முகில்

முகில் அல்லது மேகம் (cloud) என்பது ஒரு கிரகத்தின் மேற்பரப்புக்கு மேலாக வளிமண்டலத்தில் மிதக்கும், சிறிய நீர்த்துளிகள், உறைந்த பளிங்குத்துகள்கள் அல்லது வளிமண்டலத்தில் தொங்கும் துகள்கள் சேர்ந்த ஒரு தொகுதியாகும்.

புவியைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தில் உள்ளது போல வேறு கோள்களைச் சுற்றியும் முகில்கள் காணப்படுகின்றன . இங்குள்ள நீர்த்துளிகள் மற்றும் படிகங்கள் நீர் அல்லது பல்வேறு இரசாயனங்களால் ஆக்கப்பட்டிருக்கலாம். காற்று நிறைவுற்ற நிலையை அடைவதால் பூமியில் மேகங்கள் உருவாகின்றன. காற்று அதன் பனிநிலைக்கு குளிரும்போது அல்லது அடுத்துள்ள மூலத்திலிருந்து போதுமான அளவுக்கு ஈரப்பதத்தை நீராவி வடிவு பெறும்போது பனிநிலையின் வெப்பநிலை உயர்ந்து சூழல்வெப்பநிலையை அடைகிறது. இவற்றை பூமியின் அடிவளிமண்டலம், மீவளிமண்டலம், இடைவளிமண்டலம் உள்ளிட்ட ஓரியல் மண்டலத்தில் காணலாம். மேகங்களைப் பற்றி ஆய்வு செய்கின்ற அறிவியல் மேக ஆய்வியல் எனப்படுகிறது. வானிலை ஆய்வியலின் ஒரு பிரிவான வானிலை இயற்பியல் துறையில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அண்டவெளியில் விண்மீன்களுக்கு இடைப்பட்ட வெளியில் காணப்படும் துகள் கூட்டங்களையும் முகில்கள் என அழைப்பதுண்டு.

முகில்
விமானத்தின் ஜன்னல் வழி கண்ட அடுக்குத்திரள் கோள்மறைக்கா மழை முகில்.
முகில்
ஆத்திரேலியாவின் சுவிப்ட் கிரீக்கில் எடுக்கப்பட்ட திரள்வடிவ மேகக்கூட்டத்தின் படம்
முகில்
மேகங்கள்

மேகங்களின் வகைகள் அதன் அமைப்பு,அமைவிடம், மூலப்பொருட்கள், வடிவம் போன்ரவற்றின் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன. வளிமண்டலத்திலுள்ள மேகங்கள் அவை இருக்கும் அடுக்குகளின் அடிப்படையில் பெயரிடப்படுகின்றன. இலத்தீன் பெயரிடும் முறை மற்றும் பொதுவானப் பெயரிடும் முறை என்பவை அவ்விரு முறைகளாம். பூமியின் மேற்பரப்புக்கு அருகில் நெருக்கமாக உள்ள அடிவளி மண்டல அடுக்கு மண்டல மேகங்கள் இலத்தீன் பெயரிடும் முறையில் பெயரிடப்படுகின்றன. இலியூக் ஓவார்ட்டின் பெயரிடும் முறை உலகளாவிய தழுவல் காரணமாக பின்பற்றப்படுகிறது. இத்திட்டம் முறையாக 1802 ஆண்டில் முன்மொழியப்பட்டு, ஒரு நவீன சர்வதேச அமைப்புக்கான அடிப்படைத்திட்டமாக மாறியது, இத்திட்டம், மேகங்களை ஐந்து பௌதீக வகை வடிவங்களாகவும் மூன்று உயர அளவுகளாகவும் (முன்னர் இவை ஈட்டேகசுகள் என்று அறியப்பட்டன) வகைப்படுத்தியது. இந்த பௌதீக வகைகள், வெப்பச்சலன செயல்பாட்டின் தோராயமான ஏறுவரிசையில் வகைப்படுத்தப்படுகின்றன. அடுக்கியல்வடிவ விரிப்பு மேகங்கள் (சிட்ராட்டிபார்ம்), பரவிய வடிவ மேகங்கள் (சிர்ரிபார்ம்) மற்றும் திட்டுகள், உருளைகள், கோடுகள், மற்றும் இணைப்புகளால் கட்டமைக்கப்படும் அடுக்குத்திரள் வடிவ மேகங்கள் (சிட்ராட்டோகுமுளிபார்ம்), திரள்வடிவ குவியல்கள் (குமுளிபார்ம்), சிக்கலான கட்டமைப்பு கொண்ட இராட்சத திரள் குவியல்கள் (குமுலோநிம்பசு) என்பவை இந்த ஐந்து வகையான வகைபாடுகளாகும்.

