திருநீற்றுப் புதன்

திருநீற்றுப் புதன் (Ash Wednesday) என்பது சாம்பல் புதன் என்றும், விபூதிப் புதன் என்றும் அழைக்கப்படுவதுண்டு.

இது கிறித்தவர்கள் கொண்டாடும் ஒரு விழா ஆகும். நாற்பது நாள் நீடிக்கின்ற தவக் காலத்தின் முதல் நாள் இதுவே . திருநீற்றுப் புதனிலிருந்து 46ஆம் நாளாக உயிர்த்தெழுதல் விழா கொண்டாடப்படும். இடையே வருகின்ற ஞாயிற்றுக் கிழமைகளில் தவ முயற்சிகளைக் கடைப்பிடிப்பது வழக்கமல்ல. ஏனென்றால் ஞாயிற்றுக் கிழமை இயேசு உயிர்பெற்றெழுந்த நாள் ஆதலால் மகிழ்ச்சி நாள்; நோன்பு நாளல்ல என்பது கிறித்தவர் கருத்து.

திருநீற்றுப் புதன்
திருநீற்றுப் புதன்
கடைபிடிப்போர்பல கிறித்துவ பிறிவுகள்
வகைகிறித்தவம் (யூதம் வழி)
அனுசரிப்புகள்திருப்பலியின் போது குரு அல்லது திருத்தொண்டர் மக்களின் தலைமீது சாம்பல் பூசுவது வழக்கம்
நாள்உயிர்த்த ஞாயிறுக்கு 46 நாட்களுக்கு முன்
2023 இல் நாள்பெப்பிரவரி 22
2024 இல் நாள்பெப்பிரவரி 14
2025 இல் நாள்மார்ச்சு 5
2026 இல் நாள்பெப்பிரவரி 18
நிகழ்வுஆண்டுதோரும்
தொடர்புடையனதவக் காலம்
உயிர்த்த ஞாயிறு
திருநீற்றுப் புதன்
திருநீறு பூசும் நிகழ்ச்சி

திருநீற்றுப் புதனைக் கத்தோலிக்கர், லூத்தரன் சபையினர், ஆங்கிலிக்க சபையினர், மெதடிஸ்டு சபையினர் போன்ற மைய நீரோட்ட சபையினர் அனைவரும் கடைப்பிடிக்கின்றனர்.

திருநீற்றுப் புதன் வரும் நாள்

பொதுவான கிரகோரியன் கிறித்தவ நாட்காட்டிப்படி, இயேசுவின் உயிர்த்தெழுதல் ஒரு குறிப்பிட்ட தேதியில் கொண்டாடப்படுவதில்லை. மாறாக, மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் வருகின்ற முழுநிலா நாளையொட்டி வருகின்ற ஞாயிறு அவ்விழா நிகழும். இது பண்டைய யூத மரபுப்படி அமைந்த பாஸ்கா விழா கணிப்பை அடிப்படையாகக் கொண்டது. எனவே, திருநீற்றுப் புதன் பெப்ருவரி 4ஆம் நாளிலிருந்து மார்ச் 10ஆம் நாள் வரை ஏதாவது ஒரு புதனன்று வரலாம். 2011ஆம் ஆண்டு இவ்விழா மார்ச் 9ஆம் நாள் வந்தது. 2014ஆம் ஆண்டு திருநீற்றுப் புதன் மார்ச் 5ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

திருநீற்றுப் புதன் கொண்டாட விவிலிய அடிப்படை

கிறித்தவ விவிலியத்தில் அடங்கியுள்ள புதிய ஏற்பாட்டில் இயேசு நாற்பது நாள் இரவும் பகலும் பாலைநிலத்தில் நோன்பிருந்தார் என்னும் செய்தி உள்ளது. நற்செய்தி நூல்களை எழுதிய மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகியோர் இச்செய்தியைக் குறிப்பிடுகின்றனர் (காண்க: மத் 4:1-11; மாற் 1:12-13; லூக் 4:1-13). இயேசுவைப் பின்பற்றி, கிறித்தவர்களும் நாற்பது நாள்கள் நோன்பிலும் இறைவேண்டலிலும் ஈடுபட தொடக்கமாக அமைகிறது திருநீற்றுப் புதன்.

முன்னாள்களில் விபூதிப் புதன் என்றும் இப்பொழுது திருநீற்றுப் புதன் (சாம்பல் புதன்) எனவும் வழங்கப்படுகின்ற இந்நாளில் கிறித்தவர்கள் புனிதப்படுத்தப்பட்ட சாம்பலைத் தம்மீது தடவிக் கொள்கிறார்கள். சாம்பல் தவத்திற்கும் தன்னொறுத்தலுக்கும் மன மாற்றத்திற்கும் அடையாளம்.

