2009 திரைப்படம் அவதார்

அவதார் (ஆங்கில மொழி: Avatar) என்பது 2009 ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த அமெரிக்க நாட்டு காவிய அறிபுனைத் திரைப்படம் ஆகும்.

இந்த திரைப்படத்தை 20ஆம் சென்சுரி பாக்ஸ், லைட்ஸ்டார்ம் என்டர்டெயின்மென்டு, ராட்பேக்-டூன் என்டர்டெயின்மென்ட் மற்றும் இங்கெனியசு மீடியா ஆகிய நிறுவனங்கள் தயாரிக்க, 20ஆம் சென்சுரி பாக்ஸ் என்ற நிறுவனம் மூலம் விநியோகம் செய்யப்பட்டது.

அவதார்
2009 திரைப்படம் அவதார்
இயக்கம்ஜேம்ஸ் கேமரூன்
தயாரிப்புஜேம்ஸ் கேமரூன்
ஜான் இலாண்டாவ்
கதைஜேம்ஸ் கேமரூன்
இசைஜேம்சு கோர்னர்
நடிப்புசாம் வோர்த்திங்டன்
ஜோ சல்டனா
இசுடீபன் லாங்
மிச்செல் ரோட்ரிக்வெஸ்
சிகர்னி வேவர்
ஒளிப்பதிவுமாரோ பியோர்
படத்தொகுப்புஜான் ரேபுவா
இசுடீபன் ரிவ்கின்
ஜேம்ஸ் கேமரூன்
கலையகம்20ஆம் சென்சுரி பாக்ஸ்
லைட்ஸ்டார்ம் என்டர்டெயின்மென்டு
ராட்பேக்-டூன் என்டர்டெயின்மென்ட்
இங்கெனியசு மீடியா
விநியோகம்20ஆம் சென்சுரி பாக்ஸ்
வெளியீடுதிசம்பர் 10, 2009 (2009-12-10)
(லண்டன்)
டிசம்பர் 18, 2009
(ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்162 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$237 மில்லியன்
$9 மில்லியன்
(மறு-வெளியீடு)
மொத்த வருவாய்$2.923 பில்லியன்

இந்த திரைப்படம் ஜேம்ஸ் கேமரூன் மற்றும் ஜான் இலாண்டாவ் ஆகியோர் தயாரிப்பில், ஜேம்ஸ் கேமரூன் என்பவர் இயக்கம் மற்றும் திரைக்கதையில், சாம் வோர்த்திங்டன், ஜோ சல்டனா, இசுடீபன் லாங், மிச்செல் ரோட்ரிக்வெஸ் மற்றும் சிகர்னி வேவர் போன்ற பலர் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இது 22 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், மதிப்புமிக்க கனிமமான யூனோப்டானியத்தை வெட்டுவதற்காக, ஆல்பா செண்டாரி நட்சத்திர அமைப்பில் உள்ள ஒரு பசுமையான வளிமப் பெருங்கோளில் வாழக்கூடிய நிலவான பண்டோராவை மனிதர்கள் காலனித்துவப்படுத்துவது போன்றும் அத்துடன் நாவியின் உள்ளூர் பழங்குடியினரின் தொடர்ச்சியான இருப்பை ஆர்கொள்ள நினைக்கும் மனித இனம் இதற்காக வரும் பிரச்சனைகளை சித்தரிக்கப்பட்டுள்ளது.

அவதாரின் வளர்ச்சி 1994 இல் தொடங்கியது, படத்திற்காக ஜேம்ஸ் கேமரூன் என்பவர் 80 பக்க கதையை எழுதினார். கேமரூனின் 1997 திரைப்படமான டைட்டானிக் முடிந்த பிறகு, 1999 இல் திட்டமிடப்பட்ட வெளியீட்டிற்காக படப்பிடிப்பு நடத்தப்பட வேண்டும்; இருப்பினும், கேமரூனின் கூற்றுப்படி, திரைப்படத்தை உருவாக்குவதற்கு தேவையான தொழில்நுட்பம் இன்னும் கிடைக்கவில்லை ஆகும். அதை தொடர்ந்து 2005 இல் நாவி மொழிக்கான பணிகள் தொடங்கப்பட்டது, மேலும் 2006 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திரைக்கதை மற்றும் கற்பனையான பிரபஞ்சம் உருவாக்கப்பட்டது.இந்த திரைப்படம் அதிகாரப்பூர்வமாக $237 மில்லியன் பொருள்செலவில் எடுக்கப்பட்டது.