திரள் கார்முகில்
திரள் கார்முகில் (calvus-type)
திரள் கார்முகில் (calvus-type)
AbbreviationCb
Symbolமுகில்
Genusஇராட்சத திரள்குவியல் முகில்
Altitude2,000–16,000 m
(6,500–60,000 ft)
Appearanceமிக உயரமான, பெரிய மேககூட்டங்கள்
Precipitation cloud?அதிக அளவிலான மழை பொழிவு

பௌதீக வடிவங்கள் அவை காணப்படும் உயரத்தின் அடிப்படையில் பத்து அடிப்படை மரபு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன, அதிக உயர வகை மேகங்கள் சிர்ரோ-முன்னொட்டைப் பெறுகின்றன. மற்றும் பெரும்பாலான இடை உயரவகை மேகங்கள் ஆல்ட்டோ முன்னொட்டைப் பெறுகின்றன. இவை தவிர பெரும்பாலான மேகங்கள் மேலும் சில இனங்களாகவும் வகைகளாகவும் பிரிக்கப்படுகின்றன.

மீவளிமண்டலம் மற்றும் இடைவளி மண்டலம் ஆகியவற்றுக்கு மேலே இரண்டு பரவிய பனிமுகில் மேகங்கள் அவற்றின் முக்கிய வகைகளுக்கான பொதுவான பெயர்களைக் கொண்டுள்ளன. இவை அடிக்கடி காணப்படுவதில்லை. பெரும்பாலும் பூமியிலுள்ள துருவ மண்டலங்களில் காணப்படுகின்றன. சூரிய குடும்பம் மற்றும் அதற்கு அப்பாலுள்ள மற்ற கிரகங்கள் மற்றும் நிலவுகளின் சுற்றுச்சூழல்களில் காணப்படுகின்றன. இருப்பினும், அவற்றின் வெவ்வேறு வகையான வெப்பநிலை பண்புகளின் காரணமாக, அவை பெரும்பாலும் மீத்தேன், அம்மோனியா மற்றும் கந்தக அமிலம் மற்றும் நீர் போன்ற மற்ற பொருட்களால் ஆக்கப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொண்டால் ஓரியல் வளிமண்டல முகில்களை வடிவம் மற்றும் உயரநிலைளில் இருந்து பெறப்படும் பத்து அடிவளிமண்டல முகில்களாகவும் அதற்கு மேலுள்ள இரண்டு கூடுதல் முக்கிய வகைகளாகவும் வகைப்படுத்த முடியும். செங்குத்து அளவைக் குறிக்கும் மூன்று இனங்கள் திரள் மேகங்கள் வகையில் அடங்கும். ஒரு உயரடுக்கின் அளவை விட அதிகமான செங்குத்து அளவைக் கொண்டு ஒன்றுக்கு மேற்பட்ட உயர அடுக்கில் உயர்ந்துள்ள மேகங்கள் குறைந்த அல்லது நடுநிலை மேகங்களாக அதிகாரப்பூர்வமாக வகைப்படுத்தப்படுகின்றன. அவை தோன்றுமிடம் இங்கு கருத்திற்கொள்ளப்படுகிறது. இருப்பினும் அவற்றை பலவடுக்கு மற்றும் செங்குத்து வகை மேகங்கள் என்றும் வகைப்படுத்துகின்றனர்.

வடிவம் மற்றும் உயரங்கள் அடுக்கியல் வடிவம் பரவிய வடிவம் அடுக்குத்திரள் வடிவம் திரள்குவியல் வடிவம் இராட்சததிரள்குவியல் வடிவம்
உச்ச நிலை இரவொளிர் மேகங்கள்]] (துருவ இடைவெளி மண்டலம்
மிக உயரநிலையில் துருவ அடிவளி மண்டல மேகம்
உயரநிலையில் கீற்றுப்படை மேகம் கீற்று மேகம் கீற்றுத்திரள் மேகம்
இடை உயரம் ஆல்டோஅடிவளிமண்டல மேகம் ஆல்டோதிரள் மேகம்
தாழ் நிலை அடிவளி மேகம் அடிவளிதிரள் மேகம் திரள் மேகம்
பலவடுக்கு நிலை/செங்குத்து கருமுகில் இடைத்திரள்
செங்குத்து கோபுர நிலை திரள் திரட்டு இராட்சதத்திரள் குவியல்

