சல்மான் ருஷ்டி

சர் அகமது சல்மான் ருசிடி (Sir Ahmed Salman Rushdie; பிறப்பு: 19 சூன் 1947) இந்தியாவில் பிறந்த பிரித்தானிய-அமெரிக்கபெழுத்தாளர் ஆவார்.

இவரது பணி பெரும்பாலும் வரலாற்றுப் புனைகதைகளுடன் மந்திர யதார்த்தத்தை ஒருங்கிணைக்கிறது, முக்கியமாகக் கிழக்கு, மேற்கத்திய நாகரிகங்களுக்கிடையேயான தொடர்புகள், இடையூறுகள், இடம்பெயர்வுகள், ஆகியவை இந்தியத் துணைக்கண்டத்தைக் களமாகக் கொண்டு அமைக்கப்பட்டது.

சல்மான் ருசிடி
Salman Rushdie
2018 இல் ருசிடி
2018 இல் ருசிடி
பிறப்புஅகமது சல்மான் ருசிடி
19 சூன் 1947 (1947-06-19) (அகவை 76)
மும்பை, இந்தியா
தொழில்
  • எழுத்தாளர்
  • பேராசிரியர்
குடியுரிமை
  • ஐக்கிய இராச்சியம்
  • ஐக்கிய அமெரிக்கா (2016 முதல்)
கல்விகிங்குசு கல்லூரி, கேம்பிரிட்ச் (பி.ஏ)
வகை
  • மந்திர யதார்த்தவாதம்
  • நையாண்டி
  • பின்காலனித்துவம்
கருப்பொருள்
குறிப்பிடத்தக்க விருதுகள்
துணைவர்
  • கிளாரிசா லுவார்டு
    (தி. 1976; ம.மு. 1987)
  • மேரியான் விகின்சு
    (தி. 1988; ம.மு. 1993)
  • எலிசபெத் வெசுட்
    (தி. 1997; ம.மு. 2004)
  • பத்மா லட்சுமி
    (தி. 2004; ம.மு. 2007)
பிள்ளைகள்2
இணையதளம்
salmanrushdie.com

ருசிடியின் இரண்டாவது புதினம் நள்ளிரவின் சிறுவர்கள், 1981 இல் புக்கர் பரிசை வென்றது, அத்துடன் இப்புதினம் இரண்டு சந்தர்ப்பங்களில் "அனைத்து வெற்றியாளர்களின் சிறந்த நாவலாக" கருதப்பட்டது. இவரது நான்காவது நாவலான த சாத்தானிக் வெர்சசு (1988) வெளிவந்த பின்னர், ருஷ்டி பல படுகொலை முயற்சிகளுக்கு உட்பட்டார், ஈரானின் ஈரானின் அதியுயர் தலைவர் அவரது மரணத்திற்கு அழைப்பு விடுத்தமை உலகப் புவிசார் அரசியல் சர்ச்சையை எழுப்பியது. இவ்வழைப்பு மத ரீதியாக தூண்டப்பட்ட வன்முறை பற்றிய விவாதத்தை உருவாக்கி, புத்தகத்தை உந்துதலாக மேற்கோள் காட்டும் தீவிரவாதிகளால் ஏராளமான கொலைகள் மற்றும் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன.

1983 இல், இலக்கியத்துக்கான வேத்தியர் கழகத்தின் உறுப்பினராக ருசிடி தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999 இல் பிரான்சின் "கலை மற்றும் கடிதங்களின் ஆணையின் தளபதி" ஆக நியமிக்கப்பட்டார். ருசிடி இலக்கியத்திற்கான அவரது சேவைகளுக்காக 2007 இல் சர் பட்டம் பெற்றார். 2008 ஆம் ஆண்டில், தி டைம்சு இதழ் 1945 முதல் 50 சிறந்த பிரித்தானிய எழுத்தாளர்களின் பட்டியலில் அவருக்கு பதின்மூன்றாவது இடத்தைக் கொடுத்தது. 2000 ஆம் ஆண்டு முதல், ருசிடி அமெரிக்காவில் வசித்து வருகிறார். முன்னதாக, இவர் எமோரி பல்கலைக்கழகத்தில் கற்பித்தார். அவர் கலை மற்றும் கடிதங்களுக்கான அமெரிக்க அகாடமிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2012 இல், தி சாத்தானிக் வெர்சசு நூலின் மீதான சர்ச்சையை அடுத்து யோசப் ஆன்டன்: நினைவுக் குறிப்புகள் என்ற அவரது வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டார்.

