மியூனிக்

மியூனிக் (ஜெர்மன்: München (ஒலிப்பு: கேளுங்கள்), ஜெர்மன் நாட்டு மாநிலமான பவேரியாவின் தலைநகரமாகும்.

1.402 மில்லியன் மக்கள்தொகை கொண்ட மியூனிக், பெர்லின் மற்றும் ஹம்பர்க்குக்கு அடுத்து ஜெர்மனியில் பெரிய நகரமாக விளங்குகிறது. இந்நகரம் இசர் ஆற்றங்கரையில் 48°08′N 11°34′E / 48.133°N 11.567°E / 48.133; 11.567 அச்சரேகையில் அமைந்துள்ளது. 1972 ல் இங்கு இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளவந்த இஸ்ரேல் வீரர்களை பலஸ்தீனப் போராளிகள் கொலை செய்தனர். இதன் பின்னர் 2006 உலகக் கிண்ணக் கால் பந்தாட்டப் போட்டி இங்கு நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவ்வூரில் பழமைவாய்ந்த இடாய்ச்சு அருங்காட்சியகமும் அமைந்துள்ளது. இங்கு தொழில் நுட்பம் சார்ந்த நூற்றாண்டுக்கும்மேலான பொருட்கள பல காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மியூனிக்
முனிச்
சின்னம் அமைவிடம்
முனிச் இன் சின்னம்
முனிச் இன் சின்னம்
மியூனிக் is located in ஜெர்மனி
மியூனிக்
செயலாட்சி (நிருவாகம்)
நாடு இடாய்ச்சுலாந்து
மாநிலம் Invalid state: "பவேரியா"
நிரு. பிரிவு Upper Bavaria
மாவட்டம் Urban district
நகரம் subdivisions 25 boroughs
நகர முதல்வர் Christian Ude (SPD)
Governing parties SPD / Greens / Rosa Liste
அடிப்படைத் தரவுகள்
பரப்பளவு 310.43 ச.கி.மீ (119.9 ச.மை)
ஏற்றம் 519 m  (1703 ft)
மக்கட்தொகை  13,56,597  (31 திசம்பர் 2007)
 - அடர்த்தி 4,370 /km² (11,318 /sq mi)
 - Urban 26,06,021
வேறு தகவல்கள்
நேர வலயம் ஒஅநே+1/ஒஅநே+2
வாகன அனுமதி இலக்கம் M
அஞ்சல் குறியீடுs 80331–81929
Area code 089
இணையத்தளம் www.muenchen.de



மியூனிக்

பி. எம். தபிள்யூ தானுந்து நிறுவனத்தின் தலைமையகமும் அதன் தானுந்து அருங்காட்சியகமும் மியூனிக்கில் தான் உள்ளன.

மியூனிக்
மியூனிக்கின் வடக்கே உள்ள இசர் ஆற்றின் தோற்றம்

வரலாறு

1158 ஆண்டில் தான், மியூனிக் நகரம் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் என பழங்கால ஆவணக்குறிப்புகளால் கருதப்படுகிறது. 8ம் நூற்றாண்டில் துறவிகள் இங்கு அதிக எண்ணிக்கையில் வாழ்ந்திருந்தாலும், கற்காலத்திற்குப் பின்னர் வந்த காலங்களிலே, மியூனிக்கில் குடியிருப்புகள் பெருகின. அந்த காலத்தில் தான், பெனதிக்டை துறவிகள் தங்கியிருந்த இடத்தின் அருகிலுள்ள இசர் ஆற்றின் மீது, குயல்ப் ஹென்ரி, சாக்ஸனி மற்றும் பவேரியா பிரபு ஆகியோர்களால், ஒரு பாலம் கட்டப்பட்டது. வர்த்தகர்கள் தனது பாலத்தை பயன்படுத்த கட்டாயப்படுத்தினர். மேலும் அவ்வாறு அவர்கள் கடப்பதற்கு, கட்டணம் வசூலிக்கவும் செய்தனர். இதற்கு அருகிலுள்ள பிஷப் அவருக்குச் சொந்தமான பாலத்தையும் ஹென்ரி அழித்தார். இது குறித்து 1158ம் ஆண்டு, ஆக்ஸ்பர்க்கிலுள்ள அப்போதைய பேரரசர் பிரடெரிக் முதலாம் பர்பரோச்சர் முன்பு பிஷப்பும் மற்றும் ஹென்ரியும் கூச்சலிட்டனர். இதை விசாரித்த அரசர், ஹென்ரிக்கு தடையும், மற்றும் பிஷப்புக்கான ஒரு ஆண்டு இழப்பீட்டுத் தொகையும் வழங்கவேண்டுமென உத்தரவிட்டார். மேலும் மியூனிக் மக்களின் உரிமைகளான வர்த்தகம் மற்றும் நாணயத்தை உறுதி செய்தார்.