பெயர்க்காரணம்

பழைய ஆங்கிலத்தில் குன்று அல்லது பாறைத் திரள் என்ற பொருள் கொண்ட கிளட் அல்லது கிளாடு என்ற சொல்லிலிருந்து கிளவுடு என்ற சொல்லின் தோற்றம் நிகழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. 13 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், மழை மேகம் வானத்தில் சேகரமாகியுள்ள ஆவியாகிய நீரின் திரட்டு என்ற பொருளைப் பெற்றது. ஏனென்றால் இதன் தோற்றம் பாறைக் குவியல் போலவும் மற்றும் மேகக் குவியல் போலவும் இருந்ததால் ஓர் உருவகமாக இச்சொல்லின் பொருள் நீட்டிக்கப்பட்டது, காலப்போக்கில் மேகங்களை குறிக்க இந்த உருவகச் சொல்லுக்குப் பதிலாக பழைய ஆங்கிலச் சொல்லான கிளவுடு என்ற சொல்லே பொதுவாக பயன்பாட்டுக்கு வந்தது .

அரிசுடாட்டிலும் தியோபிராசுடசும்

மேகம் தொடர்பான பண்டைய ஆய்வுகள் தனியாக மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் மற்ற வானிலை கூறுகள் மற்றும் பிற இயற்கை அறிவியல்களுடன் இணைந்தே மேற்கொள்ளப்பட்டது. சுமார் கி.மு. 340 இல் கிரேக்க தத்துவவாதியான அரிசுடாட்டில், வானிலை மற்றும் காலநிலை உள்ளிட்ட இயற்கை விஞ்ஞானத்தைப் பற்றிய அறிவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வானிலை அளவையியல் என்ற நூலை எழுதினார்.

முதல் முறையாக, வீழ்படிவு மற்றும் வீழ்படிவின் வீழ்ச்சியாக உருவாகும் மழைப்பொழிவு போன்றவை விண்கற்களாகக் கருதப்பட்டன. 'வானத்தில் உயர்ந்திருக்கும் பொருள் என்ற பொருள் கொண்ட கிரேக்க வார்த்தையான மெட்டியோரசு என்ற சொல்லிலிருந்து அதாவது விண்கல் என்ற சொல் தோன்றியது. இச்சொலிலிருந்துதான் நவீனகால வானிலை, மற்றும் வானிலை ஆய்வு போன்ற சொற்கள் வந்தன. அரிசுடாட்டிலின் வானிலை ஆய்வியல் நூல் அறிவாற்றல் மற்றும் எளிமையான கவனிப்பு ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டிருந்தது. தற்போதைய அறிவியல் முறையாக அது கருதப்படுவதில்லை. ஆயினும்கூட பரவலான வளிமண்டல ஆராய்ச்சிகளை பரந்த அளவில் நடத்த முயன்ற முதல் நூலாக இது அறியப்படுகிறது .

