திரேசு

திரேசு (Thrace,, பண்டைக் கிரேக்கம்: Θρᾴκη: Thráke; பல்கேரிய: Тракия; Trakiya, துருக்கியம்: Trakya) ஐரோப்பாவின் தென்கிழக்கிலுள்ள வரலாற்றுச் சிறப்புடைய புவியியற் பகுதி ஆகும்.

இதனைச் சூழ வடக்கில் பால்கன் மலைகளும் தெற்கில் ரோடோப் மலைகளும் ஏஜியன் கடலும், கிழக்கில் கருங்கடலும் மர்மரா கடலும் உள்ளன. இப்பகுதிகள் தற்காலத்தில் தென்கிழக்கு பல்காரியா, வடகிழக்கு கிரேக்கம், மற்றும் துருக்கியின் ஐரோப்பிய நிலப்பகுதியாக உள்ளன. இங்கிருந்த திரேசியர்கள் பண்டைக்கால இந்தோ ஐரோப்பிய மக்கள் ஆவர். திரேசியர்கள் ஐரோப்பாவின் நடு, கிழக்கு, தென்கிழக்கு பகுதிகளில் வாழ்ந்திருந்தனர்.

திரேசு
தற்காலத்தில் திரேசு பல்காரியா, கிரேக்க, துருக்கி நாடுகளின் அங்கமாக உள்ளது.
திரேசு
திரேசின் இயல்பான-புவியியல் எல்லைகள்: பால்கன் மலைத்தொடர், ரோடோப் மலைகள் மற்றும் பொசுபோரசு. ரோடோப் மலைகள் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளன.
திரேசு
உரோமைப் பேரரசில் இருந்த திரேசு மாகாணம்

பண்டை வரலாறு

திரேசின் மக்கள் தங்களை எவ்வாறாகவும் குறிப்பிட்டுக் கொள்ளவில்லை. இருப்பினும் இவர்களை திரேசியர்கள் என்றும் இப்பகுதியை திரேசு என்றும் கிரேக்கர்களே பெயரிட்டனர். திரேசியர்கள் பல பழங்குடி குழுக்களாக பிரிந்திருந்தனர். திரேசிய வீரர்கள் பெர்சிய படையில் பயன்படுத்தப்பட்டதாக அறியப்படுகிறது. அடுத்திருந்த நாட்டு அரசர் அலெக்சாந்தரின் படையில் பங்கேற்று தார்தனெல்சு நீரிணையைக் கடந்து பாரசீகப் பேரரசுடன் போரிட்டனர்.

திரேசியர்கள் பலவாறாகப் பிரிந்திருந்தமையால் ஓர் அரசியலமைப்பைக் கொண்டிருக்கவில்லை. மலை மக்களாகிய திரேசியர்கள் இயல்பான போர்வீரர்களாக இருந்தனர். சமவெளிப் பகுதிகளில் வாழ்ந்திருந்த திரேசியக் குழுக்கள் அமைதியை விரும்பினர்.

அலெக்சாந்தர் திரேசைக் கைப்பற்றியிருந்தார். பின்னர் இது விடுதலை பெற்றது. பல முயற்சிகளுக்குப் பிறகு மீண்டும் பொ.யு 46இல் குளோடியசு காலத்தில் உரோமானியர்களால் கைப்பற்றப்பட்டனர். உரோமானியர் ஆட்சியில் இது மாகாணமாகவும், பின்னர் நான்கு மாநிலங்களாகவும் பிரிக்கப்பட்டது. இறுதியில், பேரரசு அழிபட்டநிலையில் ஆயிரமாண்டுகளுக்கு சண்டைகளையும் ஆக்கிரமிப்புகளையும் திரேசு எதிர்கொண்டது. இதன் பின்னர் திரேசு என்றுமே தன்னாட்சி பெற்றதில்லை.

மேற்கோள்கள்

Tags:

இந்தோ ஐரோப்பிய மக்கள்ஏஜியன் கடல்ஐரோப்பாகருங்கடல்கிரேக்கம் (நாடு)துருக்கிதுருக்கிய மொழிபண்டைக் கிரேக்க மொழிபல்காரியாபல்கேரிய மொழிமர்மரா கடல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சூர்யா (நடிகர்)சிலப்பதிகாரம்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்முத்துலட்சுமி ரெட்டிகுடும்ப அட்டைஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்ஏலகிரி மலைபத்துப்பாட்டுஆய்த எழுத்துதேஜஸ்வி சூர்யாசூல்பை நீர்க்கட்டிஆசிரியர்முதற் பக்கம்கங்கைகொண்ட சோழபுரம்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஆதிமந்திஸ்ரீமியா காலிஃபாபுறப்பொருள்எஸ். ஜானகிசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)சேமிப்புசன்ரைசர்ஸ் ஐதராபாத்இமயமலைமுல்லைப் பெரியாறு அணைஉமறுப் புலவர்குறை ஒன்றும் இல்லை (பாடல்)ஈ. வெ. இராமசாமிமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்வாதுமைக் கொட்டைபரணி (இலக்கியம்)திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்பெரியாழ்வார்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்ஐந்திணைகளும் உரிப்பொருளும்ஆசிரியப்பாமனம் கொத்திப் பறவை (திரைப்படம்)வெண்பாஅழகர் கோவில்திரு. வி. கலியாணசுந்தரனார்அளபெடைநான்மணிக்கடிகைபெயர்சுடலை மாடன்கருத்துதிருநங்கைசிறுதானியம்முதலாம் இராஜராஜ சோழன்தொல்காப்பியம்வடலூர்அன்னை தெரேசாராஜா ராணி (1956 திரைப்படம்)சுரைக்காய்முதல் மரியாதைதமிழில் சிற்றிலக்கியங்கள்கருப்பைநீர்சச்சின் (திரைப்படம்)இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்நம்ம வீட்டு பிள்ளைமான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்தேவாங்குசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்மு. வரதராசன்மாசிபத்திரிகுறவஞ்சிஆங்கிலம்சினேகாஅட்சய திருதியைதெலுங்கு மொழிசமூகம்ந. பிச்சமூர்த்திசிந்துவெளி நாகரிகம்மதீச பத்திரனமலேரியாபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தொடை (யாப்பிலக்கணம்)சுப்பிரமணிய பாரதி🡆 More