அட்டிலா

அட்டிலா என்பவர் ஊணர்களின் ஆட்சியாளராக 434 முதல் 453 வரை திகழ்ந்தவர் ஆவார்.

இவர் பொதுவாக ஊணன் அட்டிலா என்று அழைக்கப்படுகிறார். நடு மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் ஊணர்கள், ஆசுத்திரகோத்துகள், ஆலன்கள், பல்கர்கள், மற்றும் பிறரை உள்ளடக்கிய ஒரு பழங்குடியினப் பேரரசின் தலைவனாகத் திகழ்ந்தார். உலக வரலாற்றின் மிக சக்திவாய்ந்த ஆட்சியாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

அட்டிலா
அட்டிலா
அங்கேரியில் உள்ள ஓர் அருங்காட்சியகத்தில் அட்டிலாவின் உருவம்
ஊணப் பேரரசின் மன்னன் மற்றும் பழங்குடியினத் தலைவன்
ஆட்சிக்காலம்434–453
முன்னையவர்பிலெதா மற்றும் ருகா
பின்னையவர்எல்லக், தெங்கிசிச், எர்னக்
பிறப்புதெரியவில்லை, அண். 406:{{{3}}}:{{{3}}}
இறப்புஅண். மார்ச் 453 (அகவை 46–47)
துணைவர்கிரேகா மற்றும் இல்திகோ
தந்தைமுந்த்சுக்

இவரது ஆட்சியின் போது, மேற்கு மற்றும் கிழக்கு உரோமைப் பேரரசுகளுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்திய எதிரிகளில் ஒருவராகத் திகழ்ந்தார். இவர் தன்யூபு ஆற்றை இரு முறை கடந்தார். பால்கன் குடாவைச் சூறையாடினார். ஆனால் கான்ஸ்டண்டினோபிலை இவரால் கைப்பற்ற இயலவில்லை. இவரது பாரசீகப் படையெடுப்பு தோல்வியில் முடிந்தது. 441ஆம் ஆண்டில் கிழக்கு உரோமைப் (பைசாந்தியப்) பேரரசு மீது படையெடுத்தார். அதில் வெற்றி கண்டார். இவ்வெற்றியால் மேற்கு உரோமைப் பேரரசின் மீது படையெடுக்கும் துணிவைப் பெற்றார்.:{{{3}}} அக்காலத்தில் உரோமானியக் கௌல் என்று அழைக்கப்பட்ட தற்போதைய பிரான்சையும் வெல்ல முயன்றார். 451இல் ரைன் ஆற்றைக் கடந்தார். அரேலியானம் (ஆர்லியன்சு) வரை அணி வகுத்துச் சென்றார். ஆனால் கட்டலவுனியச் சமவெளி யுத்தத்தில் நிறுத்தப்பட்டார்.

இறுதியாக இத்தாலி மீது படையெடுத்தார். வடக்கு மாகாணங்களை முற்றிலுமாக அழித்தார். ஆனால் இவரால் உரோமைக் கைப்பற்ற இயலவில்லை. உரோமானியர்களுக்கு எதிராக மேற்கொண்ட படையெடுப்புகளுக்குத் திட்டமிட்டார். ஆனால் 453ஆம் ஆண்டு இறந்தார். அட்டிலாவின் இறப்பிற்குப் பிறகு, இவரது நெருங்கிய ஆலோசகரான கெபிதா இனத்தைச் சேர்ந்த அர்தரிக்கு ஊண ஆட்சிக்கு எதிராக ஒரு செருமானியக் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கினார். இதற்குப் பிறகு, ஊணப் பேரரசு சீக்கிரமே வீழ்ச்சியுற்றது. ஆனால் செருமானிய மரபுவழி வீரக் கதைகளில் ஒரு கதாபாத்திரமாக அட்டிலா தொடர்ந்து வாழ்ந்தார்.

தோற்றமும், பண்பும்

அட்டிலா 
வரலாற்றாளர் பிரிசுகசின் துணுக்கை அடிப்படையாகக் கொண்ட, மோர் தானின் 19ஆம் நூற்றாண்டு அட்டிலாவின் விருந்து என்ற ஓவியம்

அட்டிலாவின் தோற்றம் குறித்து நேரில் கண்ட எந்த ஒரு முதல் நிலைத் தகவல்களும் எஞ்சவில்லை. ஆனால் ஜோர்தானசால் அளிக்கப்பட்ட சாத்தியமான, நேரில் கண்டாதாகக் கூறியவர்களின், இரண்டாம் நிலை ஆதாரம் உள்ளது. அதில் வரலாற்றாளர் பிரிசுகசால் கொடுக்கப்பட்ட விளக்கத்தை வரலாற்றாளர் ஜோர்தானசு குறிப்பிடுகிறார்.:{{{3}}}:{{{3}}}

தேசங்களைக் அதிரச் செய்ய இந்த உலகில் பிறந்த மனிதன். அனைத்து நிலப் பகுதிகளுக்கும் கசையடி கொடுக்க வந்த மனிதன். இவனைப் பற்றி அயல் நாடுகளில் கூச்சலிடப்பட்ட மோசமான வதந்திகள் மூலம், சில வழிகளில், ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் திகிலை ஏற்படுத்தியவன். இவனது பெருமைக்குரிய மன வலிமையின் சக்தியானது, இவனது உடல் நகர்வில் தெரிய வேண்டும் என்பதற்காக, இறுமாப்புடன் நடந்தவன், கண்களை அங்கும் இங்கும் உருட்டியவன். இவன் உண்மையிலேயே போரை விரும்பிய ஒருவன் தான். எனினும் தன் செயலில் உணர்ச்சிகளை வெளிக்காட்டாதவன். அறிவுரை கூறுவதில் வல்லமை மிக்கவன். தன்னிடம் பணிவானவர்களுக்கும், தன் பாதுகாப்பிற்குள் ஒரு முறை வந்துவிட்டவர்களுக்கும் கனிவானவன். அகன்ற மார்பையும், பெரிய தலையையும் கொண்ட குட்டையானவன். இவனது கண்கள் சிறியவை, அங்கொன்றும் இங்கொன்றுமாக நரைத்த முடிகளைக் கொண்ட மெலிதான தாடியைக் கொண்டிருந்தான். சப்பையான மூக்குடன், கருப்பு நிறத்தில் இருந்தான். இது இவனது பிறப்பிடத்தின் சான்றாகத் திகழ்ந்தது.:{{{3}}}

இந்த அம்சங்கள் பொதுவாகக் கிழக்கு ஆசியர்களுக்கு உரியவை என சில அறிஞர்கள் பரிந்துரைத்துள்ளனர். ஏனெனில், இந்த அம்சங்களின் கூட்டு கிழக்கு ஆசியாவிலிருந்து வரும் மக்களின் உடல் அமைப்பை ஒத்துள்ளது. எனவே, அட்டிலாவின் மூதாதையர்கள் அங்கிருந்து வந்திருக்கலாம்.:{{{3}}}:{{{3}}} இதே அம்சங்கள் சில சிதிய மக்களுக்கும் ஒத்திருந்துள்ளதாக பிற வரலாற்றாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

சொற்பிறப்பியல்

அட்டிலா 
அட்டிலா ஒரு வெள்ளைக் குதிரையில் சவாரி செய்யும் ஓர் ஓவியம். ஓவியர் பிரெஞ்சுப் புனையியல் கலைஞரான யூசின் தெலாகுரோயிக்சு (1798–1863).

அட்டிலா என்ற பெயர் கிழக்கு செருமானிய மொழிப் பூர்வீகத்தைக் கொண்டது என பல அறிஞர்கள் வாதிட்டுள்ளனர். கோதிக் மொழி அல்லது கெபிதிய மொழிப் பெயர்ச் சொல்லான அட்டா (பொருள் "தந்தை") மற்றும் சுருக்கமான பின்னொட்டான இலா ஆகியவை இணைந்து அட்டிலா ("சிறிய தந்தை") உருவானது. இதை உல்பிலா (பொருள் "சிறிய ஓநாய்") என்ற பெயருடன் ஒப்பிடலாம். உல்ப்சு (பொருள் "ஓநாய்") மற்றும் இலா (பொருள் "சிறிய") இணைந்து உல்பிலா உருவானது.:{{{3}}}:{{{3}}}:{{{3}}} கோதிக் மொழி சொற்பிறப்பியலானது முதன் முதலில் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஜேக்கப் மற்றும் வில்கெல்ம் கிரிம் ஆகியோரால் முன்மொழியப்பட்டது.:{{{3}}} மயேஞ்சென்-எல்பன் ஆகியோர் இப்பெயரின் அடிப்படை வடிவமானது "ஒலி அல்லது பொருள் பிரச்சினைகளை" கொண்டிருக்கவில்லை எனக் குறிப்பிடுகின்றனர்.:{{{3}}} இப்பெயர் எளிமையான, சரியான கோதிக் என கெரார்டு டோயெர்பர் குறிப்பிடுகிறார்.:{{{3}}} இதைப் போலவே, அலெக்சாந்தர் சவேலியேவ் மற்றும் சூங்வோன் ஜியோங் (2020) ஆகியோர் அட்டிலாவின் பெயரானது "கோதிக் மொழியைச் சேர்ந்ததாகவே இருக்க வேண்டும்" எனக் குறிப்பிடுகின்றனர் இப்பெயர் சில நேரங்களில் ஓர் ஊண மொழிப் பெயரின் செருமானிய வடிவம் என விளக்கப்படுகிறது.:{{{3}}}

மற்ற அறிஞர்கள் இப்பெயர் ஒரு துருக்கியப் பூர்வீகத்தைக் கொண்டிருக்கிறது என வாதிடுகின்றனர். அட்டிலா என்பது துருக்கிய *எஸ் (மகா, பழைய), மற்றும் *டில் (கடல், பெருங்கடல்), மற்றும் /அ/ என்ற பின்னொட்டு ஆகியவை இணைந்து உருவான ஒரு பட்டப் பெயர் என ஒமேல்சான் பிரித்சாக் கருதுகிறார்.:{{{3}}} அழுத்தம் கொண்ட பிந்தைய அசையான டில் முந்தைய உறுப்பினரான எஸ் என்பதை இணைத்து, இது *அஸ் என்றானது.:{{{3}}} இது அட்டில்- (< *எட்சில் < *எஸ் டில்) என்ற வடிவத்தையும், "பெருங்கடல், பிரபஞ்ச ஆட்சியாளர்" என்ற பொருளையும் உடைய ஓர் எழுவாய் வேற்றுமை ஆகும்.:{{{3}}} ஜே. ஜே. மிக்கோலா இதைத் துருக்கிய அட் (பெயர், புகழ்) உடன் இணைத்துக் குறிப்பிடுகிறார்.:{{{3}}}

