துருக்கிய மொழி

துருக்கிய மொழி (ⓘ) துருக்கியர்களின் தாய்மொழியாகும்.

இது இச்தான்புல் துருக்கி என்றும் அழைக்கப்படுகிறது. இது தென் கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா, காகஸஸ், மத்திய ஆசியா, ஐரோப்பாவின் பிற பகுதிகள், ஐரோப்பா ஐக்கிய நாடுகள், மசிடோனா, கிரீசு, துருக்கி, வடக்கு சைப்ரஸ், பல்கேரியா, கிரீஸ் முதலிய நாடுகளிலும், துருக்கி அங்கத்தினராக இல்லாத ஈ.யூ. மொழி பேசப்படும் நாடுகளிலும், சுமார் நூறு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களால் பேசப்படும் மொழியாகும். ஒட்டோமான் பேரரசில் அடங்கியிருந்த நாடுகளிலேயே இம்மொழி பேசுவோர் அதிகளவில் உள்ளனர். துருக்கி, சைப்பிரஸ் ஆகிய நாடுகளின் உத்தியோகபூர்வ மொழியாகும்.

"துருக்கிய மொழி" அல்லது "துருக்கியின் துருக்கிய மொழி"
Türkçe அல்லது (0Türkiye Türkçesi)
உச்சரிப்பு[ˈt̪yɾkˌtʃe]
நாடு(கள்)துருக்கிய மொழி துருக்கி,
துருக்கிய மொழி பல்கேரியா,
துருக்கிய மொழி மாக்கடோனியக் குடியரசு,
துருக்கிய மொழி கொசோவோ,
துருக்கிய மொழி உருமேனியா,
துருக்கிய மொழி சைப்பிரசு,
துருக்கிய மொழி கிரேக்க நாடு,
துருக்கிய மொழி ஈராக்,
துருக்கிய மொழி சிரியா,
துருக்கிய மொழி அசர்பைஜான்
மற்றும் துருக்கியிலிருந்து வெளியேறின மக்கள்
துருக்கிய மொழி செருமனி,
துருக்கிய மொழி பிரான்சு,
துருக்கிய மொழி நெதர்லாந்து,
துருக்கிய மொழி ஆஸ்திரியா,
துருக்கிய மொழி உஸ்பெகிஸ்தான்,
துருக்கிய மொழி ஐக்கிய இராச்சியம்,
துருக்கிய மொழி ஐக்கிய அமெரிக்கா,
துருக்கிய மொழி பெல்ஜியம்,
துருக்கிய மொழி சுவிட்சர்லாந்து,
துருக்கிய மொழி இத்தாலி,
மற்றும் பல்வேறு நாடுகளில்
பிராந்தியம்அனத்தோலியா, சைப்பிரஸ், பால்க்கன் மூவலந்தீவு, காக்கசஸ், நடு ஐரோப்பா, மேற்கு ஐரோப்பா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
உலகில் 50 மில்லியனுக்கு மேல் (1987)  (date missing)
ஆல்ட்டாய மொழிகள் (மாறுபட்டது)
  • துருக்கிய
    • ஒகுசு மொழிகள்
      • மேற்கு ஒகுசு
        • "துருக்கிய மொழி" அல்லது "துருக்கியின் துருக்கிய மொழி"
இலத்தீன் அரிச்சுவடி (துருக்கிய வகை)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
துருக்கிய மொழி துருக்கி,
துருக்கிய மொழி சைப்பிரசு,
துருக்கிய மொழி மாக்கடோனியக் குடியரசு*
துருக்கிய மொழி கொசோவோ**
*20%க்கு மேல் மக்கள் பேசும் மாநகரங்களில்
**பகுதி மொழிகளில் துருக்கியம் ஒன்று
Regulated byதுருக்கிய மொழிச் சங்கம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-1tr
ISO 639-2tur
ISO 639-3tur
துருக்கிய மொழி

துருக்கிய மொழி அதிகாரப்பூர்வமாக இருக்கும் நாடுகள்

வகைப்பாடு

துருக்கிய மொழி 
ரஷ்யாவில், கைசில் என்ற இடத்தில் உள்ள, 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, பழைய துருக்கிய எழுத்துக்களைக் கொண்ட பழைய துருக்கிய கல்வெட்டு

துருக்கிய மொழிகள் அல்தாயிக் மொழித் தொகுப்பைச் சேர்ந்தவை. துருக்கிய மொழி பேசுபவர்களில் சுமார் 40% பேர்கள் உள்ளூர் துருக்கிய மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள்.