முதலாவது விரிவான வகைபாடு

மேகங்களின் உருவாக்கம் மற்றும் நடத்தையைப் பற்றிய பல நூற்றாண்டு ஊகக் கோட்பாடுகளுக்குப் பின்னர், முதல் உண்மையான அறிவியல் பூர்வமான ஆய்வுகள் இங்கிலாந்தின் லூக்கா ஓவர்ட்டு மற்றும் பிரான்சின் யீன்-பாப்டிசுடு லாமார்க் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டன. இலத்தீன் மொழியை வலுவான அடிப்படையாகக் கொண்ட ஒரு பார்வையாளராக ஓவர்டு இருந்தார் 1802 இல் பல்வேறு வெப்ப மண்டல மேக வகைகளை வகைப்படுத்த இம்மொழிப் பின்னணியை அவர் பயன்படுத்தினார். வானத்தில் நிகழும் மேகங்களின் வடிவ மாற்றங்கள் வானிலை முன்னறிவிப்புக்கு ஒரு வாயிலைத் திறக்க முடியும் என்று அவர் நம்பினார். அதே வருடத்தில் மேக வகைப்பாட்டின் மீது தனியாக ஆய்வு மேற்கொண்ட லாமார்க்கு மேகங்களுக்குப் பெயரிடும் புதிய வகை பெயரிடும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். தனது சொந்த நாட்டின் பழைய பெயரிடும் முறையில் காணப்பட்ட அசாதாரண பிரஞ்சு பெயர்களை இவரது புதிய திட்டம் களைந்தது. தெளிவற்ற மேகங்கள், புள்ளி மேகங்கள், துடைப்ப வகை மேகங்கள் உள்ளிட்ட பனிரெண்டு வகையான மேகங்கள் இவரது பெயரிடும் முறையில் காணப்பட்டன. உலகளாவிய ஏற்றுக்கொள்ளப்பட்ட இலத்தீன் மொழியை ஓவர்டு பயன்படுத்தியதால் இம்முறை 1803 ஆம் ஆண்டிலேயே வெளியிடப்பட்டு உடனேயே ஏற்றுக் கொள்ளப்பட்டது . இப்பெயரிடும் திட்டம் பிரபலமானதால் செருமன் நாட்டு நாடக மற்றும் கவிஞரான யோகான் வொல்ப்காங் வோன் கோத்தே மேகங்களைப் பற்றிய நான்கு கவிதைகளை உருவாக்கி, ஓவர்டுக்கு அவற்றை அர்ப்பணித்தனர். ஓவர்டு முறையின் விரிவு இறுதியில் 1891 ஆம் ஆண்டில் சர்வதேச வானியல் மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது . இந்தப் பெயரிடும் முறை அடிவளி மண்டல மேகங்களைப் பெயரிடுவதற்கு மட்டுமே பயன்பட்டது. ஆனால் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இம்மண்டலத்திற்கு மேலாக உள்ள மேகங்களுக்குப் பெயரிடல் வகைப்பாட்டுத் திட்டங்கள் உருவாகின.

முகில்களின் வகைகள்

முகில் 
உயரத்தை வைத்து வகைப்படுத்தப்பட்ட முகில்கள்

ஒரே மாதிரி இரண்டு முகில்கள் இருப்பதில்லை. மேலும் அவற்றின் வடிவங்களும் மாறிக்கொண்டே இருக்கும். ஆனாலும் அவற்றின் பொதுவான வடிவத்தை வைத்து இவை வகைப்படுத்தப்படுகின்றன. வெவ்வேறு உயரங்களிலும் வெவ்வேறு நிலையிலும் உருவாகிற முகில்கள் வெவ்வேறு வடிவங்களிலிருக்கும். முகில்களின் உயரத்தையும் வெப்ப நிலையையும் பொறுத்து அவற்றிலுள்ள துகள்களும் வேறுபடுகின்றன.

1890இல் ஓட்டோ யெச்சி (Otto Jesse) என்பவர் அடிவளிமண்டலத்திற்கு மேல் இருக்கும் மேகங்களை கண்டுபிடித்தார். அதற்கு இருளொளிர் முகில்கள் (noctilucent) என்று பெயரிட்டார். இவை மற்ற மேகங்களை விட அதிக உயரத்தில் இருப்பவை. அவற்றை அடுத்து வெள்ளைச்சிப்பி (nacreous) மேகங்கள் எனப்படுகிறவை 12 முதல் 18 மைல் வரையிலான உயரங்களிலிருக்கும். அவை மிக மெலிந்தவை. அழகான நிறங்களைக் காட்டுகிறவை. அவற்றில் தூசுகளும் நீர்த்துளிகளும் அடங்கியிருக்கும். அவற்றைச் சூரிய உதயத்திற்கு முன்பும், சூரியன் மறைந்த பிறகு இரவிலும் மட்டுமே காண முடியும்.

பூமியிலிருந்து ஐந்து மைல்களுக்கு மேற்பட்ட உயரங்களில் சிர்ரசு (cirrus), சிர்ரோசிடேரட்டுசு (cirrostratus), சிர்ரோகியுமுலசு (cirrocumulus) என்ற வகைகளில் மேகங்கள் காணப்படும். சிர்ரசு மேகங்கள் இறகுகளைப் போல இழை இழையாக இருக்கும். சிர்ரோசிடேரட்டுசு மேகங்கள் மெலிந்த வெண்ணிறப் படலங்களாகத் தோற்றமளிக்கும். சிர்ரோகியுமுலசு மேகங்கள் சிறிய வட்டமான பொதிகளாகத் தெரியும். அவை மேலே வெள்ளையாகவும் அடியில் கருப்பாகவுமிருக்கும். இவையெல்லாம் நுண்ணிய பனித் தூளாலான மேகங்கள் ஆகும்.