மற்றொரு வகையில், துருக்கிய அட்லி (குதிரை வீரன்), அல்லது அட் (குதிரை) மற்றும் டில் (நாக்கு) ஆகியவற்றுடன் இது தொடர்புடையதாக இருக்கலாம் என எச். அல்தோப் (1902) என்பவர் கூறுகிறார்.:{{{3}}} பிரித்சாக்கின் விளக்கமானது "அறிவார்ந்தது ஆனால் பல காரணங்களுக்காக ஏற்புடையதல்ல" என மயேஞ்சென்-எல்பன் வாதிடுகின்றனர்.:{{{3}}} அதேநேரத்தில் மிக்கோலாவின் விளக்கத்தை "கருத்தூன்றியதாக எடுத்துக் கொள்ள இயலாத வகையில் நீட்டிப்புச் செய்யப்பட்டதாக உள்ளது" என்கின்றனர்.:{{{3}}} இதே போல், இந்த முன்மொழிவுகளில் ஒன்று கூட பரவலான ஏற்பை அடையவில்லை என எம். இசுனைடல் குறிப்பிடுகிறார்.:{{{3}}}

அட்டிலாவின் பெயர்க் காரணத்திற்கு துருக்கிய அல்லது பிற சொற்பிறப்புகளைக் கண்டறியும் முன்மொழிவுகளை டோயெர்பர் விமர்சிக்கிறார். ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜார்ஜின் பெயர் கிரேக்கப் பூர்வீகத்தையும், சுலைமானின் பெயர் அரேபியப் பூர்வீகத்தையும் கொண்டிருந்தன என்பது அவர்களை கிரேக்கர்களாகவோ அல்லது அரேபியர்களாகவோ ஆக்காது: எனவே அட்டிலா என்ற பெயர் ஊணப் பூர்வீகத்தைக் கொண்டிராததாக இருக்கும் என்பதே நம்பக் கூடியதாக உள்ளது என்கிறார்.:{{{3}}} எனினும், இப்பெயர் துருக்கியப் பூர்வீகத்தைக் கொண்டிருக்கவே "வாய்ப்பு அதிகம்" என வரலாற்றாளர் கியூன் சின் கிம் வாதிடுகிறார்.:{{{3}}}

எம். இசுனைடல் தன் ஆய்வில் இச்சொல் செருமானியச் சொல்லின் அடிப்படை வடிவம் என்பதை மறுக்கிறார். ஆனால் ஏற்கனவேயுள்ள, முன்மொழியப்பட்ட துருக்கியச் சொற்பிறப்பியலில் உள்ள பிரச்சினைகளைக் குறிப்பிடுகிறார். அட்டிலாவின் பெயரானது துருக்கிய-மங்கோலிய அட், அட்டி/அக்டா (சலகுக் குதிரை, போர்க் குதிரை) மற்றும் துருக்கிய அட்லி (குதிரை வீரன்) ஆகிய சொற்களிலிருந்து பிறந்திருக்கலாம் என வாதிடுகிறார். இதன் பொருள் "சலகுக் குதிரைகளை வைத்திருப்பவர், போர்க் குதிரைகளை அளிப்பவர்" ஆகும்.:{{{3}}}

வரலாற்றாய்வும் ஆதாரங்களும்

அட்டிலா 
மன்னன் அட்டிலா (குரோனிகோன் பிக்டம் என்ற அங்கேரிய நூலில் இவரது ஓவியம், 1358)

அட்டிலாவின் வரலாற்றாய்வு என்பது ஒரு முக்கியச் சவாலைக் கொண்டிருந்தது. ஏனெனில் அட்டிலாவை பற்றிய முழுமையான வரலாற்று ஆதாரங்கள் கிரேக்க மற்றும் இலத்தீன் மொழிகளில் ஊணர்களின் எதிரிகளால் மட்டுமே எழுதப்பட்டிருந்தன. அட்டிலாவின் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் அட்டிலாவின் வாழ்க்கையைப்பற்றி பல்வேறு சான்றுகளை விட்டுச் சென்றுள்ளனர். ஆனால் அதில் சிறிதளவே எஞ்சியுள்ளது.:{{{3}}} பைசாந்தியப் பேரரசின் தூதுவர் மற்றும் வரலாற்றாளரான பிரிசுகசு கிரேக்க மொழியில் எழுதினார். அட்டிலாவின் கதையில் இவர் ஒரு சாட்சியாகவும், பங்கேற்பாளராகவும் இருந்துள்ளார். கி. பி. 449இல் ஊணர்களின் அவைக்கு இரண்டாம் தியோடோசியசால் அனுப்பப்பட்ட தூதுக்குழுவில் இவர் ஒரு உறுப்பினராக இருந்தார். இவர் தனது அரசியல் நிலைப்பாட்டின் காரணமாக வெளிப்படையாக ஒரு சார்பு உடையவராக இருந்தார். ஆனால் இவரது நூலானது அட்டிலாவின் வாழ்க்கையைப் பற்றிய செய்திகளைக் கூறும் ஒரு முக்கியமான ஆதாரமாக உள்ளது. அட்டிலாவின் உருவ அமைப்பைப் பற்றி பதிவிட்ட ஒரே ஒரு அறியப்பட்ட நபர் இவர் தான். கி. பி. 430 முதல் 476 வரையிலான பிந்தைய உரோமைப் பேரரசின் வரலாற்றை 8 நூல்களாக இவர் எழுதினார்.:{{{3}}}

தற்போது பிரிசுகசின் வரலாற்றில் மிகச் சிறிதளவே நமக்குக் கிடைக்கிறது. ஆனால் அதனை 6ஆம் நூற்றாண்டு வரலாற்றாளர்களான புரோகோபியசு மற்றும் சோர்தானேசு ஆகியோர் விரிவாகத் தங்களது நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.:{{{3}}} குறிப்பாகச் சோர்தானேசு தனது கோத்களின் தோற்றம் மற்றும் செயல்கள் என்ற நூலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்நூலில் பிரிசுகசின் வரலாற்று நூலைப் பற்றிய பல்வேறு குறிப்புகள் உள்ளன. ஊணப் பேரரசு மற்றும் அதன் அண்டை நாடுகளைப் பற்றிய செய்திகளை அறிந்துகொள்ள மிக முக்கியமான ஆதாரமாகவும் இந்த நூல் விளங்குகிறது. அட்டிலாவின் மரபு மற்றும் ஊண மக்களைப் பற்றி அட்டிலாவின் இறப்பிற்கு ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு இவர் விளக்கியுள்ளார். பேரரசர் ஜஸ்டினியனின் ஆளுநரான அதே காலத்தில் வாழ்ந்த மார்செலினசு கோமேசு என்பவரும் ஊணர்கள் மற்றும் கிழக்கு உரோமைப் பேரரசுக்கும் இடையில் இருந்த தொடர்பைப் பற்றி விளக்கியுள்ளார்.:{{{3}}}

பல்வேறு திருச்சபை நூல்களும் பயன்தரக்கூடிய, ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கக்கூடிய செய்திகளை நமக்கு வழங்குகின்றன. 6ஆம் நூற்றாண்டு முதல் 17ஆம் நூற்றாண்டு வரை பலமுறை கையெழுத்துப் பிரதிகளாக இவை மாற்றம் அடைந்ததால் சில நேரங்களில் இவற்றை அங்கீகரிப்பது என்பது கடினமானதாகவும், செய்திகள் சிதறுண்டும் உள்ளன. 12ஆம் நூற்றாண்டு அங்கேரிய எழுத்தாளர்கள் ஊணர்களை ஒரு நேர்மறையான பார்வையில் தங்களது புகழ்பெற்ற முன்னோர்களாகக் காட்டுவதை விரும்பினர். எனவே சில வரலாற்றுச் செய்திகளை நீக்கித் தங்களது சொந்தப் புனைவுகளை இணைத்தனர்.:{{{3}}}

ஊணர்களின் இலக்கியம் மற்றும் வரலாறானது வாய்வழியாக இதிகாசங்கள் மற்றும் பாடல்களாகத் தலைமுறை தலைமுறையாக பாடப்பட்து.:{{{3}}} மறைமுகமாக, இந்த வாய்மொழி வரலாற்றின் சிதைந்த பகுதிகள் இசுகாண்டினேவியர்கள் மற்றும் செருமானியர்களின் இலக்கியங்களின் மூலமாக நமக்குக் கிடைக்கின்றன. இவர்கள் ஊணர்களின் அண்டை நாட்டவர் ஆவர். இந்த இலக்கியங்கள் 9 மற்றும் 13ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் எழுதப்பட்டன. பல்வேறு நாடுக்கால இதிகாசங்களில் உள்ள ஒரு முக்கியமான கதாபாத்திரமாக அட்டிலா இருந்துள்ளார். உதாரணமாக நிபேலுங்கென்லியேடு காவியத்தைப் பற்றிக் கூறலாம். இது போல மேலும் பல எட்டாக்கள் மற்றும் சகாக்களில் இவர் முக்கியமான கதாபாத்திரமாக இருந்துள்ளார்.:{{{3}}}:{{{3}}}

ஊணர்களின் வாழ்க்கை முறை, கலை, மற்றும் போர்முறை குறித்த சில தகவல்களைத் தொல்லியல் ஆய்வானது வெளிப்படுத்தியுள்ளது. யுத்தங்கள் மற்றும் முற்றுகைகள் குறித்த ஒரு சில தடையங்கள் கிடைக்கப் பெறுகின்றன. ஆனால் அட்டிலாவின் சமாதி மற்றும் இவரது தலைநகரம் அமைந்திருந்த இடம் ஆகியவை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.:{{{3}}}

ஆரம்ப வாழ்வும் பின்னணியும்

அட்டிலா 
ஆலன்களுடன் யுத்தமிடும் ஊணர்கள். சோகன் நெபோமுக் கெயிகெரின் (1805–1880) ஓர் ஓவியத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட 1870களின் ஒரு செதுக்குருவம்.

ஊணர்கள் ஐரோவாசிய நாடோடிகளின் ஒரு குழு ஆவர். வோல்கா ஆற்றின் கிழக்குப் பகுதியிலிருந்து இவர்கள் தோன்றினர். அண். 370இல்:{{{3}}} மேலும் புலம்பெயர்ந்து மேற்கு ஐரோப்பாவுக்குள் வந்தனர். அங்கு ஒரு பெரிய பேரரசை அமைத்தனர். இவர்களது முதன்மையான இராணுவ உத்திகள் ஏற்ற வில்வித்தையும், ஈட்டி எறிதலும் ஆகும். மேற்கு ஐரோப்பாவுக்கு வரும் முன் நிலையான குடியிருப்புகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இருந்தபோதிலும், ஊணர்கள் ஆயர் வீரர்களின் ஒரு சமூகம் ஆவர்.:{{{3}}} இவர்களின் முதன்மையான ஊட்டச்சத்து வடிவமாக ஊனும், இவர்களது மந்தையிலிருந்து கிடைத்த பாலும், பால் பொருட்களும் விளங்கின.

