அமெரிக்க ஐக்கிய நாடுகள்

அமெரிக்க ஐக்கிய நாடுகள் (United States of America/USA/US) அல்லது அமெரிக்கா (America) என்பது வட அமெரிக்கக் கண்டத்தில் முதன்மையாக அமைந்துள்ள ஒரு நாடு ஆகும்.

இது 50 மாநிலங்களையும், ஒரு கூட்டமைப்பு மாவட்டத்தையும், ஐந்து முதன்மையான ஒன்றிணைக்கப்படாத நிலப்பரப்புகளையும், ஒன்பது சிறிய, வெளிப்புறத் தீவுகளையும் உள்ளடக்கியுள்ளது. தொல்குடி அமெரிக்கர்களுக்காக ஒதுக்கப்பட்ட 326 பகுதிகளையும் இது உள்ளடக்கியுள்ளது. நிலப்பரப்பளவு மற்றும் மொத்தப் பரப்பளவு ஆகிய இரு அளவுகளின் அடிப்படையிலும் அமெரிக்காவானது உலகின் மூன்றாவது மிகப்பெரிய நாடாகத் திகழ்கிறது. இது வடக்கே கனடாவுடனும், தெற்கே மெக்சிகோவுடனும் நில எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது. பகாமாசு, கியூபா, உருசியா, மற்றும் பிற நாடுகளுடன் கடல் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. 33.3 கோடிக்கும் மேற்பட்ட மக்களையுடைய இந்நாடு அமெரிக்காக்களில் அதிக மக்கள் தொகையுடைய நாடாகவும், உலகின் மூன்றாவது அதிக மக்கள் தொகையுடைய நாடாகவும் திகழ்கிறது. அமெரிக்காவின் தலைநகரம் வாசிங்டன், டி. சி. ஆகும். இதன் அதிக மக்கள் தொகையுடைய நகரம் மற்றும் முதன்மையான நிதி மையமாக நியூயார்க்கு நகரம் திகழ்கிறது.

அமெரிக்க ஐக்கிய நாடுகள்
United States of America
 
கொடி
 
சின்னம்
குறிக்கோள்: 
ஏனைய பாரம்பரிய குறிக்கோள்கள்:
  • "E pluribus unum" (இலத்தீன்)
    "பலவற்றில் ஒன்று"
  • "Annuit cœptis" (இலத்தீன்)
    "திருவுளச்செயல் எங்கள் முயற்சிகளுக்கு சாதகமாக உள்ளது"
  • "Novus ordo seclorum" (இலத்தீன்)
    "காலத்தின் புதிய வரிசை"
நாட்டுப்பண்: "விண்மீன் மின்னும் பதாகை"
Orthographic map of the U.S. in North America
World map showing the U.S. and its territories
தலைநகரம்வாசிங்டன், டி. சி.
38°53′N 77°01′W / 38.883°N 77.017°W / 38.883; -77.017
பெரிய நகர்நியூயார்க்கு நகரம்
40°43′N 74°00′W / 40.717°N 74.000°W / 40.717; -74.000
தேசிய மொழிஆங்கிலம் (நடைமுறைப்படி)
இனக் குழுகள்
(2020)
இன வாரியாக:
இசுபானிய அல்லது இலத்தீன் தோற்றம்:
  • 81.3% இசுப்பானிய அல்லது இலத்தீன் அல்லாதோர்
  • 18.7% இசுப்பானிய அல்லது இலத்தீன்
சமயம்
(2021)
  • 29% சமயமற்றோர்
  • 6% ஏனையோர்
  • 2% பதிலளிக்கவில்லை
மக்கள்அமெரிக்கர்
அரசாங்கம்கூட்டாட்சி அரசுத்தலைவர் அரசமைப்புக் குடியரசு
ஜோ பைடன்
கமலா ஆரிசு
• அவைத் தலைவர்
கெவின் மெக்கார்த்தி
• பிரதம நீதியரசர்
யோன் ரொபர்ட்சு
சட்டமன்றம்பேரவை
மூதவை
பிரதிநிதிகள் அவை
விடுதலை 
சூலை 4, 1776 (1776-07-04)
• கூட்டிணைப்பு
மார்ச்சு 1, 1781 (1781-03-01)
செப்டம்பர் 3, 1783 (1783-09-03)
சூன் 21, 1788 (1788-06-21)
பரப்பு
• மொத்தப் பரப்பளவு
3,796,742 sq mi (9,833,520 km2) (3-ஆவது)
• நீர் (%)
4.66 (2015)
• நிலப்பரப்பு
3,531,905 sq mi (9,147,590 km2) (3rd)
மக்கள் தொகை
• 2022 மதிப்பிடு
Neutral increase 333,287,557
• 2020 கணக்கெடுப்பு
331,449,281 (3rd)
• அடர்த்தி
87/sq mi (33.6/km2) (185-ஆவது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2022 மதிப்பீடு
• மொத்தம்
அமெரிக்க ஐக்கிய நாடுகள் $25.035 திரிலியன் (2-ஆவது)
• தலைவிகிதம்
அமெரிக்க ஐக்கிய நாடுகள் $75,180 (8-ஆவது)
மொ.உ.உ. (பெயரளவு)2022 மதிப்பீடு
• மொத்தம்
அமெரிக்க ஐக்கிய நாடுகள் $25.035 trillion (1-ஆவது)
• தலைவிகிதம்
அமெரிக்க ஐக்கிய நாடுகள் $75,180 (7-ஆவது)
ஜினி (2020)negative increase 39.4
மத்திமம்
மமேசு (2021)அமெரிக்க ஐக்கிய நாடுகள் 0.921
அதியுயர் · 21st
நாணயம்U.S. dollar ($) (USD)
நேர வலயம்ஒ.அ.நே−4 to −12, +10, +11
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே−4 to −10
திகதி அமைப்புmm/dd/yyyy
வாகனம் செலுத்தல்right
அழைப்புக்குறி+1
ஐ.எசு.ஓ 3166 குறியீடுUS
இணையக் குறி.us

வாழ்விட வரலாறு

அமெரிக்க முதற்குடிமக்கள் அமெரிக்காக்களை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்விடமாகக் கொண்டிருந்துள்ளனர். 1607இல் தொடங்கி பிரித்தானியக் காலனியமயமாக்கமானது 13 குடியேற்றங்கள் நிறுவப்படுவதற்கு இட்டுச் சென்றது. இவை தற்போதைய கிழக்கு அமெரிக்காவில் நிறுவப்பட்டன. பிரித்தானிய அரச குடும்பத்துடன் வரி மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவற்றின் காரணமாக இவர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டது. இது அமெரிக்கப் புரட்சிக்கு வழி வகுத்தது. இறுதியாக அமெரிக்கப் புரட்சிப் போரில் முடிவடைந்தது. சூலை 4, 1776 அன்று அமெரிக்கா விடுதலையை அறிவித்தது. இயல்புரிமை, ஆளப்படுபவர்களின் விருப்பம் மற்றும் குடியரசுவாதம் ஆகிய மறுமலர்ச்சி காலக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு தோற்றுவிக்கப்பட்ட முதல் தேசிய அரசாக உருவானது. வட அமெரிக்கா முழுவதும் விரிவடையத் தொடங்கியது. 1848 வாக்கில் கண்டம் முழுவதும் பரவியிருந்தது. அடிமைத்தனம் மீதான வேறுபட்ட கொள்கைகள் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு பிரிந்து செல்வதற்கு வழி வகுத்தன. அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பானது எஞ்சியிருந்த ஒன்றிய மாநிலங்களுடன் அமெரிக்கா உள்நாட்டுப் போரில் (1861-1865) சண்டையிட்டது. ஒன்றியத்தின் வெற்றி மற்றும் பாதுகாப்பாக வைத்திருந்த தன்மை ஆகியவற்றின் காரணமாக தேசிய அளவில் அடிமைத் தனமானது ஒழிக்கப்பட்டது. 1900 வாக்கில் அமெரிக்கா தன்னைத் தானே ஓர் உலக வல்லமையாக நிறுவிக் கொண்டது. உலகின் மிகப்பெரிய பொருளாதாரமானது. திசம்பர் 1941இல் முத்துத் துறைமுகம் மீதான சப்பானின் தாக்குதலைத் தொடர்ந்து நேச நாடுகளின் பக்கம் இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா நுழைந்தது. போருக்குப் பிந்தைய விளைவுகள் ஐக்கிய அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் ஆகிய இரு நாடுகளை உலகின் இரு வல்லரசுகளாக்கின. இது பனிப் போருக்கு இட்டுச் சென்றது. கொள்கை ஆதிக்கம் மற்றும் சர்வதேச செல்வாக்கிற்காக ஒரு போராட்டத்தில் இரு நாடுகளும் ஈடுபட்டதே பனிப்போர் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் நேரடி இராணுவச் சண்டையை இவ்விரு நாடுகளும் தவிர்த்தன. விண்வெளிப் போட்டியின் போது நிலவில் முதல் மனிதர்களை இறக்கிய நாடாக அமெரிக்கா உருவானது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி மற்றும் பனிப் போரின் முடிவு ஆகியவற்றைத் தொடர்ந்து அமெரிக்கா உலகின் ஒரே வல்லரசானது.

அரசும், குடிகளும்

ஐக்கிய அமெரிக்க அரசாங்கமானது தலைவர் ஆளும் அரசு முறைமையை உடைய ஓர் அரசியலமைப்பைக் கொண்ட ஒரு கூட்டமைப்புக் குடியரசு மற்றும் தாராண்மை மக்களாட்சியாகும். அரசாங்கமானது மூன்று வெவ்வேறு பிரிவுகளைக் கொண்டுள்ளது: அவை செயல்துறை, பேரவை மற்றும் நீதித்துறை ஆகியவையாகும். மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்ட ஒரு கீழவையான சார்பாளர்கள் அவை மற்றும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் சமமான பிரதிநிதித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு மேலவையான மூப்பவை ஆகியவற்றைக் கொண்ட ஈரவை முறைமையை உடைய தேசியச் சட்டமன்றத்தை இது கொண்டுள்ளது. பல கொள்கைப் பிரச்சனைகள் மாநில அளவிலோ அல்லது உள்ளூர் அளவிலோ பரவலாக்கம் செய்யப்பட்டுள்ளன. சட்ட வரம்பு எல்லைகளின் படி பரவலாக வேறுபட்ட சட்டங்களை இவை கொண்டுள்ளன. வாழ்க்கைத் தரம், வருமானம் மற்றும் செல்வச் செழிப்பு, உற்பத்தித் திறன், பொருளாதார போட்டித் திறன், மனித உரிமைகள், கண்டுபிடிப்புகள் மற்றும் கல்வி ஆகியவற்றின் சர்வதேச அளவீடுகளில் அமெரிக்காவானது உயர்ந்த தர வரிசையைப் பெறுகிறது.

