பெப்ரவரி 29: நாள்

பெப்ரவரி 29 (February 29) அல்லது லீப் நாள் (leap day) என்பது கிரிகோரியன் ஆண்டில் நெட்டாண்டு ஒன்றின் 60 ஆவது நாளாகும்.

<< பெப்ரவரி 2024 >>
ஞா தி செ பு வி வெ
1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29
MMXXIV

ஆண்டு முடிவிற்கு மேலும் 306 நாட்கள் உள்ளன. இந்த நாள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை 4 ஆல் வகுபடும் 2016, 2020, 2024 போன்ற ஆண்டுகளில் மட்டுமே வருகிறது. கிரெகொரியின் நாட்காட்டி உட்பட சூரியனைச் சுற்றிவரும் புவியின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட பெரும்பாலான சூரிய நாட்காட்டிகளில் லீப் நாள் உள்ளது. சந்திரனின் பிறைகளை அடிப்படையாகக் கொண்ட சூரியசந்திர நாட்காட்டிகளில் லீப் அல்லது இடைச்செருகப்பட்ட மாதம் சேர்க்கப்படுகிறது.

லீப் நாளைக் கொண்டிருக்கும் ஆண்டு நெட்டாண்டு என அழைக்கப்படுகிறது. கிரெகொரியின் நாட்காட்டியில், 100 ஆல் வகுபடும் ஆண்டுகள் லீப் நாளைக் கொண்டிருப்பதில்லை. ஆனால் 400 ஆல் வகுபடும் ஆண்டுகளில் லீப் நாள் வருகிறது. 1700, 1800, 1900, 2100 போன்றவை நெட்டாண்டுகள் அல்ல, அவை சாதாரண ஆண்டுகள் ஆகும். ஆனால், 1600, 2000, 2400 ஆகியன நெட்டாண்டுகள் ஆகும். சீன நாட்காட்டியில் பெப்ரவரி 29 ஆம் நாள் குரங்கு, டிராகன், எலி ஆகிய ஆண்டுகளில் மட்டுமே வருகிறது.

பூமி சூரியனை முழுமையாகச் சுற்றிவருவதற்கு 365 நாட்களும் மேலதிகமாகக் கிட்டத்தட்ட 6 மணித்தியாலங்கள் அதிகமாக எடுப்பதால் லீப் நாள் சேர்க்கப்படுகிறது. மேலதிகமான இந்த 24 மணித்தியாலங்கள் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை சேர்க்கப்பட்டு, மேலதிக ஒரு முழுமையான நாள் சூரியனின் தோற்றநிலைக்கு ஏதுவாக நாட்காட்டிகளில் சேர்க்கப்படுகிறது. 16-ஆம் நூற்றாண்டு வரை பயன்பாட்டில் இருந்த யூலியன் நாட்காட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த லீப் நாளைச் சேர்த்து வந்தது; ஆனால் இந்த முறையில் அளவுக்கு அதிகமான (கிட்டத்தட்ட 400 ஆன்டுகளுக்கு ஒரு முறை 3 நாட்கள் என) நாட்கள் கூட்டப்பட்டு வந்தன. எனினும், சூரிய ஆண்டு உண்மையில் 365 நாட்கள் 6 மணித்தியாலங்களை விட சிறிது குறைவாகும். குறிப்பாக, அல்போன்சிய அட்டவணையின் படி, பூமி சூரியனை முழுமையாகச் சுற்றி வர 365 நாட்கள், 5 மணித்தியாலங்கள், 49 நிமிடங்கள், 16 செக்கன்கள் (365.2425 நாட்கள்) எடுக்கிறது. இதனால், ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் ஒரு முறை ஒரு மேலதிக நாளை சேர்ப்பதால் நாட்காட்டியில் 43 நிமிடங்கள் 12 செக்கன்கள் மேலதிகமாக சேர்க்கப்படுகின்றன. இது 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை 3 நாட்களாகும். இந்தக் குறைபாட்டை சமப்படுத்த, ஒவ்வொரு 400 ஆண்டுகளுக்கும் மூன்று லீப் நாட்கள் கைவிடப்பட வேண்டும். பொது விதிக்கு விதிவிலக்காக கிரெகொரியின் நாட்காட்டி குறிப்பிட்ட திருத்தங்களைக் கொண்டு வந்தது. இதன் படி, 100 ஆல் வகுக்கப்படும் ஒரு ஆண்டு நெட்டாண்டாக இராது. ஆனால் அந்த ஆண்டு 400 ஆல் வகுக்கப்பட்டால் அந்த ஆண்டு நெட்டாண்டாக இருக்கும். அதாவது, 1600, 2000, 2400, 2800 ஆகியவை நெட்டாண்டுகளாக இருக்கும். அதே வேளையில் நானூறால் வகுக்கப்படாத ஆனால் நூறால் வகுக்கப்படும் 1700, 1800, 1900, 2100, 2200, 2300 போன்றவை நெட்டாண்டுகளாக இராது.

