திபேரியசு: உரோம பேரரசர்

திபேரியசு (Tiberius, 16 நவம்பர், கிமு 42 – 16 மார்ச், கிபி 37) ஜூலியோ குளாடிய மரபைச் சேர்ந்த என்பவர் இரண்டாவது உரோமைப் பேரரசர் ஆவார்.

இவர் அகஸ்டசின் பின்னர் கிபி 14 முதல் கிபி 37 வரை ஆட்சியில் இருந்தார்.

திபேரியசு
Tiberius
அகுசுடசு
திபேரியசு: குடும்பம், மரபு, இதனையும் காண்க
உரோமைப் பேரரசர் திபேரியசு
உரோமை இராச்சியத்தின் பேரரசர்
ஆட்சிக்காலம்18 செப்டம்பர், கிபி 14 –
16 மார்ச், கிபி 37
(22 ஆண்டுகள்)
முன்னையவர்அகஸ்ட்டஸ்
பின்னையவர்காலிகுலா
பிறப்புதிபேரியசு குளோடியசு நீரோ
16 நவம்பர், கிமு 42
உரோம், இத்தாலியா, உரோமைக் குடியரசு
இறப்பு16 மார்ச், கிபி 37
(அகவை 77)
மிசேனும், இத்தாலியா, உரோமைப் பேரரசு
புதைத்த இடம்
அகுஸ்டசு நினைவாலயம், உரோம்
துணைவர்
  • விப்சானியா அக்ரிப்பினா (கிமு 19–11)
  • சூலியா (கிமு 11–2)
குழந்தைகளின்
பெயர்கள்
  • துரூசசு யூலியசு சீசர்
  • திபேரிலசு
  • கெர்மானிக்கசு (தத்து)
  • நீரோ யூலியசு சீசர் (தத்து)
  • துரூசசு சீசர் (தத்து)
பட்டப் பெயர்
திபேரியசு சீசர் திவி அகுசுத்தி பீலியசு அகுஸ்தசு
மரபுஜூலியோ குளாடிய மரபு
தந்தை
தாய்லிவியா
மதம்பண்டைய உரோமைச் சமயம்

திபேரியசு குளோடியசு நீரோ, லிவியா துருசில்லா ஆகியோருக்கு குளோடிய வம்சத்தில் பிறந்தவர் திபேரியசு. இவருக்கு வழங்கப்பட்ட முழுப் பெயர் திபேரியசு குளோடியசு நீரோ என்பதாகும். இவரது தாயார் லிவியா நீரோவுடன் மணமுறிவு பெற்று, ஒக்டேவியனை மணம் புரிந்தார். ஒக்டேவியன் பின்னர் அகஸ்டசு என்ற பெயரில் பேரரசன் ஆனார். இவர் அதிகாரபூர்வமாக திபேரியசிற்கு மாற்றாந்தந்தை ஆனார். திபேரியசு பின்னர் அக்ஸ்டசின் மகள் (ஸ்க்ரிபோனியா மூலம் பிறந்தவர்) யூலியாவை மணம் புரிந்தார். அகசுட்டசு திபேரியசை தத்தெடுத்ததை அடுத்து, திபேரியசு அதிகாரபூர்வமாக யூலியன் எனப் பெயர் கொண்டு திபேரியசு யூலியசு சீசர் (Tiberius Julius Caesar) என்ற பெயரைக் கொண்டார். திபேரியசுக்குப் பின்வந்த பேரரசர்கள் இரு குடும்பங்களின் இந்த கலந்த வம்சத்தை அடுத்த முப்பது ஆண்டுகளாக தொடர்ந்தார்கள். வரலாற்றாளர்கள் இந்த அரச வம்சத்தை ஜூலியோ குளாடிய மரபு என அழைத்தார்கள். இந்த அரச மரபின் ஏனைய பேரரசர்களுடனான திபேரியசின் உறவு பின்வருமாறு: திபேரியசு - அகஸ்டசின் பெறாமகன். காலிகுலாவின் பெரிய மாமா, குளோடியசின் தந்தை-வழி மாமா, நீரோவின் முப்பாட்டன் மாமா. இருபத்திரண்டரை ஆண்டுகள் திபேரியசு ஆட்சி புரிந்தார்.