பொருளாதாரமும், உலக அணுகுமுறையும்

வளர்ந்த நாடான அமெரிக்கா உலகின் எந்த ஒரு நாட்டையும் விட அதிக செல்வத்தைக் கொண்டுள்ளது. உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கால் பங்குக்கும் மேலான அளவை அமெரிக்கப் பொருளாதாரமானது கொண்டுள்ளது. உற்பத்தி அடிப்படையில் உலகின் மிகப் பெரிய பொருளாதாரம் இதுவாகும். உலகின் மிகப்பெரிய இறக்குமதி நாடாகவும், இரண்டாவது பெரிய ஏற்றுமதி நாடாகவும் அமெரிக்கா திகழ்கிறது. ஐக்கிய நாடுகள் அவை, உலக வங்கி, அனைத்துலக நாணய நிதியம், அமெரிக்க நாடுகள் அமைப்பு, வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றை உறுப்பினராகத் தோற்றுவித்த நாடாக உள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பினராகவும், ஓர் அங்கீகரிக்கப்பட்ட அணு ஆயுத நாடாகவும் உள்ளது. உலகின் முதன்மையான அரசியல், பண்பாட்டு, பொருளாதார, இராணுவ மற்றும் அறிவியல் சக்தியாகக் குறிப்பிடத்தக்க அளவுக்கு உலக செல்வாக்கைக் கொண்டுள்ளது.

பெயர் வரலாறு

அமெரிக்க ஐக்கிய நாடுகள் 
இத்தாலிய ஆய்வுப் பயணியான அமெரிகோ வெசுபுச்சியின் பெயரையொட்டி அமெரிக்காக்கள் பெயரிடப்பட்டுள்ளன.

1507 ஆம் ஆண்டில், செருமனியின் வரைபட நிபுணரான மார்டின் வாட்சுமுல்லர் தான் தயாரித்த உலக வரைபடத்தில், மேற்கத்திய அரைக்கோள நிலப்பகுதிக்கு, இத்தாலிய ஆய்வுப் பயணியும் வரைபட நிபுணருமான அமெரிகோ வெசுபுச்சியின் பெயரில் அமெரிக்கா எனப் பெயரிட்டார். முன்னர் பிரித்தானிய குடியேற்ற நாடாக இருந்தவை, நாட்டின் புதிய பெயரை சுதந்திரப் பிரகடனத்தில் முதன்முறையாகப் பயன்படுத்தின. சூலை 4, 1776 அன்று "ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பிரதிநிதிகள்" கைக்கொண்ட "பதின்மூன்று அமெரிக்க ஐக்கிய அரசாங்கங்களின் கருத்தொருமித்த பிரகடனமாக" இது அமைந்தது. தற்போதைய பெயரை நவம்பர் 15, 1777 அன்று இறுதியாக ஏற்றுக்கொண்டது. இரண்டாம் கண்டப் பேரவையில் நிறைவேறிய கூட்டமைப்பு விதிகளில் பின்வருமாறு கூறப்படுகிறது, "இந்த கூட்டமைப்புப் பகுதி இனி 'யுனைடெட் சுடேட்சு ஆஃப் அமெரிக்கா' என இருக்கும்".யுனைடெட் சுடேட்சு என்னும் சுருக்க வடிவமும் ஏற்றுக்கொள்ளப்படும். யு.எசு., யு.எசு.ஏ, அமெரிக்கா ஆகியவை பிற பொது வடிவங்களில் அடக்கம். அமெரிக்க யுனைடெட் சுடேட்சு, தி சுடேட்சு ஆகியவையும் வழக்குப் பெயர்களில் அடக்கம். ஒரு சமயத்தில் அமெரிக்காவிற்கு பிரபல பெயராக இருந்த கொலம்பியா என்பது கிறித்தோபர் கொலம்பசிடம் இருந்து வரப்பெற்றதாகும். இது "வாசிங்டன், டி. சி." என்னும் பெயரில் தோன்றுகிறது.

அமெரிக்க ஐக்கிய நாட்டுக் குடிமகனைப் பொதுவாக அமெரிக்கர் என்று அழைக்கலாம். ஐக்கிய மாநிலங்கள் என்பது அலுவலக அடைமொழியாக இருந்தாலும் கூட, அமெரிக்கா மற்றும் யு.எசு. ஆகியவை தான் இந்நாட்டிற்குப் பெரும்பாலும் பயன்படுத்தும் பொதுவான அடைமொழிகளாக இருக்கின்றன.

ஆரம்பத்தில் "யுனைடெட் சுடேட்சு" (United States) என்கிற பதம், பன்மையில் பயன்பட்டது. பின் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த சமயத்தில், அதனை ஒருமையாகக் கருதுவது பழக்கத்தில் வந்தது. இப்போது ஒருமை வடிவம் தான் இயல்பானதாக இருக்கிறது, பன்மை வடிவம் "இந்த ஐக்கிய மாநிலங்கள்" என்னும் முதுமொழிகளில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது.

வட அமெரிக்கா, மற்றும் தென் அமெரிக்காக் கண்டத்தில் பலநாடுகள் இருந்தபோதும் அமெரிக்கர் என்ற சொல், பெரும்பாலான சமயங்களில் அமெரிக்க ஐக்கிய நாட்டுடன் தொடர்புள்ள தலைப்புக்களுக்கே பயன்படுத்தப்படுகின்றது.

புவியியல்

அமெரிக்க ஐக்கிய நாடுகள் 
தொடர்ச்சியான அமெரிக்காவின் புவியமைப்பை காட்டும் செயற்கைக்கோள் புகைப்படம்

ஐக்கிய மாநிலங்களின் மொத்த நிலப்பரப்பு சுமார் 1.9 பில்லியன் ஏக்கர்களாகும். தொடர்ச்சியான மாநிலங்களிலிருந்து கனடாவால் பிரிந்திருக்கும் அலாசுகா அமெரிக்காவின் மிகப் பெரிய மாநிலமாகும், இதன் நிலப்பரப்பு 365 மில்லியன் ஏக்கர்கள். வட அமெரிக்காவின் தென்மேற்கில் மத்திய பசிபிக்கில் ஒரு தீவுக் கூட்டமாகவுள்ள அவாய் 4 மில்லியன் ஏக்கர்களுக்கு சற்று அதிகமான பரப்பைக் கொண்டுள்ளது. உருசியா மற்றும் கனடாவிற்கு பிறகு, மொத்த நிலப்பரப்பில் அமெரிக்கா சீனாவை விட சற்று மேலே அல்லது கீழே என உலகின் மூன்றாவது அல்லது நான்காவது பெரிய நாடாக உள்ளது. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எல்லைச்சிக்கல் பகுதிகள் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதுடன் அமெரிக்காவின் மொத்த பரப்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை பொறுத்து இவை வேறுபடுகின்றன: சி.ஐ.ஏ. வேர்ல்டு ஃபேக்ட்புக் குறிப்பிடுவது 3,794,083 sq mi (9,826,630 km2), ஐநா புள்ளிவிவரப் பிரிவு குறிப்பிடுவது 3,717,813 sq mi (9,629,091 km2) அதே போல் என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா குறிப்பிடுவது 3,676,486 sq mi (9,522,055 km2). நிலப் பரப்பை மட்டும் அடக்கி பார்த்தால், அமெரிக்கா உருசியா, சீனாவுக்கு அடுத்ததாக கனடாவுக்கு சற்று மேலே மூன்றாவது இடத்தில் உள்ளது.

அமெரிக்க ஐக்கிய நாடுகள் 
டெடான் ரேஞ்ச், ராக்கி மலைத்தொடரின் பகுதி

அட்லாண்டிக் கடலோர சமவெளி உள்ளமைந்த பகுதிகளில் இலையுதிர் காடுகள் மற்றும் பீட்மோன்ட்டின் தொடர்ச்சி குன்றுகளுக்கும் வழிவிடுகிறது. அமெரிக்கப் பேரேரிகள் மற்றும் நடுமேற்கு புல்வெளிப் பகுதிகளை கிழக்கு கடல்படுகையிலிருந்து அபலாசியன் குன்றுகள் பிரிக்கின்றன. உலகின் நான்காவது நீளமான நதியான மிசிசிபி-மிசோரி ஆறுகள், முக்கியமாக வடக்கிலிருந்து-தெற்காக நாட்டின் மையப் பகுதி வழியே பாய்கிறது. பெரும் சமவெளிகளின் தட்டையான, பசும் புல்வெளி மேற்குப் பகுதி வரை நீள்கிறது, தென்கிழக்கில் உயர்ந்த மேட்டுப் பகுதி இதனை குறுக்கிடுகிறது. பெரும் சமவெளிகளின் மேற்கு விளிம்பில், ராக்கி மலைகள் வடக்கில் இருந்து தெற்காக நாடெங்கிலும் நீள்கிறது, கொலராடோவில் 14,000 அடிக்கும் (4,300 மீ) அதிகமான உயரங்களை இது எட்டுகிறது. இன்னும் மேற்கில் ராக்கி கிரேட் பேசின், மோகாவே ஆகியவை உள்ளன. சியரா நெவெடாவும் கேஸ்கேடு சிகரங்களும் பசிபிக் கடலோர பகுதியை ஒட்டி செல்கின்றன. 20,320 அடி (6,194 மீ) உயரத்தில், அலாசுகாவின் மெக்கென்லி சிகரம் இந்நாட்டின் மிக உயர்ந்த சிகரம் ஆகும். கொதிக்கும் எரிமலைகள் அலாசுகாவின் அலெக்சாண்டரிலும் அலெசியன் தீவுகள் முழுமையிலும் இருக்கின்றன, ஹவாயிலும் எரிமலை தீவுகள் உள்ளன. ராக்கி மலைப்பகுதியில் யெல்லோசுடோன் தேசியப் பூங்காவின் கீழ் அமைந்திருக்கும் இராட்சத எரிமலைகள் இந்த கண்டத்தின் மிகப்பெரும் எரிமலையாகும்.

அமெரிக்க ஐக்கிய நாடுகள் 
வழுக்கைக் கழுகு, 1782 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் தேசியப் பறவையாகும்.

தனது பெரும் பரப்பின் பூகோள பன்முகத் தன்மை காரணமாக, அமெரிக்கா பல்வேறு காலநிலைகளை உள்ளடக்கி கொண்டுள்ளது. 100வது தீர்க்கரேகைக்கு கிழக்கே, காலநிலையானது வடக்கில் ஈரப்பதம் மிகுந்த கரைநிலப்பகுதி நிலையில் தொடங்கி தெற்கில் ஈரப்பதம் மிகுந்த துணை-வெப்பமண்டல பகுதி நிலை வரை மாறுபடுகிறது. புளோரிடாவின் தெற்கு முனை வெப்பமண்டலப் பகுதியாகும், அவாயும் இது போலவே. 100வது தீர்க்கரேகைக்கு மேற்கிலான பெரும் சமவெளிகள் பாதிவறண்ட காலநிலை கொண்டிருக்கிறது. மேற்கு மலைகளில் அதிகமானவை ஆல்பைன்கள். கிரேட் பேசினில் காலநிலை வறண்டும், தென்மேற்கில் பாலைவனமாகவும், கலிபோர்னியா கடலோரப் பகுதிகளில் மத்தியதரைக்கடல் காலநிலையும், கடலோர ஓரிகான், வாசிங்டன், தெற்கு அலாசுகா ஆகிய பகுதிகளில் கடல்தட்பவெப்பநிலையுடனும் காணப்படுகிறது. அலாசுகாவின் அநேகப் பகுதிகள் ஆர்க்டிக் துணைப்பகுதி அல்லது துருவப்பகுதியாக இருக்கிறது. அதீத காலநிலை அரிதானதல்ல - மெக்சிகோ வளைகுடாவை ஒட்டியுள்ள மாநிலங்கள் வெப்பமண்டல சூறாவளிகளுக்கு ஆட்படும், உலகின் சுழல்காற்றுகளில் பல இந்நாட்டிற்குள், குறிப்பாக மிட்வெசுட்டின் டொர்னாடோ நீர்ப்பாதை பகுதியில் நிகழ்கிறது.

