புதுநிலவு

புதுநிலவு, மறைமதி அல்லது அமாவாசை என்பது நிலவின் முதல் கலை ஆகும்.

வானியல்படி நிலவும் கதிரவனும் ஒரே நேர்க்கோட்டில் வரும் நாளே புதுநிலவு ஆகும். இந்நாளில் கதிரவ ஒளியானது புவியில் இருந்து காண இயலாத நிலவின் பிற்பக்கத்தில் முழுமையாகப் பதிகிறது. எனவே இந்நாளில் புவியை நோக்கி இருக்கும் நிலவின் முற்பக்கம் ஒளியின்றி இருக்கும்.

புதுநிலவு
புதுநிலவின் தோற்றம்

நிலவு புவியைச் சுற்றும் வட்டப்பாதையானது சுமார் ஐந்து பாகைகள் அளவுக்கு சாய்வாக இருக்கிறது. எனவே புதுநிலவு நாட்களில் கதிரவ வெளிச்சத்தால் ஏற்படும் நிலவின் நிழல் பெரும்பாலும் புவியின் மீது விழுவதில்லை. அவ்வாறு விழும்போது கதிரவ மறைப்பு நிகழும்.

புதுநிலவு
29 மார்ச் 2006ல் நிகழ்ந்த முழுக் கதிரவ மறைப்பின் உச்ச நிலையின் போது புதுநிலவின் காட்சி

புதுநிலவு ஒரு இருள் நிறைந்த வட்டம் போன்று இருக்கும். இது எப்போதும் கதிரவனுடன் ஒரே நேரத்தில் எழுந்து மறைந்து விடுவதால் இதைக் காண இயலாமல் போகிறது. எனினும் முழுக் கதிரவ மறைப்பு நிகழ்வின் உச்ச நிலையின் போது மட்டும் புதுநிலவை வெறும் கண்களால் காண இயலும்.

சந்திரமானம் எனப்படும் நிலவை அடிப்படையாகக் கொண்ட சில காலக்கணிப்பு முறைகளில் புதுநிலவு நாளே மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படுகிறது.

இந்து சமயத்தில் திதிகள் எனப்படும் சந்திர நாட்களுள் அமாவாசையும் ஒன்று.

இவற்றையும் பார்க்கவும்

ஆதாரம்

Tags:

சூரிய ஒளிஞாயிறு (விண்மீன்)நிலவின் கலைநிலாவானியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்மொழிபெயர்ப்புகர்ணன் (மகாபாரதம்)திருக்குர்ஆன்பத்து தலவி. சேதுராமன்திருப்போரூர் கந்தசாமி கோயில்முத்துலட்சுமி ரெட்டிதமிழ்நாட்டின் மாவட்டங்கள்குலுக்கல் பரிசுச் சீட்டுதமிழக வெற்றிக் கழகம்பூரான்தமிழ்நாடு காவல்துறைராதாரவி2024 இந்தியப் பொதுத் தேர்தல்மதீனாசனீஸ்வரன்இந்தியாவின் செம்மொழிகள்பொன்னுக்கு வீங்கிகே. மணிகண்டன்அழகர் கோவில்குருத்து ஞாயிறுமுக்குலத்தோர்பிரெஞ்சுப் புரட்சிஆசாரக்கோவைசீவக சிந்தாமணிஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்தேர்தல் நடத்தை நெறிகள்இயேசுவின் உயிர்த்தெழுதல்நஞ்சுக்கொடி தகர்வுஇராவணன்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்அலீவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)காச நோய்அளபெடைஹாட் ஸ்டார்இந்தியப் பொதுத் தேர்தல்கள்தீரன் சின்னமலைசரண்யா துராடி சுந்தர்ராஜ்குற்றாலக் குறவஞ்சிசேக்கிழார்திண்டுக்கல் மக்களவைத் தொகுதிஎம். ஆர். ராதாஅயோத்தி தாசர்தமிழிசை சௌந்தரராஜன்வினோஜ் பி. செல்வம்ஔவையார் (சங்ககாலப் புலவர்)முகம்மது நபிஐம்பெருங் காப்பியங்கள்மதுரைக் காஞ்சிசங்க காலப் பெண்பாற் புலவர்கள்கூகுள்கல்லீரல்சுக்ராச்சாரியார்இனியவை நாற்பதுதிருவிளையாடல் புராணம்முன்னின்பம்கருப்பைஅபூபக்கர்போயர்கரும்புற்றுநோய்ஆத்திரேலியாதஞ்சாவூர்மு. க. ஸ்டாலின்மாதவிடாய்மகேந்திரசிங் தோனிகாதல் (திரைப்படம்)பூக்கள் பட்டியல்அறுபது ஆண்டுகள்முல்லை (திணை)மீனா (நடிகை)மருத்துவம்எடப்பாடி க. பழனிசாமிநெல்இந்திய அரசுசெம்மொழி🡆 More