ஊணர்களின் பிறப்பிடம் மற்றும் மொழியானது நூற்றண்டுகளாக விவாதத்திற்குரிய பாடமாக இருந்து வந்துள்ளது. சில கோட்பாடுகளின் படி, இவர்களின் தலைவர்கள் துருக்கிய மொழிகளில் குறைந்தது ஒன்றையாவது பேசியிருக்க வேண்டும். அது ஒரு வேளை தற்போதைய சுவாசு மொழியுடன் நெருங்கிய தொடர்புடையதாக இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.:{{{3}}} ஓர் அறிஞரின் பரிந்துரைப்படி, எனிசை குடும்ப மொழிகளின் வழியாக இவர்கள் சியோங்னுவுடன் தொடர்புடையவர்களாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.:{{{3}}} ஐரோப்பிய மக்களின் கலைக்களஞ்சியத்தின் படி, "ஊணர்கள், குறிப்பாக மேற்கு நோக்கி இடம்பெயர்ந்தவர்கள், நடு ஆசிய துருக்கிய, மங்கோலிய, மற்றும் உக்ரிக் இருப்பைக் கொண்டவர்களின் ஒரு கூட்டாக இருந்திருக்கலாம்" எனக் குறிப்பிடப்படுகிறது.:{{{3}}}

அட்டிலாவின் தந்தை முந்த்சுக் மன்னர்களான ஒக்தர் மற்றும் ருகாவின் சகோதரர் ஆவார். இவ்விரு மன்னர்களும் 5ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஊணப் பேரரசை இணைந்து ஆண்டு வந்தனர். இத்தகைய இரட்டை ஆட்சி வடிவமானது ஊணர்களிடையே மீண்டும் மீண்டும் நிகழ்கிற நிகழ்வாகி இருந்தது. ஆனால் இது அமைப்பு ரீதியிலானதா, வெறும் சம்பிரதாயமா, அல்லது சில நேரங்களில் நிகழ்கிற நிகழ்வா என வரலாற்றாளர்களால் உறுதிப்படுத்த இயலவில்லை.:{{{3}}} அட்டிலாவின் குடும்பம் உயர்குடியினரின் வழிவந்தது ஆகும். ஆனால் அவர்கள் ஒரு தேசிய மதிப்பு வாய்ந்த அரசமரபை அமைத்திருந்தனரா எனத் தெளிவாகத் தெரியவில்லை. அட்டிலா பிறந்த தேதியானது விவாதத்திற்குரியதாக உள்ளது; பத்திரிக்கையாளர் எரிக் தெச்சோத் மற்றும் எழுத்தாளர் எர்மன் இசுரெயிபெர் ஆகியோர் 395ஆம் ஆண்டை முன்மொழிகின்றனர்.:{{{3}}}:{{{3}}} எனினும், வரலாற்றாளர் லரோசுலாவ் லெபெடின்சுகி மற்றும் கேத்தலின் எச்செர் ஆகியோர் 390கள் மற்றும் 5ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்திற்கு இடைப்பட ஒரு மதிப்பீட்டை விரும்புகின்றனர்.:{{{3}}} பல வரலாற்றளர்கள் 406ஐப் பிறந்த ஆண்டாக முன்மொழிந்துள்ளனர்.:{{{3}}}:{{{3}}}

வேகமாக மாறி வந்த உலகில் அட்டிலா வளர்ந்தார். இவரது மக்கள் நாடோடிகள் ஆவர். இவர்கள் அப்போது தான் ஐரோப்பாவுக்கு வந்திருந்தனர்.:{{{3}}} இவர்கள் வோல்கா ஆற்றை 370களில் கடந்தனர். ஆலன்களின் நிலப் பகுதியை இணைத்துக் கொண்டனர். பிறகு கார்பேத்திய மலைகள் மற்றும் தன்யூபு ஆற்றுக்கு இடைப்பட்ட கோதிக் இராச்சியத்தைத் தாக்கினர். இவர்கள் மிகுதியாக, எளிதாக இடம் விட்டு இடம் செல்லக்கூடிய மக்கள் ஆவர். இவர்களது குதிரை வில்லாளர்கள் தோற்கடிக்க இயலாதவர்கள் என்ற பெயரைப் பொதுவாகப் பெற்றிருந்தனர். செருமானியப் பழங்குடியினரால் இவர்களைத் தாக்குப்பிடிக்க இயலவில்லை எனத் தெரிகிறது.:{{{3}}} இவர்களிடமிருந்து தப்பித்து ஓடிய பெருமளவிலான மக்கள் செருமானியாவிலிருந்து உரோமைப் பேரரசுக்கு மேற்கு மற்றும் தெற்கிலிருந்து, ரைன் மற்றும் தன்யூபு ஆற்றங்கரைகளின் வழியே வந்தனர். 376இல், கோத்துகள் தன்யூபைக் கடந்தனர். ஆரம்பத்தில் கோத்துகள் உரோமானியர்களிடம் அடிபணிந்தனர். ஆனால் சீக்கிரமே பேரரசர் வேலன்சுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். 378இல் அத்ரியானோபில் யுத்தத்தில் அவரைக் கொன்றனர்.:{{{3}}} பெருமளவிலான வான்டல்கள், ஆலன்கள், சுவேபி மற்றும் புருகுந்தியர்கள் ஆகியோர் ரைன் ஆற்றைக் கடந்தனர். ஊணர்களிடமிருந்து தப்பிப்பதற்காக திசம்பர் 31, 406 அன்று உரோமானியக் கௌல் மீது படையெடுத்தனர்.:{{{3}}} 395லிருந்து உரோமைப் பேரரசானது இரண்டாகப் பிளவுபட்டிருந்தது. மேற்கில் இரவேன்னா மற்றும் கிழக்கில் கான்ஸ்டண்டினோபில் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இரு வெவ்வேறு அரசுகளால் ஆளப்பட்டது. ஆனால் இரு உரோமைப் பேரரசர்களும், பல்வேறு அதிகாரப் போட்டிகளுக்கு நடுவிலும், அட்டிலாவின் காலத்தில் பொதுவாகத் தியோடோசியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.:{{{3}}}

ஊணர்கள் ஒரு பெரும் நிலப்பரப்பின் மீது ஆதிக்கம் செலுத்தினார். பல்வேறுபட்ட இனத்தைச் சேர்ந்த மக்களின் ஒரு தொகுதியின் எண்ணத்திற்கு ஏற்ப தெளிவற்ற எல்லைகளால் உறுதிப்படுத்தப்பட்ட நிலப்பரப்பை ஆண்டனர். இதில் சில இனத்தவர் ஊணத் தேசியத்தில் இணைக்கப்பட்டனர். அதே நேரத்தில் பலர் தங்களுடைய சொந்த அடையாளங்களையும், ஆட்சியாளர்களையும் வைத்துக் கொண்டனர். ஆனால் ஊணர்களின் மன்னரைத் தங்களது இராஜாதி இராஜனாக ஏற்றுக்கொண்டனர்.:{{{3}}} உரோமானியர்களின் பல பிரச்சினைகளுக்குப் பின்புறக் காரணமாக ஊணர்கள் திகழ்ந்தனர். இவர்கள் பல செருமானியப் பழங்குடியினரை உரோமானிய நிலப்பகுதிகளுக்குத் துரத்தி அடித்தனர். எனினும், இரண்டு பேரரசுகளுக்கும் இடையிலான உறவானது நட்பாகவே இருந்தது. செருமானியர்களுக்கு எதிராக உரோமானியர்கள் ஊணர்களைக் கூலிப்படையினராகப் பயன்படுத்தினர். உரோமானிய உள்நாட்டுப் போர்களிலும் கூட ஊணர்களைப் பயன்படுத்தினர். இவ்வாறாக, ஆட்சியைத் தவறான வழியில் கைப்பற்றிய சோவன்னேசு என்பவர் 424ஆம் ஆண்டு மூன்றாம் வேலன்டினியனுக்கு எதிராக ஆயிரக்கணக்கான ஊணர்களைத் தனது இராணுவத்துக்காகச் சேர்த்தார். பின்னாளில், மேற்கின் உயர்குடியினராகத் திகழ்ந்த அயேத்தியசு என்பவர் தான் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினார். உரோமானியர்களும், ஊணர்களும் தூதுவர்களையும், கைதிகளையும் பரிமாறிக் கொண்டனர். இந்தக் கூட்டணியானது 401 முதல் 450 தொடர்ந்தது. இது உரோமானியர்கள் ஏராளமான இராணுவ வெற்றிகளைப் பெற அனுமதித்தது.:{{{3}}} உரோமானியர்கள் தங்களுக்குத் திறை செலுத்துவதாக ஊணர்கள் கருதினர். அதே நேரத்தில், ஊணர்கள் தங்களுக்குச் செய்த சேவைக்காகப் பொருள் வழங்குவதாக உரோமானியர்கள் கருத விரும்பினர். அட்டிலாவின் தந்தையின் சகோதரரான ருகாவின் ஆட்சியின்போது, அட்டிலா வளர்ந்து வந்த போது, ஊணர்கள் ஒரு பெரிய சக்தியாக உருவாயினர். கான்ஸ்டண்டினோபிலைச் சேர்ந்த உயர்குடியினரான நெசுதோரியசு என்பவர் இந்நிலையைத் தனது பின்வரும் சொற்களால் விளக்குகிறார்: "ஊணர்கள் உரோமானியர்களுக்கு எசமானர்கள் மற்றும் அடிமைகள் ஆகிய இருவருமாகவே மாறிவிட்டனர்".:{{{3}}}

கிழக்கு உரோமானியப் பேரரசுக்கு எதிரான தொடர்ச்சியான தாக்குதல்கள்

அட்டிலா 
அட்டிலவின் காலத்தின் போது ஊணர்களின் பேரரசும், குடிமக்களாக இருந்த பழங்குடியினங்களும்

434ஆம் ஆண்டு ருகிலாவின் (அல்லது ருவா அல்லது ருகா) இறப்பானது அவரது சகோதரர் முந்த்சுக்கின் மகன்களான அட்டிலா மற்றும் பிலெதாவுக்கு ஊணப் பழங்குடியினரின் கட்டுப்பாட்டைக் கொடுத்தது. இரு சகோதரர்களும் அரியணைக்கு ஏறியபோது, ஊணப் பழங்குடியினங்கள் கிழக்கு உரோமானியப் பேரரசரான இரண்டாம் தியோடோசியசின் தூதுவர்களுடன் தங்களிடமிருந்து தப்பி ஓடி, கிழக்கு உரோமானியப் பேரரசில் தஞ்சமடைந்த கட்சி மாறியவர்கள் பலரைப் பெறுவதற்கு பேரம் பேசிக் கொண்டிருந்தனர். இவர்கள் ஒரு வேளை இரு சகோதரர்கள் தலைமை ஏற்பதற்கு உடன்படாத ஊணர்களின் உயர் குடியினராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

அடுத்த ஆண்டு அட்டிலாவும், பிலெதாவும் ஏகாதிபத்தியத் தூதுவர்களுடன் மார்கசு என்ற இடத்தில் சந்தித்தனர். அனைவரும் ஊணர்களின் பழக்க வழக்கப்படி, குதிரை மீது அமர்ந்திருந்தனர்.:{{{3}}} ஊணர்களுக்குச் சாதகமான ஒரு ஒப்பந்தத்திற்காகப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஊணர்களிடம் இருந்து தப்பி வந்து தங்களிடம் தஞ்சமடைந்தவர்களை ஊணர்களிடம் திருப்பி அனுப்ப உரோமானியர்கள் ஒப்புக்கொண்டனர். தாங்கள் முன்னர் திறையாகச் செலுத்தி வந்த 350 உரோமானியப் பவுண்டுகளை (சுமார் 115 கிலோ தங்கம்) இரட்டிப்பாக்கவும், ஊண வணிகர்களுக்குத் தங்களது சந்தைகளை திறந்துவிடவும், ஊணர்களிடம் கைதிகளாக இருந்த ஒவ்வொரு உரோமானியருக்கும் எட்டு சோலிதி தங்க நாணயங்களைப் பிணையப் பணமாகக் கொடுக்கவும் ஒப்புக் கொண்டனர். ஊணர்கள் இந்த ஒப்பந்தத்தால் திருப்தியடைந்தனர். உரோமானியப் பேரரசில் இருந்து தங்களது கூடாரங்களை எடுத்துக் கொண்டு சென்றனர். பெரிய அங்கேரியச் சமவெளியில் இருந்த தங்களது இருப்பிடத்திற்குத் திரும்பினர். தங்களது பேரரசை உறுதிப்படுத்தவும், வலிமையாக்கவும் அவர்கள் இவ்வாறு சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தைக் கான்ஸ்டண்டினோபிலின் சுவர்களை வலிமையாக்கவும், தன்யூபு ஆற்றின் பக்கவாட்டில் உள்ள பாதுகாப்புகளை உருவாக்க நகரின் முதல் கடல் சுவரைக் கட்டவும் தியோடேசியசு பயன்படுத்திக் கொண்டார்.