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

அரிதான லீப் நாள் மைல்கற்கள்

உலகின் குறிப்பிடத்தக்க நபர்களில் தாஸ்மானியா முதலமைச்சர் ஜேம்ஸ் வில்சன் (1812-1880) என்பவரே பெப்ரவரி 29 இல் பிறந்து அதே நாளில் இறந்தார்.

சிறப்பு நாள்

  • அரிய நோய் நாள் (நெட்டாண்டுகளில்; சாதாரண ஆண்டுகளில் பெப்ரவரி 28 இல்)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

பெப்ரவரி 29: நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பெப்ரவரி 29
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

பெப்ரவரி 29 நிகழ்வுகள்பெப்ரவரி 29 பிறப்புகள்பெப்ரவரி 29 இறப்புகள்பெப்ரவரி 29 அரிதான லீப் நாள் மைல்கற்கள்பெப்ரவரி 29 சிறப்பு நாள்பெப்ரவரி 29 மேற்கோள்கள்பெப்ரவரி 29 வெளி இணைப்புகள்பெப்ரவரி 29201620202024கிரிகோரியன் ஆண்டுகிரெகொரியின் நாட்காட்டிசூரிய நாட்காட்டிசூரியசந்திர நாட்காட்டிஞாயிறு (விண்மீன்)நிலவின் கலைநெட்டாண்டுவகுஎண்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அயோத்தி இராமர் கோயில்செயற்கை நுண்ணறிவுஆகு பெயர்திருமலை நாயக்கர்நல்லெண்ணெய்மகாபாரதம்பாலின விகிதம்கா. ந. அண்ணாதுரைசாகித்திய அகாதமி விருதுமுத்தரையர்இன்குலாப்நரேந்திர மோதிகேழ்வரகுபுதன் (கோள்)ரத்னம் (திரைப்படம்)முத்துலட்சுமி ரெட்டிபரிதிமாற் கலைஞர்மதராசபட்டினம் (திரைப்படம்)தமிழ்நாடு சட்டப் பேரவைசாத்துகுடிபெருஞ்சீரகம்முகம்மது நபிமட்பாண்டம்கட்டுவிரியன்திருவாசகம்பஞ்சபூதத் தலங்கள்ஜெயகாந்தன்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்மாசிபத்திரிஉரைநடைசமுத்திரக்கனிதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்வடிவேலு (நடிகர்)மருதமலைஇராமானுசர்நயினார் நாகேந்திரன்பறையர்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்மரகத நாணயம் (திரைப்படம்)விஜய் வர்மாசைவ சமயம்இந்திய ரிசர்வ் வங்கிஆதிமந்திபீனிக்ஸ் (பறவை)இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுகாதலுக்கு மரியாதை (திரைப்படம்)பத்து தலசீரடி சாயி பாபாஇமயமலைநம்மாழ்வார் (ஆழ்வார்)தொலைக்காட்சிமுல்லை (திணை)நற்கருணைசேக்கிழார்மலேரியாநாட்டு நலப்பணித் திட்டம்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)வெற்றிக் கொடி கட்டுநீர்பூரான்அடல் ஓய்வூதியத் திட்டம்அரவான்தமிழக மக்களவைத் தொகுதிகள்வினோஜ் பி. செல்வம்இடைச்சொல்சட் யிபிடிகங்கைகொண்ட சோழபுரம்விஸ்வகர்மா (சாதி)ஔவையார் (சங்ககாலப் புலவர்)வணிகம்ருதுராஜ் கெயிக்வாட்கூகுள்ரச்சித்தா மகாலட்சுமிமண்ணீரல்காடுவெட்டி குருஇந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்மழைஆண் தமிழ்ப் பெயர்கள்🡆 More