சியோங்னு

சியோங்னு (சீனம்: 匈奴; வேட்-கில்சு: ஹ்ஸியுங்-னு) என்பவர்கள் பண்டைய சீன ஆதாரங்களின் படி கிழக்கு ஆசிய புல்வெளியில் கி.

மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து, கி. பி. 1 ஆம் நூற்றாண்டு வரை இருந்த நாடோடி மக்களின் பழங்குடியின கூட்டமைப்பு ஆகும். கி. மு. 209 க்கு பிறகு சியோங்னு பேரரசை அவர்களது உச்ச தலைவர் மொடு சன்யு நிறுவியதாக சீன ஆதாரங்கள் கூறுகின்றன.

க்ஷியோங்னு
கி. மு. 3ஆம் நூற்றாண்டு–கி. பி. 1ஆம் நூற்றாண்டு
சியோங்னு
கி. மு. 133 - கி. பி. 89ஆம் கால ஆன்-சியோங்னு போருக்கு முந்தைய சியோங்னுவின் நிலப்பகுதிகள், கி. மு. 2ஆம் நூற்றாண்டு: மங்கோலியா, கிழக்குக் கசக்கஸ்தான், கிழக்குக் கிர்கிசுத்தான், தெற்குச் சைபீரியா, மற்றும் மேற்கு மஞ்சூரியா, சிஞ்சியாங், உள் மங்கோலியா மற்றும் கான்சு உள்ளிட்ட வட சீனாவின் பகுதிகள்.
வரலாறு 
• தொடக்கம்
கி. மு. 3ஆம் நூற்றாண்டு
• முடிவு
கி. பி. 1ஆம் நூற்றாண்டு
முந்தையது
பின்னையது
சியோங்னு உயேசி
சியோங்னு ஓர்டோஸ் கலாச்சாரம்
சியோங்னு சகர்கள்
ஆன் அரசமரபு சியோங்னு
சியான்பே அரசு சியோங்னு
ரூரன் ககானரசு சியோங்னு
தொச்சாரியர்கள் சியோங்னு
முதலாம் துருக்கியக் ககானரசு சியோங்னு
க்ஷியோங்னு
சீன மொழி 匈奴

கி. மு. இரண்டாம் நூற்றாண்டின் போது அவர்களது முந்தைய பிரபுக்களான உயேசி, நடு ஆசியாவிலிருந்து இடம் பெயர்ந்த பிறகு வட கிழக்கு ஆசியாவின் புல்வெளிகளில், பிற்காலத்தில் மங்கோலியா என்று அழைக்கப்பட்ட பகுதியில் சியோங்னு முக்கிய சக்தியாக உருவாயினர். தற்போதைய சைபீரியா, உள் மங்கோலியா, கன்சு மற்றும் சிஞ்சியாங் ஆகியவற்றின் பகுதிகளிலும் சியோங்னு செயல்பாட்டில் இருந்தனர். அண்டை நாடுகளான தென் கிழக்கில் இருந்த சீன அரசமரபுகளுடன் இவர்களது உறவு முறையானது சிக்கலானதாக இருந்தது. சண்டை மற்றும் அமைதியான காலங்கள் மாறி மாறி வந்தன. இவர்களுக்கு இடையில் கப்பம் கட்டுதல், வணிகம் மற்றும் திருமண ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.

16 ராஜ்யங்களின் சகாப்தத்தின் போது இவர்கள் ஐந்து காட்டுமிராண்டிகளில் ஒருவராகக் கருதப்பட்டனர். 5 காட்டுமிராண்டிகளின் எழுச்சி என்று அழைக்கப்பட்ட சீன ஆட்சிக்கு எதிரான எழுச்சியில் இவர்கள் பங்கேற்றனர்.

சியோங்னுவை மேற்காசிய புல்வெளிகளின் பிற்கால குழுக்களுடன் அடையாளப்படுத்தும் முயற்சிகள் இன்றும் சர்ச்சைக்குரியதாகவே உள்ளன. இவர்களுக்கு மேற்கில் சிதியர்கள் மற்றும் சர்மதியர்கள் இருந்தனர். சியோங்னுவின் மைய இன அடையாளமானது பல்வேறுபட்ட கருதுகோள்களின் பாடமாக உள்ளது. ஏனெனில் முக்கியமாக பட்டங்கள் மற்றும் தனிநபர் பெயர்கள் போன்ற ஒரு சில வார்த்தைகள் மட்டுமே சீன ஆதாரங்களில் பாதுகாக்கப்பட்டுள்ளன. சியோங்னு என்ற பெயர் ஹூனர்கள் அல்லது ஹுனா மக்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. இது ஒரு சிலரால் மறுக்கப்பட்டாலும் இவ்வாறு கருதப்படுகிறது. பிற மொழியியல் தொடர்புகள் - அவையும் சர்ச்சைக்குரியதாகவே உள்ளன - ஈரானிய அறிஞர்கள் உள்ளிட்டோரால் பரிந்துரைக்கப்படுகின்றன மங்கோலிய, துருக்கிய, உரலிக், எனிசை, திபெத்தோ-பருமிய அல்லது பல இன மொழிகள்.

உசாத்துணை

Tags:

en:Help:IPA/Mandarinசீனம் மொழிமொது சன்யுவேட்-கில்சு

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிங்கம்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்முக்கூடற் பள்ளுகல்லீரல்அறுபடைவீடுகள்டி. எம். செல்வகணபதிதிருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிபாவலரேறு பெருஞ்சித்திரனார்நாடாளுமன்ற உறுப்பினர்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்டைட்டன் (துணைக்கோள்)சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)குடும்பம்மகேந்திரசிங் தோனிமஞ்சள் காமாலைகோயம்புத்தூர்நிணநீர்க்கணுபங்குச்சந்தைஇந்திய தேசியக் கொடிஅல்லாஹ்பூரான்டார்வினியவாதம்ஆசிரியர்பரிவுதமிழர் கலைகள்சிறுதானியம்அழகிய தமிழ்மகன்தமிழ்நாடு சட்டப் பேரவைகுணங்குடி மஸ்தான் சாகிபுகட்டபொம்மன்பரதநாட்டியம்மேற்குத் தொடர்ச்சி மலைஇரசினிகாந்துபாரத ரத்னாகட்டுரைஅங்குலம்வேலுப்பிள்ளை பிரபாகரன்சீமான் (அரசியல்வாதி)திருமந்திரம்ஞானபீட விருதுஇராமலிங்க அடிகள்தமிழ்சிங்கப்பூர்மாணிக்கம் தாகூர்ஓம்தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிவிஜயநகரப் பேரரசுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்மனித உரிமைநற்கருணை ஆராதனைஉருசியாவேற்றுமை (தமிழ் இலக்கணம்)முடியரசன்நியூயார்க்கு நகரம்உவமையணிபசுபதி பாண்டியன்குறிஞ்சி (திணை)இலட்சம்மாமல்லபுரம்பாண்டவர்நன்னூல்கம்பர்முத்துலட்சுமி ரெட்டிநற்கருணைவெள்ளியங்கிரி மலைஇரண்டாம் உலகப் போர்வேற்றுமையுருபுபெங்களூர்நவதானியம்வல்லினம் மிகும் இடங்கள்இந்தோனேசியாமரகத நாணயம் (திரைப்படம்)சவூதி அரேபியாநிலக்கடலைஎஸ். ஜானகிநோட்டா (இந்தியா)🡆 More