திபேரியசு மிகச் சிறந்த உரோமைத் தளபதிகளில் ஒருவர்; பனோனியா, டால்மேசியா, இரேத்சியா மற்றும் (தற்காலிகமாக) செருமானியாவின் சில பகுதிகளை அவர் கைப்பற்றியது வடக்குப் போர்முனைக்கு அடித்தளத்தை அமைத்தது. அப்படியிருந்தும், அவர் ஒருபோதும் பேரரசராக இருக்க விரும்பாத ஒரு இருண்ட, தனிமைப்படுத்தப்பட்ட, மோசமான ஆட்சியாளராக நினைவுகூரப்பட்டார்; மூத்த பிளினி இவரை "மனிதர்களின் இருண்டவர்" என்று அழைத்தார். கிபி 23 இல் அவரது மகன் துரூசசு ஜூலியஸ் சீசரின் மரணத்திற்குப் பிறகு, திபெரியசு தனிமையாகவும் பற்றின்றியும் மாறினார். கி.பி 26 இல், அவர் தன்னை உரோமில் இருந்து விலக்கி, ஒரோமைப் பேரரசின் நிர்வாகத்தை பெரும்பாலும் தனது நேர்மையற்ற பிரிட்டோரியன் தலைவர்களான செஜானசு, குயின்டசு மேக்ரோ ஆகியோரின் கைகளில் விட்டுவிட்டார்.

திபேரியசு மிசேனும் என்ற இடத்தில் கிபி 37 மார்ச் 16 இல் தனது 77-வது அகவையில் இறந்தார். திபேரியசின் கடைசி நாட்களில் அவரது வளர்ப்புப் பேரனும் திபேரியசுக்குப் பின்னர் ஆட்சியேறியவனுமான காலிகுலா அவருடன் தங்கியிருந்தான். காலிகுலா பேரரசருக்கு நஞ்சூட்டியதாக வதந்திகள் கிளம்பின. காலிகுலா திபேரியசை பட்டினியில் இறக்க வைத்ததாகவும், திபேரியசின் தலையணையால் அவரை மூச்சுத்திணற வைத்ததாகவும் பலவாறு கூறப்பட்டதாக சூதோனியசு என்பவர் தனது அறிக்கையில் எழுதியுள்ளார். காலிகுலா, பேரரசர் குணமடைந்து விடுவாரோ எனப் பயந்து, திபேரியசு உணவு கேட்டபோது அதனை கொடுக்க மறுத்து, அவருக்கு அரவணைப்பு மட்டுமே தேவை என்று வலியுறுத்தினார் எனவும், பின்னர் அவர் படுக்கை துணிகளால் பேரரசரை மூச்சுத்திணற வைத்தார் எனவும் காசியசு டியோ என்ற வரலாற்றாளர் கூறுகிறார்..

திபேரியசு இறந்த பின்னர், அகஸ்டசுக்கு வழங்கப்பட்ட வழமையான மரியாதைகளை உரோமை அரசு வழங்க மறுத்தது; வீதிகளில் கூடிய கும்பல்கள் "திபேரியசை டைபருக்கு அனுப்பு!" என சத்தமிட்டனர். திபேரியசின் உடல் டைபர் ஆற்றில் வீசப்பட்டது. ஆனாலும், பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டு, அவரது எரிசாம்பல் அகஸ்டசின் கல்லறையில் வைக்கப்பட்டது. பின்னர் கிபி 410 இல் உரோமை நகர் சூறையாடப்பட்ட போது, இவரது சாம்பல் எறியப்பட்டது.