அடுத்த சில ஆண்டுகளுக்கு உரோமானியரின் பார்வையில் இருந்து ஊணர்கள் விலகி இருந்தனர். அதே நேரத்தில் சாசானியப் பேரரசு மீது படையெடுத்தனர். சாசானியர்கள் ஆர்மீனியாவில் ஊணர்களைத் தோற்கடித்தனர். ஊணர்கள் தங்களது படையெடுப்பைக் கைவிட்டனர். ஐரோப்பா மீது தங்களது கவனத்தை மீண்டும் திருப்பினர். 440ஆம் ஆண்டு உரோமானியப் பேரரசின் எல்லையில் படையினருடன் மீண்டும் தோன்றினர். 435ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி நிறுவப்பட்ட தன்யூபு ஆற்றின் வடக்குக் கரையில் இருந்த ஒரு சந்தையில் இருந்த வணிகர்களைத் தாக்கினர்.

தன்யூபு ஆற்றைக் கடந்த அவர்கள், இல்லிருகும் நகரம் மற்றும் ஆற்றிலிருந்த கோட்டைகளை அழித்தனர். பிரிசுகசின் கூற்றுப்படி, ஒரு மொயேசிய நகரமான விமினாசிமும் அழிக்கப்பட்டது. இவர்களது முன்னேற்றமானது மார்கசில் தொடங்கியது. அட்டிலா தனது என்று கருதிய ஒரு நிலப்பரப்பைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒரு சமயகுருவைத் தங்களிடம் அனுப்ப வேண்டும் என உரோமானியர்களிடம் ஊணர்கள் கூறினார். சமயகுருவின் விதியை உரோமானியர்கள் விவாதித்துக் கொண்டிருந்த போது, அவர் இரகசியமாக ஊணர்களிடம் தப்பியோடினார். நகரத்தைத் துரோகம் செய்து ஊணர்களிடம் அளித்தார்.

தன்யூபு ஆற்றின் பக்கவாட்டில் இருந்த நகர அரசுகளை ஊணர்கள் தாக்கிய அதே நேரத்தில், கேயிசெரிக்கு தலைமையிலான வான்டல்கள் மேற்கு உரோமானிய மாகாணமான ஆப்பிரிக்காவையும், அதன் தலைநகரான கார்த்திஜையும் கைப்பற்றினர். மேற்குப் பேரரசின் செழிப்பான மாகாணமாக ஆப்பிரிக்கா திகழ்ந்தது. உரோமானியர்களுக்கு உணவு வழங்கிய ஒரு முதன்மையான ஆதாரமாக ஆப்பிரிக்கா திகழ்ந்தது.

உரோமானியர்கள் பால்கன் பகுதியில் இருந்து தங்களது படைகளை விலக்கிக் கொண்டனர். ஆப்பிரிக்காவில் இருந்த வான்டல்களுக்கு எதிராக ஒரு போர்ப் பயணத்தைத் துவக்குவதற்காக அவர்களை சிசிலிக்கு அனுப்பினர். இவ்வாறாக இல்லிரிகுமில் இருந்து பால்கன் பகுதிக்கு ஒரு தெளிவான வழியை அட்டிலா மற்றும் பிலெதாவிற்கு இந்த நடவடிக்கை கொடுத்தது. 441ஆம் ஆண்டு அவர்கள் பால்கன் பகுதி மீது படையெடுத்தனர். மார்கசு மற்றும் விமினசியம் நகரங்களை ஊண இராணுவமானது சூறையாடியது. பிறகு சிங்கித்தனம் (பெல்கிரேட்) மற்றும் சிர்மியம் ஆகிய நகரங்களைக் கைப்பற்றியது. 442ஆம் ஆண்டின்போது சிசிலியிலிருந்து தனது துருப்புக்களைத் தியோடோசியசு திரும்ப அழைத்தார். ஊணர்களுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகள் எடுப்பதற்கு நிதியைப் பெறுவதற்காக புதிய நாணயங்களின் ஒரு பெரிய அச்சடிப்புக்கு ஆணையிட்டார். தன்னால் ஊணர்களைத் தோற்கடிக்க முடியும் என அவர் நம்பினார். ஊண மன்னர்களின் கோரிக்கைகளுக்கு மறுப்புத் தெரிவித்தார்.

இதற்கு எதிர்வினையாக 443ஆம் ஆண்டு ஒரு தாக்குதலை அட்டிலா தொடங்கினார்.:{{{3}}} உரோமானியர்களுக்குத் தெரிந்தவரை, முதன் முதலாக அட்டிலாவின் படைகள், கோட்டை மதில் சுவர்களின் கதவை உடைக்கும் எந்திரங்களையும், முற்றுகைக் கோபுரங்களையும் கொண்டு வந்தன. ரதியரா மற்றும் நைசுசு ஆகிய இராணுவ மையங்களுக்கு எதிராக வெற்றிகரமாக இந்த ஆயுதங்களைக் கொண்டு தாக்கின. அங்கு வாழ்ந்த குடி மக்களைப் படுகொலை செய்தன. பிரிசுகசு பின்வருமாறு கூறினார்: "நாங்கள் நைசுசு நகரத்திற்கு வந்தபோது நகரமானது வெற்றிடமாக இருந்தது. நகரமானது சூறையாடப்பட்டுள்ளது என நாங்கள் நினைத்தோம். தேவாலயங்களில் வெகு சில உடல் நலம் குன்றிய நபர்களே படுத்திருந்தனர். ஆற்றிலிருந்து ஒரு சிறு தொலைவில் நாங்கள் ஓய்வெடுத்தோம். அங்கு ஒரு வெட்ட வெளியில் ஆற்றின் கரைக்கு அருகில் இருந்த அனைத்து நிலப்பரப்பும் போரில் கொல்லப்பட்ட மனிதர்களின் எலும்புகளால் நிறைந்திருந்தது."

நிசாவா ஆற்றின் பக்கவாட்டில் முன்னேறிய ஊணர்கள் செர்திகா (சோஃபியா), பிலிப்போபோலிசு (புலோவிதிவ்), மற்றும் தற்போதைய அர்கதியோபோலிசு (லுலேபுர்கசு) ஆகிய நகரங்களைக் கைப்பற்றினர். கான்ஸ்டண்டினோபிலுக்கு வெளியே ஒரு உரோமானிய இராணுவத்தைக் கண்ட அவர்கள் அதனை அழித்தனர். ஆனால் இந்தக் கிழக்குத் தலைநகரத்தின் இரட்டைச் சுவர்களால் தடுக்கப்பட்டனர். இரண்டாவது உரோமானிய இராணுவத்தைக் கல்லிபோலிசு (கெலிபோலு) நகரத்திற்கு அருகில் தோற்கடித்தனர்.

தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஆயுதமேந்திய எதிர்ப்பைத் தெரிவிக்க இயலாத தியோடேசியசு தோல்வியை ஒப்புக்கொண்டார். தன்னுடைய இராணுவத்தின் தலைமை அதிகாரியான அனத்தோலியசை அமைதி ஒப்பந்தத்தின் விதிமுறைகள் குறித்து விவாதிக்க அனுப்பினார். முந்தைய ஒப்பந்தத்தை விட விதிமுறைகள் இந்த முறை கடுமையாக இருந்தன. படையெடுப்பின்போது ஒப்பந்தத்தின் வழிமுறைகளைப் பின்பற்றாததற்குத் தண்டனையாக, 6,000 உரோமானியப் பவுண்டுகள் (சுமார் 2000 கிலோ) தங்கத்தை ஊணர்களுக்குக் கொடுக்கப் பேரரசர் ஒப்புக்கொண்டார். ஆண்டுதோறும் செலுத்தும் திறையின் அளவானது மும்மடங்காக்கப்பட்டது, அதாவது, 2,100 உரோமானியப் பவுண்டுகள் (சுமார் 700 கிலோ) தங்கம். ஒவ்வொரு உரோமானியக் கைதிக்குமான பிணையத் தொகையானது 12 சொலிதிகளாக உயர்த்தப்பட்டது.

இந்தக் கோரிக்கைகள் சில காலத்திற்குப் பின்பற்றப்பட்டன. ஊண மன்னர்கள் தங்கள் பேரரசின் உட்பகுதிக்குப் பின்வாங்கிச் சென்றனர். பைசாந்தியத்தில் இருந்து ஊணர்கள் பின் வாங்கிய பிறகு பிலெதா இறந்தார். ஒருவேளை 445ஆம் ஆண்டு வாக்கில் அவர் இறந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அட்டிலா அரியணையைத் தனதாக்கிக் கொண்டார். ஊணர்களின் ஒரே மன்னனாக உருவானார்.:{{{3}}}

தனி மன்னனாக

447ஆம் ஆண்டு மொயேசியா வழியாக அட்டிலா மீண்டும் தெற்கே கிழக்கு உரோமானியப் பேரரசை நோக்கிச் சென்றார். கோதிக் இனத்தைச் சேர்ந்த உரோமானிய இராணுவத்தின் தலைமை இராணுவத் தளபதியான அர்னேகிசுக்லுசின் தலைமையிலான உரோமானிய இராணுவமானது அட்டிலாவை உதூசு யுத்தத்தில் சந்தித்தது. இதில் உரோமானிய இராணுவம் தோற்கடிக்கப்பட்டது. ஆனால் ஊணர்களுக்குக் கடுமையான இழப்பை ஏற்படுத்தியது. ஊணர்களை எதிர்க்க யாரும் இல்லை என்ற நிலை ஏற்பட்டது. ஊணர்கள் பால்கன் பகுதி வழியாக தெர்மோபைலே நகரம் வரை வெறியாட்டம் ஆடினர்.