2022 ஆகத்து 12 அன்று, நியூயார்க்கின் சட்டக்குவாவில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் சல்மான் ருசிடி சொற்பொழிவாற்றத் திட்டமிடப்பட்டிருந்த மேடையில் விரைந்து வந்த ஒரு நபர் ருசிடியைக் கத்தியால் குத்திப் படுகாயப்படுத்தினார்.

செய்ப்பூர் இலக்கிய விழா

2012ஆம் ஆண்டில் சனவரி 20 – 24 நாட்களில் செய்ப்பூரில் நடைபெற்ற செய்ப்பூர் இலக்கிய விழாவில் ருசிடி கலந்து கொள்வதாக இருந்தது. இந்திய இசுலாமிய அமைப்புக்கள் பத்வா வழங்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு இந்தியா வர நுழைவிசைவு வழங்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும் இந்தியா வந்த ருசிடி தமக்கு கொலை மிரட்டல் இருப்பதாக ராசத்தான் காவல்துறை கூறி பயணத்தை கைவிட்டார்.இருப்பினும் இவரது சர்ச்சைக்குரிய சாத்தானிக் வெர்சசு என்ற நூலிலிருந்து சில பகுதிகளை அரி குன்சுரு, அமிதவா குமார், சீத் தாயில், ருசிர் சோசி என்ற எழுத்தாளர்கள் பேசியதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனையடுத்து நால்வரும் விழாவிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

மேற்கோள்கள்

Tags:

இந்தியத் துணைக்கண்டம்இந்தியாமேற்கத்திய நாகரிகம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நவதானியம்தமிழ் எழுத்து முறைபொதுவுடைமைசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மலைபடுகடாம்சுற்றுச்சூழல் பாதுகாப்புதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்சீறாப் புராணம்தமிழர் பருவ காலங்கள்முத்துலட்சுமி ரெட்டிசங்க காலப் பெண்பாற் புலவர்கள்சூரைபெண் தமிழ்ப் பெயர்கள்இந்தியன் பிரீமியர் லீக்ஜோக்கர்அரவான்பகிர்வுசுந்தரமூர்த்தி நாயனார்கொன்றை வேந்தன்விலங்குஐயப்பன்நினைவே ஒரு சங்கீதம்பிரேமலுநாலடியார்பிள்ளையார்கமல்ஹாசன்ஆயுள் தண்டனைநெய்தல் (திணை)ஆற்றுப்படைமுக்குலத்தோர்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்முத்தொள்ளாயிரம்கண்ணகிதாஜ் மகால்தமிழ் நாடக வரலாறுஇங்கிலீஷ் பிரீமியர் லீக்கருட புராணம்காவிரிப்பூம்பட்டினம்பிளாக் தண்டர் (பூங்கா)ஜே பேபிபிரதமைமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்கொங்கணர்சிட்டுக்குருவிபோக்கிரி (திரைப்படம்)தமிழ்நாட்டின் நகராட்சிகள்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)வெந்து தணிந்தது காடுஇராமாயணம்திருட்டுப்பயலே 2சுற்றுச்சூழல்வளையாபதிஇந்திய ரூபாய்தொழிலாளர் தினம்சென்னைஅழகிய தமிழ்மகன்விந்துஇந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்ஓமியோபதிதிருமலை நாயக்கர் அரண்மனைதமிழ்கார்லசு புச்திமோன்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்கண்ணாடி விரியன்கண்ணனின் 108 பெயர் பட்டியல்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்பாம்புகரகாட்டம்அருண் ஜேட்லி விளையாட்டரங்கம்மாமல்லபுரம்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்போதைப்பொருள்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்விடுதலை பகுதி 1புரோஜெஸ்டிரோன்வ. உ. சிதம்பரம்பிள்ளை🡆 More