ஷின்சோ அபே (யப்பானிய மொழி:安倍 晋三 Abe Shinzo) (21 செப்டம்பர் 1954 - 8 சூலை 2022) யப்பானிய அரசியல்வாதியாவார்.
செப்டம்பர் 20 2006 இல் அபே லிபரல் சனநாயக கட்சியின் தலைவராக தெரியப்பட்டார். இவரது கட்சி யப்பானின் கீழ்சபையில் அருதிப்பெரும்பான்மையை கொண்டுள்ளது. இவர் ஜப்பானின் 90-வது பிரதமர். செப்டம்பர் 12, 2007 இவர் பதவியிலிருந்து அகற்றி யாசுவோ ஃபுக்குடா புதிய பிரதமராக உறுதி செய்யப்பட்டார்.
சின்சோ அபே Shinzo Abe | |
---|---|
2020 இல் அபே | |
சப்பான் பிரதமர் | |
பதவியில் 26 திசம்பர் 2012 – 16 செப்டம்பர் 2020 | |
ஆட்சியாளர்கள் | |
Deputy | டாரோ ஆசோ |
முன்னையவர் | யோஷிஹிகோ நோடா |
பின்னவர் | யோசிகிதே சூகா |
பதவியில் 26 செப்டம்பர் 2006 – 26 செப்டம்பர் 2007 | |
ஆட்சியாளர் | அக்கிகித்தோ |
முன்னையவர் | ஜூனிசிரோ கொய்சுமி |
பின்னவர் | யாசுவோ ஃபுக்குடா |
தாராண்மைவாத சனநாயகக் கட்சித் தலைவர் | |
பதவியில் 26 செப்டம்பர் 2012 – 14 செப்டம்பர் 2020 | |
முன்னையவர் | சதக்காசு தனிகாக்கி |
பின்னவர் | யோசிகிதே சூகா |
பதவியில் 20 செப்டம்பர் 2006 – 26 செப்டம்பர் 2007 | |
முன்னையவர் | யுனிச்சீரோ கொய்சூமி |
பின்னவர் | யாசுவோ ஃபுக்குடா |
அமைச்சரவை தலைமைச் செயலாளர் | |
பதவியில் 31 அக்டோபர் 2005 – 26 செப்டம்பர் 2006 | |
பிரதமர் | யுனிச்சீரோ கொய்சூமி |
யமகூச்சி நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 20 அக்டோபர் 1996 – 8 சூலை 2022 | |
முன்னையவர் | புதிய தொகுதி |
தொகுதி | 4-வது மாவட்டம் |
பெரும்பான்மை | 86,258 (58.40%) |
பதவியில் 18 சூலை 1993 – 20 அக்டோபர் 1996 | |
முன்னையவர் | புதிய தொகுதி |
பின்னவர் | மசகிக்கோ கோமுரா |
தொகுதி | 1-வது மாவட்டம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அபே சின்சோ 21 செப்டம்பர் 1954 சிஞ்சுக்கு, தோக்கியோ, யப்பான் |
இறப்பு | 8 சூலை 2022 கசிகாரா, நாரா, யப்பான் | (அகவை 67)
காரணம் of death | சுட்டுக்கொலை |
அரசியல் கட்சி | தாராண்மைவாத சனநாயகக் கட்சி |
துணைவர் | அக்கி அபே (திரு. 1987) |
பெற்றோர்s |
|
முன்னாள் கல்லூரி |
|
கையெழுத்து | |
இவர் மிக இளவயதில் யப்பானிய பிரதமராகவும் இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் பிறந்த முதலாவது யப்பானிய பிரதமரும் ஆவார். சனவரி 2021இல் இவருக்கு இந்தியாவின் குடிமை விருதுகளில் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசண் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
திசம்பர் 2015இல் நடந்த ஜப்பான் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அபே தெற்கு யப்பானின் நாகதோ என்னும் நகரில் பிறந்தார். 1977இல் தலைநகர் டோக்கியோவுக்கு அருகில் உள்ள தனியார் பல்கலைகழகமான செய்கெய் பல்கலைக்கழகத்தில் அரசில் விஞ்ஞானப் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டார். பின்னர் மேல் படிப்புக்காக ஐக்கிய அமெரிக்காவுக்கு சென்று தெற்கு கலிபோனிய பல்கலைக்கழகத்தில் இணைந்தார். ஏப்ரல் 1979 தொடக்கம் கோபே உருக்கு தொழிற்சாலையில் பணியாற்றினார். 1982 இல் அங்கிருந்து விலகி அரசில் பல பணிகளை செய்தார்.
8 சூலை 2022 அன்று காலை தோக்கியோவிலிருந்து தெற்கில் 300 மைல் தொலைவில் உள்ள தெற்கு நாராவில் ஒரு தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தாராளவாத மக்களாட்சி கட்சியின் கேய் சட்டோவுக்காக பேசிக்கொண்டிருந்த போது 41 வயதுடைய நாட்டு துப்பாக்கி மூலம் முன்னாள் இராணுவ வீரர் யமகாமியால் உள்ளூர் நேரம் 11.30இக்கு இருமுறை சுடப்பட்டார். அதிக இரத்த இழப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி இறந்தார்.
This article uses material from the Wikipedia தமிழ் article சின்சோ அபே, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.