குறைந்த உயரங்களிலுள்ள மேகங்கள் சிறு நீர்த்துளிகளாலானவை. பூமியிலிருந்து இரண்டு முதல் நான்கு மைல் வரையான உயரங்களிலிருப்பவை ஆல்டோகுமுலசு (Altocumulus) முகில்கள் எனப்படும். அவை சிர்ரோகுயுமுலசு மேகங்களை விடப் பெரிய வட்டமான பொதிகளாகத் தோன்றும். அதே உயரங்களில் ஆல்டோசிடாரட்டசு (Altostratus) என்ற மென் படல வகை மேகங்களும் உள்ளன. இவை பல வேளைகளில் வானம் முழுவதையும் ஒரு மெல்லிய சாம்பல் நிறத் திரையைப் போல மூடியிருப்பதைப் பார்க்கலாம். அப்போது சூரியனும் சந்திரனும் மங்கலான ஒளி மொத்தைகளைப் போலத்தோற்றமளிக்கும்.

முகில் 
கியுமுலசு மற்றும் சிடாராட்டோகியுமுலசு

பூமியிலிருந்து சுமார் ஒரு மைல் உயரத்தில் சிடாராட்டோகியுமுலசு வகை மேகங்கள் காணப்படுகின்றன. அவை பெரியவையாக வைக்கோல் போர்களைப் போலத் தோற்றமளிக்கும். அதே உயரங்களில் நிம்போசிடாரட்டசு என்ற மழை தரும் மேகங்களும் உலவுகின்றன. அவை கருப்பாகத் தடித்தடியாக, உருவமில்லா மொத்தைகளாக இருக்கின்றன. அவற்றுக்கும் கீழே தரையிலிருந்து 600 மீட்டருக்கும் குறைவான உயரத்தில் சிடாரட்டசு ) என்ற வகை மேகங்கள் உள்ளன. அவை உயரத்திலமைந்துள்ள மூடுபனிப் படலங்களாகும். கியுமுலசு (cumulus), கியுமுலோ நிம்பசு வகை மேகங்கள் அளவில் பெரிது பெரிதாக தோற்றமளிக்கின்றன. இவைதான் இடி மின்னல்களையும் புயல் காற்றுகளையும் உண்டாக்குகின்றன.

உயர்மட்ட மேகங்கள்

வளிமண்டலத்தில் 6 கி.மீ. உயரத்திலிருந்து 18 கி.மீ. உயரத்தில் தோன்றும் வெண்மை நிறமுடைய மேகங்கள் உயர்மட்ட மேகங்கள் எனப்படும். மேகத்தின் உயரம் மற்றும் உருக அமைப்பு அடிப்படையில் மூன்று வகைகளாக இவை வகைப்படுத்தப்பட்டுள்ளன: கீற்று மேகம், கீற்றுப்படை மேகம், கீற்றுத்திரள் மேகம்

கீற்று மேகம்

கீற்று மேகம் (Cirrus cloud) வானத்தில் தென்படும் மிருதுவான தன்மை கொண்ட இத்தகையை மேகம் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் சிதறிக் கிடக்கும் இதன் குறியீடு Ci என்பதாகும். இம் மேகம் இந்தியாவில் 8 கி.மீ உயரத்திற்கு மேலாகக் காணப்படுகிறது. இதனுடைய மூலப்பொருட்கள் பனிபடிகங்களாகும். சுழற்காற்றினால் எற்படும் மேலெழும்பும் காற்றோட்டத்தால் இவ்வகை மேகம் தோன்றுகின்றது. இம்மேகம் நகரும் திசையை அடிப்படையாகக் கொண்டு சூறாவளி நகரம் திசையை அனுமானிக்கலாம். இதன் சிறப்பம்சம் மழை தருவதில்லை. இது இரண்டு துணை மேகங்களை உடையது.

கீற்றுப்படை மேகம்

கீற்றுப்படை மேகம் (Cirrostrutus cloud) CS எனக் குறியிடப்படும் இம்மேகம் பால் போன்று வெண்மையாக வானம் முழுவதும் பரவிக்கிடக்கும் தன்மையது. மென்மையான, ஒளிபுகும் அமைப்புடையது. வளிமண்டலத்தில் அதிகபட்சமாக 6 கி.மீ. முதல் 18 கி.மீ. வரை உயரம் உடையதாக உள்ளது. சூறாவளியின் போது காற்று சுழற்சியுடன் கூடிய மேல்நோக்கு விசையோடு மிக உயரத்தில் தள்ளப்படுவதன் காரணமாக கீற்று மேகங்களில் இம் மேக வகை தோன்றுகின்றது. இம்மேகங்களால் மழைப்பொழிவு மற்றும் சூறாவளிக்கான வானிலையை அறிந்து கொள்ள முடியும். இதன்மூலப் பொருட்கள் பனிப்படிகங்கள் ஆகும். இவற்றின் ஒளிவிலகல் காரணமாக பரிவட்ட நிகழ்வு (Halo pheno mena) தோன்றுகிறது. சந்திரனைச் சுற்றி அமைந்த இப்பரிவட்டங்களைக் கொண்டு சூறாவளி ஏற்படுவதைத் தெரிந்து கொள்ள முடியும். இம்மேகம் இரண்டு துணை மேகங்களை உடையது.