அவதார் படம் திசம்பர் 10, 2009 இல் லண்டனில் திரையிடப்பட்டது, மேலும் டிசம்பர் 18 அன்று அமெரிக்காவில் வெளியிடப்பட்டு, நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, விமர்சகர்கள் அதன் அற்புதமான காட்சி விளைவுகளைப் பாராட்டினர். இந்த திரைப்படம் வெளியாகி திரையரங்குகளின் போது பல வசூல் சாதனைகளை முறியடித்தது மற்றும் அந்த நேரத்தில் அதிக வசூல் செய்த படமாக ஆனது, அதே போல் அமெரிக்கா மற்றும் கனடாவில், பன்னிரண்டு ஆண்டுகளாக அந்த சாதனைகளை வைத்திருந்த கேமரூனின் டைட்டானிக்கை முறியடித்தது.

இது சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குனர் உட்பட ஒன்பது அகாதமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது, மேலும் சிறந்த கலை இயக்கம், சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த திரை வண்ணம் ஆகிய மூன்றையும் வென்றது.

இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் என்பவர் 20ஆம் சென்சுரி பாக்ஸ் உடன் இணைந்து நான்கு தொடர்ச்சியான படங்களை தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்: அவதார்: தி வே ஆப் வாட்டர் மற்றும் அவதார் 3 ஆகியவை முதன்மைப் படப்பிடிப்பை முடித்துவிட்டன, மேலும் அவை முறையே திசம்பர் 16, 2022 மற்றும் திசம்பர் 20, 2024 ஆகிய தேதிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளன. அடுத்தடுத்த தொடர்கள் திசம்பர் 18, 2026 மற்றும் திசம்பர் 22, 2028 ஆகிய தேதிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

கதைச் சுருக்கம்

பண்டோரா எனும் வேற்றுலகில் வளங்கள் மண்டிக்கிடப்பதை அறியும் குழு தம் வளத்தட்டுப்பாட்டிற்கு தீர்வாக அவ்வுலகை வன்கவர்வு செய்ய முயல்கின்றனர். இதற்காக, தம்முள் ஒருவனை அக்குழு ஆளாக மாற்றி அனுப்பியும் வைக்கின்றனர். இவ்வாறு அனுப்பப்பட்டவன் அவ்வுலகினை பாதுகாக்க போராடுவதாக கதை பரிணமிக்கிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

20ஆம் சென்சுரி பாக்ஸ்அறிபுனைத் திரைப்படம்ஆங்கில மொழிஐக்கிய அமெரிக்காகாவியத் திரைப்படம்ஜேம்ஸ் கேமரூன்ராட்பேக்-டூன் என்டர்டெயின்மென்ட்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தேஜஸ்வி சூர்யாசட் யிபிடிஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்போகர்உயிர்மெய் எழுத்துகள்தகவல் தொழில்நுட்பம்கன்னியாகுமரி மாவட்டம்மு. க. ஸ்டாலின்ஆண் தமிழ்ப் பெயர்கள்நாயன்மார் பட்டியல்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)சிறுநீர்ப்பாதைத் தொற்றுதேர்தல்பூலித்தேவன்நேர்பாலீர்ப்பு பெண்ஆழ்வார்கள்மு. களஞ்சியம்திராவிடர்முத்தொள்ளாயிரம்வேலுப்பிள்ளை பிரபாகரன்பிள்ளைத்தமிழ்கேள்வி108 வைணவத் திருத்தலங்கள்திருச்சிராப்பள்ளிசிதம்பரம் நடராசர் கோயில்போதைப்பொருள்இயேசுடேனியக் கோட்டைதிருப்பதிதிணைவினைச்சொல்அவிட்டம் (பஞ்சாங்கம்)குணங்குடி மஸ்தான் சாகிபுவிஷ்ணுதாவரம்முடியரசன்சிந்துவெளி நாகரிகம்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்சீரடி சாயி பாபாமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்சுய இன்பம்திருநங்கைசாதிகுடும்ப அட்டைதென்னிந்தியாகலம்பகம் (இலக்கியம்)உணவுச் சங்கிலிபுதுப்பிக்கத்தக்க வளம்இந்தியாபகவத் கீதைமறைமலை அடிகள்பொன்னுக்கு வீங்கிஇலட்சத்தீவுகள்சித்திரா பௌர்ணமிதிருமலை நாயக்கர் அரண்மனைகொல்லி மலைமு. வரதராசன்இசைஞானியார் நாயனார்பாம்புதிவ்யா துரைசாமிசித்ரா பெளர்ணமிபாமினி சுல்தானகம்ஊராட்சி ஒன்றியம்தமிழ்நாடு அமைச்சரவைசித்த மருத்துவம்காம சூத்திரம்சி. விஜயதரணிமாணிக்கவாசகர்நவரத்தினங்கள்மயக்கம் என்னதமன்னா பாட்டியாதிருமால்மரபுச்சொற்கள்அன்னம்முருகன்தமிழர் விளையாட்டுகள்🡆 More