கே. எல். ராகுல்: இந்தியத் துடுப்பாட்டக்காரர்

கே.

எல். ராகுல் என அழைக்கப்படும் கன்னூர் லோகேசு ராகுல் (Kannaur Lokesh Rahul, பிறப்பு: 18 ஏப்ரல் 1992),இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் கருநாடக துடுப்பாட்ட அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடி வருகிறார். வலக்கைத் துடுப்பாட்டக் காரரான இவர் சிலவேளைகளில் குச்சக் காப்பாளராகவும் விளையாடுகிறார். ராகுல் 19-வயதிற்குட்பட்டவர்களுக்கான உலகக்கிண்ணப் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார். 2013 ஆம் ஆண்டில் இவர் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் ஐபிஎல் தொடரில் விளையாடினார். 2014 இல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடினார். 2018 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் இவர் கிங்சு இலெவன் பஞ்சாபு அணிக்காக விளையாடி வருகிறார்.

கே. எல். ராகுல்
Kannaur Lokesh Rahul
கே. எல். ராகுல்: ஆரம்பகால வாழ்க்கை, உள்ளூர்ப் போட்டிகள், சர்வதேச போட்டிகள்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கன்னூர் லோகேசு ராகுல்
பிறப்பு18 ஏப்ரல் 1992 (1992-04-18) (அகவை 31)
மங்களூர், கருநாடகம், இந்தியா
மட்டையாட்ட நடைவலது கை
பங்குதுவக்க ஆட்டக்காரர்; இலக்குக் கவனிப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 284)26 திசம்பர் 2014 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வு30 ஆகத்து 2019 எ. மேற்கிந்தியத்தீவுகள்
ஒநாப அறிமுகம் (தொப்பி 213)11 சூன் 2016 எ. சிம்பாப்வே
கடைசி ஒநாப11 பெப்ரவரி 2020 எ. நியூசிலாந்து
இ20ப அறிமுகம் (தொப்பி 63)18 சூன் 2016 எ. சிம்பாப்வே
கடைசி இ20ப2 பெப்ரவரி 2020 எ. நியூசிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2010–தற்போதுவரைகர்நாடக அணி
2013ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (squad no. 11)
2014–2015சன்ரைசர்ஸ் ஐதராபாத்
2016ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (squad no. 11)
2018–தற்போதுவரைகிங்ஸ் லெவன் பஞ்சாப் (squad no. 1)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே.து ஒ.ப.து பஇ20 மு.த.து
ஆட்டங்கள் 36 32 42 77
ஓட்டங்கள் 2,006 1,239 1,127 5,776
மட்டையாட்ட சராசரி 34.58 45.08 45.65 46.58
100கள்/50கள் 5/11 4/7 2/11 14/29
அதியுயர் ஓட்டம் 199 112 110* 337
வீசிய பந்துகள் 168
வீழ்த்தல்கள் 0
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
46/– 13/2 15/1 83/–
மூலம்: கிரிக்கின்ஃபோ, 11 பெப்ரவரி 2020

ராகுலின் முதல் முதல் தரத் துடுப்பாட்டம் ஆத்திரேலிய அணிக்கு எதிராக மெல்பேர்ணில் நடந்த 2014-15 தேர்வுத் தொடராகும் .சிட்னியில் நடந்த இரண்டாவது தேர்வு ஆட்டத்தில் 110 ஓட்டங்கள் எடுத்தார். 2016 ஆம் ஆண்டில் சிம்பாப்வே, அராரே விளையாட்டு சங்கம் மைதானத்தில் நடைபெற்ற சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 100* ஓட்டங்கள் எடுத்தார். இதன் மூலம் அறிமுகப் போட்டியில் நூறு ஓட்டங்கள் அடித்த முதல் இந்தியர் எனும் சாதனையைப் படைத்தார். தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டி ஆகிய முன்ன்று வடிவங்களிலும் நூறு அடித்த மூன்றாவது இந்தியர் எனும் சாதனையைப் படைத்தார். ஆகஸ்டு 27, 2016 இல் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் 51 பந்துகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 110* ஓட்டங்களை எடுத்தார். இதன்மூலம் பன்னாட்டு இருபது20 போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர் எனும் சாதனையைப் படைத்தார். அனைத்துவிதமான வடிவ துடுப்பாட்டப் போட்டிகளிலும் பவுண்டரி அடித்து நூறு அடித்த ஒரே சர்வதேச வீரர் எனும் சாதனையைப் படைத்தார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ்கு எதிரான போட்டியில் 14 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் குறைவான பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனையைப் படைத்தார்.

ஆரம்பகால வாழ்க்கை

ராகுல் ஏப்ரல் 18, 1992 ஆம் ஆண்டில் மங்களூரில் பிறந்தார். இவரின் தந்தை கே. என். லோகேஷ் , தாய் ராஜேஷ்வரி. இவரின் தந்தை சூரத்கலிள்ள கருநாடக தேசியத் தொழிநுட்பக் கழகத்தில் பேராசிரியராகவும், பொறுப்பு இயக்குநராகவும் பணியாற்றுகிறார். இவரின் தாய் மங்களூர் பலகலைக் கழகத்தில் வராலாற்றுத் துறை பேராசிரியராக உள்ளார்.