மாநிலங்கள்

மியூனிக் 
மியூனிக் நாட்டின் மாநிலங்கள்

1992ம் ஆண்டிற்குப் பிறகு, மியூனிக் நாடானது 25 மாநிலங்களாக பிரிக்கப்பட்டது.

  1. அல்லாச் - உந்தர்மெஞ்சிங்
  2. அல்ஸ்டாத் - லெகல்
  3. ஆவுபிங் - லோச்சவுசென் - லாங்வய்டு
  4. ஆவு - ஹைதாவுசென்
  5. பெர்க் அம் லாயம்
  6. போகனாவுசென்
  7. பெல்ட்மொச்சிங் - அசன்பெர்கிள்
  8. ஆதெரன்
  9. லாயம்
  10. லாதுவிக்ஸ்வார்ஸ்டாத் - ஐசர்வார்ஸ்டாத்
  11. மேக்ஸ்வார்ஸ்டாத்
  12. மில்பெர்ட்சாபன் - அம் அர்த்
  13. மூசச்
  14. நியுவுசென் - நியும்பன்பர்க்
  15. ஓபர்கியாசிங்
  16. பாசிங் - ஓபர்மென்சிங்
  17. ராமர்ஸ்தார்ப் - பேர்லாச்
  18. சிசுவாபிங் - பிரைமன்
  19. சிசுவாபிங் - மேற்கு
  20. சிசுவாந்தலர்ஹோயி
  21. செந்திலிங்
  22. செந்திலிங் - வெஸ்பார்க்
  23. தால்கிருச்சன் - ஓபர்செந்திலிங் - போர்ஸ்தன்ராயட் - பர்ஸ்தன்ராயட் - சாலன்
  24. துருதெறிங் - ரெய்ம்
  25. அண்தர்கெயிசிங் - ஆர்லாசிங்

புவி அமைப்பு

பவேரியின் உயர்ந்த சமவெளியில் அமைந்தருக்கும் மியூனிக் நாடு, கடல் மட்டத்திலிருந்து 520 m (1,706.04 அடி) உயரத்தில், ஆல்ப்ஸ் வடக்கு முனையின் வடக்கே 50 km (31.07 mi) தொலைவில் அமைந்துள்ளது. இசர் மற்றும் வார்ம் ஆறுகள், இந்நாட்டை வளப்படுத்துகின்றன. மியூனிக் தெற்கில் அல்பைன் போர்லாந்து அமைந்துள்ளது.

காலநிலை

இந்நாட்டின் காலநிலையானது, இருபெரும் காலநிலைகளான கோடை மற்றும் குளிர் ஆகியவற்றின் விளிம்பிலுள்ளது. இங்கு ஆனி மற்றும் ஆடி மாதங்களில் கோடையும், மார்கழி மற்றும் தை மாதங்களில் குளிரும் இருக்கும்.

ஆண்டின் சராசரியாக, இடி மின்னலுடன் கூடிய மழை, வசந்த மற்றும் கோடைக் காலங்களில் இருக்கும். குளிர்காலங்களில், மழை சற்று குறைவாகவே இருக்கும். ஆண்டின் சராசரி குறைந்த மழையளவாக, பிப்ரவரி மாதத்தில் பெய்யும். மேலும் ஆல்ப்ஸ் மலையை ஒட்டி இருப்பதால், ஜெர்மனியை விட அதிக மழையும் பனிப்பொழிவும் காணப்படும். மலையடிவாரத்தில் காணப்படும் வெப்ப சலனத்தால், (குளிர் காலத்திலும்) ஒரு சில மணி நேரத்திற்குள் வெப்பநிலை தீவிரமாக உயர வாய்ப்புள்ளது.