துருக்கிய மொழி ஒஹுஸ் (Oghuz) மொழிக் குழுவில் ஓர் உறுப்பாகும், துருக்கிக் மொழிக் குழுவில், ஒஹுஸ் (Oghuz) மொழித் தொகுப்பாகும், துருக்கிய மற்றும் அசர்பைஜானி, டர்க்மென் (Turkmen), கஷ்காய் (Qashqai), ககாசு (Gagauz) மற்றும் பால்கன் ககாஸ் துருக்கி (Balkan Gagauz Turkish) உள்ளிட்ட பிற ஓகூஸ் துர்க்கி மொழிகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒற்றுமை உள்ளது.

வரலாறு

முன் மத்திய காலங்களில் (6 முதல் 11 ஆம் நூற்றாண்டுகள் வரை), துருக்கிய மொழி விரிவாக்கம் அடைந்தது. துருக்கிய மொழிகளில் பேசும் மக்கள், சைபீரியா, ஐரோப்பா, மத்தியதரைக்கடல் நாடுகள், மத்திய ஆசியா எனப் புவியியல் பகுதி முழுவதும் பரவியிருந்தனர். துருக்கியின் செல்ஜக் (Seljuqs) இனத்தினர், தங்கள் ஒஹுஸ் மொழியைப் பரப்பினர். ஒஹுஸ் மொழி, இன்றைய துருக்கிய மொழியின் மூல மொழி ஆகும். இது 11 ஆம் நூற்றாண்டின் அனத்தோலியா மொழியின் பகுதி ஆகும்.

ஒட்டோமான் துர்கிஷ்

ஒட்டோமான் பேரரசரின் காலத்தில் (1299-1922) பயன்பாட்டிலிருந்த, கலை, இலக்கியம் ஆகியவற்றை வெளிப்படுத்த பயன்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ மொழி ஒட்டோமான் துருக்கிஷ் எனப்படுகிறது. இது துருக்கியம், பாரசீகம், மற்றும் அரபி ஆகிய மொழிகளின் கலவை. எனினும் தினசரி பயன்பாட்டிலுள்ள துருக்கிய மொழி இவை அனைத்திலிருந்தும் வேறுபட்டிருந்தது. அன்றாட பயன்பாட்டிலுள்ள துருக்கிய மொழி, "சுமாரான துருக்கியம்" என்று பொருள்படும் கபா டூர்க்ஸ் (kaba Türkçe) அல்லது அழைக்கப்பட்டது. இது குறைவான கல்வி பெற்ற மற்றும் கிராமப்புற சமூகத்தினர்களால் பேசப்படுகிறது. இது நவீன துருக்கிய மொழிக்கு அடிப்படையாக விளங்கியது. நவீன துருக்கிய மொழி சொற் குவியலுக்கு இதிலிருந்து அதிக சதவீத வார்த்தைகள் பெறப்பட்டன.

மொழி சீர்திருத்தமும் நவீன துருக்கிய மொழியும்

நவீன துருக்கி நிர்மாணிக்கப்பட்ட பின்னர், 1932 ல், முஸ்தஃபா கமால் அடாடர்க் (Mustafa Kemal Atatürk) காப்புமையில், துருக்கிய மொழி சீர்திருத்தம் மேற்கொள்ள துருக்கிய மொழி சங்கம் (TDK) நிறுவப்பட்டது. துருக்கிய மொழியில் ஆராய்ச்சி நடத்துவது இதன் நோக்கம் ஆகும்.

அரபு மற்றும் பாரசீக மொழிகளை பிறப்பிடமாகக் கொண்ட வார்த்தைகளையும், பிற மொழிக் கடன் வார்த்தைகளையும், சமமான துருக்கிய மொழி வார்த்தைகளைக் கொண்டு பதிலீடு செய்வதும், மொழி சீர்திருத்தம் செய்வதும் இச்சங்கத்தின் பணிகளில் ஒன்றாகும்.

பத்திரிகைகளில் பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டது. இதன் மூலம், துருக்கிய மொழியிலிருந்து பல நூறு வெளிநாட்டு சொற்களை நீக்கி இச்சங்கம் வெற்றி கண்டது. டி.டி.கே மூலம் மொழிக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பெரும்பாலான வார்த்தைகள் புதிதாக துர்கிக் மொழி ஆதாரங்களை பெற்றிருந்தன, பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படாத பழைய துருக்கிய வார்த்தைகள் தெரிவு செய்யப்பட்டு புதுப்பிப்பட்டன.

1927 ல் அட்டாடர்க், தன் புதிய பாராளுமன்றத்திற்கான நீண்ட உரையில், ஒட்டோமான் பாணியைப் பயன்படுத்தினார். அந்த உரை கேட்பவர் அனைவருக்கும் மிகவும் அன்னியமாக இருந்தது. அவ்வுரை, 1963, 1986, 1995 ஆகிய மூன்று ஆண்டுகள் மூன்று முறை நவீன துருக்கியில் மொழிபெயர்க்கப்பட்டது.