கீற்றுத்திரள் மேகம்

கீற்றுத்திரள் மேகம் (Cirrocumulus cloud) வெண்மை நிறமுடைய சிறு செதில்கள் போலவும் கூட்டமாக மணல் அலைபோலவும் வரிசையாகக் காணப்படும். இம்மேகம் CC என்ற கூறியீட்டால் குறிக்கப்படும். இவை அதிகபட்ச உயரமான 6 கி.மீ. முதல் 18 கி.மீ. உயரத்தில் வளிமண்டலத்தில் காணப்படுகிறது. இம்மேகம் நான்கு துணை மேகங்களை உடையது. இம் மேகம் கீற்று மற்றும் கீற்றுப்படை மேகம் ஆகிய மேகங்களைச் சுற்றி நிலையற்ற வளிமண்டலம் நிலவும்போது இது தோன்றும். இம்மேகம் சாம்பல் நிறத்துடன் ஒழுங்கான அமைப்புடன் காணப்பட்டால் மழையும் உண்டாகும். இதன்மூலப் பொருட்கள் பனிப்படிகங்களால் ஆனவை.

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Tags:

முகில் பெயர்க்காரணம்முகில் அரிசுடாட்டிலும் தியோபிராசுடசும்முகில் முதலாவது விரிவான வகைபாடுமுகில் களின் வகைகள்முகில் உயர்மட்ட மேகங்கள்முகில் கீற்று மேகம்முகில் கீற்றுப்படை மேகம்முகில் கீற்றுத்திரள் மேகம்முகில் மேற்கோள்கள்முகில் புற இணைப்புகள்முகில்வளிமண்டலம்விண்மீன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

முத்துலட்சுமி ரெட்டிமூகாம்பிகை கோயில்பெரும்பாணாற்றுப்படைமு. மேத்தாஇந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்உயிர்மெய் எழுத்துகள்நாடோடிப் பாட்டுக்காரன்திருக்குறிப்புத் தொண்ட நாயனார்அரண்மனை (திரைப்படம்)சீர் (யாப்பிலக்கணம்)ஜி. யு. போப்கரகாட்டம்ஆண்டுதாவரம்நம்ம வீட்டு பிள்ளைரஜினி முருகன்டுவிட்டர்உலக மலேரியா நாள்தமிழ் நாடக வரலாறுபரிபாடல்நெல்பிரேமலுஜிமெயில்அறுசுவைநாட்டு நலப்பணித் திட்டம்விண்டோசு எக்சு. பி.கேள்விகோத்திரம்சோழர்சூல்பை நீர்க்கட்டிநயன்தாராதிருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்சிலம்பம்அறுவகைப் பெயர்ச்சொற்கள்ஒற்றைத் தலைவலிபாண்டியர்மகரம்பலாகள்ளர் (இனக் குழுமம்)தாராபாரதிசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்காரைக்கால் அம்மையார்விளம்பரம்பொன்னுக்கு வீங்கிதிரிசாமீனாட்சிராஜா ராணி (1956 திரைப்படம்)தமிழர் அளவை முறைகள்குற்றாலக் குறவஞ்சிஅருண் ஜேட்லி விளையாட்டரங்கம்திருப்பதிசிவபுராணம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்ஞானபீட விருதுவிளையாட்டுபால்வினை நோய்கள்படித்தால் மட்டும் போதுமாசதுரங்க விதிமுறைகள்இந்தியக் குடிமைப் பணிராஜேஸ் தாஸ்காச நோய்சுற்றுச்சூழல் பாதுகாப்புஅப்துல் ரகுமான்தமிழ்த்தாய் வாழ்த்துஜவகர்லால் நேருசிந்துவெளி நாகரிகம்மு. வரதராசன்நாலடியார்சிவாஜி கணேசன்கூத்தாண்டவர் திருவிழாஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)தமிழ் இணைய மாநாடுகள்குதிரைகடல்🡆 More