்னடையைப் பெற்று பெண்பால் ஆகிறது.


தான்யூபுப் படுகையில் அமைந்த நாடுகளில் வாழும் மக்கள் தங்கள் மொழிகளில் தானுவாசு எனும் சொல் ஒலிப்பு சார்ந்தவாறு தான்யூபு ஆற்றின் பெயரைக் கீழுள்ளபடி குறிப்பிடுகின்றனர்:

இடாய்ச்சு மொழி: Donau ([ˈdoːnaʊ̯];

Romanian: Dunărea ([ˈdunəre̯a]);

பல்கேரிய: Дунав, Dunav (வார்ப்புரு:IPA-bg);

உக்ரைனியன்: Дунай, Dunai ([duˈnɑj]);

போலிய: Dunaj (Polish pronunciation: [ˈdũnaj]);

இத்தாலியம்: Danubio ([da'nubjo]);

உரோமாஞ்சு: Danubi.

புவிப்பரப்பியல்

தன்யூபு ஆறு: பெயர்களும் சொற்பிறப்பியலும், புவிப்பரப்பியல், மேற்கோள்கள் 
தான்யூபு வடிநிலப் படுகை

இது செருமனியில் உள்ள கருங்காட்டில் இருந்து, பிரிகாக் (Brigach), பிரேகு (Breg) என்னும் இரண்டு சிறு ஆறுகளாகத் தோற்றம் பெறுகின்றது. இவை இரண்டும் இணையும் இடத்திலிருந்தே தான்யூபு ஆறு எனப் பெயர் பெறுகின்றது. இந்த ஆறு, கிழக்கு முகமாக 2850 கிமீ (1771 மைல்கள்) ஓடிப் பல கிழக்கு ஐரோப்பியத் தலைநகரங்கள் ஊடாகப் பாய்ந்து இறுதியில், உருமேனியா, உக்கிரைன் ஆகிய நாடுகளிலுள்ள தான்யூபுக் கழிமுகத்தினூடாகக் கருங்கடலில் கலக்கிறது.

தற்போது உள்ளது போலவே தான்யூபு ஆறு பல நூற்றாண்டுகளாக ஓர் முதன்மை வாய்ந்த அனைத்துலக நீர்வழியாக இருந்து வருகிறது. வரலாற்றில், உரோமப் பேரரசின் நீண்ட கால எல்லையாக இருந்துவந்த இது, இன்று பத்து நாடுகளின் ஊடாகப் பாய்ந்து செல்கிறது அல்லது, அவ்வெல்லைகளின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. இந்நாடுகள், செருமனி, ஆசுத்திரியா, சுலோவாக்கியா, அங்கேரி, குரோழ்சியா, செர்பியா, பல்கேரியா, உருமேனியா, மால்டோவா, உக்கிரைன் என்பவையாகும். Its வடிநிலம் extends into nine more.

வடிநிலப் படுகை

தன்யூபு ஆறு: பெயர்களும் சொற்பிறப்பியலும், புவிப்பரப்பியல், மேற்கோள்கள் 
தான்யூபு கருங்கடலில் (படத்தில் உள்ள மேல் நீர்நிலை) கலக்கிறது.
தன்யூபு ஆறு: பெயர்களும் சொற்பிறப்பியலும், புவிப்பரப்பியல், மேற்கோள்கள் 
தான்யூபு கருங்கடலைச் சந்தித்தல்

இவற்றுடன், இதன் வடிநிலம் இத்தாலி, போலந்து, சுவிட்சர்லாந்து, செக் குடியரசு, சுலோவேனியா, பொசுனியாவும் எர்சகோவினாவும், மாந்தெனேகுரோ, மாசிடோனியக் குடியரசு, அல்பேனியா ஆகிய மேலும் பல நாடுகளின் பகுதிகளாக அமைந்துள்ளது. The highest point of the drainage basin is the summit of Piz Bernina at the Italy–Switzerland border, at 4,049 மீட்டர்கள் (13,284 அடி).

கிளையாறுகள்

தான்யூபு ஆறு மேலும் பல நாடுகளில் இருந்து தோன்றிவரும் பல கிளையாறுகளால் செழிப்புறுகிறது. இக்கிளையாறுகள் தம்மளவில் முதன்மையான ஆறுகளாகும். அவற்றில் படகு போக்குவரத்து நடைபெற்று அவை தான்யூபு வழியாக கருங்கடலை அடைகின்றன. கீழே கிளையாறுகள் அவை கலக்கும் வரிசையில் அமைகின்றன:

  1. இல்லெர் (நுழைவிடம் உல்ம்)
  2. இலெக்
  3. அல்த்மூகில் (நுழைவிடம் கெல்கீம்)
  4. நாப் (நுழைவிடம் இரீகன்சுபர்கு)
  5. இரீகன் (நுழைவிடம் இரீகன்சுபர்கு)
  6. இசார்
  7. இன் (நுழைவிடம் பாசவு)
  8. இல்சு (நுழைவிடம் [பாசவு]])
  9. என்சு
  10. மொராவா (நுழைவிடம் தெவின் கோட்டை)
  11. இராபா (நுழைவிடம் கியோர்)
  12. வாகு (நுழைவிடம் கொமார்னோ)
  13. கிரோன் (நுழைவிடம் சுதூரொவொ)
  14. இபெஃப்
  15. சியோ
  16. திராவா
  17. வுகா (நுழைவிடம் வுகோவார்)

18. Tisza
19. சாவா (நுழைவிடம் பெல்கிரேடு)
20. திமிசு (நுழைவிடம் பஞ்சேவோ)
21. பெரு மொரோவா
22. காராசு
23. யியூ (நுழைவிடம் பெக்கெட்)
24. இசுகார் (நுழைவிடம் கிகன்)
25. ஓல்டு (நுழைவிடம் துர்னு மாகுரேல்)
26. ஓசாம் (நுழைவிடம் நிகொபோல், பல்கேரியா)
27. அர்கேசு (நுழைவிடம் ஓல்டெனிதா)
28. இலாலோமிதா
29. சீரெத் (நுழைவிடம் கலாதி)
30. புரூத் (நுழைவிடம் கலாதி)

சாவா தான்யூபில் பெல்கிரேடில் கலத்தல். பெல்கிரேடு கோட்டையில் இருந்து எடுத்த படம், செர்பியா

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

தன்யூபு ஆறு: பெயர்களும் சொற்பிறப்பியலும், புவிப்பரப்பியல், மேற்கோள்கள் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
தன்யூப்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

தன்யூபு ஆறு பெயர்களும் சொற்பிறப்பியலும்தன்யூபு ஆறு புவிப்பரப்பியல்தன்யூபு ஆறு மேற்கோள்கள்தன்யூபு ஆறு வெளி இணைப்புகள்தன்யூபு ஆறுஆங்கில ஒலிப்புக் குறிகள்உக்கிரைன்உதவி:IPA/Englishஉருமேனியாகருங்கடல்கிழக்கு

🔥 Trending searches on Wiki தமிழ்:

திணைதமிழ் இலக்கியம்இராமாயணம்இனியவை நாற்பதுபஞ்சதந்திரம் (திரைப்படம்)இந்திய அரசியலமைப்புதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)வேற்றுமையுருபுரத்னம் (திரைப்படம்)தமிழ்நாடு சட்டப் பேரவைநாட்டு நலப்பணித் திட்ட தினம்சிறுநீரகம்மார்கஸ் ஸ்டோய்னிஸ்ஒற்றைத் தலைவலிதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்எயிட்சுதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்திருப்பூர் குமரன்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)ஏப்ரல் 23தமன்னா பாட்டியாஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்விஷ்ணுஇசைவேர்க்குருசங்க காலப் பெண்பாற் புலவர்கள்புணர்ச்சி (இலக்கணம்)உணவுச் சங்கிலிகௌதம புத்தர்பாஞ்சாலி சபதம்ஸ்ரீலீலாபறவைக் காய்ச்சல்ஜே பேபிகம்பராமாயணத்தின் அமைப்புபிள்ளைத்தமிழ்அசுவத்தாமன்வராகிகூத்தாண்டவர் திருவிழாதிணை விளக்கம்திருவிழாதரில் மிட்செல்சீர் (யாப்பிலக்கணம்)அருணகிரிநாதர்கூகுள்மாம்பழம்யூடியூப்தமிழர் இசைக்கருவிகள் பட்டியல்குருதி வகைமுத்துராஜாஅன்புமணி ராமதாஸ்வன்னியர்சமயபுரம் மாரியம்மன் கோயில்நந்திக் கலம்பகம்தற்கொலை முறைகள்போகர்வேதம்கே. எல். ராகுல்சப்தகன்னியர்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005அம்பேத்கர்வட்டாட்சியர்ஊராட்சி ஒன்றியம்கேதா மாவட்டம்இசுலாமிய வரலாறுகண்ணகிதிருச்சிராப்பள்ளிகரிகால் சோழன்சித்திரைசேக்கிழார்மக்களவை (இந்தியா)மூகாம்பிகை கோயில்ம. பொ. சிவஞானம்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)பொன்னுக்கு வீங்கிசித்திரை (பஞ்சாங்கம்)காற்றுஇமயமலைஇந்தியக் குடியரசுத் தலைவர்🡆 More