மண்

மண்ணியிலாளர் உலகின் மண்ணினை, அதன் தன்மைகளைக் கொண்டு 12 வகைகளாகப் பிரிக்கின்றனர்.

இவ்வாறு அமைவதற்குக் காரணிகளாக மழை, வெப்பம், மற்றும் காற்றோட்டம் போன்றவைகள் இருக்கின்றன. இக்காரணிகளால் மண்ணின் தன்மை மற்றும் இயல்புகளில் வேறுபாடுகள் ஏற்படுகின்றன.

மண்
உலக மண்ணமைவுகள்
மண்
மண்ணில் ஏற்படும் மாற்றங்கள்

உலக மண்ணமைவுகள்

இந்திய மண்ணமைவுகள்

உலகின் பரப்பளவில், இந்தியா ஏழாவது இடத்திலிருக்கிறது. இந்திய நாட்டின் பரப்பளவு 32,87,782 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இப்பரப்பளவில் ஏறத்தாழ 45 சதவீதம் வேளாண்மைக்குப் பயனாகிறது. உலகின் பெரும்பாலான பயிர்களை, இந்தியாவில் பயிரிடும் வகையில் இந்திய மண்ணின் தன்மையுள்ளது. ஏறத்தாழ அனைத்து வகை உலக மண்களும், இந்தியாவில் பரவலாகக் காணப்படுகின்றன.

மழை

இந்தியாவின் மழைப் பொழிவுகள் மிகவும் வேறுபட்டுக் காணப்படுகின்றன. இந்தியாவில், உலகிலேயே அதிக அளவு மழைப் பொழிவு இருக்கும் சிரபுஞ்சி (வருடத்திற்கு 1000 செ.மீ.வரை) இருக்கிறது. இராஜஸ்தான் பாலைவனத்தில் மிகக் குறைந்த அளவு மழைப்பொழிவு (வருடத்திற்கு 10 செ.மீ.) இருக்கிறது. இவ்விதம் மழைப்பொழிவுகள் வேறுபடுவதால், மண்ணின் வளங்களும் வேறுபடுகின்றன.

வெப்பம்

இந்திய நாட்டின் வெப்பம் பரவலாக 48 டிகிரி சென்டிகிரேடிலிருந்து, -40 டிகிரி சென்டிகிரேடு வரை நிலவுகிறது. இதனாலும், மண்ணின் தன்மையும், ஈரப்பசையும் வேறுபடுகின்றன.

இந்திய மண்ணின் வகைகள்

இந்திய மண்ணை, அதன் வளத்தன்மையின் அடிப்படையில் 8 வகைகளாகப் பிரிக்கலாம். அவை வருமாறு;-

  1. செம்மண்
  2. மணற்பாங்கான மண்
  3. மணற்குறு மண்
  4. குறு மண்
  5. களி மண்
  6. கரிசல்மண்
  7. செம்புறை மண்
  8. வண்டல் மண் அல்லது அடை மண்.

தமிழக மண்ணமைவுகள்

சங்க இலக்கியங்கள் தமிழக நிலத்தை, ஐவகையாக வகைப்படுத்தினர். அவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை என்பனவாகும். மருத நிலத்தை, வேளாண்மைக்கு ஏற்ற நிலமாக்கினர். மண்ணின் இயல்புகளைக் கொண்டு, நிலங்களை மென்புலம், பின்புலம், வன்புலம், உவர்நிலம் என்று வகைப்படுத்தியிருந்தனர்.

தமிழ்நாட்டில் ஏறத்தாழ 130 இலட்சம் எக்டேர் பரப்பளவு நிலமுள்ளது. இதில் ஏறத்தாழ 63 இலட்சம் வேளாண்மைக்கு ஏற்ற மண்வளத்தினைப் பெற்றுள்ளது. ஆண்டுக்கு ஏறத்தாழ 100 செ.மீ. மழை பொழிகிறது. இம்மழையளவில் ஐந்தில் ஒரு பங்கு நீர், மண்ணால் உறிஞ்சப்பட்டு நிலத்தடி நீராகிறது.