மியூனிக் நாட்டின் அதிகபட்ச வெப்பநிலையாக 13 ஆகத்து 2003ம் ஆண்டு 37.1 C˚யும், குறைந்தபட்சமாக 21 சனவரி 1942ம் ஆண்டன்று -30.5 C˚வும் பதிவாகியுள்ளது.

தட்பவெப்ப நிலைத் தகவல், மியூனிக்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 17.2
(63)
21.1
(70)
23.3
(73.9)
26.6
(79.9)
30.0
(86)
33.8
(92.8)
36.1
(97)
37.1
(98.8)
30.0
(86)
26.1
(79)
18.8
(65.8)
20.5
(68.9)
37.1
(98.8)
உயர் சராசரி °C (°F) 1.1
(34)
3.5
(38.3)
8.4
(47.1)
13.3
(55.9)
18.0
(64.4)
21.4
(70.5)
23.8
(74.8)
22.9
(73.2)
19.4
(66.9)
13.6
(56.5)
6.5
(43.7)
2.3
(36.1)
12.81
(55.06)
தினசரி சராசரி °C (°F) -2.2
(28)
-0.4
(31.3)
3.4
(38.1)
7.6
(45.7)
12.2
(54)
15.4
(59.7)
17.3
(63.1)
16.6
(61.9)
13.4
(56.1)
8.2
(46.8)
2.8
(37)
-0.9
(30.4)
7.78
(46)
தாழ் சராசரி °C (°F) -5.0
(23)
-3.7
(25.3)
0.4
(32.7)
2.9
(37.2)
7.1
(44.8)
10.4
(50.7)
12.0
(53.6)
11.7
(53.1)
8.8
(47.8)
4.5
(40.1)
0.2
(32.4)
-3.5
(25.7)
3.82
(38.88)
பதியப்பட்ட தாழ் °C (°F) -30.5
(-22.9)
-22.7
(-8.9)
-15.5
(4.1)
-6.1
(21)
-2.7
(27.1)
-2.7
(27.1)
3.8
(38.8)
3.8
(38.8)
0
(32)
-6.1
(21)
-14.4
(6.1)
-21.1
(-6)
−26.6
(−15.9)
பொழிவு mm (inches) 54.0
(2.126)
45.2
(1.78)
60.1
(2.366)
69.9
(2.752)
93.4
(3.677)
123.6
(4.866)
117.6
(4.63)
114.5
(4.508)
90.3
(3.555)
69.4
(2.732)
71.0
(2.795)
58.4
(2.299)
967.4
(38.087)
ஈரப்பதம் 80 74 62 57 55 58 55 55 61 71 80 81 65.75
சராசரி மழை நாட்கள் 10.0 8.6 10.5 10.9 11.6 13.8 12.0 11.4 9.6 9.1 10.7 11.2 129.4
சூரியஒளி நேரம் 61 84 128 157 199 209 237 213 173 129 69 49 1,708
Source #1: World Meteorological Organisation
Source #2: "Climate Munich – Bavaria". Archived from the original on 2012-03-23. பார்க்கப்பட்ட நாள் 2013-09-17.

மியூனிக்கைச் சுற்றியுள்ளவை

அல்பைன் மலையடிவாரத்தின் சமவெளியில் அமைந்திருக்கும் மியூனிக் நகரமானது, 2.6 மில்லியன் மக்களை உள்ளடக்கியுள்ளது. மேலும் நாட்டின் சிறு நகரங்களான தகாச்சு, ஃபிரியசிங், எர்திங், ஸ்டார்ன்பர்க், லான்துசட் மற்றும் மூஸ்பர்க் ஆகியவை சேர்ந்தவையே, மியூனிக் மாநகராட்சியாகும். இங்கு 4.5 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.