பழைய துருக்கியிலிருந்து புதுப்பிப்பட்ட சில வார்த்தைகள் சிறப்பு அர்த்தங்களைக் கொண்டுள்ளன. உதாரணமாக "புத்தகம்" எனும் பொருளுடைய பெடிக் (betik) எனும் சொல் தற்பொழுது கணினி அறிவியலில் "எழுத்து" என்ற பொருளில் பயன்பட்டு வருகிறது.

நவீன துருக்கிய சொற்களும் பழைய கடன் சொற்களும்

துருக்கிய மொழி 
கொசோவோவில் (கொசோவோ) உள்ள ப்ரிஸ்ரென்னில் (Prizren) அதிகாரப்பூர்வ மொழிகளில் சாலை அடையாளங்கள்: அல்பேனி (மேல்), செர்பியன் (மத்திமன்) மற்றும் துருக்கிய (கீழ்)

நவீன துருக்கிய சொற்கள் மற்றும் பழைய கடன் சொற்களுக்கு இடையே உள்ள தொடர்பை சில உதாரணங்களுடன் காட்டும் அட்டவணை:

ஒட்டோமான் (Ottoman) துர்கிஷ் நவீன துர்கிஷ் தமிழ் மொழிபெயர்ப்பு குறிப்புகள்
müselles üçgen முக்கோணம் பெயர்ச்சொல் கூட்டு üç பின்னொட்டு -gen
tayyare uçak வானூர்தி uçmak என்ற வினைச்சொல்லிலிருந்து பெறப்பட்டது ("பறக்க"). இந்த வார்த்தை "விமான நிலையம்" என்ற பொருளில் முதலில் முன்மொழியப்பட்டது.
nispet oran விகிதாச்சாரம் இந்தப் பழைய வார்த்தையை புதிய மொழியில் சேர்த்து இணையாகப் பயன்படுத்தப்படுகிறது. நவீன வார்த்தை பழைய துருக்கிய வினைச்சொல்லாகும் or- (வெட்டுவதற்கு).
şimal kuzey வடக்கு பழைய துருக்கிய பெயர்ச்சொல்லில் இருந்து பெறப்பட்டது kuz ("குளிர்ந்த மற்றும் இருண்ட இடம்" அல்லது "நிழல்"). இந்த வார்த்தையானது மத்திய துருக்கிய மொழிகளின் பயன்பாட்டில் இருந்து மீட்டெடுக்கப்பட்டது.
teşrinievvel ekim அக்டோபர் மாதம் பெயர்ச்சொல் ekim பொருள் "நடவு நடவடிக்கை", இது இலையுதிர் காலத்தில், துருக்கியில் பரவலாக தானிய விதைகளை விதைப்பதைக் குறிக்கிறது

புவியியல் அடிப்படையில் பரவல்

ஜேர்மனியில், துருக்கிய மொழி பேசும் இரண்டு மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். அமெரிக்கா, பிரான்சு, நெதர்லாந்து, ஆஸ்திரியா, பெல்ஜியம், சுவிட்சர்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க அளவில் துருக்கிய மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். தங்க இடம் அளிக்கும் நாடுகளில் துருக்கியைச் சேர்ந்த குடியேற்றக்காரர்களும், அனைத்து இன துருக்கிய புலம்பெயர்ந்தோர்களும், கலாச்சார ஒருங்கமைவு மற்றும் பிற மொழி தாக்கத்தின் காரணமாக, சொந்த மொழியான துருக்கிய மொழியைச் சரளமாகப் பேசுவதில்லை.

2005 ஆம் ஆண்டு, துருக்கியில் 93% மக்கள் துருக்கிய மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தனர். அதே நேரத்தில் எஞ்சியிருந்த 67 மில்லியன் மக்கள் குர்திஸ் மொழிகளைப் பயன்படுத்தினர்.

அதிகாரப்பூர்வ நிலை

துருக்கிய மொழியியல் சங்கம், மொழி புனிதத்துவத்தின் சித்தாந்தங்களால் உந்தப்பட்டது. அதன் முக்கிய பணிகளில் சில, கடன் சொற்களை நீக்குதல், அவற்றுக்குச் சமமான துருக்கிய மொழிச் சொற்களைக் கொண்டு கடன் சொற்களை மாற்றுதல், மற்றும் துருக்கிய மொழி தோற்றத்திற்கு சமமான வெளிநாட்டு இலக்கண கட்டுமானங்களை உருவாக்கல்.

1951 இல் துருக்கிய மொழியியல் சங்கம், ஒரு சுதந்திரமான அமைப்பாக மாறியது. அது கல்வி அமைச்சரால் தலைமை தாங்கப்பட வேண்டும் என்ற அளவுக்கு உயர்ந்தது. இந்த நிலை ஆகஸ்ட் 1983 வரை தொடர்ந்தது. 1980 ஆம் ஆண்டு இராணுவ ஆட்சிக் வீழ்ந்ததைத் தொடர்ந்து 1982 ஆம் ஆண்டின் அரசியலமைப்பில் துருக்கிய மொழியியல் சங்கம், மீண்டும் ஒரு அரசியலமைப்பாக மாற்றப்பட்டது..

