கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு (அல்லது பொதுவாக வட கொரியா) கிழக்கு ஆசியாவில் உள்ள கொரியத் தீபகற்பத்தின் வட பகுதியில் அமைந்த ஒரு நாடாகும்.
இதன் மிகப்பெரிய நகரம் மற்றும் தலைநகரம் பியொங்யாங் ஆகும். இதன் வடக்கில் சீனாவும் ரஷ்யாவும் அமைந்துள்ளன. தெற்கே தென் கொரியா அமைந்துள்ளது. 1948 இல் கொரியா நாட்டில் இருந்து பிரிந்து இந்நாடு உருவானது. இரண்டாம் உலகப் போரின் பின் 1945, ஆகஸ்டு 15 இல் ஜப்பான் நாட்டிடம் இருந்து இது சுதந்திரம் பெற்றது. எனினும் இன்னமும் இவ்விரு நாடுகளுக்கிடையே எல்லைப் பிரச்னை நிலவுகிறது. 1.21 மில்லியன் வீரர்களுடன் சீனா, அமெரிக்கா , மற்றும் இந்தியா விற்கு அடுத்து உலகில் 4 ஆவது பெரிய இராணுவத்தைக் கொண்டுள்ளது.இது ஒரு அணு ஆயுத நாடாகவும் மற்றும் விண்வெளி ஆய்விலும் முழுக் கவனம் செலுத்தி வருகிறது.
கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு 조선민주주의인민공화국 朝鮮民主主義人民共和國 ஜோஸன் மின்ஜுஜுயி இன்மின் கொங்ஹாகுக் Chosŏn Minjujuŭi Inmin Konghwaguka | |
---|---|
குறிக்கோள்: 강성대국 (強盛大國) (சக்தி வாய்ந்த வளமிக்க நாடு) | |
நாட்டுப்பண்: Aegukka | |
தலைநகரம் | பியொங்யாங் |
பெரிய நகர் | பியோங்யாங் |
ஆட்சி மொழி(கள்) | கொரிய மொழி |
அரசாங்கம் | கம்யூனிசம்b |
• ஜனாதிபதி | கிம் இல்-சுங் (காலமானார்)c |
• வடகொரிய தேசிய பாதுகாப்பு கமிஷன் தலைவர் | கிம் ஜொங்-இல்(காலமானார்)d |
• சுப்ரீம் மக்கள் அசெம்பிளி தலைவர் | Choe Ryong-hae |
• பிரதமர் | கிம் யொங்-இல் |
நிறுவுதல் | |
• விடுதலை அறிவிப்பு | மார்ச் 1 1919h |
• விடுதலை | ஆகஸ்ட் 15 1945 |
• விடுதலை அறிவிப்பு | செப்டம்பர் 9 1948 |
பரப்பு | |
• மொத்தம் | 120,540 km2 (46,540 sq mi) (98வது) |
• நீர் (%) | 4.87 |
மக்கள் தொகை | |
• 2006 மதிப்பிடு | 23,113,019f (48வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2006 g மதிப்பீடு |
• மொத்தம் | $22.85 பில்லியன் (85வது) |
• தலைவிகிதம் | $1,007 (149வது) |
நாணயம் | வொன் (₩) (KPW) |
நேர வலயம் | ஒ.அ.நே+8:30 (கொரிய நேரம்) |
• கோடை (ப.சே.நே.) | ஒ.அ.நே+8:30 |
அழைப்புக்குறி | 850 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | KP |
இணையக் குறி | எதுவுமில்லை (.kp பதிவு செய்யப்பட்டுள்ளது) |
a "நிர்வாக அலகுகளும் மக்கள் தொகையும் (#26)" (PDF). DPRK: The Land of the Morning Calm. Permanent Committee on Geographical Names for British Official Use. 2003-04. Archived from the original (PDF) on 2006-09-25. பார்க்கப்பட்ட நாள் 2006-10-10. bCIA உலகத் தரவுகள் நூல் (2007) uses the term "தனி மனித கம்யூனிச சர்வாதிகாரம்." ஜூஷ் (Juche) கொள்கை அரசியலமைப்பில் தரப்பட்டுள்ளது. cஇறப்பு: 1994. d கிம் ஜொங்-இல் நாட்டின் பிரதான தலைவராக இருக்கிறார். e கிம் யொங்-நாம் வெளிநாட்டலுவல்கள் தலைவர். f உசாத்துணை: CIA உலக தரவு நூல், வட கொரியா தனது தரவுகளை வெளியிடுவதில்லை. g உசாத்துணை: ஐக்கிய இராச்சியம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு |
இரண்டு கொரியாக்களுக்கும் பொதுவான சமயமாக பௌத்தம் நிலவுகிறது. அத்துடன் கன்பூசியம், கிறிஸ்தவம் போன்றனவும் கடைப்பிடிக்கப்படுகின்றன. 64.3 விழுக்காட்டினர் மதமற்றவர்களாகவும் 16 விழுக்காட்டினர் கொரிய சாமனிசம் என்ற சமயத்தையும் 13.5 விழுக்காட்டினர் சோண்டோயிசம் என்ற சமயத்தையும் 4.5 விழுக்காட்டினர் புத்த மதத்தையும் 1.7 விழுக்காட்டினர் கிறித்தவ சமயத்தையும் பின்பற்றுகிறார்கள். மத உரிமைகள் மதச் சடங்குகள் செய்யும் உரிமைகள் உள்ளன இருப்பினும் வட கொரிய அரசு மதத்தை ஊக்குவிப்பதில்லை. வட கொரிய அரசு ஒரு நாத்திக அரசாக உள்ளது. வட கொரியாவில் மத தண்டனைகள் உள்ளது என ஆம்னெஸ்டி இண்டர்நேசனல் கூறியது.
கொரிய மொழி வட கொரியா, தென் கொரியா இரண்டுக்கும் பொதுவாக உள்ளது. ஆனாலும் இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஒலிப்பு முறையில் சிறு வேறுபாடுகள் காணப்படுகின்றன.
வட கொரியா ஒன்பது மாகாணங்களையும் மூன்று சிறப்புப் பிரிவுகளையும் கொண்டுள்ளது.
நேரடி ஆட்சியின் கீழுள்ள நகரங்கள்
This article uses material from the Wikipedia தமிழ் article வட கொரியா, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.