உள்ளூர்ப் போட்டிகள்

இவர் கருநாடகம் மாநில அணிக்காக 2010 ஆம் ஆண்டுமுதல் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார். 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் விளையாடினார். 2013 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக அறிமுகமானார்.

சர்வதேச போட்டிகள்

டிசம்பர் 24, 2014 இல் மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானத்தில் பொக்சிங் நாள் துடுப்பாட்டத் தொடரில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் ரோகித் சர்மாவிற்குப் பதிலாக விளையாடினார். முதலாட்டப் பகுதியில் 6 ஆவது வீரராக களம் இறங்கிய இவர் 3 ஓட்டங்கள் எடுத்தார். இதன் நான்காவது போட்டியில் முரளி விஜயுடன் இணைந்து துவக்கவீரராக கள்ம் இறங்கி 110 ஓட்டங்கள் எடுத்தார்.

2015 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அந்த அணியில் இவருக்கு முதலில் இடம் கிடைத்தது ஆனால் டெங்கு காய்ச்சல் காரணமாக இவர் அணியில் இருந்து விலகினார். பின் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் முரளி விஜய் காயம் காரணமாக விலகிய பின் இவருக்கு அணியில் இடம் கிடைத்தது. அந்தத் தொடரின் முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் நூறு ஓட்டங்களை அடித்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.

2016 ஆம் ஆண்டில் இந்திய அணி சிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது.அராரே துடுப்பாட்ட மைதானத்தில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். அந்தப் போட்டியில் நூறு ஓட்டங்கள் அடித்ததன் மூலம் அறிமுகப் போட்டியில் நூறு ஓட்டங்கள் எடுத்த முதல் இந்திய வீரர் எனும் சாதனை படைத்தார். அதே தொடரில் பன்னாட்டு இருபது20 போட்டியிலும் அதே அணிக்கு எதிராக விளையாடினார்.

2016 ஆம் ஆண்டில் இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப் பயணம் செய்து நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியது. ஜமைக்காவில் நடைபெற்ற இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் 158 ஓட்டங்களை எடுத்தார். இதன் மூலம் மேற்கிந்தியத் தீவில் இந்திய வீரர் ஒருவர் தனது முதல் போட்டியிலேயே நூறு ஓட்டங்கள் எடுத்த வீரர் எனும் சாதனை படைத்தார். அமெரிக்க ஐக்கிய நாட்டில் நடைபெற்ற முதல் பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் 46 பந்துகளில் நூறு ஓட்டங்களை அடித்தார். இதன்மூலம் அதி வேகமாக நூறு ஒட்டங்கள் அடித்த இந்திய வீரர் எனும் சாதனை படைத்தார். இருந்த போதிலும் இந்திய அணி தோல்வியடைந்தது.   மேலும் தான் விளையாடிய முதல் ஒருநாள் மற்றும் தேர்வுப் போட்டிகளில் நூறுகள் அடித்த ஒரே வீரர் எனும் சாதனையினைப் படைத்துள்ளார்.

மூன்று துடுப்பாட்ட வடிவங்களிலும் அதி விரைவாக நூறு ஓட்டங்களை 20 போட்டிகளிலேயே எடுத்தவர் எனும் சாதனை படைத்தார். இதற்கு முன்பாக அகமது செஷாத் 76 போட்டிகளில் இந்தச் சாதனியினைப் படைத்தார். பன்னாட்டு இருபது20 போட்டிகளில் நான்காவது அல்லது அதற்கும் அதிகமான வீரராக களம் இறங்கி நூறு ஓட்டங்கள் எடுத்த முதல் வீரர் ஆவார். சூலை 3, 2018 ஆம் ஆண்டில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக இவர் இந்தச் சாதனையினைப் படைத்தார். மேலும் பன்னாட்டு இருபது20 போட்டியில் ஹிட் விக்கெட் ஆன முதல் இந்திய வீரரும் இவர் ஆவார்.

காபி வித் கரண் எனும் நிகழ்ச்சியில் ஹர்திக் பாண்ட்யா உடன் கல்ந்துகொண்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக சனவரி 11, 2019 இல் இந்தியத் துடுப்பாட்ட அவை இருவரையும் தற்காலிகமாக அணியில் இருந்து நீக்க்கியது. அதற்கு முன்பாக ஆத்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தொடரில் இவர் இடம்பெற்றிருந்தார். மேலும் இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடத் திட்டமிருந்தது இந்த இரு தொடர்களுலும் இருந்து இவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். சனவரி 24, 2019 இல் இவரின் தடை நீக்கப்பட்டது.