இராணுவத் தலைமைத் தளபதி செனோவின் இசவுரியத் துருப்புகளால் தான் கான்ஸ்டண்டினோபிலே காப்பாற்றப்பட்டது. மூத்தவரான கான்ஸ்டண்டினிசின் தலையிட்டாலும் கான்ஸ்டான்டிநோபிள் தற்காகப்பட்டது. அவர் ஏற்கனவே பூகம்பத்தால் பாதிக்கப்பட்டிருந்த பழைய சுவர்களை மீண்டும் கட்ட அமைப்பை ஏற்படுத்தினார். சில இடங்களில் பழைய சுவர்களுக்கு முன்னதாக தொடர்ச்சியான பாதுகாப்பு அரண்களை அமைத்தார். தன்னுடைய புனித இபாதியசின் வரலாறு என்ற நூலில் கல்லினிகசு என்ற வரலாற்றாளர் பின்வருமாறு எழுதியுள்ளார்:

திரேசிலிருந்த ஊணர்களின் காட்டுமிராண்டி தேசமானது மிகுந்த வலிமையுடையதாக உருவானது. 100க்கும் மேற்பட்ட நகரங்களை அவர்கள் கைப்பற்றினர். கான்ஸ்டாண்டிநோபிளே அச்சுறுத்தலுக்குள்ளானது. அதன் பெரும்பாலான மக்கள் அங்கிருந்து தப்பித்தனர். … ஏராளமான கொலைகளும், குருதி ஓட்டமும் ஏற்பட்டது. இறந்தவர்களின் எண்ணிக்கை கணக்கிட முடியாத அளவுக்கு இருந்தது. தேவாலயங்கள் மற்றும் மடங்களில் இருந்தவர்களை கைதிகளாகப் பிடித்தனர். மதகுருமார்கள் மற்றும் பணிப் பெண்களை ஏராளமான அளவில் கொன்று குவித்தனர்.

மேற்கில்

அட்டிலா 
கெளல் படையெடுப்பின் போது ஊணப் படைகளின் பொதுவான பாதை

450இல் பேரரசர் மூன்றாம் வேலன்டினியனுடன் ஒரு கூட்டணியை ஏற்படுத்தியதன் மூலம் துலூஸின் விசிகோத்து இராச்சியத்தைத் தாக்கும் தனது எண்ணத்தை அட்டிலா வெளிப்படுத்தினார். அட்டிலா மேற்கு உரோமைப் பேரரசுடன் நன்முறையிலான தொடர்பில் முன்னர் தொடர்ந்தார். அதன் செல்வாக்கு மிகுந்த தளபதியான பிலாவியசு அயேதியசுடன் நல்ல உறவுமுறையில் இருந்தார். 433ஆம் ஆண்டு ஊணர் மத்தியில் ஒரு குறுகிய கால நாடுகடத்தப்பட்ட காலத்தை அயேதியசு கழித்தார். கோத்துகள் மற்றும் பகாவுதேக்களுக்கு எதிராக அட்டிலா கொடுத்த துருப்புகள், மேற்கில் பெரும்பாலும் மரியாதைக்காகாப் பயன்படுத்த பட்டமான மாசித்தர் மிலிதியம் (இராணுவத்தின் தலைமைத் தளபதி) என்ற பட்டத்தைப் பெற அயேதியசுக்கு உதவியாக இருந்தது. விசிகோத்துகளை எதிர்த்த, அவர்களைக் கண்டு அஞ்சிய கெயிசெரிக்கின் பரிசுகள் மற்றும் தூதுவ முயற்சியும் அட்டிலாவின் திட்டங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

ஆனால் வேலன்டினியனின் அக்காவான ஆனோரியா ஊண மன்னனுக்கு உதவி வேண்டி ஒரு வேண்டுகோளை அனுப்பினார். 450ஆம் ஆண்டின் இளவேனிற்காலத்தில் ஒரு உரோமானிய செனட் சபை உறுப்பினருக்கு அவர் கட்டாயப்படுத்தப்பட்டு நிச்சயிக்கப்பட்டிருந்தார். இதிலிருந்து தப்பிப்பதற்காகத் தன்னுடைய நிச்சயதார்த்த மோதிரத்தையும் அனுப்பினார். தன்னை மணந்துகொள்ளுமாறு ஆனோரியா கேட்டிருக்க வாய்ப்பு இல்லாத போதிலும், இந்தச் செய்தியை அட்டிலா அவ்வாறே புரிந்து கொண்டார். ஆனோரியாவுக்கு உதவ அட்டிலா ஒப்புக்கொண்டார். வரதட்சணையாக மேற்கு உரோமைப் பேரரசின் பாதியை அவர் கேட்டார்.

இந்தத் திட்டத்தை வேலன்டினியன் கண்டுபிடித்தபோது, அவரது தாயான கல்லா பிலாசிதியாவின் அறிவுரை மட்டுமே ஆனோரியாவை கொல்வதற்குப் பதிலாக நாடு கடத்துமாறு வேலன்டினியனை இணங்க வைத்தது. வேலன்டினியன் அட்டிலாவிற்கும் எழுதினார். இந்தத் திருமணக் கோரிக்கையின் சட்டப்பூர்வத்தைக் கடுமையாக அவர் மறுத்தார். ஆனோரியா அப்பாவி என்றும், திருமணத்திற்கான கோரிக்கையானது நியாயமானது என்றும், தன்னுடைய உரிமைக்குரியவற்றை எடுத்துக் கொள்ளத் தான் வருவேன் என்றும் ராவென்னாவிற்கு அட்டிலா ஒரு தூதனை அனுப்பினார்.

ஒரு பிராங்கிய ஆட்சியாளரின் இறப்பிற்குப் பிறகு நடந்த வாரிசுரிமைப் போராட்டத்தில் அட்டிலா தலையிட்டார். அந்த ஆட்சியாளரின் மூத்த மகனுக்கு அட்டிலா ஆதரவளித்தார். அதே நேரத்தில் இளைய மகனுக்கு அயேதியசு ஆதரவளித்தார். இந்த மன்னர்களின் அமைவிடம் மற்றும் அடையாளம் தெரியவில்லை. இவர்களைப் பற்றி ஊகங்கள் மட்டுமே உள்ளன. அட்டிலா தனக்குத் திறை செலுத்திய கெபிதாக்கள், ஆசுத்திரகோத்துகள், ருகியர்கள், சிரியர்கள், எருல்கள், துரிஞ்சியர்கள், ஆலன்கள், புருகுந்தியர்கள் மற்றும் பிறரைச் சேர்த்தார். மேற்கு நோக்கித் தன்னுடைய அணி வகுப்பைத் தொடங்கினார். 451ஆம் ஆண்டு இவர் தன் இராணுவத்துடன் பெல்சிகாவிற்கு வந்தார். இந்த இராணுவத்தில் 5,00,000 பேர் இருந்ததாக சோர்தனேசு மிகைப்படுத்திக் கூறினார்.

ஏப்ரல் 7இல் இவர் மெட்சுவைக் கைப்பற்றினார். தங்கள் சமயகுருக்களை நினைவுகூர எழுதப்பட்ட விடே என்று புனித நூலின் மூலம் தாக்கப்பட்ட மற்ற நகரங்களை நாம் அறிந்து கொள்ளலாம். ரெயிம்ஸில் உள்ள தனது தேவாலய மேடைக்கு முன்னர் நிக்காசியசு படுகொலை செய்யப்பட்டார். செர்வதுசு தன்னுடைய வழிபாடு மூலம் தோங்கேரன் நகரைக் காப்பாற்றினார் என்று கூறப்படுகிறது. பாரிசை புனித செனேவியேவு காப்பாற்றினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.:{{{3}}} அட்டிலாவை நேரில் சந்தித்ததன் மூலம் துரோயஸை லுபுசு காப்பாற்றினார் என்று கூறப்பட்டுள்ளது.:{{{3}}}:{{{3}}}

அட்டிலாவை எதிர்க்க அயேதியசு முன்னேறினார். பிராங்குகள், புருகுந்தியர்கள் மற்றும் கெல்ட்டியர் மத்தியில் இருந்து துருப்புக்களைச் சேர்த்தார். அவிதுசின் தூது மற்றும் அட்டிலாவின் மேற்கு நோக்கிய தொடர்ச்சியான முன்னேற்றம் ஆகியவை உரோமானியர்களுடன் கூட்டணி வைக்க விசிகோத்து மன்னனான முதலாம் தியோடோரிக்கை இணங்கச் செய்தது. இந்த இணைந்த இராணுவமானது அட்டிலாவிற்கு முன்னரே ஆர்லியன்ஸை அடைந்தது. செல்லும் வழியிலேயே அவர்கள் சோதனையிட்டுக் கொண்டும், பின்னால் திரும்பியும் ஊண முன்னேறத்தைக் கவனித்தனர். அயேதியசு ஊணர்களைத் தொடர ஆரம்பித்தார். அவர்களை கட்டலவுனத்துக்கு அருகில் என்று பொதுவாக அறியப்படும் இடத்தில் பிடித்தார். உரோமானியர்களுடன் வெட்டவெளியில் சண்டையிட அட்டிலா முடிவு செய்தார். அங்கு தனது குதிரைப்படையைப் பயன்படுத்த முடியும் என்று அவர் நினைத்தார்.

கட்டலவுனியச் சமவெளி யுத்தத்தில் இரண்டு இராணுவங்களும் சண்டையிட்டன. இதன் முடிவானது விசிகோத்து-உரோமானியக் கூட்டணிக்குக் கிடைத்த ஒரு சாதகமான வெற்றி எனப் பொதுவாகக் கருதப்படுகிறது. இந்தச் சண்டையில் தியோடோரிக் கொல்லப்பட்டார். இந்த முன்னேற்றத்தைத் தொடர்வதில் அயேதியசு தோல்வியடைந்தார். எட்வர்டு கிப்பன் மற்றும் எட்வர்டு கிரீசியின் கூற்றுப்படி, பெருமளவிலான விசிகோத்து வெற்றியின் விளைவுகளால், தோல்வியிலிருந்து எந்த அளவுக்குப் பயப்படுவாறோ அந்தளவுக்கு அயேதியசு பயந்தார். அயேதியசின் பார்வையில் அப்போது நடந்திருந்ததே சிறந்த முடிவாக இருந்தது: தியோடோரிக் இறந்துவிட்டார், சிதறுண்ட அட்டிலா பின்வாங்கிக் கொண்டிருந்தார், தாங்கள் வெற்றிபெற்றதாகத் தெரிவதன் பலனையும் உரோமானியர்கள் பெற்றனர்.

இத்தாலிப் படையெடுப்பும், மறைவும்

அட்டிலா 
அக்குயிலேயியாவை முற்றுகையிடும் அட்டிலா (குரோனிகோன் பிக்டம், 1358)
அட்டிலா 
மகா லியோ மற்றும் அட்டிலாவுக்கு இடையிலான சந்திப்பு என்னும் ராபியேலின் ஓவியம். இதில் பேதுரு மற்றும் பவுலுடன், லியோ உரோமுக்கு வெளியில் ஊணப் பேரரசரைச் சந்திக்கிறார்

அட்டிலா 452ஆம் ஆண்டு திரும்பினார். ஆனோரியாவுடனான தன்னுடைய திருமணக் கோரிக்கையைத் தொடர்ந்தார். செல்லும் வழியில் இத்தாலி மீது படையெடுத்து மோசமான சேதத்தை ஏற்படுத்தினார். இந்தத் தாக்குதல்களின் விளைவாகவே சமூகங்கள் நிறுவப்பட்டு பிற்காலத்தில் வெனிஸ் என்று அழைக்கப்பட்ட நகரம் உருவானது. பொதுமக்கள் வெளியேறி வெனிசின் கடற்கழியில் சிறிய தீவுகளுக்குத் தப்பி ஓடியதன் காரணமாக இந்த நகரம் உருவானது. இவரது இராணுவம் பல்வேறு நகரங்களைச் சூறையாடியது. அக்குயிலேயியா நகரத்தை இருந்த இடம் தெரியாமல் முழுவதுமாக அழித்தது. இதற்குப் பிறகு இந்த நகரம் எந்த இடத்தில் அமைந்திருந்தது என்பதைக் கூட கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது.:{{{3}}} போருக்கு ஏற்பாடு செய்ய அயேதியசிடம் வலிமை இல்லை. ஆனால் ஒரு நிழல் படையைக் கொண்டு அட்டிலாவின் முன்னேற்றத்திற்குத் தொல்லை கொடுத்து, முன்னேற்றத்தின் வேகத்தைக் குறைத்தார். அட்டிலா இறுதியாக போ ஆற்றின் கரையில் தனது முன்னேற்றத்தை நிறுத்தினர்.