அமெரிக்க உயிரினச் சூழல் பிரம்மாண்ட பன்முகத்தன்மை கொண்டதாகும்: குழல்வகை தாவரங்களின் சுமார் 17,000 இனங்கள் தொடர்ச்சியான அமெரிக்க நாடுகளிலும் அலாசுகாவிலும் காணப்படுகிறது, 1,800 க்கும் அதிகமான பூக்கும் தாவர இனங்கள் அவாயில் காணப்படுகிறது, இவற்றில் சில நாட்டின் பிற முக்கியப் பகுதிகளிலும் காணப்படுகிறது. 400 பாலூட்டி வகைகள், 750 பறவை இன வகைகள், 500 வகை ஊர்வன, நீர்நில வாழ்வன வகைகளுக்கு தாயகமாக அமெரிக்கா விளங்குகிறது. சுமார் 91,000 பூச்சி இன வகைகள் விவரிக்கப்பட்டுள்ளன. அழியும் அச்சுறுத்தலுக்கும் அபாயத்திற்கும் ஆளாகியுள்ள உயிரினங்களையும் அவற்றின் வாழ்விடங்களையும் 1973 ஆம் ஆண்டின் அபாயமுற்றுள்ள உயிரினச் சட்டம் பாதுகாக்கிறது, இதனை அமெரிக்க மீன் மற்றும் காட்டு உயிரின சேவை அமைப்பு கண்காணிக்கிறது. மொத்தம் ஐம்பத்தெட்டு தேசிய பூங்காக்களும், நூற்றுக்கணக்கான பிற கூட்டரசு நிர்வாக பூங்காக்களும், காடுகளும், காட்டின பகுதிகளும் உள்ளன. மொத்தத்தில் நாட்டின் நிலப் பகுதியில் அரசின் வசம் 28.8 சதவீதம் உள்ளது. இவற்றில், சில பகுதிகள் எண்ணெய் தோண்டுவதற்கும், இயற்கை வாயு துளையிடுவதற்கும், மரம் வளர்ப்பதற்கும் அல்லது கால்நடை பண்ணைகளுக்கும் குத்தகைக்கு விடப்படுகிறது; 2.4% ராணுவ நோக்கங்களுக்காக பயன்படுகிறது என்றாலும் அநேக பகுதிகள் பாதுகாக்கப்பட்டவை ஆகும்.

வரலாறு

பூர்வீக அமெரிக்கர்களும் ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களும்

அலாசுகா பூர்வீக குடிகள் உள்ளிட, பிரதான அமெரிக்காவின் பூர்வீக மக்கள் ஆசியாவில் இருந்து குடியேறியவர்கள். அவர்கள் குறைந்தது 12,000 பேர் 40,000 ஆண்டுகள் முன்னதாக வந்து குடியேறினர். கொலம்பியருக்கு முந்தைய மிசிசிபி கலாச்சாரத்தினர் போன்ற சிலர் முன்னேறிய விவசாயம், பிரம்மாண்ட கட்டிடக் கலை மற்றும் மாநில அளவிலான சங்கங்களை உருவாக்கினர். ஐரோப்பியர்கள் அமெரிக்காவில் குடியேறத் துவங்கிய பின், பல பூர்வீக அமெரிக்கர்கள் சின்னம்மை போன்ற இறக்குமதியான நோய்த் தொற்றுகளுக்கு பலியானார்கள்.

1492 ஆம் ஆண்டில், செனோவாவின் ஆய்வுப் பயணியான கிறித்தோபர் கொலம்பசு, எசுப்பானிய மன்னரின் ஒப்பந்தத்தின் கீழ் பல்வேறு கரீபியன் தீவுகளை எட்டினார், அங்கிருந்த பூர்வீக குடிகளுடன் முதல் தொடர்பு கொண்டார். ஏப்ரல் 2, 1513 அன்று ஸ்பெயினின் வெற்றியாளரான சூவான் போன்சு டி லியோன் அவர் "லா புளோரிடா" என்றழைத்த ஒரு பகுதியில் காலடி வைத்தார் - இவை யாவும் தற்போதைய அமெரிக்காவில் ஐரோப்பியர்கள் முதன் முதலில் காலடி வைத்த பின் நடந்த நிகழ்வுகளின் முதன்மை ஆவணங்கள் ஆகும். பிராந்தியத்தில் சுபெயின் குடியேற்றங்களைத் தொடர்ந்து தற்போதைய நாளின் தென்மேற்கு அமெரிக்க பகுதியினர், இவர்கள் மெக்சிகோ வழியே ஆயிரக்கணக்கில் வந்தனர். பிரான்சின் விலங்குரோம வர்த்தகர்கள் புதிய பிரான்சு சாவடிகளை பேரேரிகளைச் சுற்றி நிறுவினர்; இறுதியில் வட அமெரிக்காவின் உள்பகுதியில் பெரும் பகுதியை மெக்சிகோ வளைகுடா வரைக்கும் பிரான்சு உரிமை கொண்டாடியது. முதல் வெற்றிகரமான ஆங்கிலக் குடியேற்றங்கள் 1607 ஆம் ஆண்டில் சேம்சுடவுனில் வர்சினியா குடியேற்ற நாடு மற்றும் 1620 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட யாத்ரீகர் பிளைமவுத் குடியேற்ற நாடு ஆகியவையாகும். மசாசூட்சு விரிகுடா குடியேற்ற நாட்டின் 1628 ஆம் ஆண்டு சட்ட வரைவு தொடர்ச்சியான குடியேற்ற அலையில் விளைந்தது; 1634 ஆம் ஆண்டு வாக்கில் நியூ இங்கிலாந்து பகுதியில் சுமார் 10,000 ப்யூரிடன்கள் குடியேறினர். 1610 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதிக்கும் அமெரிக்க புரட்சிக்கும் இடையில், சுமார் 50,000 குற்றவாளிகள் பிரித்தானியாவின் அமெரிக்க குடியேற்ற நாடுகளுக்கு அனுப்பினர். 1614 ஆம் ஆண்டு தொடங்கி, டச்சு நாட்டினர் மன்காட்டன் தீவிலுள்ள நியூ ஆம்சுடர்டாம் உள்பட அட்சன் ஆற்றின் கீழ்முகத்துவாரப் பகுதிகளில் குடியேறினர்.

1674 ஆம் ஆண்டில், டச்சு நாட்டினர் தங்களது அமெரிக்கப் பகுதிகளை இங்கிலாந்தின் வசம் இழந்தனர்; நியூ நெதர்லாந்து மாகாணம் நியூ யார்க் என பெயர் மாற்றம் கண்டது. பல புதிய குடியேற்றவகையினர், குறிப்பாக தெற்கு பகுதிக்கு, ஒப்பந்த அடிப்படையில் கொத்தடிமைக் கூலிகளாக இருந்தனர்- 1630 மற்றும் 1680 ஆண்டுகளுக்கு இடையே வர்சீனியாவில் குடியேறியவர்களில் சுமார் மூன்றில் இரண்டு பங்கினர் இந்த வகையினரே. அந்த நூற்றாண்டு நிறைவுறும் காலத்திற்குள்ளாக, ஆப்பிரிக்க அடிமைகள் முதல் அடிமை தொழிலாளர்களாக இருந்தனர். இவ்வாறாக 1729 ஆம் ஆண்டுகளில் கரோலினாக்கள் பிரிவு மற்றும் 1732 ஆம் ஆண்டுகளில் சார்சியா குடியேற்ற நாடு அமைப்பு, இவற்றுடன், அமெரிக்கா என்று பின்னாளில் ஒன்றிணையவிருந்த பதின்மூன்று பிரித்தானிய குடியேற்ற நாடுகளும் நிறுவப்பெற்றன. இந்த குடியேற்ற நாடுகள் அனைத்தும் அனைத்து சுதந்திர மனிதர்களுக்கும் அணுக்கமுள்ள தேர்தல்களை கொண்டிருந்தன; பழைய ஆங்கிலேயர் உரிமைகளுக்கு பணிவும் குடியரசுவாத, சுயாட்சி ஆதரவு உணர்வுகளும் வளர்ந்தன. அனைத்துமே ஆப்பிரிக்க அடிமை வர்த்தகத்தை சட்டப்பூர்வமாக்கி வைத்திருந்தன. உயர்ந்த பிறப்பு விகிதங்கள், குறைவான இறப்பு விகிதங்கள் மற்றும் தொடர்ந்த குடியேற்றம் இவற்றின் காரணமாக குடியேற்ற நாடுகளின் மக்கள்தொகை வெகு துரிதமாய் வளர்ந்தது. 1730 முதல் 1740 ஆம் ஆண்டுகளில் பெரும் விழிப்பு என்ற கிறித்தவ மறுமலர்ச்சி இயக்கம் தோன்றி மதம் மற்றும் மத சுதந்திரத்தில் ஆர்வத்திற்கு உரமூட்டியது. பிரான்சு மற்றும் இந்திய போரில், பிரித்தானிய படைகள் கனடாவை பிரான்சு நாட்டினரிடம் இருந்து கைப்பற்றினர். ஆனால் பிரெஞ்சு பேசும் மக்கள் அரசியல் ரீதியாக தெற்கத்திய குடியேற்ற நாடுகளிடம் இருந்து தனிமைப்பட்டே இருந்தனர். அமெரிக்கத் தொல்குடியினர் (இவர்கள் "அமெரிக்க இந்தியர்கள்" என்று பொதுவாக அழைக்கப்படுகிறார்கள்) இடம் பெயர்ந்த சூழ் நிலையிலும், இந்த பதின்மூன்று குடியேற்ற நாடுகளும் 1770 ஆம் ஆண்டிலேயே மொத்தம் 2.6 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டிருந்தன, இது பிரித்தானிய மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்காகும். அமெரிக்கர்களில் ஐந்தில் ஒருவர் கறுப்பு அடிமைகளாவர். பிரித்தானிய வரிவிதிப்புக்கு ஆட்பட்டிருந்த போதிலும் கூட, அமெரிக்க குடியேற்ற நாட்டினருக்கு இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வழங்கப்படாதிருந்தது.

