இணைச்சொல்

இணைச்சொல் அல்லது இணைப்புச்சொல் (conjunction) என்பது மொழியில் இணையிணையாக அமையும் சில சொற்களைக் குறிக்கும்.

இணைச்சொற்களைப் பொருத்தமான இடங்களில் பயன்படுத்தினால் மொழிநடை சிறக்கும்; சொல்லப்படும் கருத்தும் திருத்தமாய் விளங்கும். நாம் செய்திகளையும் கருத்துகளையும் பிறரிடம் கூறும்பொழுது சுவைபடக் கூறுவதற்காக ஒரே பொருள் தரும் இரு சொற்களை இணைத்துப் பயன்படுத்துவதும் எதிர் பொருள்தரும் இருசொற்களை இனைத்துப் பயன்படுத்துவதும் இணைச்சொற்கள் எனப்படும்.

இணைச்சொல் விளக்கம்

ஒரு வாக்கியத்தில் இருவேறு சொற்கள் பொருளை உறுதிப்படுத்தவோ, முரண்படுத்தவோ செறிவுபடுத்தவோ இணைந்து வருவது இணைச்சொல் எனப்படும்.

எடுத்துக்காட்டு

"மாப்பிள்ளைக்கு நிலம்புலம் உள்ளதா ?" இங்கு நிலம் என்பது நன்செய் வயல் ஆகும். புலம் என்பது புன்செய் வயல் ஆகும்.

இணைச்சொல் வகைகள்

இணைச்சொல் வகைகள் பின்வருமாறு மூவகைப்படும்.

  1. நேரிணைச் சொற்கள்
  2. எதிரிணைச் சொற்கள்
  3. செறியிணைச் சொற்கள்.

நேரிணைச் சொற்கள்

ஒரே பொருள் தரும் இரு சொற்கள் இணைந்து வருவது நேரிணைச் சொற்கள் எனப்படும். நேரிணைச் சொற்கள் பின்வருமாறு அமையும்.

  • சீரும் சிறப்பும்
  • பேரும் புகழும்
  • ஈடு இணை
  • உற்றார் உறவினர்
  • நோய் நொடி
  • குற்றங் குறை
  • கூன் குருடு
  • வாடி வதங்கி
  • முக்கலும் முனங்கலும்
  • வாயும் வயிறும்
  • மூக்கும் முழியும்
  • ஆற அமர
  • இடுக்கு மிடுக்கு
  • எடக்கு மடக்கு
  • பாயும் படுக்கையும்
  • தங்கு தடை
  • முட்டி மோதி
  • ஒட்டி உலர்ந்து
  • தப்பித் தவறி
  • வாட்டச் சாட்டம்
  • நாணிக் கோணி

எதிரிணைச் சொற்கள்

ஒன்றுக்கொன்று முரண்பட்ட இரு சொற்கள் இணைந்து வருவது எதிரிணைச் சொற்கள் எனப்படும். எதிரிணைச் சொற்கள் பின்வருமாறு அமையும்.

  • அல்லும் பகலும்
  • உயர்வு தாழ்வு
  • அடியும் நுனியும்
  • உள்ளும் புறமும்
  • குறுக்கும் நெடுக்கும்
  • உச்சிமுதல் உள்ளங்கால் வரை
  • ஐயந்திரிபற
  • இருளும் ஒளியும்
  • கிழக்கும் மேற்கும்
  • வடக்கும் தெற்கும்
  • ஏட்டிக்குப் போட்டி
  • மேடு பள்ளம்
  • முன்னும் பின்னும்
  • மேலும் கீழும்
  • வலதும் இடதும்
  • அங்கே இங்கே
  • காலை மாலை

செறியிணைச் சொற்கள்

ஒரு சொல்லின் பண்பு அல்லது செயலை வலுவூட்டும் விதமாக ஒத்த பொருளுடைய இரு சொற்கள் இணைந்து வருவது செறியிணைச் சொற்கள் எனப்படும். செறியிணைச் சொற்கள் பின்வரும் இரு வழிகளில் அமையும்.

பண்பு செறியிணைச் சொற்கள்

  • செக்கச் செவேல்
  • வெள்ளை வெளேர்
  • பச்சைப் பசேல்
  • நட்ட நடுவில்
  • கன்னங்கரேல்

செயல் செறியிணைச் சொற்கள்

  • அழுதழுது
  • நடந்து நடந்து
  • கொஞ்சிக் கொஞ்சி
  • பார்த்துப் பார்த்து

மேற்கோள்கள்

Tags:

இணைச்சொல் விளக்கம்இணைச்சொல் எடுத்துக்காட்டுஇணைச்சொல் வகைகள்இணைச்சொல் நேரிணைச் சொற்கள்இணைச்சொல் எதிரிணைச் சொற்கள்இணைச்சொல் செறியிணைச் சொற்கள்இணைச்சொல் மேற்கோள்கள்இணைச்சொல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கொன்றைராஜசேகர் (நடிகர்)ஈ. வெ. இராமசாமிதிவ்யா துரைசாமிதிருக்குர்ஆன்பக்கவாதம்தொழினுட்பம்மதுரைக்காஞ்சிகண்ணாடி விரியன்ஸ்ரீநிலக்கடலைகண்ணகிமதீச பத்திரனகார்ல் மார்க்சுவேளாண்மைகிராம ஊராட்சிஇந்திய நிதி ஆணையம்காவிரிப்பூம்பட்டினம்பல்லவர்பதினெண் கீழ்க்கணக்குவெண்பாமருதமலை (திரைப்படம்)திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்கங்கைகொண்ட சோழபுரம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழக வெற்றிக் கழகம்பிரெஞ்சுப் புரட்சிவிளம்பரம்அய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்பாவலரேறு பெருஞ்சித்திரனார்மாநிலங்களவைமுதற் பக்கம்யூடியூப்ஏலாதிகுண்டலகேசிஅய்யா வைகுண்டர்கேள்விதிரிகடுகம்கள்ளழகர் கோயில், மதுரைகாதல் தேசம்திராவிட முன்னேற்றக் கழகம்சென்னை சூப்பர் கிங்ஸ்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்திராவிட மொழிக் குடும்பம்இந்தியக் குடியரசுத் தலைவர்இங்கிலீஷ் பிரீமியர் லீக்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்இரட்டைக்கிளவிநீதி இலக்கியம்தன்வினை / பிறவினை வாக்கியங்கள்சாருக் கான்மாதேசுவரன் மலைகாதல் (திரைப்படம்)பெயர்பால் (இலக்கணம்)ரோசுமேரிஅறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)கன்னி (சோதிடம்)தளபதி (திரைப்படம்)கண்ணனின் 108 பெயர் பட்டியல்மங்காத்தா (திரைப்படம்)கிழவனும் கடலும்திருட்டுப்பயலே 2திருவாசகம்அன்னை தெரேசாபிக் பாஸ் தமிழ்தற்குறிப்பேற்ற அணிஉலக மலேரியா நாள்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்செயற்கை மழைவிண்டோசு எக்சு. பி.திருமலை நாயக்கர்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்பள்ளுகருட புராணம்செண்டிமீட்டர்தமிழில் கணிதச் சொற்கள்அகமுடையார்உத்தரகோசமங்கை🡆 More