கத்தோலிக்க சபை வழக்கப்படி, கடந்த ஆண்டு குருத்து ஞாயிறன்று வழங்கப்பட்ட குருத்தோலைகளை எரித்து, சாம்பலாக்கிக் கோவிலில் வைப்பர். அங்கே வழிபாட்டின்போது அச்சாம்பல் மந்திரிக்கப்படும். அதைக் கிறித்தவ குரு அல்லது திருத்தொண்டர் மக்களின் தலைமீது (நெற்றியில்) பூசுவார்; வழக்கமாக சிலுவை அடையாளத்தில் இப்பூசுதல் இருக்கும்.

அவ்வாறு பூசும்போது, குரு (திருத்தொண்டர்) கீழ்வரும் சொற்களைக் கூறுவார்:

அல்லது

உரோமையில் 2012 திருநீற்றுப் புதன் கொண்டாட்டம்

2012ஆம் ஆண்டு திருநீற்றுப் புதன் பெப்ருவரி 22ஆம் நாள் வருகிறது. அன்று மாலையில் உரோமை நகரில் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் வழிபாடு நிகழ்த்தினார். வழக்கம்போல, உரோமை புனித ஆன்செல்ம் கோவிலிலிருந்து பவனி தொடங்கியது. பின்னர் புனித சபீனா கோவிலில் வழிபாடு நடந்தது.

திருநீற்றுப் புதன் 
புனித சபீனா கோவில் உள் தோற்றம். உரோமை நகர். காலம்: 5ஆம் நூற்றாண்டு.

"மனிதனே, நீ மண்ணாய் இருக்கிறாய். மண்ணுக்குத் திரும்புவாய் என நினைத்துக்கொள்" என்னும் விவிலியக் கூற்றை (தொடக்க நூல் 3:19) மையமாகக் கொண்டு திருத்தந்தை மறையுரை ஆற்றினார்.

பின்னர் வழிபாட்டில் கலந்துகொண்ட கர்தினால்கள், ஆயர்கள், குருக்கள், பொதுநிலையினர் ஆகியோரின் தலைமீது திருத்தந்தை பெனடிக்ட் புனித நீறு பூசி, சிலுவை அடையாளம் வரைந்தார். அவரது தலைமீது கர்தினால் ஒருவர் அவ்வாறே நீறு பூசினார்.

குறிப்புகள்

Tags:

திருநீற்றுப் புதன் வரும் நாள்திருநீற்றுப் புதன் கொண்டாட விவிலிய அடிப்படைதிருநீற்றுப் புதன் உரோமையில் 2012 கொண்டாட்டம்திருநீற்றுப் புதன் குறிப்புகள்திருநீற்றுப் புதன்இயேசுஇயேசுவின் உயிர்த்தெழுதல்தவக் காலம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

காவிரிப்பூம்பட்டினம்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்போயர்செயங்கொண்டார்சரத்குமார்அன்னி பெசண்ட்விநாயகர் அகவல்வீரமாமுனிவர்மாதேசுவரன் மலைசூல்பை நீர்க்கட்டிஅருந்ததியர்புதுமைப்பித்தன்கூகுள்எயிட்சுகடல்சீமான் (அரசியல்வாதி)காமராசர்வளையாபதிமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுஜி. யு. போப்பெயர்ச்சொல்தமிழர் கலைகள்திராவிட முன்னேற்றக் கழகம்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்நினைவே ஒரு சங்கீதம்இந்திய ரூபாய்தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்இட்லர்கருமுட்டை வெளிப்பாடுகம்பராமாயணத்தின் அமைப்புஆசாரக்கோவைகார்த்திக் சிவகுமார்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்விடுதலை பகுதி 1திருவாசகம்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்தமிழ் இணைய மாநாடுகள்இரத்தக்கழிசல்உ. வே. சாமிநாதையர்ரஜினி முருகன்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைஇந்திய ரிசர்வ் வங்கிசுபாஷ் சந்திர போஸ்மத கஜ ராஜாவிசயகாந்துஇந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்சிறுநீரகம்கண்டம்இந்தியப் பிரதமர்இந்தியாவில் இட ஒதுக்கீடுசிவபெருமானின் பெயர் பட்டியல்பாட்டாளி மக்கள் கட்சிமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்தமிழ்நாடு சட்டப் பேரவைதமிழிசை சௌந்தரராஜன்இந்திய வரலாறுமொழிபெயர்ப்புதமிழ் இலக்கணம்சிட்டுக்குருவிஔவையார் (சங்ககாலப் புலவர்)அறுபடைவீடுகள்மாடுவசுதைவ குடும்பகம்திணையும் காலமும்சூரரைப் போற்று (திரைப்படம்)சிவம் துபேநெய்தல் (திணை)தினகரன் (இந்தியா)மஞ்சும்மல் பாய்ஸ்சேரன் (திரைப்பட இயக்குநர்)பெண்தமிழ் மாதங்கள்மாதவிடாய்தஞ்சாவூர்பறவைக் காய்ச்சல்தலைவி (திரைப்படம்)🡆 More