பேரரசர் மூன்றாம் வேலன்டினியன் மூன்று தூதர்களை அனுப்பினார். உயர் பொது அதிகாரிகளான கென்னாதியசு அவியேனசு மற்றும் திரிகேதியசு, மற்றும் உரோமின் சமய குருவான முதலாம் லியோ ஆகியோரை அனுப்பினார். லியோ மான்துவா நகரியத்துக்கு அருகில் மின்சியோவில் அட்டிலாவைச் சந்தித்தார். அட்டிலாவிடம் இத்தாலியில் இருந்து பின்வாங்கி, பேரரசருடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என லியோ உறுதி வாங்கியிருந்தார்.:{{{3}}} அக்குயிதைனின் பிரசுபர் என்பவர் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பைப் பற்றி சிறுகுறிப்பைக் கொடுக்கிறார். ஆனால் வெற்றிகரமான ஒப்பந்தத்திற்கு முழுமுதற்காரணமாக லியோவையே கூறுகிறார். அலரிக்கின் விதியைப் பற்றிய மூட நம்பிக்கை சார்ந்த பயமானது அட்டிலாவை ஒரு கணம் நிறுத்தச் செய்தது எனப் பிரிசுகசு குறிப்பிடுகிறார். 410ஆம் ஆண்டு உரோமைச் சூறையாடிய பிறகு அலரிக் சீக்கிரமே இறந்ததைப் பிரிசுகசு குறிப்பிட்டிருக்கிறார்.

452இல் இத்தாலி ஒரு கடுமையான பஞ்சத்தைச் சந்தித்தது. 452ஆம் ஆண்டு பயிர்கள் சற்றே தப்பித்தன. அந்த ஆண்டு வட இத்தாலியின் சமவெளிகள் மீதான அட்டிலாவின் மோசமான சேதத்தை ஏற்படுத்திய படையெடுப்பும் அறுவடை நிலையை முன்னேற்றவில்லை.:{{{3}}} உரோமை நோக்கி முன்னேற இராணுவப் பொருட்கள் தேவைப்பட்டன. ஆனால் அவை இத்தாலியில் அப்போதைக்கு இல்லை. உரோமைக் கைப்பற்றுவதும் அட்டிலாவின் இராணுவப் பொருள் சூழ்நிலையை முன்னேற்றி இருக்காது. எனவே, அமைதி ஏற்படுத்தித் தன்னுடைய தாயகத்திற்குப் பின்வாங்குவது தான் அட்டிலாவிற்கு பயனுள்ளதாக இருந்தது.:{{{3}}}

மேலும், தன்யூபு ஆற்றை ஒரு கிழக்கு உரோமானியப் படையானது கடந்தது. அதற்குத் தலைமை தாங்கிய அதிகாரியின் பெயரும் அயேதியசு தான். முந்தைய ஆண்டு சல்செதோன் அவையில் இவர் பங்கெடுத்திருந்தார். தங்களது தாயக நிலப்பரப்புக்களைப் பாதுகாப்பதற்காக அட்டிலாவால் விடப்பட்டிருந்த ஊணர்களைத் தோற்கடிக்க அவர் முன்னேறினார். இதன் காரணமாக அட்டிலா "போ ஆற்றுக்குத் தெற்கில் கால்வைக்கும் முன்னரே இத்தாலியில் இருந்து வெளியேற வேண்டிய" கடுமையான மனித மற்றும் இயற்கை அழுத்தங்களை எதிர் கொண்டார்.:{{{3}}} தன்னுடைய குரோனிகா மினோரா நூலில் வரலாற்றாளர் இதாதியசு பின்வருமாறு இதைப் பற்றி எழுதியுள்ளார்:

இத்தாலியைச் சூறையாடிய மற்றும் குறிப்பிடத்தக்க சில நகரங்களுக்குள் புயலெனப் புகுந்த ஊணர்களைத் தெய்வீகத் தண்டனையானது தாக்கியது. தெய்வலோகம் அனுப்பிய பேரழிவுகள் அவர்களுக்கு ஏற்பட்டன: பஞ்சம் மற்றும் சில வகை நோய்கள். கூடுதலாக, பேரரசர் மர்சியனால் அனுப்பப்பட்ட துணைப்படையினர் மற்றும் அயேதியசின் படையினரால் ஒரே நேரத்தில் படுகொலை செய்யப்பட்டனர். தங்களது [தாயகக்] குடியிருப்புகளில் அடித்து நொறுக்கப்பட்டனர் … இவ்வாறாக நொறுக்கப்பட்ட பிறகு அவர்கள் உரோமானியர்களுடன் அமைதி உடன்படிக்கை ஏற்படுத்தினர்.

இறப்பு

அட்டிலா 
அட்டிலாவின் ஊணர்கள் இத்தாலி மீது படையெடுக்கின்றனர். ஓவியத்தின் பெயர் கடவுளின் கசை அட்டிலா. ஓவியர் உல்பியானோ செகா, 1887.

கிழக்கு உரோமைப் பேரரசில் இரண்டாம் தியோடோசியசுக்குப் பிறகு பேரரசர் மர்சியன் அரியணைக்கு வந்தார். ஊணர்களுக்குத் திறை செலுத்துவதை நிறுத்தினார். இத்தாலியிலிருந்து பின்வாங்கிய அட்டிலா தன்யூபு ஆற்றுக்கு அருகில் இருந்த தனது இடத்திற்குத் திரும்பினார். திறையை மீண்டும் செலுத்தச் செய்வதற்காகக் கான்ஸ்டண்டினோபில் மீது மீண்டும் ஒருமுறை தாக்குதல் நடத்தத் திட்டங்களைத் தீட்டினார்.

ஆனால், 453ஆம் ஆண்டின் ஆரம்ப மாதங்களில் அட்டிலா இறந்தார்.

பிரிசுகசின் குறிப்பின்படி, தனது புதிய திருமணத்தின்போது ஒரு விருந்தில் அட்டிலா இருந்தார். இந்த முறை அவர் அழகான இளம் வயது இல்திகோவை மணமுடித்திருந்தார். இல்திகோ என்ற பெயர் இப்பெண் கோதிக் அல்லது ஆசுத்திரகோதிக் பூர்வீகத்தை உடையவர் என நமக்குக் அறிவுறுத்துகிறது.:{{{3}}} திருமண இரவின் போது அட்டிலாவுக்குக் கடுமையான இரத்தக் காயம் ஏற்பட்டதால் இறந்தார். இவருக்குக் காயம் ஏற்பட்டு உணர்விழந்த நிலையில் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது, அல்லது உட்புற இரத்தப்போக்கு ஏற்பட்டதால் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. உடல் பகுதியில் நரம்புகள் வெட்டப்பட்டதன் காரணமாக இறப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த நரம்புகள் உணவுக்குழாயின் கீழ்ப்பகுதியில் ஒரு பகுதியாக உள்ளவையாகும். பல ஆண்டுகள் தொடர்ந்து அதிகப்படியான மதுப் பழக்கம் காரணமாக இவ்வாறு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த நரம்புகள் மெல்லிதானவையாகும். எளிதாக உடையக் கூடியவை. இதன் காரணமாக இரத்த போக்கு ஏற்பட்டு மரணம் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.:{{{3}}}

இவருடைய இறப்பானது வேறு விதமாகவும் கூறப்படுகிறது. ஆனால் இக்குறிப்பு இறப்பிற்கு 80 ஆண்டுகள் கழித்து உரோமானிய வரலாற்றாளர் மர்செல்லினசு கோமேசின் நூலில் காணப்படுகிறது. இக்குறிப்பின்படி "ஊணர்களின் மன்னனும், ஐரோப்பிய நிலப்பரப்புகளைச் சூறையாடியவருமான அட்டிலா தன்னுடைய மனைவியால் கொலை செய்யப்பட்டார்".:{{{3}}} ஒரு நவீன ஆய்வாளர் அட்டிலா அரசியல் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் எனப் பரிந்துரைக்கிறார்.:{{{3}}} ஆனால் பெரும்பாலானவர்கள் இவற்றை வதந்தி என மறுக்கின்றனர். அவர்கள் அட்டிலாவின் காலத்தில் வாழ்ந்த பிரிசுகசின் குறிப்புகளையே ஏற்றுக் கொள்கின்றனர். பிரிசுகசின் குறிப்பை 6ஆம் நூற்றாண்டு வரலாற்றாளரான சோர்தானேசு பின்வருமாறு தன் நூலில் குறிப்பிட்டுள்ளார்:

அடுத்த நாள் காலையின் பெரும்பகுதி கடந்திருந்த போது, பணியாளர்கள் ஏதோ நடந்திருக்கிறது எனச் சந்தேகம் அடைந்தனர். பெரிய அமளிக்குப் பிறகு கதவை உடைத்தனர். இரத்தம் சிந்தியதன் காரணமாக அட்டிலா இறந்திருப்பதை அங்கே கண்டனர். கண்களைக் கீழே பார்த்தவாறு முகத்திரையுடைய அப்பெண் அழுது கொண்டிருந்தார். புகழ்பெற்ற வீரனின் இரங்கலானது கண்ணீரால் தெரிவிக்கப்படுவதில்லை, இரத்தத்தால் தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஒரு வியப்பான செயல் அட்டிலாவின் இறப்போடு தொடர்புடையதாக நடந்தது. கிழக்கின் பேரரசரான மர்சியனின் கனவில், அவரது பக்கவாட்டில் ஒரு கடவுள் நின்று கொண்டிருந்தார். அப்போது மர்சியனின் ஆக்ரோஷமான எதிரி அட்டிலா அமைதியாகி இருந்த நேரத்தில், கடவுள் அதே இரவில் அட்டிலாவின் வில் உடைக்கப்பட்டதைப் பேரரசரிடம் காட்டினர். இந்த ஆயுதத்தின் மூலமாகவே ஊண இனத்தவர்கள் தங்களது வெற்றியைப் பெற்றுக் கொண்டிருந்தனர் என்பதைக் காட்டுவது போல் இது இருந்தது. வரலாற்றாளர் பிரிசுகசின் இந்தக் குறிப்பு உண்மையான சாட்சிகளை அடிப்படையாகக் கொண்டதாகும். அட்டிலாவின் இறப்பை ஆட்சியாளர்களுக்கு ஒரு தனித்துவமான வாரமாக கடவுள் காட்டியது, அட்டிலா பெரும் பேரரசுகளுக்கு எந்த அளவுக்கு அச்சுறுத்தலாக விளங்கினார் என்பதைக் காட்டுகிறது.

