வளிமப் பெருங்கோள்

வளிமப் பெருங்கோள் (Gas giant) என்பது முதன்மையாக ஐதரசன் மற்றும் ஈலியம் ஆகிய வளிமங்களைக் கொண்டுள்ள ஒரு பெருங்கோளைக் குறிக்கும்.

கதிரவ அமைப்பில் வியாழன் மற்றும் சனி ஆகிய இரண்டும் வளிமப் பெருங்கோள்கள் ஆகும். வளிமப் பெருங்கோள் என்பது பெருங்கோள்கள் என்ற வகைப்பாட்டிற்கு இணையாகவே கருதப்பட்டு வந்தது. எனினும் 1990களில் யுரேனசு மற்றும் நெப்டியூன் ஆகிய இரு பெருங்கோள்களின் உள்ளடக்கம் முதன்மையாக, கனமான மற்றும் ஆவியாகும் பனி போன்ற பொருட்களால் ஆகியிருப்பதால் அவை பனிக் கோள்கள் என்று தனிவகையாகப் பிரிக்கப்பட்டன.

வளிமப் பெருங்கோள்
வியாழன்
வளிமப் பெருங்கோள்
சனி

வியாழனிலும் சனியிலும் பெரும்பாலும் ஐதரசன், ஈலியத்தால் நிறைந்துள்ளன; மிகுநிறையுள்ள தனிமங்கள் திண்மத்தின் 3இலிருந்து 13 விழுக்காடு வரை உள்ளன. உருகிய நிலையிலான பாறைக் கட்டமைப்பு கருவத்தை அடுத்து மாழைய ஐதரசன் நீர்மமும் இதனை வெளி அடுக்கில் நீரியம் சூழ்ந்தும் கட்டமைக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகின்றது. ஐதரசன் வளிமண்டலத்தின் வெளிப்புறப் பகுதியில் பல அடுக்குகளிலான நீராலும் அம்மோனியாவாலுமான மேகங்களைக் காணலாம். மாழைநிலை ஐதரசன் இக்கோள்களின் பெரும்பான்மை உள்ளடக்கமாக உள்ளது; மிகுந்த உயர்நிலை அழுத்தத்தால் ஐதரசன் மின்கடத்தியாக செயற்படுவதால் "மாழைய" ஐதரசன் என்று குறிப்பிடப்படுகின்றது. கருவத்தில் உள்ளதாகக் கருதப்படும் மிகுநிறை தனிமங்கள் மிகுந்த உயர் அழுத்தத்திலும் மிகுந்த உயர் வெப்பநிலையிலும் (20,000 K) உள்ளதால் அவற்றின் பண்புகள் சரியாக அறியப்படவில்லை.

மேற்சான்றுகள்

Tags:

ஈலியம்ஐதரசன்சனி (கோள்)சூரியக் குடும்பம்நெப்டியூன்யுரேனசுவியாழன் (கோள்)

🔥 Trending searches on Wiki தமிழ்:

பிரீதி (யோகம்)சின்னம்மைசிங்கம்மோகன்தாசு கரம்சந்த் காந்திவெண்பாதமிழ்ப் பருவப்பெயர்கள்மறைமலை அடிகள்பல்லவர்முத்துராஜாஇசுலாமிய வரலாறுமரகத நாணயம் (திரைப்படம்)கோயம்புத்தூர்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்பிரித்விராஜ் சுகுமாரன்ஏலாதிமூலிகைகள் பட்டியல்ஊராட்சி ஒன்றியம்பி. காளியம்மாள்தருமபுரி மக்களவைத் தொகுதிதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்நாளந்தா பல்கலைக்கழகம்நரேந்திர மோதிநாடாளுமன்ற உறுப்பினர்அயோத்தி இராமர் கோயில்அருந்ததியர்செம்பருத்திஇந்திரா காந்திதிருப்பதிமருது பாண்டியர்ஐராவதேசுவரர் கோயில்ஆய்த எழுத்து (திரைப்படம்)திருவண்ணாமலைதிருமணம்சன்ரைசர்ஸ் ஐதராபாத்நாடாளுமன்றம்திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிஎஸ். பி. பாலசுப்பிரமணியம்பெண் தமிழ்ப் பெயர்கள்கொல்கொதாதேர்தல் பத்திரம் (இந்தியா)தமிழ் எண்கள்சென்னைமதயானைக் கூட்டம்அண்ணாமலை குப்புசாமிதிதி, பஞ்சாங்கம்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்கர்மாதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்அமெரிக்க ஐக்கிய நாடுகள்கருக்காலம்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்தமிழர் நெசவுக்கலைநீக்ரோவாணிதாசன்இந்திய நாடாளுமன்றம்சிறுகதைதாயுமானவர்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்குமரகுருபரர்ஜன கண மனகொடுமுடி மகுடேசுவரர் கோயில்ஜி. யு. போப்உ. வே. சாமிநாதையர்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சப்ஜா விதைதமிழ் மாதங்கள்திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிதமிழில் சிற்றிலக்கியங்கள்இந்திய தேசிய காங்கிரசுகயிறுதவக் காலம்விடுதலை பகுதி 1ராதிகா சரத்குமார்ஆகு பெயர்தமிழ் மன்னர்களின் பட்டியல்சித்தர்🡆 More