இந்தியன் பிரீமியர் லீக்

2013 இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் குச்சக் காப்பாளர் மற்றும் மட்டையாளராக விளையாடினார். 2014 இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இவரை 1 கோடி ரூபாய் மதிப்பில் ஏலத்தில் எடுத்தது. 2016 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் இவர் மீண்டும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடினார். பின் 2018 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் கிங்சு இலெவன் பஞ்சாபு அணி இவரை 11 கோடி ரூபாய் மதிப்பில் இவரை ஏலத்தில் எடுத்தது. இதன் முதல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ்கு எதிரான போட்டியில் 14 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் குறைவான பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனையைப் படைத்தார். இதற்கு முன் சுனில் நரைன் 15 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

பன்னாட்டு சதங்கள்

தேர்வு சதங்கள்

கே.எல். ராகுலின் தேர்வு சதங்கள்
இல. ஓட்டங்கள் ஆட்டம் எதிராக நகரம்/நாடு அரங்கு ஆண்டு முடிவு
1 110 2 கே. எல். ராகுல்: ஆரம்பகால வாழ்க்கை, உள்ளூர்ப் போட்டிகள், சர்வதேச போட்டிகள்  ஆத்திரேலியா கே. எல். ராகுல்: ஆரம்பகால வாழ்க்கை, உள்ளூர்ப் போட்டிகள், சர்வதேச போட்டிகள்  சிட்னி, ஆத்திரேலியா சிட்னி கிரிக்கெட் மைதானம் 2015 சமம்
2 108 4 கே. எல். ராகுல்: ஆரம்பகால வாழ்க்கை, உள்ளூர்ப் போட்டிகள், சர்வதேச போட்டிகள்  இலங்கை கே. எல். ராகுல்: ஆரம்பகால வாழ்க்கை, உள்ளூர்ப் போட்டிகள், சர்வதேச போட்டிகள்  கொழும்பு, இலங்கை பி. சாரா ஓவல் 2015 வெற்றி
Source

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

கே. எல். ராகுல் ஆரம்பகால வாழ்க்கைகே. எல். ராகுல் உள்ளூர்ப் போட்டிகள்கே. எல். ராகுல் சர்வதேச போட்டிகள்கே. எல். ராகுல் இந்தியன் பிரீமியர் லீக்கே. எல். ராகுல் பன்னாட்டு சதங்கள்கே. எல். ராகுல் மேற்கோள்கள்கே. எல். ராகுல் வெளி இணைப்புகள்கே. எல். ராகுல்2018 இந்தியன் பிரீமியர் லீக்இந்தியத் துடுப்பாட்ட அணிகருநாடகம்கிங்சு இலெவன் பஞ்சாபுகுச்சக் காப்பாளர்சன்ரைசர்ஸ் ஐதராபாத்பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கர்மாசிங்கம்நான் ஈ (திரைப்படம்)விசயகாந்துஇரண்டாம் பத்து (பதிற்றுப்பத்து)இந்திய நிதி ஆணையம்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்ஆங்கிலம்இயேசு காவியம்சுப்பிரமணிய பாரதிசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்பொதுவுடைமைகேரளம்மதுரைக் காஞ்சிகட்டபொம்மன்மயங்கொலிச் சொற்கள்கௌதம புத்தர்இராமர்கருப்பைஇரா. இளங்குமரன்வாலி (கவிஞர்)மீனாட்சி108 வைணவத் திருத்தலங்கள்சி. விஜயதரணிகண்டம்பதிற்றுப்பத்துகிராம சபைக் கூட்டம்தொலைக்காட்சிவாட்சப்கண் (உடல் உறுப்பு)ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்பாரத ஸ்டேட் வங்கிமு. க. ஸ்டாலின்கள்ளழகர் கோயில், மதுரைவளையாபதிஇன்ஸ்ட்டாகிராம்திருமலை நாயக்கர்செயற்கை மழைகாதல் கொண்டேன்கணையம்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்திருக்குறள் பகுப்புக்கள்வானிலைகாடுவெட்டி குருஇளங்கோவடிகள்கள்ளுகமல்ஹாசன்தமிழ் தேசம் (திரைப்படம்)மதுரை வீரன்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்ஆண்டுஅணி இலக்கணம்தேசிக விநாயகம் பிள்ளைபெண்களின் உரிமைகள்மியா காலிஃபாமின்னஞ்சல்நெசவுத் தொழில்நுட்பம்விவேகானந்தர்நீர் மாசுபாடுஇந்திய நாடாளுமன்றம்வல்லினம் மிகும் இடங்கள்ராஜா ராணி (1956 திரைப்படம்)பள்ளுசிவாஜி கணேசன்திருமூலர்நவக்கிரகம்பயில்வான் ரங்கநாதன்திராவிசு கெட்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370தமிழ்நாடு சட்டப் பேரவைமருது பாண்டியர்தாவரம்தமன்னா பாட்டியாஅட்சய திருதியைவீரமாமுனிவர்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்🡆 More