தாய்: பெற்றவள்; ஈன்றவள்;அம்மா, அன்னை

ஆண் - பெண் என இருபாலினருக்கிடையிலான பாலுறவின் மூலம் பிறக்கும் குழந்தைக்குப் பெண் பாலினமாக இருப்பவள் தாய் எனப்படுகிறாள்.

உயிரியல் அல்லது சமூக நோக்கில் ஒரு குழந்தையை ஈன்றெடுக்கும் பெண் தாய் (mother) அல்லது அன்னை எனப்படுவார். தமிழில் அம்மா, அன்னை, ஆய் போன்ற சொற்கள் தாயைக் குறிக்கப் பயன்படுகின்றன.

தாய்: அம்மா சொல் உருவாக்கம், மேலும் பார்க்க, துணை நூற்பட்டியல்
ஒரு சிக்கிமிய தாயும் சேயும்
தாய்: அம்மா சொல் உருவாக்கம், மேலும் பார்க்க, துணை நூற்பட்டியல்
ஆடும் குட்டியும்
தாய்: அம்மா சொல் உருவாக்கம், மேலும் பார்க்க, துணை நூற்பட்டியல்
மெக்சிக்கோ நகரத்தில் உள்ள நினைவுத் தூண் - "நம்மைச் சந்திக்கும் முன்னரே நம்மை நேசிப்பவளுக்காக" என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.
தாய்: அம்மா சொல் உருவாக்கம், மேலும் பார்க்க, துணை நூற்பட்டியல்
அணில் தாயின் அன்பு கூண்டில் அடைபட்டது போல் தன் பிள்ளை மீது

மனிதனைப் போன்ற பாலூட்டிகளில் தாய், கரு உண்டாவதில் இருந்து கரு குழந்தையாக வளர்ச்சி பெறும் வரை தன் கருப்பையில் தாங்கியிருக்கிறாள். குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் இருவருக்கும் மற்ற உறவினர்களுக்கும் பங்குகள் இருந்தாலும், தாய்க்கு சிறப்பான பங்கு உண்டு.

யானைகளில், யானைக்குட்டிக்கு அத்தியாவசியத் தேவைகள் உணவு, பாதுகாப்பு மற்றும் தாயன்பு தான். ஒரு வேளை தாய்ப்பால் கிடைக்காத நிலை ஏற்பட்டால் குட்டி வாழும் வாய்ப்பு குறைகிறது. ஆயினும் ஒரு யானைக்குட்டி மிக மோசமாக பாதிக்கப்படுவது தனிமையால் தான்.

அம்மா சொல் உருவாக்கம்

தமிழ்மொழியில் உள்ள சொற்கள் தோன்றிய விதம் பற்றி ஆராயும் பொழுது அம்மா என்னும் சொல் எவ்வாறு உருவாகியிருக்கலாம் என்பதை இங்கே காணலாம்.

தமிழ்ச் சொற்கள் பெரும்பாலும் எழுப்பப்பட்ட ஓசைகளின் சொற்களாகவே காணப்படுகின்றன. கூ கூ என்று கூவிய கூகை, குர்குர் என ஒலித்த குரங்கு, கர் கர் என உறுமிய கரடி, சர சரவென ஓடிய சாரை என பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.

இவ்வகையில் அம்மா என்ற சொல்லும் இயற்கையில் தோன்றிய ஒன்றாகும். பிறந்த குழந்தை அழுவதும், சிரிப்பதுமாக வாயை மூடி மூடித் திறக்கின்றது. குழந்தை வாயைத் திறக்கும் போது அ என்ற ஒலி எழுகின்றது. வாயை மூடும் போது ம் என்ற ஒலி எழுகின்றது. ம்+அ. ம்ம -ம்ம -என்ற ஒலி மீண்டும் மீண்டும் வெளிவரும் போது அது அம்மா என்ற சொல்லைத் தருகின்றது.