வட்டாரப் பேச்சுமொழிகள்

நவீன தரநிலை துருக்கிய மொழியானது இஸ்தான்புல்லின் வட்டாரப் பேச்சுமொழியை அடிப்படையாகக் கொண்டது. 1930 களில் இருந்து ஊடகங்கள் மற்றும் துருக்கிய கல்வி முறைகள் மூலம் மொழித் தரநிலைகளின் அளவினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்ட போதிலும், வட்டாரப் பேச்சுமொழிகளில் மாறுபாடு தொடர்கிறது.

பல்கலைக்கழகங்களாலும், துருக்கிய மொழி சங்கத்தின் அர்ப்பணிப்பு பணிக் குழுக்களாலும், துருக்கிய பேச்சுவழக்குகளை கண்டறியச் செய்யும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. துருக்கிய மொழி ஆராய்ச்சியின் ஒரு விரிவான தொகுப்பு மற்றும் வெளியீட்டிற்கான அறிக்கை தயாரிப்புப் பணி தொடர்கிறது. இதனுடன் வட்டாரப் பேச்சுமொழிகளில் உலக வரைபட நூல் தயாரிப்புப் பணியும் தற்போது நடைபெருகிறது.

மேலும் காண்க

மேற்கோள்கள்

Tags:

துருக்கிய மொழி வகைப்பாடுதுருக்கிய மொழி வரலாறுதுருக்கிய மொழி ஒட்டோமான் துர்கிஷ்துருக்கிய மொழி மொழி சீர்திருத்தமும் நவீன யும்துருக்கிய மொழி நவீன துருக்கிய சொற்களும் பழைய கடன் சொற்களும்துருக்கிய மொழி புவியியல் அடிப்படையில் பரவல்துருக்கிய மொழி அதிகாரப்பூர்வ நிலைதுருக்கிய மொழி வட்டாரப் பேச்சுமொழிகள்துருக்கிய மொழி மேலும் காண்கதுருக்கிய மொழி மேற்கோள்கள்துருக்கிய மொழிஆசியாஐரோப்பாஒட்டோமான் பேரரசுகிரீசுகிரீஸ்சைப்பிரஸ்சைப்ரஸ்தாய்மொழிதுருக்கிபடிமம்:Tr-Türkçe.ogaபல்கேரியாமாக்கடோனியக் குடியரசுமில்லியன்மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

டுவிட்டர்மருத்துவம்வெள்ளியங்கிரி மலைபுதுச்சேரிதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005பிரபுதேவாதுரை வையாபுரிதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்திருத்தணி முருகன் கோயில்தேம்பாவணிகுஜராத் டைட்டன்ஸ்சுற்றுச்சூழல் மாசுபாடுதுரைமுருகன்வாக்குரிமைஹிஜ்ரத்ஆற்றுப்படைதிருநெல்வேலிசென்னை சூப்பர் கிங்ஸ்இராவண காவியம்பித்தப்பைசோழர்தமிழ்ப் புத்தாண்டுசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மதுரைதமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி பட்டியல்வேளாளர்உத்தம புத்திரன் (2010 திரைப்படம்)காச நோய்மருதமலை முருகன் கோயில்கட்டுவிரியன்வயாகராதாயுமானவர்நாய்பீப்பாய்உன்னாலே உன்னாலேஉருவக அணிபாவலரேறு பெருஞ்சித்திரனார்நபிஇந்தியத் தேர்தல் ஆணையம்நவக்கிரகம்மண் பானைவானதி சீனிவாசன்அருந்ததியர்சிவாஜி கணேசன்சேரர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்குணங்குடி மஸ்தான் சாகிபுஆசிரியப்பாதீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)அப்துல் ரகுமான்108 வைணவத் திருத்தலங்கள்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்பல்லவர்வைரமுத்துசிறுகதைநீலகிரி மாவட்டம்சிவாஜி (பேரரசர்)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)சீமான் (அரசியல்வாதி)சித்த மருத்துவம்நீலகிரி மக்களவைத் தொகுதிஆழ்வார்கள்அபூபக்கர்திருவாரூர் தியாகராஜர் கோயில்மக்காகாதல் மன்னன் (திரைப்படம்)திருச்சிராப்பள்ளிநீரிழிவு நோய்மு. அ. சிதம்பரம் அரங்கம்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்கட்டுரைமெய்யெழுத்துபெண் தமிழ்ப் பெயர்கள்அழகிய தமிழ்மகன்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்🡆 More