முழுநிலவு

முழுநிலவு, முழுமதி அல்லது பவுர்ணமி என்பது புவியில் இருந்து காணும் போது நிலவு முழுமையான வெளிச்சத்துடன் தோற்றமளிக்கும் நாளாகும்.

வானியலின்படி, கதிரவன் மற்றும் நிலவிற்கு இடையே புவி வரும் நாளே முழுநிலவு ஆகும். அப்போது கதிரவனின் வெளிச்சம் நிலவின் முற்பக்கத்தின் மீது முழுமையாகப் பதிகிறது. ஆகவே அது ஒளிர்ந்து புவியில் இருந்து காணும்போது வட்ட வடிவில் காட்சியளிக்கிறது. அப்போது புவியில் இருந்து காண இயலாத நிலவின் பிற்பக்கம் இருளாக இருக்கும்.

முழுநிலவு
14 நவம்பர் 2016 அன்று தோன்றிய பெருநிலவு, புவியின் நடுப்பகுதியில் இருந்து 356,511 km (221,526 mi) தொலைவில் இருந்தது

நிலவு புவியைச் சுற்றும் வட்டப்பாதை சுமார் ஐந்து டிகிரி அளவுக்குச் சாய்வாக இருக்கிறது. எனவே முழுநிலவு நாளன்று பெரும்பாலும் புவியின் நிழல் நிலவின் மீது விழுவதில்லை. அவ்வாறு விழும்போது ஏற்படும் நிகழ்வே நிலவு மறைப்பு ஆகும். முழுமையான நிலவு மறைப்பின் போது ராலே ஒளிச்சிதறல் காரணமாக நிலவு சிவப்பு நிறத்தில் தோற்றமளிப்பதால் அது சிவப்பு நிலவு என்றும் குருதி நிலவு என்றும் அழைக்கப்படுகின்றது

இந்து சமயத்தில் திதிகள் எனப்படும் சந்திர நாட்களுள் பவுர்ணமியும் ஒன்று.

இந்து சமயத்தில்

இந்து சமயத்தில் பல்வேறு சிறப்பு நாட்களும் பவுர்ணமி தினத்தன்றே வருகின்றன. 12 தமிழ் மாதங்களில் வரும் பவுர்ணமி நாளின் சிறப்புகளும் விரதங்களும் இங்கு பட்டியல் இடப்பட்டுள்ளன.

  1. சித்ரா பவுர்ணமி - அனுமன் ஜெயந்தி
  2. வைகாசி பவுர்ணமி - நரசிம்ம ஜெயந்தி, புத்த பூர்ணிமா, வைகாசி விசாகம்
  3. ஆனிப் பவுர்ணமி - சாவித்திரி விரதம்
  4. ஆடிப் பவுர்ணமி - குரு பூர்ணிமா, ஹயக்ரீவ ஜெயந்தி
  5. ஆவணிப் பவுர்ணமி - ரக்சா பந்தன், ஓணம், ஆவணி அவிட்டம்
  6. புரட்டாசி பவுர்ணமி - உமா மகேசுவர விரதம், பித்ரு பட்சம்
  7. ஐப்பசி பவுர்ணமி -சிவபெருமானுக்கு அன்னாபிசேகம்
  8. கார்த்திகைப் பவுர்ணமி - கார்த்திகை விளக்கீடு
  9. மார்கழிப் பவுர்ணமி - திருவாதிரை, தத்தாத்ரேய ஜெயந்தி
  10. தைப் பவுர்ணமி - தைப்பூசம்
  11. மாசிப் பவுர்ணமி- மாசி மகம்
  12. பங்குனிப் பவுர்ணமி - ஹோலி, பங்குனி உத்திரம்

பௌத்தமும் முழுநிலவும்

இலங்கையில் பௌத்தர்களுக்கு முழுநிலவு புனித நாளாக விளங்குகின்றது. பௌத்தர்கள் புத்தர் பரிநிர்வாணம் அடைந்த தினமாக ஒவ்வொரு முழுநிலவன்றும் வழிபாடு, தான தர்மங்கள் செய்கின்றனர். ஆகவே ஒவ்வொரு முழுநிலவு நாட்களும் இலங்கையில் அரசு விடுமுறை தினமாகும்.

இவற்றையும் பார்க்கவும்

Tags:

சூரிய ஒளிஞாயிறு (விண்மீன்)நிலவுபுவிவானியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிதமிழ்ப் பருவப்பெயர்கள்கயிறு இழுத்தல்கிறிஸ்தவம்புகாரி (நூல்)ராச்மாசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்இந்திய ரிசர்வ் வங்கிவைகோஏலாதிராசாத்தி அம்மாள்ஹர்திக் பாண்டியாஉணவுகாதல் மன்னன் (திரைப்படம்)ஆனந்தம் விளையாடும் வீடுநோட்டா (இந்தியா)அகத்தியமலைவேதம்பரிவர்த்தனை (திரைப்படம்)மக்களாட்சிஇந்திய வரலாறுமதீனாதமிழிசை சௌந்தரராஜன்இந்திய தேசிய சின்னங்கள்எலுமிச்சைபழனி பாபாசிங்கப்பூர் உச்ச நீதிமன்றம்தஞ்சாவூர்நம்மாழ்வார் (ஆழ்வார்)மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்அலீகர்ணன் (மகாபாரதம்)சனீஸ்வரன்இந்தியக் குடியரசுத் தலைவர்ஆற்றுப்படைகட்டுவிரியன்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்இந்திய உச்ச நீதிமன்றம்இந்திய மக்களவைத் தொகுதிகள்அயோத்தி இராமர் கோயில்ஆறுமுக நாவலர்திரிசாசு. வெங்கடேசன்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிபட்டினப் பாலைகிருட்டிணன்கர்மாஜவகர்லால் நேருசுபாஷ் சந்திர போஸ்முடியரசன்சாத்தான்குளம்நயினார் நாகேந்திரன்உப்புச் சத்தியாகிரகம்முன்னின்பம்இந்தியன் பிரீமியர் லீக்தென் சென்னை மக்களவைத் தொகுதிதிராவிட மொழிக் குடும்பம்கொல்லி மலைபுதுமைப்பித்தன்தூத்துக்குடி மக்களவைத் தொகுதிஜெ. ஜெயலலிதாபுற்றுநோய்சிலுவைசுந்தர காண்டம்முதுமொழிக்காஞ்சி (நூல்)திராவிசு கெட்திருப்போரூர் கந்தசாமி கோயில்வரைகதைமுகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்ஸ்ரீபுனித வெள்ளிதிதி, பஞ்சாங்கம்தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்கோயம்புத்தூர் மாவட்டம்ஓ. பன்னீர்செல்வம்ராதிகா சரத்குமார்தமிழில் சிற்றிலக்கியங்கள்🡆 More