பன்னாட்டு நல்லுறவுகள்

மியூனிக் 
மியூனிக்கின் புதிய டவுன் ஹாலிலுள்ள பன்னாட்டு நிறுவனங்களை விளக்கும் படம்

கீழ்க்கண்ட நாடுகளுடன், பன்னாட்டு நல்லுறவு வைத்துள்ளது மியூனிக்.

  • மியூனிக்  எதின்பர்க், ஸ்காட்லாந்து (1954)
  • மியூனிக்  வெரோனா, இத்தாலி (1960)
  • மியூனிக்  போர்தியாக்ஸ், பிரான்ஸ் (1964)
  • மியூனிக்  சப்போரோ, சப்பான் (1972)
  • மியூனிக்  சிஞ்சினாத்தி, ஓஹியோ, அமெரிக்க ஐக்கிய நாடு (1989)
  • மியூனிக்  கியிவ், உக்ரைன் (1989)
  • மியூனிக்  ஹராரே, ஜிம்பாவே (1996)

மேற்கோள்கள்

Tags:

மியூனிக் வரலாறுமியூனிக் மாநிலங்கள்மியூனிக் புவி அமைப்புமியூனிக் கைச் சுற்றியுள்ளவைமியூனிக் பன்னாட்டு நல்லுறவுகள்மியூனிக் மேற்கோள்கள்மியூனிக்De-München.oggஜெர்மனிஜெர்மன் மொழிபன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிபவேரியாபெர்லின்மக்கள்தொகை

🔥 Trending searches on Wiki தமிழ்:

கோத்திரம்அயோத்தி இராமர் கோயில்தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்இரண்டாம் உலகப் போர்மதீனாபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்தினகரன் (இந்தியா)முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுதமிழில் சிற்றிலக்கியங்கள்கொல்கொதாசூரைவல்லினம் மிகும் இடங்கள்பஞ்சதந்திரம் (திரைப்படம்)வெந்து தணிந்தது காடுவிஜயநகரப் பேரரசுசன்ரைசர்ஸ் ஐதராபாத்ஒற்றைத் தலைவலிசுக்ராச்சாரியார்சுலைமான் நபிதமிழ் எண்கள்ஆறுமுக நாவலர்நீலகிரி மக்களவைத் தொகுதிகண்ணதாசன்தமிழ்விடு தூதுதமிழர் நிலத்திணைகள்பெயர்ச்சொல்பித்தப்பைமூலம் (நோய்)கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிகலைவிலங்குநேர்பாலீர்ப்பு பெண்பெரம்பலூர் மக்களவைத் தொகுதிபஞ்சபூதத் தலங்கள்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்வே. செந்தில்பாலாஜிதமிழக மக்களவைத் தொகுதிகள்திண்டுக்கல் மக்களவைத் தொகுதிநாலடியார்நற்கருணை ஆராதனைதிருநெல்வேலிசித்தர்பிலிருபின்கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிகுண்டூர் காரம்மியா காலிஃபாகணியன் பூங்குன்றனார்இலவங்கப்பட்டைகருப்பை நார்த்திசுக் கட்டிஇந்திமயங்கொலிச் சொற்கள்ஆற்றுப்படைபீப்பாய்பால் கனகராஜ்சிலுவைப் பாதைசங்க இலக்கியம்கூகுள்வேலுப்பிள்ளை பிரபாகரன்ரயத்துவாரி நிலவரி முறைகுற்றாலக் குறவஞ்சிமொழிபெயர்ப்பு2014 உலகக்கோப்பை காற்பந்துதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்தவக் காலம்ஈரோடு தமிழன்பன்தென்காசி மக்களவைத் தொகுதிகாப்பியம்கல்லணைபங்குச்சந்தைஇராபர்ட்டு கால்டுவெல்பெருங்கடல்திராவிடர்அண்ணாமலை குப்புசாமிஅதிமதுரம்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்முத்தொள்ளாயிரம்கன்னியாகுமரி மாவட்டம்🡆 More