விடுதலை மற்றும் விரிவாக்கம்

அமெரிக்க ஐக்கிய நாடுகள் 
விடுதலைப் பிரகடனம், சான் ட்ரம்புல், 1817–18

1760 ஆம் ஆண்டுகளிலான புரட்சிகர காலகட்டத்திலும் 1770 ஆம் ஆண்டுகளின் துவக்கத்திலும் அமெரிக்க குடியேற்ற நாடுகளுக்கும் பிரித்தானியர்களுக்கும் இடையிலான பதற்றங்கள் அமெரிக்க புரட்சி போருக்கு இட்டுச் சென்றது. இப்போர் 1775 ஆம் ஆண்டு முதல் 1781 ஆம் ஆண்டு வரை நிகழ்ந்தது. சூன் 14, 1775 அன்று, பிலடெல்பியாவில் கூடிய கண்டமாநாடு சார்ச்சு வாசிங்டன் தலைமையில் ஒரு கண்ட அளவிலான ராணுவத்தை அமைத்தது."அனைத்து மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டுள்ளார்கள்" அத்துடன் "குறிப்பிட்ட அந்நியப்படுத்தமுடியாத உரிமைகள்" அளிக்கப்ப்பட்டுள்ளார்கள் என்கிற வாசகத்துடன், இந்த மாநாடு அமெரிக்க விடுதலைச் சாற்றுரையை நிறைவேற்றியது, இந்த சாற்றுரை வரைவு ஜூலை 4, 1776 அன்று, தாமசு செபர்சனின் பெரும் பங்களிப்புடன் உருவானது. இந்த தேதியில் இப்போது ஆண்டுதோறும் அமெரிக்க விடுதலை நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 1777 ஆம் ஆண்டில், கூட்டமைப்பு விதிகளின்படி உருவான ஐக்கிய அரசாங்கம் பலவீனமானதாக 1789 ஆம் ஆண்டு வரை செயல்பட்டது. பிரான்சின் உதவியோடு அமெரிக்க படைகளால் பிரித்தானிய படைகள் தோல்வியுற்ற பிறகு, பெரிய பிரித்தானியா அமெரிக்க சுதந்திரத்தையும், மிசிசிபி ஆற்றுக்கு மேற்கிலுள்ள அமெரிக்க நிலப்பகுதிகளின் மீதான அமெரிக்க அரசாங்கங்களின் இறையாண்மையையும் அங்கீகரித்தது. வரி அதிகாரங்களுடன் ஒரு வலிமையான தேசிய அரசாங்கத்தை நிறுவ விரும்பி ஒரு அரசியல்சட்ட சங்கத்தை 1787 ஆம் ஆண்டில் ஒருங்கிணைத்தனர். அமெரிக்க அரசியல்சட்டம் 1788 ஆம் ஆண்டில் உறுதிசெய்யப்பட்டது, புதிய குடியரசின் முதல் செனட், பிரதிநிதிகள் அவை, மற்றும் முதல் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் சார்ச்சு-வாசிங்டன்-1789 ஆம் ஆண்டில் பதவியேற்றுக் கொண்டனர். தனிநபர் சுதந்திரத்தின் மீதான கூட்டரசு கட்டுப்பாடுகளை தடைசெய்வது மற்றும் பல வகையான சட்டப்பூர்வ பாதுகாப்புகளை உறுதி செய்வதற்கான உரிமைகள் மசோதா 1791 ஆம் ஆண்டில் நிறைவேறியது.

அமெரிக்க ஐக்கிய நாடுகள் 
சுதந்திரச் சிலை, நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா

அடிமை முறையை நோக்கிய மனோநிலை மாறத் துவங்கியது; 1808 ஆம் ஆண்டு வரை மட்டுமே அரசியல்சட்ட சரத்து ஆப்பிரிக்க அடிமைகள் வர்த்தகத்தை பாதுகாத்தது. வடக்கு மாநிலங்கள் 1780 முதல் 1804 ஆம் ஆண்டுகளுக்கு இடையே அடிமைமுறையை ரத்து செய்தன, இதனையடுத்து தெற்கின் அடிமை மாநிலங்கள் மட்டுமே "விந்தையான சுதாபனத்தின்" பாதுகாவலர்களாக தொடர்ந்தன. சுமார் 1800 ஆம் ஆண்டு வாக்கில் துவங்கிய இரண்டாம் பெரு விழிப்பு, தடைவாதம் உள்ளிட்ட ஏராளமான சமூக சீர்திருத்த இயக்கங்களுக்கு பின்னாலான சக்தியாக பைபிள் நற்செய்தி பரப்புரைவாதத்தை ஆக்கியது.

மேற்குநோக்கு விரிவடைவதற்கான அமெரிக்கர்களின் ஆர்வம் நெடுந்தொடர்ச்சியான இந்திய போர்கள் மற்றும் இந்தியர் நீக்குக் கொள்கையை தூண்டியது. இது தொல்குடி மக்களிடம் இருந்து அவர்கள் நிலத்தை பறிப்பதாக அமைந்தது. 1803 ஆம் ஆண்டுகளில் பிரான்சு உரிமை கொண்டாடிய பிரதேசத்தில் இருந்து வந்த செனாதிபதி தாமசு செபர்சன் கீழ் மேற்கொள்ளப்பட்ட லூசியானா கொள்முதல் நாட்டின் அளவை ஏறக்குறைய இருமடங்காக்கியது. பல்வேறு காரணங்களால் இங்கிலாந்துக்கு எதிராக அறிவித்த 1812 ஆம் ஆண்டு போரானது வெற்றி தோல்வியின்றி முடிந்தது, இது அமெரிக்க தேசியவாதத்தை வலிமைப்படுத்தியது. புளோரிடாவுக்குள் தொடர்ந்து அமெரிக்க ராணுவ ஊடுருவல்கள் நிகழ்ந்ததை அடுத்து அதனையும், பிற வளைகுடா பிராந்தியங்களையும் 1819 ஆம் ஆண்டுகளில் எசுப்பானியா அப்பகுதிகளை கைவிட வேண்டியதானது. டெக்சாசு குடியரசை 1845 ஆம் ஆண்டுகளில் அமெரிக்கா தன்னுடன் இணைத்துக் கொண்டது. இந்த சமயத்தில் வெளியாகும் தலைவிதி என்கிற கருத்தாக்கம் பிரபலமானது. 1846 ஆம் ஆண்டில் இங்கிலாந்துடனான ஓரிகான் ஒப்பந்தம், இன்றைய அமெரிக்க வடமேற்கு பகுதியை அமெரிக்க கட்டுப்பாட்டுக்கு இட்டுச் சென்றது. மெக்சிகோ-அமெரிக்க போரில் வென்று 1848 ஆம் ஆண்டுகளில் மெக்சிக்கோவின் நில அளிப்பு மூலம் கலிபோர்னியா மற்றும் இன்றைய அனைத்து தென்மேற்கு பகுதிகளையும் இணைத்துக் கொண்டது. 1848–1849 ஆம் ஆண்டுகளின் கலிபோர்னியா தங்க வேட்டை மேற்கத்திய புலம்பெயர்வை மேலும் தூண்டியது. புதிய ரயில்பாதைகள் குடியேறியவர்களின் இடப்பெயர்வை சுலபமாக்கி பூர்வீக அமெரிக்கர்களுடனான மோதலை அதிகப்படுத்தியது. ஒரு அரை நூற்றாண்டு காலத்தில், ரயில்பாதைகளின் பரவலை எளிதாக்குவதற்காக 40 மில்லியன் அமெரிக்க எருமைகள் அல்லது காளைகள், தோலுக்காகவும் இறைச்சிக்காகவும் கொல்லப்பட்டன. சமவெளி இந்தியர்களின் பிரதான ஆதாரமான எருமைகளின் இழப்பு, பல பூர்விக கலாச்சாரங்களுக்கு வாழ்வாதாரத்தின் மீதான அடியாக விழுந்தது.

உள்நாட்டுப் போர் மற்றும் தொழில்மயமாக்கம்

அமெரிக்க ஐக்கிய நாடுகள் 
கெட்டிசுபர்க் யுத்தம், லித்தோகிராப் கரியர் & ஐவ்சு, கலிபோர்னியா.1863

அடிமை மற்றும் சுதந்திர மாநிலங்களுக்கு இடையிலான பதற்றங்கள் மாநில மற்றும் கூட்டரசு அரசாங்கங்களுக்கு இடையிலான உறவு மீதான விவாதங்களையும், புதிய மாநிலங்களில் அடிமைமுறை பரவுவதை ஒட்டிய கடுமையான வன்முறை மோதல்களையும் அதிகப்படுத்தியது. அடிமைஎதிர்ப்புக்கு ஆதரவு அதிகளவில் இருந்த குடியரசுக் கட்சியின் வேட்பாளரான ஆப்ரகாம் லிங்கன் 1860 ஆம் ஆண்டில் செனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் சனாதிபதியாக பதவியேற்கும் முன்பே, ஏழு அடிமை மாநிலங்கள் தங்கள் பிரிவினையை அறிவித்திருந்தன; இதனை சட்டவிரோதமாக கூட்டரசு அறிவித்தது. இதனால் பிரிவினை அறிவித்த மாநிலங்கள் ஒன்றுசேர்ந்து அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு உருவானது. சம்டர் துறைமுகத்தின் மீது இந்த கூட்டமைப்பு நடத்திய தாக்குதலில், அமெரிக்க உள்நாட்டு போர் துவங்கியது, மேலும் நான்கு அடிமை மாநிலங்கள் கூட்டமைப்பில் இணைந்தன. லிங்கனின் விடுதலை பிரகடனம் அடிமைமுறைக்கு முடிவு கட்டுவதற்கான வாக்குறுதியை ஒன்றியத்திற்கு அளித்தது. ஒன்றியம் 1865 ஆம் ஆண்டில் வென்றதைத் தொடர்ந்து, அமெரிக்க அரசியல்சட்டம் மேற்கொண்ட மூன்று சட்டதிருத்தங்கள் அடிமைகளாக இருந்த சுமார் நான்கு மில்லியன் ஆப்பிரிக்க அமெரிக்க அடிமைகளுக்கு சுதந்திரத்தை உறுதிசெய்ததோடு, அவர்களை குடிமக்களாக ஆக்கி , அவர்களுக்கு வாக்குரிமையும் அளித்தது. போரும் அதன் தீர்மானமும் கூட்டாட்சி அதிகாரத்தை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தது.

அமெரிக்க ஐக்கிய நாடுகள் 
நியூயார்க் எல்லிசு தீவில் குடியேற்றவாசிகள் இறங்குதல், 1902

போருக்கு பின், லிங்கன் படுகொலை சம்பவம் புதிதாக விடுதலை பெற்ற அடிமைகளின் உரிமைகளை உறுதி செய்து தெற்கு மாநிலங்களை மறுஒருங்கமைவு செய்து மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கத்திலான குடியரசுக் கட்சியின் மறுகட்டுமான கொள்கைகளை தீவிரமயமாக்கியது. பிரச்சினைக்குள்ளான 1876 சனாதிபதி தேர்தலுக்கு 1877 ஆம் ஆண்டு சமரசம் மூலம் தீர்வு கண்டது. மறுகட்டுமானத்தை முடித்து வைத்தது; சிம் குரோ சட்டங்கள் விரைவில் பல ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் உரிமைகளை இல்லாது செய்தது. வடக்கில், நகரமயமாக்கமும் தெற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து வரலாறுகாணாத குடியேற்ற புலம்பெயர்வும் நாட்டின் தொழில்மயமாக்கத்தை துரிதப்படுத்தியது. 1929 ஆம் ஆண்டு வரை நீடித்த குடியேற்ற அலை தொழிலாளர் கூட்டத்தை உருவாக்கியதோடு அமெரிக்க கலாச்சாரத்தை மாற்றியமைத்தது. உயர்ந்த விலை பாதுகாப்புகள், தேசிய உள்கட்டுமான எழுச்சி, புதிய வங்கி கட்டுப்பாடுகள் ஆகியவை வளர்ச்சியை ஊக்கப்படுத்தின. 1867 ஆம் ஆண்டில் உருசியாவிடம் இருந்தா அலாசுகா கொள்முதல் நாட்டின் பிரதான நில விரிவாக்கம் நிறைவுற்றது. 1890 ஆம் ஆண்டில் காயமுற்ற முழங்கால் படுகொலை இந்தியப் போர்களின் கடைசி பெரிய ஆயுத மோதலாகும். 1893 ஆம் ஆண்டில் அவாய் பசிபிக் இராச்சியத்தின் தனித்துவமான முடியாட்சியை அமெரிக்கவாசிகளின் தலைமையிலான ஒரு ராணுவப் புரட்சி தூக்கி எறிந்தது; அமெரிக்கா இந்த தீவுத் தொகுப்புகளை 1898 இல் இணைத்துக் கொண்டது. அதே ஆண்டில் சுபெயின்-அமெரிக்க போரில் வெற்றி பெற்று அமெரிக்கா தன்னை உலக சக்தியாக பறைசாற்றியது. பூர்டோ ரிகோ, குவாம் மற்றும் பிலிப்பைன்ஸையும் இணைத்துக் கொள்ள வழிவகுத்தது. அரை நூற்றாண்டு காலம் தள்ளி பிலிப்பீன்சு விடுதலை பெற்றது, பூர்டோ ரிகோ மற்றும் குவாம் அமெரிக்க பிராந்தியங்களாகவே தொடர்கின்றன.