அட்டிலாவின் உடலானது வெட்டவெளியின் நடுவில் வைக்கப்பட்டது. மனிதர்கள் போற்றுவதற்குரிய பார்வையில், ஒரு பட்டுக் கூடாரத்தில் வைக்கப்பட்டிருந்தது. ஊணர்களின் முழுப் பழங்குடியினத்தையும் சேர்ந்த சிறந்த குதிரைவீரர்கள் இவரது உடம்பைச் சுற்றி வட்ட வடிவில் தம் குதிரைகளை ஓட்டினர். இறுதிச்சடங்கில் அட்டிலாவின் செயல்கள் பின்வருமாறு கூறப்பட்டன: "ஊணர்களின் தலைவராக மன்னன் அட்டிலா, முந்தியுச்சின் மகன் வீரமிக்கப் பழங்குடியினங்களின் பிரபு, சிதிய மற்றும் செருமானிய நிலப்பரப்புகளின் ஒரே ஆட்சியாளர், இதற்கு முன்னர் அறிந்திராத சக்தியைக் கொண்டிருந்தவர், நகரங்களைக் கைப்பற்றியவர், உரோமானிய உலகத்தின் இரண்டு பேரரசுகளையுமே நடுங்க வைத்தவர், அவர்களது வழிபாடுகளின் காரணமாக சினம் தணிந்தவர், அப்பகுதியைச் சூறையாடமல் ஆண்டுதோறும் திறையைப் பெற்றவர். இவை அனைத்தையும் சாதித்த இவர், எதிரிகளின் காயத்தால் வீழவில்லை, நண்பர்களின் துரோகத்தால் வீழவில்லை, இவரது நாடு அமைதியாக, மகிழ்ச்சியாக, சிறிதுகூட துன்பமின்றி இருந்ததன் மத்தியில் இவர் இறந்தார். இதை யாராவது இறப்பு என்று கூற முடியுமா? பழிவாங்கப்பட வேண்டும் என்று எழும் குரல்களையும் யாரும் நம்பவில்லை."

இவருக்கு இரங்கல் நடைபெற்ற பிறகு, இவரது சமாதி மீது ஆட்டத்துடன் கொண்டாடினர். பிறகு இவரது உடலை நிலத்தில் புதைத்தனர். இவரது முதல் சவப்பெட்டியானது தங்கத்தாலும், இரண்டாவது சவப்பெட்டி வெள்ளியாலும், மூன்றாவது சவப்பெட்டி இரும்பின் வலிமையாலும் உருவாக்கப்பட்டிருந்தது. மன்னர்களில் மிக வலிமை மிக்கவர்களுக்கு இந்த மூன்று வகையானவை பெட்டிகள் செய்யப்படுகின்றன என்பதை நமக்குக் காட்டுகின்றனர். இரும்பு இவர் பல தேசங்களை அடிபணிய வைத்ததற்காகவும், தங்கமும், வெள்ளியும் இரண்டு பேரரசுகளின் மரியாதையும் இவர் பெற்றதற்காகவும் பயன்படுத்தப்பட்டன. சண்டையில் எதிரிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டிருந்த ஆயுதங்களையும், ஆபரணங்களையும், பல்வேறு இரத்தினக் கற்களையும் புதைத்தனர். இந்தச் செல்வங்கள் மீது மனிதர்கள் ஆசைப்படக்கூடாது என்பதற்காக இப்பணியைச் செய்த அனைவரும் கொல்லப்பட்டனர்.:{{{3}}}

அட்டிலாவின் மகன்களான எல்லக், தெங்கிசிச் மற்றும் எர்னக் ஆகியோர், "அரசை ஆள வேண்டும் என்ற கண்மூடித்தனமான ஆர்வத்தால், இவரது பேரரசை அழித்தனர்".:{{{3}}} "நாடுகளைத் தங்களுக்கு மத்தியில் சமமாகப் பங்கிட்டுக்கொள்ள வேண்டும், போர்க் குணம் கொண்ட மன்னர்களும், அவர்களது மக்களும் ஒரு குடும்பப் பண்ணையைப் போல பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும்" என ஆரவாரத்துடன் வேண்டுகோள் வைத்தனர்.:{{{3}}} "அடிமட்ட நிலை அடிமையைப் போல" தாங்கள் நடத்தப்பட்டதற்கு எதிராகக் கெபிதா இன ஆட்சியாளரான அர்தரிக்கால் தலைமை தாங்கப்பட்ட ஒரு செருமானியக் கூட்டணியானது கிளர்ச்சியில் ஈடுபட்டது. இவர் அட்டிலாவிடம் மிகுந்த விசுவாசத்துடன் இருந்ததற்காக அறியப்படுபவர் ஆவார்.:{{{3}}} 454ஆம் ஆண்டு அர்தரிக் பன்னோனியாவில் நடந்த நெதாவோ யுத்தத்தில் ஊணர்களை எதிர்த்துச் சண்டையிட்டார்.:{{{3}}} அட்டிலாவின் மூத்த மகன் எல்லக் இந்த யுத்தத்தில் இறந்தார்.:{{{3}}} "தங்களது ஆட்சியில் இருந்து தப்பித்து ஓடியவர்களாக கோத்துகளைக் கருதி, கோத்துகளுக்கு எதிராக, தப்பி ஓடிய அடிமைகளைத் தேடுவது போல்" அட்டிலாவின் மகன்கள் வந்தனர். ஆசுத்திரகோத்து இனத்தின் துணை ஆட்சியாளரான வலாமீரைத் தாக்கினர். வலாமீரும், அர்தரிக்குடன் இணைந்து அட்டிலாவுக்காகக் கட்டலவுனியச் சமவெளியில் போரிட்டிருந்தார்.:{{{3}}} வலாமீர் அட்டிலாவின் மகன்களின் தாக்குதலை முறியடித்தார். ஊணர்களின் சில குழுக்கள் சிதியாவுக்கு இடம் பெயர்ந்து சென்றன. இவர்கள் ஒரு வேளை எர்னக்கின் ஆதரவாளர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.:{{{3}}} இவரது சகோதரரான தெங்கிசிச் தன்யூபு ஆற்றைத் தாண்டி 468ஆம் ஆண்டு மீண்டும் ஒரு படையெடுப்பை நடத்த முயற்சித்தார். ஆனால் ஆசுத்திரகோத்துகளால் பசியனே யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டார்.:{{{3}}} அடுத்த ஆண்டு தெங்கிசிச் உரோமானிய-கோதிக் தளபதியான அனகசுதுவால் கொல்லப்பட்டார். இதற்குப் பிறகு ஊண ஆட்சியானது முடிவுக்கு வந்தது.:{{{3}}}

அட்டிலாவின் பல பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் அவர்களது பெயர்களாலும், சிலர் அவர்களது செயல்களாலும் கூட அறியப்படுகின்றனர். ஆனால் வாரிசு குறித்த நம்பத் தகுந்த நூல்கள் பின்வந்த காலங்களில் இல்லாமல் போய்விட்டன. அட்டிலாவின் வழித்தோன்றல்களைக் கண்டறிவதற்கான வழிமுறையும் இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தும் இது பல மரபணு ஆராய்ச்சியாளர்கள் அட்டிலாவின் நேரடி வழித்தோன்றல்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுவதைத் தடுக்கவில்லை. பல நடுக் கால ஆட்சியாளர்கள் அட்டிலாவின் வழி வந்தவர்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதில் மிகுந்த நம்பத்தகுந்த ஆதாரங்களில் ஒன்றாகக் கருதப்படுவது பல்கர்களின் துலோ இனத்தைச் சேர்ந்த புராண கதாபாத்திரங்களான அவிதோகோல் மற்றும் இர்னிக்குக்காக எழுதப்பட்ட பல்கேரிய கான்கள் பற்றிய நூல் ஆகும்.:{{{3}}}:{{{3}}}:{{{3}}}

நாட்டுப்புறக் கதைகள்

இவரது பெயர் பல்வேறு மொழிகளில் பலவாறாக உச்சரிக்கப்படுகிறது: பழைய நார்சில் அட்லி மற்றும் அட்லே; நடு உயர் செருமானியத்தில் (நிபேலுங்கென்லியேடு) எட்செல் ; பண்டைய ஆங்கிலத்தில் அயேட்லா; அங்கேரியத்தில் அட்டிலா, அடில்லா, மற்றும் எடேல் (இதில் அட்டிலா பிரபலமானதாக உள்ளது); துருக்கியத்தில் அட்டிலா, அடில்லா, அடிலாய், அல்லது அடிலா; காசாக்கில் அடில் மற்றும் எடில்; மொங்கோலியத்தில் அடில் ("ஒரே மாதிரியான") அல்லது எடில் ("பயன்படுத்தக் கூடிய").

அட்டிலா 
அட்டிலாவுக்கும், திருத்தந்தை லியோவுக்குமான சந்திப்பு, நூல் குரோனிகோன் பிக்டம், அண். 1360

அட்டிலாவும், மார்சின் வாளும் புராணக் கதைகள்

பிரிசுகசின் குறிப்புக்கு சோர்தானேசு மேலும் மெருகு கூட்டினார். "சிதியர்களின் புனிதப் போர் வாளை" அட்டிலா கொண்டு இருந்ததாகக் குறிப்பிட்டார். உரோமானியப் போர்க் கடவுள் மார்சால் அட்டிலாவுக்கு இவ்வாள் வழங்கப்பட்டது எனக் குறிப்பிட்டார். இது அட்டிலாவை "ஒட்டுமொத்த உலகின் தலைவனாக்கியது" என்று குறிப்பிட்டார்.:{{{3}}}:{{{3}}}

12ஆம் நூற்றாண்டின் முடிவின்போது, அங்கேரிய அரசவையினர் அனைவரும் தாங்கள் அட்டிலாவின் வழித்தோன்றல்கள் எனக் குறிப்பிட்டனர். எர்சுபோல்டின் லம்பார்து என்பவரின் அக்கால நூல்கள் 1071ஆம் ஆண்டுக்கு சற்று முன்னர் அங்கேரியின் வெளிநாட்டு இராணியான கீவின் அனஸ்தாசியா அட்டிலாவின் வாளை நோர்தெயிமின் ஓட்டோவுக்குப் பரிசளித்தார் என்று குறிப்பிட்டார்.:{{{3}}} குதிரை வீரர்கள் பயன்படுத்திய இந்த வாளானது தற்போது வியன்னாவின் குன்சுட்இசுடோரிச்சசு அருங்கட்சியகத்தில் உள்ளது. எனினும், இது 9 அல்லது 10ஆம் நூற்றாண்டில் அங்கேரியப் பொற்கொல்லர்களால் செய்யப்பட்ட வேலைப்பாடு எனத் தெரிகிறது.:{{{3}}}

அட்டிலாவும், திருத்தந்தை லியோவும் புராணக் கதைகள்

நடுக்காலத்தின் ஒரு பெயர் தெரியாத நூலாசிரியர், அட்டிலாவுக்கும் திருத்தந்தை முதலாம் லியோவுக்கும் இடையே நடந்த சந்திப்பு பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சந்திப்பில் பேதுருவும், பவுலும் கலந்து கொண்டனர். "அக்காலத்துச் சுவைக்கேற்ப திட்டமிடப்பட்ட ஒரு அதிசயக் கதையாக" இது திகழ்ந்தது.:{{{3}}} இந்த இறுதிக் கட்டமானது பின்னர் மறுமலர்ச்சி கால கலைஞரான ராபியேல் சான்சியோ மற்றும் சிற்பி அல்கார்தி ஆகியோரால் கலையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. 18ஆம் நூற்றாண்டு வரலாற்றாளரான எட்வார்ட் கிப்பன் "கிறித்தவத் திருச்சபை சார்ந்த உன்னதமான புராணக் கதைகளில் ஒன்றை" நிறுவியதற்காக அல்கார்தியைப் புகழ்ந்துள்ளார்.:{{{3}}}

இக்குறிப்பானது, குரோனிகோன் பிக்டம் என்ற நடுக்கால அங்கேரிய நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. உரோமை அமைதியாக விட்டு விட்டால், அட்டிலாவுக்குப் பின் ஆட்சிக்கு வருபவர்களில் ஒருவர் ஒரு புனித மகுடத்தைப் பெறுவார் எனத் திருத்தந்தை அட்டிலாவுக்கு உறுதி அளித்தார். இந்தப் புனித மகுடமானது அங்கேரியின் புனித மகுடம் என்று புரிந்து கொள்ளப்படுகிறது.