தனது உயிலில், திபேரியசு தனது உரிமைகல அனைத்தையும் வளர்ப்புப் பேரன் காலிகுலாவுக்கும், தனது சொந்தப் பேரன் திபேரியசு கெமெலசுக்கும் எழுதி வைத்தார். ஆனாலும், காலிகுலா ஆட்சியேறியவுடன், அந்த உயிலை செல்லுபடியற்றதாக அறிவித்தான்.

குடும்பம்

திபேரியசு இரு தடவைகள் திருமணம் புரிந்தார்:

  • விப்சானியா அக்ரிப்பினா (மார்க்கசு விப்சானியசு அக்ரிப்பாவின் மகள்; கிமு 16–11)
    • மகன்: துரூசசு யூலியசு சீசர் (கிமு 14 – கிபி 23)
  • மூத்த யூலியா (அகஸ்டசின் ஒரே மகள் (கிமு 11–6)
    • குழந்தை பிறந்தவுடனேயே இறந்து விட்டது.

மரபு

இதனையும் காண்க

குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

திபேரியசு: குடும்பம், மரபு, இதனையும் காண்க 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
திபேரியசு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

திபேரியசு குடும்பம்திபேரியசு மரபுதிபேரியசு இதனையும் காண்கதிபேரியசு குறிப்புகள்திபேரியசு மேற்கோள்கள்திபேரியசு வெளி இணைப்புகள்திபேரியசு14அகஸ்ட்டஸ்உரோமைப் பேரரசுஜூலியோ குளாடிய மரபு

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிறுதானியம்விந்துஅரவான்வ. உ. சிதம்பரம்பிள்ளைதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்அடல் ஓய்வூதியத் திட்டம்சிவனின் தமிழ்ப் பெயர்கள்நாடகம்ஜெ. ஜெயலலிதாதிணைசங்ககாலத் தமிழக நாணயவியல்சுந்தர காண்டம்சுற்றுச்சூழல்பதினெண் கீழ்க்கணக்குதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்பனைஇயேசுபொது ஊழியூடியூப்சேமிப்புதெருக்கூத்துதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021பரிபாடல்ஆற்றுப்படைசெம்மொழிதமிழர் பருவ காலங்கள்திருப்பூர் குமரன்சுயமரியாதை இயக்கம்கபிலர் (சங்ககாலம்)இம்மையிலும் நன்மை தருவார் கோயில்பாவலரேறு பெருஞ்சித்திரனார்திருவரங்கக் கலம்பகம்ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்திதி, பஞ்சாங்கம்நிணநீர்க் குழியம்தமிழக மக்களவைத் தொகுதிகள்தேர்தல்கோயில்ஐராவதேசுவரர் கோயில்பரிதிமாற் கலைஞர்தஞ்சைப் பெருவுடையார் கோயில்யானைசீனாசடுகுடுஉலகம் சுற்றும் வாலிபன்முடக்கு வாதம்உள்ளீடு/வெளியீடுகண்ணாடி விரியன்பஞ்சபூதத் தலங்கள்சித்தர்கள் பட்டியல்தமிழ்ஒளிகன்னியாகுமரி மாவட்டம்திருவிளையாடல் புராணம்அறுபடைவீடுகள்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்போக்கிரி (திரைப்படம்)அறுபது ஆண்டுகள்திருப்பதிதமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்திருத்தணி முருகன் கோயில்கண் (உடல் உறுப்பு)ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்ஈரோடு தமிழன்பன்ம. கோ. இராமச்சந்திரன்வயாகராபாக்கியலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்குறிஞ்சி (திணை)வடலூர்யுகம்குருதி வகைஇட்லர்திருநங்கைமு. கருணாநிதிந. பிச்சமூர்த்திபுதிய ஏழு உலக அதிசயங்கள்சித்ரா பௌர்ணமி🡆 More