முதலாம் உலகப் போர், பெருமந்தம், மற்றும் இரண்டாம் உலகப் போர்

அமெரிக்க ஐக்கிய நாடுகள் 
1936, டசுட் பவுல் சமயத்தில் சவுத் டகோடாவில் ஒரு கைவிடப்பட்ட பண்ணை

1914 ஆம் ஆண்டில் முதலாம் உலகப் போர் வெடித்தபோது, அமெரிக்கா நடுநிலை வகித்தது. பல அமெரிக்கர்கள் தலையீட்டை எதிர்த்தார்கள் என்றாலும், அநேக அமெரிக்கர்கள் இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் அனுதாபம் காட்டினார்கள். 1917 ஆம் ஆண்டில், அமெரிக்கா நேச நாடுகள் பக்கம் இணைந்தது, மைய சக்திகளுக்கு எதிராக அலையைத் திருப்பியது. உலகப் போருக்கு பின், உலக நாடுகள் சங்கத்தை நிறுவிய வெர்சாய் ஒப்பந்தத்தை செனட் நிறைவேற்றவில்லை. தன்னிச்சைவாதத்தை நாடு தொடர்ந்தது, தனிமைப்படலின் விளிம்புக்கு அதனைத் தள்ளியது. 1920 ஆம் ஆண்டில், பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமைகளை அளிக்கும் ஒரு அரசியல்சட்ட திருத்தத் தொகுப்பை பெண்கள் உரிமை இயக்கம் வென்றது. உறுமும் இருபதுகளின் வளமையானது 1929 ஆம் ஆண்டின் வால் வீதி வீழ்ச்சி, பெருமந்த நிலைக்கு தூண்டியது. 1932 ஆம் ஆண்டில் சனாதிபதி பிராங்க்ளின் டி. ரூசுவெல்ட் புதிய ஒப்பந்தம் என்னும் பொருளாதாரத்தில் அரசாங்க தலையீட்டை அதிகரிக்கும் பல்வேறு வகை கொள்கைகளை செயல்படுத்தினார். 1930 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த டசுட் பவுல் என்னும் தொடர் சூறாவளி பல விவசாய சமூகங்களை ஏழ்மைப்படுத்தி ஒரு புதிய மேற்கத்திய குடியேற்ற அலையை ஊக்குவித்தது.

அமெரிக்க ஐக்கிய நாடுகள் 
சூன் 6, 1944 இல் டி-தினம் அன்று நார்மன்டியில் அமெரிக்க ராணுவ முதலாவது படைப்பிரிவு வீரர்கள் இறங்குகிறார்கள்

செப்டம்பர் 1939 இல் நாசி செருமனி போலந்து படையெடுப்பு இரண்டாம் உலகப் போரின் ஆரம்ப கட்டங்களில் ஏறக்குறைய நடுநிலை வகித்த அமெரிக்கா, மார்ச் 1941 ஆம் ஆண்டில் லென்ட்-லீசு திட்டம் மூலமாக நேச நாடுகளுக்கு பொருட்கள் வழங்கத் துவங்கியது. திசம்பர் 7, 1941 ஆம் ஆண்டில், சப்பான் பேர்ல் ஆர்பர் துறைமுகத்தில் திடீர் தாக்குதல் நடத்தியதின் பின் அச்சு நாடுகளுக்கு எதிராக நேச நாடுகளுடன் கைகோர்த்தது. இந்த போரில் பங்கேற்றது அமெரிக்க பொருளாதாரத்தை ஊக்கப்படுத்தியது, மூலதன முதலீடும் வேலைவாய்ப்பு உருவாக்கமும் அதிகரித்தது. யுத்தத்தில் பங்கேற்ற முக்கிய நாடுகளில், அமெரிக்கா மட்டும் உண்மையில் பணக்கார நாடாகியது, போரினால் ஏழ்மையுறுவதற்குப் பதில் செழுமையுற்றது. பிரெட்டன் வுட்சு மற்றும் யால்டாவில் நடந்த நேசநாடுகள் மாநாட்டில் புதிய சர்வதேச அமைப்புகளின் ஒரு அமைப்பை வரையறுத்தது, இது அமெரிக்கா]] மற்றும் சோவியத் ஒன்றியத்தை உலக விவகாரங்களின் மையத்தில் நிறுத்தியது. ஐரோப்பாவில் வெற்றி கிட்டியதால், சான் பிரான்சிசுகோவில் நடந்த 1945 சர்வதேச மாநாடு ஐக்கிய நாடுகள் ஆவணத்தை உருவாக்கியது, இது போருக்கு பின் செயல்பாட்டிற்கு வந்தது. முதல் அணு ஆயுதங்களை உருவாக்கிய அமெரிக்கா ஆகத்து மாதத்தில் சப்பான் நகரங்களான இரோசிமாவிலும் நாகசாக்கியிலும் அவற்றை பிரயோகித்தது. சப்பான் செப்டம்பர் 2 அன்று சரணடைந்ததும், போர் முடிவுக்கு வந்தது.

பனிப் போர் மற்றும் ஆர்ப்பாட்ட அரசியல்

இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய பனிப்போர் காலத்தில் அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் அதிகாரத்துக்காக போட்டியிட்டன, ஐரோப்பாவின் ராணுவ விவகாரங்களில் நேட்டோ மற்றும் வார்சா ஒப்பந்தம் மூலம் இவை ஆதிக்கம் செலுத்தின. அமெரிக்கா தாராளவாத சனநாயகத்தையும் முதலாளித்துவத்தையும் ஊக்குவித்தது, சோவியத் ஒன்றியம் கம்யூனிசத்தை மையமாகக் கொண்ட திட்டமிட்ட பொருளாதாரத்தையும் ஊக்குவித்தது. இரு தரப்பினரும் சர்வாதிகாரத்திற்கு ஆதரவளித்ததோடு மறைமுகப் போர்களிலும் ஈடுபட்டன. 1950–53 ஆம் ஆண்டுகளில் அமெரிக்க துருப்புகள் கொரிய யுத்தத்தில் கம்யூனிச சீன படைகளை எதிர்த்து போரிட்டன. இடதுரீதியான கவிழ்ப்பு நடவடிக்கை சந்தேகங்கள் மீது தொடர்ச்சியான விசாரணைகளை அமெரிக்க வகையல்லாத நடவடிக்கை ஆய்வு அவை கமிட்டி நடத்தியது, செனட்டர் யோசேப்பு மெக்கார்த்தி கம்யூனிச எதிர்ப்பு மனோநிலையின் முக்கிய பிரமுகராக இருந்தார்.

1961 ஆம் ஆண்டில், முதல் ஆளுடனான விண்கலத்தை சோவியத் அனுப்பியது, சனாதிபதி சான் எஃப். கென்னடியை "நிலவில் மனிதர் கால் பதிப்பதில்" முதலாவதாக அழைப்பு விடுக்க தூண்டியது, இது 1969 ஆம் ஆண்டில் நிறைவேறியது. கியூபாவில் சோவியத் சக்திகளுடான ஒரு பதற்றமான அணுசக்தி மோதல் அபாயத்தையும் கென்னடி எதிர்கொண்டார். இதனிடையே, அமெரிக்கா தொடர்ந்த பொருளாதார விரிவாக்கத்தை கண்டது. ரோசா பார்க்சு மற்றும் மார்ட்டின் லூதர் கிங், சூனியர். போன்ற ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் தலைமையில் மனித உரிமைகள் இயக்கம் வளர்ச்சியுற்று, நிறப்பாகுபாடு பேதங்களை எதிர்த்து போராடினார்கள். 1963 ஆம் ஆண்டில் கென்னடி படுகொலை நிகழ்ச்சிக்குப் பிறகு, 1964 மனித உரிமைகள் சட்டம் மற்றும் 1965 வாக்களிக்கும் உரிமைகள் சட்டம் ஆகியவை சனாதிபதி லிண்டன் பி. சான்சன் தலைமையின் கீழ் நிறைவேறியது. சான்சன் மற்றும் அவரைத் தொடர்ந்து ரிச்சர்ட் நிக்சன், ஒரு பினாமி யுத்தத்தை தென்கிழக்கு ஆசியாவில் ஊக்குவித்து தோல்வியில் முடிந்த வியட்நாம் போராக விரிவுபடுத்தினர். போர் எதிர்ப்பு, கறுப்பு தேசியவாதம், பாலியல் புரட்சி ஆகியவற்றால் ஊக்கமடைந்து பரந்த மாற்றுகலாச்சார இயக்கம் வளர்ச்சியுற்றது. பெண்களுக்கு அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சமத்துவம் நாடும் மகளிர் இயக்கதின் ஒரு புதிய அலைக்கு பெட்டி ஃபீரிடன், குளோரியா சுடெனிம், மற்றும் பலர் தலைமையேற்றனர்.

1974 ஆம் ஆண்டில் வாட்டர்கேட் ஊழலின் விளைவாக, நீதிநடைமுறைகளுக்கு இடையூறு விளைத்தல், அதிகார முறைக்கேடு ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானத்திற்கு ஆளான நிலையில், பதவி விலகிய முதல் அமெரிக்க சனாதிபதியாக நிக்சன் ஆனார். அவரைத் தொடர்ந்து துணை சனாதிபதி செரால்டு போர்டு சனாதிபதி ஆனார். 1970 ஆம் ஆண்டுகளின் பின்பகுதியில் சிம்மி கார்ட்டர் நிர்வாகத்தில் பொருளாதார தேக்கநிலையுடன் ஈரான் பணயக்கைதிகள் நெருக்கடி ஆகியவை நிகழ்ந்தன. 1980 ஆம் ஆண்டில் ரொனால்டு ரீகன் சனாதிபதி ஆனதும் அமெரிக்க அரசியல் வலது நோக்கி நகர்ந்ததன் தலைமை அடையாளமாக அமைந்தது, இது வரிவிதிப்புகள் மற்றும் செலவின முன்னுரிமைகளில் பிரதான மாற்றங்களாகப் பிரதிபலித்தது. இரண்டாவது முறையாக அவர் பதவியில் அமர்ந்தது ஈரான்-கான்ட்ரா ஊழல் மற்றும் சோவியத் ஒன்றியத்துடனான ராசதந்திர உறவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆகியவை நிகழ்ந்தன. தொடர்ந்து நிகழ்ந்த சோவியத் உடைவு குளிர் யுத்தத்தை முடித்து வைத்தது.

