1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

1988 கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் என்பது அதிகாரபூர்வமாக XXIV ஒலிம்பியாட் (ஒலிம்பிக் விளையாட்டுகள்) என அழைக்கப்படுகிறது.

தென் கொரிய தலைநகர் சியோலில் செப்தெம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை இப்போட்டிகள் நடைபெற்றன. இது ஆசியாவில் நடைபெறும் இரண்டாவது கோடைகால ஒலிம்பிக் ஆகும். முதல் ஒலிம்பிக் 1964ம் ஆண்டு டோக்கியோவில் நடந்தது. இலையுதிர் காலத்தில் நடைபெறும் நான்காவது ஒலிம்பிக் இதுவாகும். இப்போட்டியில் 159 நாடுகள் பங்கு கொண்டன. அவற்றிலிருந்து மொத்தமாக 8391 போட்டியாளர்கள் (6197 ஆண்கள் 2194 பெண்கள்) பங்கெடுத்தனர். இப்போட்டியில் 263 நிகழ்வுகள் நடைபெற்றன.

வட கொரியாவும் அதன் நட்பு நாடுகளான கியுபா, எத்தியோப்பியா ஆகியவை ஆகியவை இப்போட்டியைப் புறக்கணித்தன. பல்வேறு காரணங்களால் அல்பேனியா, மடகாஸ்கர் சீசெல்சு, நிகரகுவா ஆகியவை இப்போட்டியைப் புறக்கணித்தன . இப்போட்டியில் முதல் இரு இடங்களைப் பிடித்த சோவியத் ஒன்றியத்துக்கும் கிழக்கு செருமனிக்கும் இது கடைசிப் போட்டியாக அமைந்தது.

போட்டி நடத்தும் நாடு தெரிவு

சப்பானும் தென் கொரியாவும் மட்டுமே போட்டியிட்டன. செப்தெம்பர் 30, 1981ம் ஆண்டு மேற்கு செருமனியில் நடந்த ஒலிம்பிக் ஆணையகத்தின் 84வது அமர்வில் சியோல் 1988ம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக்கை நடத்த தேர்வு பெற்றது.

1988 ஒலிம்பிக் போட்டியை நடத்த போட்டியிட்ட நகரங்களின் தேர்தல் முடிவுகள்
நகரம் நாடு சுற்று 1
சியோல் 1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  KOR 52
நகோயா 1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  JPN 27

சில குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்

1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் 
ஒலிம்பிக் தீச்சுடர் எரியும் மேடையைச் சுற்றி தென் கொரிய மக்கள் 1988 ஒலிம்பிக்
  • வரலாற்றில் முதன்முறையாக அழகுபடுத்தப்பட்ட குதிரையேற்ற ஒழுங்கில் அனைத்து நிகழ்வுகளிலும் பெண்கள் வென்றனர்.
  • 64 ஆண்டுகளுக்கு பின் டென்னிசு ஒலிம்பிக்கில் இடம் பிடித்தது. ஸ்டெப்பி கிராப் அர்ஜெண்தினாவின் கேப்ரில்லா சபாட்டினியை வென்று தங்கம் பெற்றார். அவ்வாண்டு யூ.எஸ் ஓப்பனில் இறுதி ஆட்டத்தில் சபாட்டினியை வென்றதுடன் அனைத்து பெருவெற்றித் தொடர் போட்டிகளிலும் ஸ்டெப்பி கிராப் வென்றார்.
  • மேசைப்பந்தாட்டம் ஒலிம்பிக்கில் அறிமுகப்படுத்தப்பட்டு சீனாவும் தென் கொரியாவும் தலா இரு தங்கங்களை வென்றன.
  • போதை மருந்து சோதனையில் தேறாததால் இரண்டு பல்கேரிய எடைதூக்குபவர்களின் தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியால் அந்நாடு எடைதூக்குபவர்கள் அணியை முழுவதுமாக இப்போட்டியில் இருந்து விலக்கிக்கொண்டது.
  • நியூசிலாந்தைச் சேர்ந்த நடுவர் தென்கொரிய குத்துச்சண்டை வீரரை எச்சரித்ததால் தென் கொரிய குத்துச்சண்டை அதிகாரிகளும் பாதுகாப்பு வீரர்களும் தாக்கினர்.
  • அமெரிக்க வீரருக்குப் பதிலாக தென் கொரிய வீரரை வென்றதாக நடுவர்கள் அறிவித்து தங்க பதக்கம் அளித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
  • 100 மீ விரைவுஓட்டத்தில் உலக சாதனை புரிந்த கனடாவின் சான்சன் போதை மருந்து சோதனையில் தேறாததால் அவரின் தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டது.
  • பெண்கள் பிரிவில் வில்வித்தையில் வெள்ளி வென்றதே இந்தோனேசியாவின் முதல் ஒலிம்பிக் பதக்கமாகும்.
  • பறக்க விடப்பட்ட அமைதிப் புறாக்களில் பல ஒலிம்பிக் தீச்சுடர் எரிந்த மேடையின் வெப்பத்தால் கருகி செத்தன. இதனால் 1996 ஒலிம்பிக்கில் காகித புறாக்களே பறக்கவிடப்பட்டன.
1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் 
ஒலிம்பிக்கின் நிறைவு நிகழ்ச்சியில் வாண வேடிக்கை