உலக வேளாண்மைக்குரிய அனைத்து மண்வகைகளும், தமிழ்நாட்டில் உள்ளதென்று வேளாண் அறிஞர் உரைக்கின்றனர். தமிழகத்தின் மண்வகைகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

  1. செம்மண்
  2. செம்புறை மண்
  3. கரிசல் மண்
  4. வண்டல் மண்

மண்ணின் வளம்

பாறைகளிலிருந்து தோன்றிய மண்ணானது, பாறைகளின் தன்மைகளிலிருந்து மிகவும் வேறுபட்டிருக்கிறது. மண்பரிசோதனை மூலம் மண் வளத்தினைக் கண்டறியலாம். தாவரத்திற்கு மண்ணிலிருந்து, நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், சுண்ணாம்பு, மக்னீசியம், கந்தகம்,இரும்பு, மாங்கனீசு, போரான், தாமிரம், துத்தநாகம், குளோரின், மாலிப்டினம் போன்றவைகள் சத்துக்களாகக் கிடைக்கிறது.

மண்ணின் குறைகள்

மண்ணின் களர்த்தன்மை மற்றும் உவர்த்தன்மை, மண்ணின் குறைகளாகும். அவற்றின் இயல்புகளை இயற்கை உரமிட்டு, அம்மண்ணின் வளத்தை மாற்றலாம். இரசாயன உரங்களை இடுவதினால், நல்லத் தரமான மண்ணின் இயல்பும் சீர் கெடுகிறது.

மண்ணடி உயிரிகள்

  1. நைட்ரசன் நிலைநிறுத்தும் பாக்டீரியாக்கள்
  2. மண்புழு
  3. கறையான்

இதனையும் காண்க

  1. மண்ணரிப்பு
  2. மண் மாசடைதல்
  3. சூழ்நிலை சீர்கேடு
  4. இயற்கை உரம்
  5. கட்டிடப் பொருள்
  6. மணல்

மேற்கோள்கள்

உயவுத்துணை

வெளியிணைப்புகள்

Tags:

மண் உலக ணமைவுகள்மண் இந்திய ணமைவுகள்மண் இந்திய ணின் வகைகள்மண் தமிழக ணமைவுகள்மண் ணின் வளம்மண் ணின் குறைகள்மண் ணடி உயிரிகள்மண் இதனையும் காண்கமண் மேற்கோள்கள்மண் உயவுத்துணைமண் வெளியிணைப்புகள்மண்உலகம்காற்றுமழைவெப்பம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

2024 இந்தியப் பொதுத் தேர்தல்விஜய் (நடிகர்)செஞ்சிக் கோட்டைபோயர்அணி இலக்கணம்சிதம்பரம் நடராசர் கோயில்பல்லவர்ராஜா ராணி (1956 திரைப்படம்)வேற்றுமை (தமிழ் இலக்கணம்)சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்வினோஜ் பி. செல்வம்அகநானூறுசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிபாட்டாளி மக்கள் கட்சிதமிழ்நாட்டின் அடையாளங்கள்உயிர்மெய் எழுத்துகள்மதுரைகிராம சபைக் கூட்டம்குடலிறக்கம்பெயர்ச்சொல்முதற் பக்கம்கா. ந. அண்ணாதுரைஎயிட்சுஸ்ரீலீலாவிடுதலை பகுதி 1செவ்வாய் (கோள்)விஜய் வர்மாஉடன்கட்டை ஏறல்வீட்டுக்கு வீடு வாசப்படிமரங்களின் பட்டியல்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்கல்லீரல்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)கலித்தொகைகண்ணதாசன்திருவண்ணாமலையானைசிவவாக்கியர்எலுமிச்சைஏற்காடுமாமல்லபுரம்தமிழ் மாதங்கள்மு. கருணாநிதிஇல்லுமினாட்டிசித்தர்கள் பட்டியல்பால கங்காதர திலகர்நீர் பாதுகாப்புகபிலர் (சங்ககாலம்)நேர்பாலீர்ப்பு பெண்குணங்குடி மஸ்தான் சாகிபுஇலங்கையின் மாவட்டங்கள்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்புற்றுநோய்சீரடி சாயி பாபாநிதி ஆயோக்தமிழ்நாடு சட்டப் பேரவைநாம் தமிழர் கட்சிஎல் நீனோ-தெற்கத்திய அலைவுகங்கைகொண்ட சோழபுரம்புதிய ஏழு உலக அதிசயங்கள்மாத்திரை (தமிழ் இலக்கணம்)சூளாமணிதிருவள்ளுவர்பத்து தலமுல்லை (திணை)பாரிஅருந்ததியர்பருவ காலம்புதினம் (இலக்கியம்)விலங்குகளின் பெயர்ப் பட்டியல்ராஜேஸ் தாஸ்ஐக்கிய நாடுகள் அவைதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005புனித ஜார்ஜ் கோட்டைஆய்த எழுத்துநிணநீர்க் குழியம்தமிழ் எழுத்துருக்களின் பட்டியல்திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்பாரத ரத்னா🡆 More