சமகால சகாப்தம்

அமெரிக்க ஐக்கிய நாடுகள் 
செப்டம்பர் 11, 2001 காலையில் உலக வர்த்தக மையம்

ஐநா-ஒப்புதலளித்த வளைகுடாப் போர் சமயத்தில், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் ஜனாதிபதி ஜார்ஜ் வாக்கர் புஷ் தலைமையில் ஆற்றிய பங்களிப்பும், ஜனாதிபதி பில் கிளிண்டன் தலைமையின் கீழ் நிகழ்ந்த யுகோசுலாவியா போர்களும் ஒரு வல்லரசாக அதன் நிலையைப் பாதுகாக்க உதவின. மார்ச் 1991 முதல் மார்ச் 2001 வரையான நவீன அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய பொருளாதார விரிவாக்கமும் டாட்-காம் குமிழி ஆகியவையும் கிளிண்டன் நிர்வாகத்தில் நிகழ்ந்தன. ஒரு குடியியல் வழக்கும் பாலியல் மோசடிக் குற்றச்சாட்டும் 1998 ஆம் ஆண்டில் கிளிண்டன் மீது கண்டனத்தீர்மானத்திற்கு வழி வகுத்தாலும், அவர் பதவியில் தொடர்ந்தார். அமெரிக்க வரலாற்றில் மிக நெருக்கமான முடிவுக்கு காரணமான 2000 ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தல் அமெரிக்க உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்து- ஜார்ஜ் டபிள்யூ. புஷ் - இவர் ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ்ஷின் மகனாவார், ஜனாதிபதியானார்.

செப்டம்பர் 11, 2001 அன்று அல்-கெய்தா பயங்கரவாதிகள் நியூயார்க் நகர உலக வர்த்தக மையம் மற்றும் வாசிங்டன், டி. சி. அருகிலுள்ள பென்டகன் அலுவலகம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தினர், இதில் சுமார் மூன்றாயிரம் பேர் உயிரிழந்தனர். பதிலடியாக, புஷ் நிர்வாகம் "பயங்கரவாதத்திற்கு எதிரான போரை" துவக்கியது. 2001 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பை நிகழ்த்தி, தலிபான் அரசாங்கத்தையும் அல்-கெய்தா பயிற்சி முகாம்களையும் அகற்றின. தலிபான் கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து கெரில்லா யுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 2002 ஆம் ஆண்டில், சர்ச்சைக்குரிய அடிப்படையில் ஈராக்கில் ஆட்சி மாற்றத்திற்கு புஷ் நிர்வாகம் அழுத்தமளித்தது. நேட்டோ ஆதரவோ அல்லது ராணுவ தலையீட்டுக்கான வெளிப்படை ஐநா உத்தரவு இல்லாமல், புஷ் ஒரு விருப்பக் கூட்டணியை]] ஒருங்கமைத்தார்; கூட்டணி படைகள் தாமாகவே 2003 ஆம் ஆண்டில் ஈராக்கை ஆக்கிரமித்து அங்கிருந்த சர்வாதிகாரியும் அமெரிக்க கூட்டாளியுமான சதாம் உசேனை அகற்றினர். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் மற்றும் ஈராக் போரில் அமெரிக்கா மனித உரிமைகள் மீறியதாக பன்னாட்டு பொதுமன்னிப்பு மன்றம் குற்றம் சாட்டியுள்ளது. 2005 ஆம் ஆண்டில் காத்ரினா சூறாவளி வளைகுடா கடலோரப் பகுதிகளில் பலத்த சேதாரத்தை ஏற்படுத்தி, நியூ ஆர்லியன்சை முற்றிலுமாய் சிதைத்தது. நவம்பர் 4, 2008 அன்று, உலகளாவிய பொருளாதார மந்தநிலை சூழ்நிலையில், அமெரிக்காவின் முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர் பராக் ஒபாமா ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.

அரசியல்

அமெரிக்க ஐக்கிய நாடுகள் 
அமெரிக்க நாடாளுமன்ற அவை அமைந்திருக்கும் அமெரிக்க தலைநகர் கட்டிடத்தின் மேற்கு முகப்பு

அமெரிக்கா உலகின் பழமையான கூட்டமைப்பு ஆகும். பெரும்பான்மை ஆட்சியானது சிறுபான்மையினர் உரிமைகள் சட்டத்தால் பாதுகாக்கப்படுவதன் மூலம் வலிமையூட்டிய அரசியல்சட்டக் குடியரசாகும். பிராந்தியங்களில் வசிக்கும் அமெரிக்க குடிமக்கள் ஐக்கிய அதிகாரிகளுக்கான வாக்களிப்பில் இருந்து விலக்கப்பட்டாலும், அடிப்படையாக ஒரு பிரதிநிதித்துவ ஜனநாயகமாக இது கட்டமைந்துள்ளது. நாட்டின் உச்சபட்ச நீதி ஆவணமாக செயல்படும் அமெரிக்க அரசியல்சட்டத்தால் வரையறுக்கப்படும் சோதனைகள் மற்றும் சமநிலைகள் கொண்ட ஒரு அமைப்பினால் அரசாங்கம் கட்டுப்படுகிறது. அமெரிக்க ஐக்கிய அமைப்பில், குடிமக்கள் பொதுவாக ஐக்கிய, மாநில மற்றும் பிராந்திய என மூன்று அரசாங்க நிலைகளுக்கு கட்டுப்பட்டவர்களாகும்; பிராந்திய அரசாங்கத்தின் கடமைகளாவன நாட்டு மற்றும் முனிசிபல் அரசாங்கங்களுக்கு இடையே பொதுவாக பிரிந்து செயல்படுகிறது. ஏறக்குறைய அனைத்து வகைகளிலும், நிர்வாக மற்றும் சட்ட அதிகாரிகள் மாவட்டவாரியாக குடிமக்களின் பன்முக வாக்குரிமையால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். எண்ணிக்கைவாரி பிரதிநிதித்துவம் ஐக்கிய நிலையில் இல்லை, இது கீழ் நிலைகளிலும் வெகு அபூர்வமாக இருக்கிறது. ஐக்கிய மற்றும் மாநில நீதி மற்றும் கேபினட் அதிகாரிகள் பொதுவாக நிர்வாக பிரிவினர் பரிந்துரை செய்து சட்டமன்றம் மூலமாக ஒப்புதலளிக்கிறார்கள், சில மாநில நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் மக்கள் வாக்கெடுப்பு மூலமும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

அமெரிக்க ஐக்கிய நாடுகள் 
அமெரிக்க ஜனாதிபதியின் இல்லமும் வேலையிடமுமான வெள்ளை மாளிகையின் தெற்கு முகப்பு

ஐக்கிய அரசாங்கம் மூன்று கிளைகளாக உருவானது:

  • நாடாளுமன்றம்: இது இரு அவைகள் கொண்ட காங்கிரஸ், செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையால் ஆனது, ஐக்கிய சட்டங்களை உருவாக்குகிறது, போரை அறிவிக்கிறது, ஒப்பந்தங்களுக்கு ஒப்புதலளிக்கிறது, நிதியாதார அதிகாரத்தை கொண்டுள்ளது, கண்டிக்கும் அதிகாரமும் உண்டு, அதன் மூலம் அரசாங்கத்தின் பதவியிலிருக்கும் உறுப்பினர்களை இது அகற்ற முடியும்.
  • நிர்வாகம்: ஜனாதிபதி தான் ராணுவத்தின் தலைமை தளபதி ஆவார், நாடாளுமன்ற மசோதாக்கள் சட்டமாகும் முன் அவற்றின் மீதான இறுதி முடிவு அதிகாரம் செலுத்த முடியும், ஐக்கிய சட்டங்கள் மற்றும் கொள்கைகளை அமல்படுத்தும் கேபினட் மற்றும் பிற அதிகாரிகளை நியமனம் செய்கிறது.
  • நீதித்துறை: சுப்ரீம் கோர்ட்டும் மற்றும் பிற கீழ்நிலை ஐக்கிய நீதிமன்றங்களும், இவற்றின் நீதிபதிகள் ஜனாதிபதியால் செனட் ஒப்புதலுடன் நியமனம் செய்கிறார்கள், இவர்களை சட்டங்களை ஆராய்வதோடு அரசியல்சட்டத்தை மீறியதாகக் காண்பவற்றை மாற்றுகிறார்கள்.
அமெரிக்க ஐக்கிய நாடுகள் 
அமெரிக்க சுப்ரீம் கோர்ட் கட்டிடத்தின் மேற்கு முகப்பு

பிரதிநிதிகள் அவை 435 உறுப்பினர்களைக் கொண்டது, ஒவ்வொருவரும் நாடாளுமன்ற மாவட்டங்களை இருவருட காலத்திற்கு பிரதிநிதித்துவம் செய்கிறார்கள். ஒவ்வொரு பத்தாவது வருடத்திலும் அவை உறுப்பினர் எண்ணிக்கைகள் மக்கள்தொகை அடிப்படையில் மாநிலங்களிடையே பகிர்ந்தளிக்கப்படுகிறது. 2000 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி, ஏழு மாநிலங்கள் குறைந்தபட்சம் ஒரு பிரதிநிதியையும், மிக அதிக மக்கள்தொகை கொண்ட கலிபோர்னியா ஐம்பத்தி மூன்று பிரதிநிதிகளையும் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாநிலமும் இரண்டு செனட்டர்கள் கொண்டு செனட்டில் மொத்தம் 100 உறுப்பினர்கள் உள்ளனர், பொதுவாக இவர்கள் ஆறு வருட காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், செனட்டின் மூன்றில் ஒரு பகுதி இடங்களுக்கான தேர்தல் ஒரு வருடம் விட்டு நடக்கிறது. ஜனாதிபதி நான்கு வருட காலம் பதவியில் இருக்கிறார், அவர் ஜனாதிபதி பதவிக்கு இருமுறைக்கு மேல் தேர்ந்தெடுக்க முடியாது. ஜனாதிபதி நேரடி வாக்களிப்பின் மூலம் தேர்ந்தெடுப்பதில்லை, மாறாக தீர்மானிக்கும் வாக்குகள் மாநிலங்களுக்கு ஏற்ற பங்களிப்பை கொண்டிருக்கும் வகையிலான மறைமுக தேர்தல் அமைப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அமெரிக்க தலைமை நீதிபதியின் தலைமையில் இயங்கும் சுப்ரீம் கோர்ட் ஒன்பது உறுப்பினர்களைக் கொண்டுள்ளது, இவர்கள் ஆயுள் காலம் வரை பதவி வகிக்க முடியும். மாநில அரசாங்கங்கள் சற்றேறக்குறைய ஒரே மாதிரியான வடிவமைப்பைக் கொண்டுள்ளன; நெப்ராஸ்கா மட்டும் பிரத்யேகமாக ஒற்றை அவை நாடாளுமன்றத்தைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்தின் ஆளுநரும் (தலைமை நிர்வாகி) நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