1988 கோடைகால ஒலிம்பிக் புறக்கணிப்பு

1988 கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் போது 1984 கோடைகால ஒலிம்பிக்கை புறக்கணித்த சோவியத் ஒன்றியமும் அதன் நட்பு நாடுகளும் இப்போட்டியையும் புறக்கணிக்குமோ என்ற அச்சம் எழுந்தது. பொதுவுடைமை நாடுகளுடன் தென் கொரியாவுக்கு தூதரக உறவு இல்லாதது இச்சிக்கலை அதிகப்படுத்தியது. அதனால் ஒலிம்பிக் போட்டியில் புறக்கணிப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு முழுவதும் பன்னாட்டு ஒலிம்பிக் ஆணையத்தின் மீது விழுந்தது. சோவியத் ஒன்றியம் இப்போட்டியில் பங்கேற்பதாக உறுதி கூறியது. 1984ம் ஆண்டு போட்டியை புறக்கணித்த கிழக்கு செருமனி இப்போட்டியில் பங்கேற்பதாக கூறியது.

கியுபாவின் பிடல் காஸ்ட்ரோ வட கொரியாவும் இப்போட்டியை இணைந்து நடத்தவேண்டும் என்றார். அதன் காரணமாக 1986 சனவரி 8, 9 ல் சுவிட்சர்லாந்தில் பன்னாட்டு ஒலிம்பிக் ஆணையகத்தின் தலைவர் வட கொரியாவின் ஒலிம்பிக் ஆணையகத்தையும் தென் கொரியாவின் ஒலிம்பிக் ஆணையகத்தையும் கொண்டு கூட்டம் கூட்டினார். வட கொரியா 23 போட்டிகளை தான் நடத்த அனுமதி கோரியது. இரண்டு கொரியாக்களும் இணைந்த ஐக்கிய அணியையும், தொடக்க, இறுதி விழாக்களை இணைந்து நடத்தவும் கோரியது. பல கூட்டங்கள் நடந்தும் இணக்கம் ஏற்படவில்லை. பன்னாட்டு ஒலிம்பிக் ஆணையகம் வட கொரியா ஐந்து போட்டிகள் நடத்தலாம் என்றும் தொடக்க அல்லது இறுதி விழாக்களை தென் கொரியா மட்டுமே நடத்தும் என்று தெரிவித்தது. அதை வட கொரியா ஏற்கவில்லை. இதனால் 1988 ஒலிம்பிக் போட்டியை தென் கொரியா மட்டுமே ஏற்று நடத்தியது.

பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் வட கொரியா 1988 ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணித்தது. அதற்கு ஆதரவாக கியுபாவும் எதியோப்பியாவும் இப்போட்டியை புறக்கணித்தன. அல்பேனியா, நிக்கராகுவா, சீசெல்சு ஆகியவையும் இப்போட்டியை புறக்கணித்தன . மடகாசுகர் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பின் வட கொரியாவுடன் இணைந்து இப்போட்டியை புறக்கணித்தது.

பதக்கப் பட்டியல்

பங்குகொண்டவைகளில் 52 நாடுகள் பதக்கம் பெற்றன'

      போட்டியை நடத்தும் நாடு
      முதன்முறையாக தங்கம் வென்ற நாடு
      முதன்முறை பதக்கம் வென்ற நாடு

