வரிக்குதிரை

Equus zebra Equus quagga Equus grevyi See here for subspecies.

வரிக்குதிரைகள்
வரிக்குதிரை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
துணைப்பேரினம்:
Hippotigris and
Dolichohippus
இனம்

வரிக்குதிரை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இது ஒரு தாவர உண்ணி. இது குதிரை இனத்தைச் சேர்ந்தது. வரிக்குதிரை, பாலூட்டிகளில் குதிரை, கழுதை போல ஒற்றைப்படைக் குளம்பிகள் வரிசையைச் சேர்ந்த ஒரு விலங்கினம். இவை உடல் முழுவதும் கருப்பு வெள்ளையிலான வரிகளைக் கொண்டுள்ளன. இதனாலாயே இவை தமிழில் வரிக்குதிரைகள் எனப்படுகின்றன.

வரிக்குதிரைகள் ஒரு சமூகவிலங்காகும். எனவே இவை எப்போதும் மந்தைகளாக (கூட்டமாக) வாழ்கின்றன. எந்த ஒரு குதிரையும் தனித்திருக்காது. நின்றுகொண்டே தூங்கும் பண்பு கொண்டது இது. இரண்டு வரிக்குதிரைகள் ஒன்றின்மீது ஒன்று மீது தங்களின் கழுத்துப் பகுதியை வைத்துக் கொண்டு நின்று ஓய்வு எடுத்துக் கொள்ளக்கூடியன. நன்கு வளர்ந்த வரிக்குதிரைகள் 1 - 2 மீட்டர் உயரமும் 2 - 3 மீட்டர் நீளமும் கொண்டவை. 250 இல் இருந்து 500 கிலோ எடை வரை இருக்கும். இவற்றால் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் ஓட முடியும். சாதாரணமாக ஒரு நாளில் இவை 80 கிலோமீட்டர் தொலைவு வரை நடக்க வல்லவை. காட்டில் உள்ள வரிக்குதிரைகள் 20 முதல் 30 ஆண்டுகள்வரை வாழக்கூடியன. அவை விலங்குக்காட்சி சாலையில் 40 ஆண்டுகள்வரை உயிர் வாழும்.

வரிகள்

வரிக்குதிரைகளின் வரிகள் தனித்தன்மை பெற்றவை. ஒவ்வொரு வரிக்குதிரையின் வரியும் இன்னொன்றினதைப்போல இருப்பதில்லை. மாந்தர்களின் கைவிரல் இரேகைகளைப் போல ஒன்றுபோல் ஒன்று இல்லாத தனித் தன்மையான கருப்பு, வெள்ளை வரிக்கோடுகளைக் கொண்டவை. வரிகள் முன் புறம் நெடுக்குக்கோடுகளாகவும் பின்புறமும் கால்களிலும் கிடைக்கோடுகளாகவும் இருக்கின்றன.

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

பறவைக் காய்ச்சல்மனோன்மணீயம்போக்கிரி (திரைப்படம்)சன்ரைசர்ஸ் ஐதராபாத்இராமாயணம்அகத்திணைநம்மாழ்வார் (ஆழ்வார்)தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்பெரும்பாணாற்றுப்படைபெண்ணியம்தரணிபனிக்குட நீர்கலிங்கத்துப்பரணிஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்பருவ காலம்கண் (உடல் உறுப்பு)கொங்கு வேளாளர்முருகன்தமிழில் சிற்றிலக்கியங்கள்பால் (இலக்கணம்)இந்திய அரசியலமைப்புஅனுமன்குடும்ப அட்டைவெந்து தணிந்தது காடுசுபாஷ் சந்திர போஸ்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்வாட்சப்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்திரிசாவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)மாநிலங்களவைவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்சச்சின் டெண்டுல்கர்செங்குந்தர்தமிழர் அளவை முறைகள்காச நோய்தமிழ்நாடு சட்ட மேலவைமணிமேகலை (காப்பியம்)தமிழக வரலாறுலக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்இரட்சணிய யாத்திரிகம்அணி இலக்கணம்கவலை வேண்டாம்இலங்கையின் மாவட்டங்கள்கிருட்டிணன்யுகம்மென்பொருள்அழகிய தமிழ்மகன்பஞ்சதந்திரம் (திரைப்படம்)அருண் ஜேட்லி விளையாட்டரங்கம்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்மின்னஞ்சல்காற்றுபுற்றுநோய்சீமான் (அரசியல்வாதி)பூக்கள் பட்டியல்தமிழ் படம் 2 (திரைப்படம்)கார்லசு புச்திமோன்பிளாக் தண்டர் (பூங்கா)கம்பராமாயணம்இந்தியத் தேர்தல் ஆணையம்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்திருவாசகம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்நாயக்கர்கணினிபாசிப் பயறுசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்கர்மாகருச்சிதைவுநருடோமகரம்ராஜசேகர் (நடிகர்)தமிழ் மாதங்கள்ஔவையார்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுகி. ராஜநாராயணன்பத்து தலபீப்பாய்🡆 More