மாநில மற்றும் ஐக்கிய அரசாங்கங்கள் என இரண்டின் அனைத்து சட்டங்கள் மற்றும் நடைமுறைகளும் மறுஆய்வுக்கு உட்பட்டவை; அரசியல்சட்டத்திற்கு மீறிய வகையில் நீதித்துறையால் உரைக்கப்படும் எந்த சட்டமும் செல்லாததாகும். அரசியல்சட்டத்தின் மூல உரை ஐக்கிய அரசாங்கத்தின் கட்டமைப்பு மற்றும் பொறுப்புகளையும் மற்றும் தனித்தனி அரசாங்கங்களுடனான அதன் உறவினையும் நிலை நிறுத்துகிறது. முதலாவது சட்டப்பிரிவு ஆட்கொணர்வுக்கான "மகத்தான ஆணை" உரிமையைப் பாதுகாக்கிறது, சட்டப்பிரிவு மூன்று அனைத்து கிரிமினல் வழக்குகளிலும் நீதிபதிகள் குழுவின் விசாரணை உரிமையை உறுதி செய்கிறது. அரசியல்சட்டத்தில் திருத்தங்கள் செய்ய நான்கில் மூன்று பங்கு மாநிலங்களின் ஒப்புதல் அவசியம். அரசியல்சட்டம் இருபத்தி ஏழு முறைகள் திருத்தப்பட்டிருக்கிறது; முதல் பத்து திருத்தங்கள் உரிமைகள் மசோதாவுக்கு வடிவளித்தன, பதினான்காவது திருத்தம் அமெரிக்கர்களின் தனிநபர் உரிமைகளுக்கான மைய அடிப்படையை உருவாக்குகின்றது.

அரசியல் கட்சிகள்

அமெரிக்கா இரு கட்சி அமைப்பின் கீழ் இயங்கி வருகின்றது. அனைத்து நிலைகளிலும் தேர்தல் பதவிகளுக்கு, மாநில நிர்வாகத்தின் கீழ் முதன்மை தேர்தல்கள் மூலம் அடுத்து வரும் பொது தேர்தல்களுக்கான பிரதான கட்சி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 1856 பொதுத் தேர்தல் முதலே, பிரதான கட்சிகளாக 1824 ஆம் ஆண்டில் தொடங்கிய மக்களாட்சிக் கட்சியும், 1854 ஆம் ஆண்டில் தொடங்கிய குடியரசுக் கட்சியும் தான் இருந்து வருகின்றன. உள்நாட்டு போர் காலம் முதல், ஒரே ஒரு மூன்றாவது-கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தான் - 1912 ஆம் ஆண்டில் முற்போக்கு கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் - மக்கள் வாக்களிப்பில் 20 சதவிகிதம் வரை பெற்றார்.

அமெரிக்க அரசியல் கலாச்சாரத்திற்குள், குடியரசுக் கட்சி மைய-வலதாக அல்லது "பழமைவாத" கட்சியாக கருதப்படுகிறது, ஜனநாயகக் கட்சி மைய-இடதாக அல்லது "தாராளவாத" கட்சியாகக் கருதப்படுகிறது. வடகிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை மாநிலங்களும் மற்றும் "நீல மாநிலங்கள்" எனப்படும் கிரேட் லேக்ஸ் மாநிலங்களில் சிலவும் ஏறக்குறைய தாராளவாத அடிப்படையிலானவை. தெற்கின் "சிவப்பு மாநிலங்கள்" மற்றும் பெரும் சமவெளி மற்றும் ராக்கி மலைகள் பகுதியின் அநேக மாநிலங்களும் ஒப்பீட்டளவில் பழைமைவாதமுடையவை.

2008 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற மக்களாட்சிக் கட்சியின் பராக் ஒபாமா, அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியும் இப்பதவி வகிக்கும் முதல் ஆப்பிரிக்க அமெரிக்கரும் ஆவார். முந்தைய ஜனாதிபதி அனைவரும் முழுக்க ஐரோப்பிய வம்சாவளியினர் ஆவர். 2008 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் மக்களாட்சிக் கட்சி தனது கட்டுப்பாட்டை அவை மற்றும் செனட் (Senate) இரண்டிலும் வலிமைப்படுத்தியது. 111வது அமெரிக்க நாடாளுமன்றத்தில், செனட்டில் 57 மக்களாட்சிக் கட்சியினரும், மக்களாட்சிக் கட்சியினருடன் கருத்தொருமிப்பு கொண்ட இரண்டு சுயேச்சைகள், மற்றும் 40 குடியரசுக் கட்சியினரைக் கொண்டுள்ளது (ஒரு இடம் பிரச்சினையில் உள்ளது); அவையில் 250 மக்களாட்சிக் கட்சியினரும்; 178 குடியரசுக் கட்சியினரும் உள்ளனர் (ஒரு இடம் காலியாக உள்ளது (கலிபோர்னியாவின் 32வது நாடாளுமன்ற மாவட்டம்)).

அரசியல் பிரிவுகள்

அமெரிக்கா ஐம்பது மாநிலங்களின் ஒன்றியமாக உள்ளது. ஆரம்பத்தில் பதின்மூன்று மாநிலங்கள் பிரித்தானிய ஆட்சியை எதிர்த்து போராடியதால் பதின்மூன்று நாடுகளாக உதித்தன. பிற மாநிலங்கள் போர் மூலமாகவும் அல்லது அமெரிக்காவின் பிராந்தியங்களில் இருந்து பிரித்தும் உருவானவையாகும். விதிவிலக்குகளாக வெர்மான்ட், டெக்சாஸ், மற்றும் ஹவாய் ஆகிய மாநிலங்கள் அடங்கும். இந்த மாநிலங்கள் ஒன்றியத்தில் இணைவதற்கு முன்பு சுதந்திர குடியரசாக இருந்தவை. மற்றொரு வகை விதிவிலக்கில் தொடக்கத்தில் இருந்த பதின்மூன்று மாநிலங்கள் அடங்கும். நாட்டின் வரலாற்று துவக்கத்தில், மூன்று வகையில் மாநிலங்கள் உருவாயின: வர்ஜினியாவில் இருந்து கென்டக்கி; வடக்கு கரோலினாவில் இருந்து டென்னெஸ்; மசாசூட்ஸில் இருந்து மென். அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தின் போது, மேற்கு வர்ஜினியா வர்ஜினியாவில் இருந்து உடைந்தது. கடைசியாக ஹவாய் தனது மாநில அந்தஸ்தை ஆகத்து 21, 1959 அன்று பெற்றது. மாநிலங்களுக்கு ஒன்றியத்தில் இருந்து பிரிந்து செல்ல உரிமை இல்லை.

போர்டோ ரீகோ மற்றும் கரீபியனில் உள்ள அமெரிக்க வர்ஜின் தீவுகள், அமெரிக்கன் சமோவா, குவாம், மற்றும் பசிபிக்கில் வடக்கு மரியானா தீவுகள் ஆகிய ஐந்து கடல்கடந்த பிராந்தியங்களையும் அமெரிக்கா கொண்டுள்ளது. இந்த பிராந்தியங்களில் பிறப்பவர்கள் (அமெரிக்கன் சமோவா தவிர) அமெரிக்க குடியுரிமை கொண்டவர்களாவார்கள்.

ஐக்கிய அமெரிக்காவில் மொத்தம் 50 மாநிலங்கள் உள்ளன. அவை:

அமெரிக்க ஐக்கிய நாடுகள் அலபாமாஅலாஸ்காஅரிசோனாஆர்கன்சஸ்கேலிஃபோர்னியாகொலராடோகனெக்டிகட்டெலவேர்ஃபுளோரிடாஜார்ஜியாஹவாய்இடாகோஇலினாய்இன்டியானாஐயோவாகன்சாஸ்கென்டகிலூசியானாமேய்ன்மேரிலண்ட்மசாசுசெட்ஸ்மிஷிகன்மினசோட்டாமிசிசிப்பிமிசெளரிமான்டனாநெப்ராஸ்காநெவாடாநியூ ஹாம்ஷயர்நியூ ஜெர்சிநியூ மெக்சிகோநியூ யார்க்வட கரோலினாவட டகோட்டாஒஹாயோஒக்லஹாமாஒரிகன்பென்சில்வேனியாஇறோட் தீவுதென் கரோலினாதென் டகோட்டாடென்னசிடெக்சஸ்உட்டாவேர்மான்ட்வெர்ஜீனியாவாஷிங்டன் மாநிலம்மேற்கு வெர்ஜீனியாவிஸ்கொன்சின்வயோமிங்டெலவேர்மேரிலண்ட்நியூ ஹாம்ஷயர்நியூ ஜெர்சிமசாசுசெட்ஸ்கனெக்டிகட்மேற்கு வெர்ஜீனியாவேர்மான்ட்இறோட் தீவு

வெளியுறவு மற்றும் ராணுவம்

அரசியல் மற்றும் ராணுவ செல்வாக்கினைப் பயன்படுத்துகிறது. ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக உள்ளது மேலும் நியூயார்க் நகரத்தில் ஐக்கிய நாடுகள் தலைமையகம் அமைந்துள்ளது. அனைத்து நாடுகளும் தங்களது தூதரகங்களை வாஷிங்டனில் கொண்டுள்ளன, பல நாடுகள் நாடெங்கிலும் தூதரக அலுவலகங்களை கொண்டுள்ளன. இதேபோல், ஏறக்குறைய அனைத்து நாடுகளுமே அமெரிக்காவுக்கென ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. ஆயினும், கியூபா, ஈரான், வட கொரியா, பூட்டான், சூடான், மற்றும் சீனக் குடியரசு (தைவான்) ஆகியவை அமெரிக்காவுடன் முறையான ராஜதந்திர உறவுகளைக் கொண்டிருக்கவில்லை.

அமெரிக்கா இங்கிலாந்துடன் ஒரு சிறப்பு உறவைக் கொண்டுள்ளது, அத்துடன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், இஸ்ரேல், மற்றும் சக நேட்டோ உறுப்பு நாடுகளுடனும் வலிமையான உறவுகளைக் கொண்டுள்ளது.அமெரிக்க அரசாங்கங்கள் அமைப்பு மூலமாகவும், கனடா மற்றும் மெக்சிகோவுடனான முத்தரப்பு வட அமெரிக்க தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் ஆகிய சுதந்திர சந்தை ஒப்பந்தங்கள் மூலமும் இது தனது அண்டை நாடுகளுடன் நெருக்கமாகப் பணியாற்றுகிறது. 2005 ஆம் ஆண்டில், அமெரிக்கா அதிகாரப்பூர்வ மேம்பாட்டு உதவிக்கென 27 பில்லியன் டாலர் தொகையை செலவிட்டது, இது உலகளவில் பெரும்பான்மையான பங்களிப்பாகும். ஆயினும், மொத்த தேசிய வருவாய் (GNI) பங்களிப்பில், அமெரிக்க பங்களிப்பான 0.22% இருபத்தி இரண்டு கொடை தேசங்களில் இருபதாவது இடத்தை பிடித்துள்ளது. தனியார் அறக்கட்டளைகள், பெருநிறுவனங்கள், மற்றும் கல்வி மற்றும் மத ஸ்தாபனங்கள் 96 பில்லியன் டாலர் தொகையை கொடையளித்துள்ளன. இந்த கூட்டு மொத்தமாக 123 பில்லியன் டாலர் என்பதும் உலகளாவிய அளவில் பெரும்பான்மையான பங்களிப்பு என்பதோடு GNI சதவீதத்தில் ஏழாவது இடமாகவும் அமைகிறது.

