உயிர்ப்பு ஞாயிறு

உயிர்ப்பு ஞாயிறு (Easter), ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழா அல்லது பாஸ்கா என்பது இயேசு கிறிஸ்து கி.பி.

சுமார் 33ம் ஆண்டில் சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் சாவில் இருந்து உயிர்த்ததைக் குறிக்கும் விதமாக கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் ஒரு திருவிழா ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் 40 நாட்கள் தவக்காலத்தின் முடிவில் வருகிறது.

உயிர்ப்பு ஞாயிறு
உயிர்ப்பு ஞாயிறு
இயேசுவின் உயிர்ப்பைக் குறிக்கும் 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பதிப்புக்கல் ஓவியம்
இடம்- ஜெபமாலை பேராலயம், லூர்து நகர், பிரான்சு
கடைபிடிப்போர்கிறித்தவர்
வகைChristian
முக்கியத்துவம்இயேசுவின் உயிர்த்தெழுதல்
கொண்டாட்டங்கள்திருப்பலி, குடும்ப உணவு, ஈஸ்டர் முட்டை தேடல், பரிசுப்பரிமாற்றம்
அனுசரிப்புகள்செபம், பாஸ்கா திருவிழிப்பு, திருப்பலி
நாள்மார்ச் 22, ஏப்ரல் 25, date of Easter
2023 இல் நாள்ஏப்பிரல் 9 (மேற்கில்)
ஏப்பிரல் 16 (கிழக்கில்)
2024 இல் நாள்மார்ச்சு 31 (மேற்கில்)
மே 5 (கிழக்கில்)
2025 இல் நாள்ஏப்பிரல் 20 (மேற்கில்)
ஏப்பிரல் 20 (கிழக்கில்)
தொடர்புடையனதிருநீற்றுப் புதன், தவக் காலம், குருத்து ஞாயிறு, பெரிய வியாழன், புனித வெள்ளி,

இது கிறிஸ்தவ திருவழிபாட்டு ஆண்டின் மிக முக்கியமான திருநாளாகும். இது ஆண்டுதோறும் மார்ச் 22 முதல் ஏப்ரல் 25 வரையான காலப்பகுதியில் வழமையாக வருகின்றது. இந்நாள் புனித வெள்ளியில் இருந்து மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. உரோமன் கத்தோலிக்க திருச்சபையில் இது எட்டு நாள் திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கமாகும்.

பெயர்க்காரணம்

பாஸ்கா என்ற அரமேய மொழிச் சொல்லுக்கு கடந்து போதல் என்று பொருள். இது இஸ்ரேல் மக்கள் எகிப்தில் இருந்து மீட்பு பெற்றத்தன் நினைவாக கொண்டாடப்படும் யூதப் பெருவிழா ஆகும். புதிய ஏற்பாட்டில் "நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார்" (1 கொரி 5 : 7 ) என்று திருத்தூதர் பவுல் கூறுகிறார். ஆகவே பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டிருக்கும் பாஸ்கா பெருவிழா என்பது இயேசுவின் சாவையும் உயிர்ப்பையும் குறிக்கும் முன்னறிவிப்பாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். ஆகவே அவர்கள் இயேசு உயிர்த்தெழுந்த நாளை புதிய பாஸ்கா பெருவிழாவாகக் கருதுகின்றனர்.

கணக்கீடு

உயிர்ப்புத் திருநாளைக் கணக்கிடுவதில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வந்தன. ஏனெனில் எபிரேய நாட்காட்டியின் படி இயேசு, நிசான் மாதம் 14ஆம் நாளன்று சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாளான நிசான் மாதம் 16ஆம் நாளன்று உயிர்த்தெழுந்தார். இதன்படி கணக்கிட்டால் புனித வெள்ளியும் உயிர்ப்பு ஞாயிறும் ஆண்டுதோறும் வெவ்வேறு கிழமைகளில் வரும். ஆகவே கி.பி. 325ம் ஆண்டு குழுமிய முதல் நைசீய பொதுச்சங்கம், மார்ச் மாதம் வரும் சம இரவு நாளான 21ம் தேதிக்குப் பின் வரும் முழு நிலவு நாளிலோ அல்லது அதற்கு பிறகோ வரும் முதல் ஞாயிற்றுக்கிழமையே உயிர்ப்புத் திருநாள் என்று அறிவித்தது. அதைப் பின்பற்றி மேற்கு மற்றும் கிழக்கு கிறிஸ்தவர்கள் உயிர்ப்புப் பெருவிழாவை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

உயிர்ப்பு ஞாயிறு 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Easter
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

உயிர்ப்பு ஞாயிறு பெயர்க்காரணம்உயிர்ப்பு ஞாயிறு கணக்கீடுஉயிர்ப்பு ஞாயிறு இவற்றையும் பார்க்கவும்உயிர்ப்பு ஞாயிறு மேற்கோள்கள்உயிர்ப்பு ஞாயிறுஇயேசுஇயேசுவின் உயிர்த்தெழுதல்இயேசுவின் சாவுஇயேசுவை அடக்கம் செய்தல்கிறிஸ்தவம்சிலுவைதவக் காலம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பி. காளியம்மாள்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்சங்ககால மலர்கள்பெருஞ்சீரகம்ஸ்ரீகி. ராஜநாராயணன்சீமான் (அரசியல்வாதி)பால்வினை நோய்கள்தமிழ் படம் 2 (திரைப்படம்)பால கங்காதர திலகர்திருவிழாகருட புராணம்புறநானூறுகாகம் (பேரினம்)யுகம்இலங்கைஇரட்சணிய யாத்திரிகம்பாண்டியர்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)திரைப்படம்வேர்க்குருபக்கவாதம்திருவள்ளுவர்குடலிறக்கம்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்ராஜா சின்ன ரோஜாமோகன்தாசு கரம்சந்த் காந்திஇரண்டாம் பத்து (பதிற்றுப்பத்து)திருமலை (திரைப்படம்)மு. க. ஸ்டாலின்நிலக்கடலைமாணிக்கவாசகர்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்சரத்குமார்ராஜசேகர் (நடிகர்)நீதிக் கட்சிசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)காரைக்கால் அம்மையார்தமிழ்நாடு அமைச்சரவைகார்த்திக் (தமிழ் நடிகர்)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)இரத்தக்கழிசல்சுயமரியாதை இயக்கம்சேரன் (திரைப்பட இயக்குநர்)இன்னா நாற்பதுமறைமலை அடிகள்பாரதிதாசன்நவதானியம்பாரத ஸ்டேட் வங்கிகடையெழு வள்ளல்கள்தமிழ்நாடு காவல்துறைஇந்தியன் பிரீமியர் லீக்மருதமலை (திரைப்படம்)அட்சய திருதியைஇந்திய அரசியலமைப்புநுரையீரல் அழற்சிதமிழ்த் தேசியம்பிளாக் தண்டர் (பூங்கா)சங்கம் (முச்சங்கம்)தமிழர் அளவை முறைகள்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்திருவாசகம்புரோஜெஸ்டிரோன்பெண்ணியம்திராவிட மொழிக் குடும்பம்தமன்னா பாட்டியாவிளையாட்டுநெசவுத் தொழில்நுட்பம்விஸ்வகர்மா (சாதி)டுவிட்டர்சைவத் திருமணச் சடங்குதிராவிசு கெட்நோட்டா (இந்தியா)அத்தி (தாவரம்)திருநங்கைகள்ளழகர் கோயில், மதுரைதமிழ்ப் புத்தாண்டுதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்மனித உரிமை🡆 More