அம்மா இயற்கையாகவே தோன்றிய சொல்லாகும். அம்ம, அம்மு, அம்மை போன்ற சொற்கள் அம்மா என்ற சொல்லுக்குப் பிறகு தோன்றியவைகள். தாய் என்ற சொல் ஆய் என்ற சொல்லின் நீட்சியாகும். ஆய்=அம்மா பாட்டி, பாலமுதைத் தந்த ஆய், தாய் எனப்பட்டாள். குழந்தையை அள்ளி எடுத்து அணைக்கும் தாய், அன்னையெனப்பட்டாள். தமிழகத்தில் சில கிராமங்களில் அம்மா எனும் சொல்லை ஆத்தா எனவும் குறிப்பிடுவர்.

ஆய், தாய், அன்னை, அம்மை ஆகியவைகள் யாவும் பிற்காலச் சொற்களே. அம்மா+ஆய்ச்சி=அம்மாச்சி. அம்மா என்ற தமிழ்ச் சொல் மா - மாதா -மதத்ரு என்றவாறு வடமொழியில் திரிந்தது எனலாம்.

மேலும் பார்க்க

துணை நூற்பட்டியல்

  • ச, முகமது அலி; க, யோகானந்த் (நவம்பர் 2004). யானைகள் அழியும் பேருயிர். மேட்டுப்பாளையம்: மலைபடு கடாம் பதிப்பகம். பக். 117. 

மேற்கோள்கள்

Tags:

தாய் அம்மா சொல் உருவாக்கம்தாய் மேலும் பார்க்கதாய் துணை நூற்பட்டியல்தாய் மேற்கோள்கள்தாய்ஆண்உடலுறவுஉயிரியல்குழந்தைசமூகம்தமிழ்பெண்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மதீனாபரிதிமாற் கலைஞர்மனித எலும்புகளின் பட்டியல்அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரிகுருத்து ஞாயிறுஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்இரண்டாம் உலகப் போர்வேலு நாச்சியார்முத்துராமலிங்கத் தேவர்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்தமிழ்நாடு சட்டப் பேரவைஆப்பிள்பத்து தலஇரட்சணிய யாத்திரிகம்மரவள்ளிபெண் தமிழ்ப் பெயர்கள்அழகிய தமிழ்மகன்பிரகாஷ் ராஜ்சிற்பி பாலசுப்ரமணியம்உவமைத்தொகைகொன்றை வேந்தன்வேற்றுமைத்தொகைபத்துப்பாட்டுபுதன் (கோள்)முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்கோத்திரம்பெயர்ச்சொல்இந்திய மக்களவைத் தொகுதிகள்பறையர்ஓ. பன்னீர்செல்வம்அணி இலக்கணம்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்தமிழ் எண்கள்தேவாரம்புணர்ச்சி (இலக்கணம்)ஆரணி மக்களவைத் தொகுதிசெவ்வாய் (கோள்)மயிலாடுதுறைகொங்கு வேளாளர்மனித மூளைகொல்லி மலைமுல்லை (திணை)தன்னுடல் தாக்குநோய்மாலைத்தீவுகள்கிராம ஊராட்சிஅல்லாஹ்சப்ஜா விதைமலைபடுகடாம்சந்திரயான்-1நெடுநல்வாடை (திரைப்படம்)நாளிதழ்கால்-கை வலிப்புசேரர்சுடலை மாடன்விசயகாந்துதேவேந்திரகுல வேளாளர்காயத்ரி மந்திரம்ஐந்திணைகளும் உரிப்பொருளும்சுபாஷ் சந்திர போஸ்அயோத்தி தாசர்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்சிட்டுக்குருவிநான் அவனில்லை (2007 திரைப்படம்)ஹதீஸ்முடக்கு வாதம்கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிதளை (யாப்பிலக்கணம்)ஆனைக்கொய்யாவானிலைவாசெக்டமிபோக்குவரத்துவிஷ்ணுகூத்துஅகோரிகள்சுலைமான் நபிகரிசலாங்கண்ணிஇராவண காவியம்🡆 More