செருமானிய வீரப் புராணங்களில் அட்டிலா

சில வரலாறுகளும், நூல்களும் அட்டிலாவை ஒரு மிகச் சிறந்த, உன்னதமான மன்னன் என்று குறிப்பிடுகின்றன. அத்திலவியாவோ,:{{{3}}} வோல்சுங்கா சகா,:{{{3}}} மற்றும் அத்லமால்:{{{3}}} ஆகிய மூன்று நோர்சு நூல்களில் அட்டிலா முக்கியமான கதாபாத்திரமாக இருக்கிறார். ஒரு போலந்து நூலானது அட்டிலாவின் பெயரை அகுயிலா என்று குறிப்பிடுகிறது.

மிச்சல்சுபெர்க்கின் புருதோல்பு மற்றும் பிரெயிசிங்கின் ஓட்டோ ஆகியோர் இதில் சில பாடல்களைக் "கீழ்த்தரமான நீதிக்கதைகள்" என்று சுட்டிக்காட்டுகின்றனர். பேரரசர் தியோடெரிக், அட்டிலா மற்றும் எர்மனரிக் ஆகியோரை சமகாலத்தவர்களாக இவை காட்டுகின்றன என்று குறிப்பிடுகின்றனர். ஆனால் சோர்தானேசின் நூலைப் படிக்கும் எந்த ஒரு வாசிப்பாளராலும் இது உண்மையல்ல என்று அறிய முடியும்.:{{{3}}} வரலாற்றுப் பாடல்கள் என்று குறிப்பிட்டுக் கொள்ளப்படும் இவை தியேத்ரிச் வான் பெர்னைப் (தியோடெரிக்) பற்றியதாகும். இப்பாடல்களில் தன் தீய உறவினரான எர்மென்ரிச்சிடமிருந்து (எர்மனரிக்) தப்பித்து எட்செலிடம் (செருமானிய மொழியில் அட்டிலாவின் பெயர்) தியேத்ரிச் தஞ்சம் அடைகிறார் என்று குறிப்பிடுகின்றன. தியேத்ரிசு புலுக்ட் மற்றும் ரபென்ஸ்லாக்ட் ஆகிய பாடல்களில் எட்செலே மிக முக்கியமானவராகத் திகழ்கிறார். நிபேலுங்கென்லியேட்டில் கிரியேமில்தின் இரண்டாவது நல்ல கணவனாக எட்செல் தோன்றுகிறார். இதில் ஊண இராச்சியத்தின் மற்றும் அவர்களது உறவினரான புருகுந்தியர்களின் அழிவு ஆகிய இரண்டுக்குமே கிரியேமில்தின் காரணமாகிறார்.

ஆரம்ப நவீன கால மற்றும் நவீன கால வரவேற்பு

1812இல் லுடுவிக் வான் பேத்தோவன் அட்டிலா குறித்த ஒரு இசை நாடகத்தை எழுதும் எண்ணம் கொண்டார். அதற்கான எழுத்துக்களை எழுதும் பணிக்காக ஆகத்து வான் கோத்செபுவேவை அணுகினார். எனினும், இது என்றுமே எழுதப்படவில்லை.:{{{3}}} 1846ஆம் ஆண்டு ஜூசெப்பே வேர்டி இசை நாடகத்தை எழுதினார். இது அட்டிலாவின் இத்தாலிப் படையெடுப்பு நிகழ்வுகளை ஓரளவுக்கு அடிப்படையாகக் கொண்டதாகும்.

முதலாம் உலகப் போரில், நேச நாடுகளின் பிரச்சாரமானது, செருமானியர்களை "ஊணர்கள்" என்று குறிப்பிட்டது. இது 1900ஆம் ஆண்டு பேரரசர் இரண்டாம் வில்லியமின் உரையை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்த உரையில் அட்டிலாவின் இராணுவ வல்லமையை வில்லியம் புகழ்ந்தார். இதை ஜவகர்லால் நேரு தனது உலக வரலாற்றின் காட்சிகள் நூலில் குறிப்பிட்டுள்ளார்.:{{{3}}} 1948ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் நாள் தெர் இசுபீகல் பத்திரிகையானது ஆஸ்திரியாவுக்கு மேல் அட்டிலாவின் வாளானது அச்சுறுத்தும் நோக்கில் தொங்கிக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டது.:{{{3}}}

அமெரிக்க எழுத்தாளர் செசிலியா ஆலந்து தனது வரலாற்றுப் புதினமான அட்டிலாவின் இறப்பை (1973) எழுதினார். இதில் ஓர் இளம் ஊணப் போர் வீரனும், ஒரு செருமானியப் போர் வீரனும் முதன்மைக் கதாபாத்திரங்களாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர். அவர்கள் மீது அட்டிலாவின் வாழ்க்கையும், இறப்பும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக, அட்டிலாவை ஒரு சக்திவாய்ந்த பின்னணிக் கதாபாத்திரமாக இந்தப் புதினம் சித்தரித்திருந்தது.

நவீனகால அங்கேரி மற்றும் துருக்கியில் "அட்டிலா" மற்றும் இப்பெயரின் துருக்கிய வேறுபாடான "அடில்லா" ஆகியவை பரவலாக ஆண் குழந்தைகளுக்குச் சூட்டப்படும் முதற்பெயராக விளங்குகின்றன. அங்கேரியில் பல பொது இடங்களுக்கு அட்டிலாவின் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, அங்கேரியின் தலைநகரான புடாபெசுட்டுவில் 10 அட்டிலா வீதிகள் உள்ளன. இதில் ஒரு வீதி புடா கோட்டைக்குப் பின்னால் இருக்கும் ஒரு முக்கியமான வீதியாகும். 1974இல், துருக்கிய இராணுவப் படையானது சைப்பிரசு மீது படையெடுத்தபோது அந்த நடவடிக்கையானது "அட்டிலா திட்டம்" எனப் பெயரிடப்பட்டிருந்தது.:{{{3}}}

1954ஆம் ஆண்டு யுனிவர்சல் ஸ்டுடியோஸின் திரைப்படமான சைன் ஆப் த பாகன் திரைப்படத்தில் ஜாக் பேலன்சு அட்டிலாவாக நடித்திருந்தார்.

அட்டிலா குறித்த சித்தரிப்புகள்

உசாத்துணை

குறிப்புகள்

நூல்கள்

வெளி இணைப்புகள்

அட்டிலா 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
அட்டிலா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
அரச பட்டங்கள்
முன்னர்
ருகிலா
ஊணர்களின் ஆட்சியாளர்
435–453
பின்னர்
எல்லக்

Tags:

அட்டிலா தோற்றமும், பண்பும்அட்டிலா சொற்பிறப்பியல்அட்டிலா வரலாற்றாய்வும் ஆதாரங்களும்அட்டிலா ஆரம்ப வாழ்வும் பின்னணியும்அட்டிலா கிழக்கு உரோமானியப் பேரரசுக்கு எதிரான தொடர்ச்சியான தாக்குதல்கள்அட்டிலா தனி மன்னனாகஅட்டிலா மேற்கில்அட்டிலா இத்தாலிப் படையெடுப்பும், மறைவும்அட்டிலா நாட்டுப்புறக் கதைகள்அட்டிலா குறித்த சித்தரிப்புகள்அட்டிலா உசாத்துணைஅட்டிலா குறிப்புகள்அட்டிலா நூல்கள்அட்டிலா வெளி இணைப்புகள்அட்டிலாஆலன்கள்கிழக்கு ஐரோப்பாநடு ஐரோப்பாஹூணர்கள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)முதற் பக்கம்பத்து தலஆடுஜீவிதம் (திரைப்படம்)காரைக்கால் அம்மையார்ஜெயம் ரவிசீறாப் புராணம்கருப்பசாமிநயன்தாராநிணநீர்க்கணுநீர் பாதுகாப்புஜலியான்வாலா பாக் படுகொலைஜோக்கர்யாழ்திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிசுப்பிரமணியசுவாமி கோயில், எட்டுக்குடிஇளங்கோவடிகள்இந்திய நிதி ஆணையம்தனிப்பாடல் திரட்டுஆத்திசூடிதொழினுட்பம்இரத்தக்கழிசல்விபுலாநந்தர்தமிழ்நாடு அமைச்சரவைதமிழ்விடு தூதுபஞ்சாயத்து ராஜ் சட்டம்வைதேகி காத்திருந்தாள்பீப்பாய்கரகாட்டம்தெலுங்கு மொழிதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019விண்டோசு எக்சு. பி.இந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள்மீனாட்சிபாட்ஷாசச்சின் டெண்டுல்கர்சங்ககாலத் தமிழக நாணயவியல்கன்னியாகுமரி மாவட்டம்வடிவேலு (நடிகர்)ஐஞ்சிறு காப்பியங்கள்பி. காளியம்மாள்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்வேதநாயகம் பிள்ளைசிறுகதைஒத்துழையாமை இயக்கம்நம்மாழ்வார் (ஆழ்வார்)தைப்பொங்கல்மனோன்மணீயம்நன்னூல்செண்டிமீட்டர்ஆனைக்கொய்யாகடவுள்ஆண்டு வட்டம் அட்டவணைமாரியம்மன்புனித ஜார்ஜ் கோட்டைகாற்றுபெண்ணியம்அருண் ஜேட்லி விளையாட்டரங்கம்கம்பராமாயணம்திருவள்ளுவர்கருப்பைவிவேகானந்தர்திட்டக் குழு (இந்தியா)தங்க மகன் (1983 திரைப்படம்)விந்துஅறுபடைவீடுகள்தமிழர் அளவை முறைகள்கொல்லி மலைதமிழ் இலக்கியம்திதி, பஞ்சாங்கம்திணையும் காலமும்உத்தரகோசமங்கைஇமயமலைதிருநங்கைஇடைச்சொல்நீதி இலக்கியம்இந்தியக் குடியரசுத் தலைவர்🡆 More