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  URS 55 31 46 132
2 1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  GDR 37 35 30 102
3 1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  USA 36 31 27 94
4 1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  KOR 12 10 11 33
5 1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  FRG 11 14 15 40
6 1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  HUN 11 6 6 23
7 1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  BUL 10 12 13 35
8 1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  ROU 7 11 6 24
9 1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  FRA 6 4 6 16
10 1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  ITA 6 4 4 14
11 1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  CHN 5 11 12 28
12 1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  GBR 5 10 9 24
13 1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  KEN 5 2 2 9
14 1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  JPN 4 3 7 14
15 1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  AUS 3 6 5 14
16 1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  YUG 3 4 5 12
17 1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  TCH 3 3 2 8
18 1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  NZL 3 2 8 13
19 1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  CAN 3 2 5 10
20 1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  POL 2 5 9 16
21 1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  NOR 2 3 0 5
22 1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  NED 2 2 5 9
23 1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  DEN 2 1 1 4
24 1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  BRA 1 2 3 6
25 1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  FIN 1 1 2 4
1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  ESP 1 1 2 4
27 1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  TUR 1 1 0 2
28 1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  MAR 1 0 2 3
29 1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  AUT 1 0 0 1
1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  POR 1 0 0 1
1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  SUR 1 0 0 1
32 1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  SWE 0 4 7 11
33 1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  SUI 0 2 2 4
34 1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  JAM 0 2 0 2
35 1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  ARG 0 1 1 2
36 1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  CHI 0 1 0 1
1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  CRC 0 1 0 1
1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  INA 0 1 0 1
1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  IRI 0 1 0 1
1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  AHO 0 1 0 1
1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  PER 0 1 0 1
1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  SEN 0 1 0 1
1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  ISV 0 1 0 1
44 1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  BEL 0 0 2 2
1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  MEX 0 0 2 2
46 1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  COL 0 0 1 1
1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  DJI 0 0 1 1
1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  GRE 0 0 1 1
1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  MGL 0 0 1 1
1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  PAK 0 0 1 1
1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  PHI 0 0 1 1
1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  THA 0 0 1 1
மொத்தம் 241 234 264 739

மேற்கோள்கள்


Tags:

1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் போட்டி நடத்தும் நாடு தெரிவு1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் சில குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் 1988 கோடைகால ஒலிம்பிக் புறக்கணிப்பு1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பதக்கப் பட்டியல்1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மேற்கோள்கள்1988 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

காமராசர்திருவள்ளுவர் சிலைகரிசலாங்கண்ணிஹதீஸ்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்அருந்ததியர்சுற்றுச்சூழல்பாலை (திணை)காடுவெட்டி குருஇந்தியாவில் இட ஒதுக்கீடுநாட்டுப்புறக் கலைஇசுரயேலர்யூத்தமிழ் நீதி நூல்கள்பெ. சுந்தரம் பிள்ளைஇமாச்சலப் பிரதேசம்ராம் சரண்யாப்பகூவாமக்களவை (இந்தியா)செவ்வாய் (கோள்)அரிப்புத் தோலழற்சிவிலங்குமகாபாரதம்ஆழ்வார்கள்காதலும் கடந்து போகும்தமிழ்ப் புத்தாண்டுமருதம் (திணை)கர்ணன் (மகாபாரதம்)பாரிஈரோடு மாவட்டம்வரிஇராசேந்திர சோழன்மலேரியாவெள்ளி (கோள்)அண்ணாமலையார் கோயில்மனித எலும்புகளின் பட்டியல்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்சிறுபஞ்சமூலம்நுரையீரல் அழற்சிநிணநீர்க்கணுஆதி திராவிடர்சீறாப் புராணம்இந்திய நாடாளுமன்றம்உலகமயமாதல்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்கருப்பு நிலாகடையெழு வள்ளல்கள்மு. க. ஸ்டாலின்ஔவையார் (சங்ககாலப் புலவர்)திருக்குர்ஆன்முதுமொழிக்காஞ்சி (நூல்)இந்திய செயற்கைக்கோள்களின் பட்டியல்ஈழை நோய்நீர் மாசுபாடுஇந்திய தண்டனைச் சட்டம்அக்கி அம்மைபோதைப்பொருள்பித்தப்பைஉயர் இரத்த அழுத்தம்இரைப்பை அழற்சிமீன் சந்தைமனித நேயம்இரண்டாம் உலகப் போர்அகநானூறுஅகழ்ப்போர்சென்னை சூப்பர் கிங்ஸ்இயேசுஹரிஹரன் (பாடகர்)சின்னம்மைஏறுதழுவல்தமிழர் கலைகள்அகத்தியர்கபிலர் (சங்ககாலம்)சமுதாய சேவை பதிவேடுஇரவுக்கு ஆயிரம் கண்கள்பூப்புனித நீராட்டு விழாதிருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்கற்பித்தல் முறை🡆 More