அமெரிக்க ஐக்கிய நாடுகள் 
USS "ஆபிரகாம் லிங்கன்" சூப்பர்கேரியர்

தேசத்தின் ராணுவப் படைகளின் தலைமைத் தளபதி பதவியை ஜனாதிபதி கொண்டிருக்கிறார், பாதுகாப்பு செயலாளர் மற்றும் படைவீரர்களுக்கான இணை தலைவர்கள் ஆகிய அதன் தலைவர்களையும் இவரே நியமிக்கிறார். அமெரிக்க பாதுகாப்பு துறை ஆயுதப் படையை நிர்வாகம் செய்கிறது, இராணுவம், கடற்படை, கப்பல்படை, மற்றும் விமானப் படை ஆகியவை இதில் அடக்கம். கடலோரப் பாதுகாப்பு படை அமைதிக் காலங்களில் ஹோம்லேண்ட் பாதுகாப்பு துறை மூலமும் போர் சமயங்களில் கடற்படை துறை மூலமும் செயல்படுகிறது. 2005 ஆம் ஆண்டில், ராணுவம் 1.38 மில்லியன் வீரர்களைக் கொண்டிருந்தது, இத்துடன் பல நூறாயிரம் பேர் ரிசர்வ் மற்றும் தேசிய பாதுகாப்பு படையில் இருந்தனர், மொத்தம் 2.3 மில்லியன் துருப்புகள் இருந்தனர். பாதுகாப்பு துறை சுமார் 700,000 பொதுமக்களையும் பணியமர்த்தியுள்ளது, ஒப்பந்ததாரர்களைச் சேர்க்காமல்.ராணுவ சேவை தன்னார்வ அடிப்படையிலானது, போர் சமயங்களில் தேர்ந்தெடுத்த சேவை அமைப்பு மூலம் கட்டாய படை சேர்ப்பு நிகழலாம். விமானப் படையின் பெரும் எண்ணிக்கையிலான போக்குவரத்து விமானங்கள் மற்றும் விண்வெளியில் எரிபொருள் நிரப்பும் வாகனங்கள், கடற்படையின் பதினொன்று இயங்குநிலை விமானம் தாங்கிகள், மற்றும் கடற்படையின் அட்லாண்டிக் மற்றும் பசிபிக் தொகுப்புகளில் உள்ள கடல் பயண பிரிவுகள் ஆகியவை மூலம் அமெரிக்க படைகள் வெகு துரிதமாக குறிப்பிட்ட இடங்களில் அமைக்க இயலும். அமெரிக்காவுக்கு வெளியே, 770 தளங்கள் மற்றும் இடங்களில் அண்டார்டிகா தவிர ஒவ்வொரு கண்டத்திலும் ராணுவம் நிலைகொண்டுள்ளது. இந்த அளவுக்கு உலகளாவிய இராணுவ இருப்பு கொண்டிருப்பது சில எழுத்தாசிரியர்களை அமெரிக்கா "தளங்களின் சாம்ராஜ்யத்தை" பராமரிப்பதாக சித்தரிக்க வைத்துள்ளது.

2006 ஆம் ஆண்டில் மொத்த அமெரிக்க ராணுவ செலவினமான, 528 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான தொகை, உலகளாவிய ராணுவ செலவினத்தில் 46% என்பதோடு அடுத்து வரும் பதினான்கு பெரும் தேசிய ராணுவ செலவினங்களை ஒன்றாக சேர்த்தாலும் அதனை விட மிகையானதாக இருக்கிறது. (கொள்முதல் திறன் இணை அளவுகளில், இது அடுத்து வரும் ஆறு இத்தகைய செலவினங்களை சேர்த்தாலும் அதிகமானதாகும்.) தனிநபர் செலவினமான 1,756 டாலர்கள் என்பது உலக சராசரியைக் காட்டிலும் சுமார் பத்து மடங்கு அதிகமானதாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.06% உடன், அமெரிக்க ராணுவ செலவினம் 172 நாடுகளில் 27வது இடத்தில் இருக்கிறது. 2009 ஆம் ஆண்டிற்கான முன்மொழிந்த அடிப்படை பாதுகாப்பு துறை பட்ஜெட், 515.4 பில்லியன் டாலர்கள் என்பது 2008 ஆம் ஆண்டைக் காட்டிலும் 7% அதிகமாகும், 2001 ஐக் காட்டிலும் 74% அதிகமாகும். ஈராக் போர் அமெரிக்காவுக்கு வைத்திருக்கும் செலவு 2.7 டிரில்லியன் டாலர்களை என மதிப்பிட்டுள்ளது. மே 3, 2009 நிலமையின் படி, போரில் 4,284 பேர் ராணுவ காயத்தால் உயிரிழந்தார்கள், 31,000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

பொருளாதாரம்

பொருளாதார குறியீடுகள்
வேலைவாய்ப்பின்மை 8.9%ஏப்ரல் 2009
GDP வளர்ச்சி -6.2%4Q 2008 [1.1%2008
CPI பணவீக்கம் -0.4%மார்ச் 2008-மார்ச் 2009
தேசிய கடன் $10.881 டிரில்லியன்பிப்ரவரி 26, 2009
வறுமை 12.5%2007

அமெரிக்கா ஒரு முதலாளித்துவ கலப்பு பொருளாதாரம், இது அளவற்ற இயற்கை வளங்கள், நன்கு மேம்பட்ட உள்கட்டமைப்பு, மற்றும் உயர்ந்த உற்பத்திதிறன் ஆகியவை மூலம் வளப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் கூற்றின் படி, அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 14.3 டிரில்லியன் டாலர் என்பது மொத்த உலக உற்பத்தியில் பரிவர்த்தனை விலைகளில் 23% பங்களிப்பும், கொள்முதல் திறன் இணையளவில் (PPP) மொத்த உலக உற்பத்தியில் ஏறக்குறைய 21% பங்களிப்பும் கொண்டுள்ளது. உலகின் மிகப்பெரிய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ஆக, இது 2007 ஆம் ஆண்டில் கொள்முதல் திறன் இணையளவில் (PPP) இல் மொத்த ஐரோப்பிய ஒன்றியத்தினதை விட சுமார் 4% மட்டுமே குறைவானதாக இருந்தது. உலகளவில் சராசரி தனிநபர் GDP இல் உலகளவில் பதினேழாவது இடத்திலும் PPP இல் தனிநபர் GDP இல் ஆறாவது இடத்திலும் அமெரிக்கா உள்ளது. அமெரிக்கா உலகின் மிகப் பெரும் இறக்குமதியாளராகத் திகழ்வதுடன் மூன்றாவது பெரிய ஏற்றுமதியாளராகவும் திகழ்கிறது, தனிநபர் ஏற்றுமதியளவு ஒப்பீட்டளவில் குறைவு தான். கனடா, சீனா, மெக்சிகோ, ஜப்பான், மற்றும் ஜெர்மனி ஆகியவை இதன் தலைமை வர்த்தக கூட்டாளிகளாக இருக்கின்றன. ஏற்றுமதியாகும் பொருட்களில் தலைமையில் இருப்பது எலெக்ட்ரிகல் எந்திரப்பொருட்களாகும், வாகனங்கள் தான் இறக்குமதி பொருட்களில் தலைமையிடத்தில் இருக்கிறது. உலகளாவிய போட்டித்திறன் அறிக்கையில் அமெரிக்கா ஒட்டுமொத்த வரிசையில் முதலிடம் வகிக்கிறது. சுமார் ஆறு வருடங்களுக்கும் மேல் நீடித்த விரிவாக்க காலத்திற்குப் பிறகு, டிசம்பர் 2007 முதல் அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கிறது.

2009 ஆம் ஆண்டில், தனியார் துறை பொருளாதாரத்தில் 55.3% பங்களிப்பு கொண்டிருக்கும் என மதிப்பிட்டுள்ளது, ஐக்கிய அரசாங்க நடவடிக்கை 24.1% பங்களிப்பும் மாநில மற்றும் பிராந்திய அரசாங்க நடவடிக்கை (ஐக்கிய மாற்றங்கள் உள்பட) எஞ்சிய 20.6% பங்களிப்பையும் கொண்டிருக்கும். பொருளாதாரம் உற்பத்திக்கு பிந்தைய வகையாக இருந்தது, சேவை துறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 67.8% பங்களிப்பு செய்தது. மொத்த வர்த்தக பெறுகைகளில் தலைமை வர்த்தக பிரிவாக திகழ்வது மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம்; நிகர வருவாயில் நிதி மற்றும் காப்பீடு. அமெரிக்கா ஒரு தொழில்துறை சக்தியாக திகழ்கிறது, ரசாயன தயாரிப்புகள் தலைமை உற்பத்தி பிரிவாக இருக்கிறது. அமெரிக்கா உலகின் கச்சா எண்ணெய் உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது என்பதோடு அதன் மிகப்பெரிய இறக்குமதியாளராகவும் திகழ்கிறது. எலெக்ட்ரிக்கல் மற்றும் அணு எரிசக்தி, அத்துடன் நீர்ம இயற்கை எரிவளி, சல்பர், பாஸ்பேட்டுகள் மற்றும் உப்பு ஆகியவற்றில் இது உலகின் உற்பத்தியில் முதலிடத்தை வகிக்கிறது. விவசாயம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% க்கும் குறைவாகவே பங்களிப்பு கொண்டிருக்கிற நிலையில், மக்காச்சோளம் மற்றும் சோயாபீன்ஸ் உற்பத்தியில் அமெரிக்கா உலகின் தலைமை உற்பத்தியாளராக இருக்கிறது. டாலர் வர்த்தகத்தில் நியூயார்க் பங்குச் சந்தை உலகின் மிகப் பெரியதாகும். கொக்கக் கோலாவும் மெக்டொனால்டும் உலகின் மிகவும் பிரபல வர்த்தகப் பெயர்களாக உள்ளன.

அமெரிக்க ஐக்கிய நாடுகள் 
வால் ஸ்ட்ரீட்டில் அமைந்துள்ள நியூயார்க் பங்குச் சந்தை

2005 ஆம் ஆண்டில், 155 மில்லியன் பேர் வருவாயுடன் பணியமர்ந்தனர். இவர்களில் 80% பேர் முழு நேர வேலைகள் கொண்டிருந்தனர். பெரும்பான்மையினர், 79%, சேவை துறையில் பணியமர்ந்தனர். சுமார் 15.5 பேருடன், சுகாதாரம் மற்றும் சமூக உதவி துறை வேலைவாய்ப்புக்கான முன்னணி துறைகளாக இருக்கின்றன. சுமார் 12% தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இருக்கிறார்கள், மேற்கு ஐரோப்பாவில் இது 30% ஆக இருக்கிறது. வேலைக்கு பணியமர்த்துவது மற்றும் நீக்குவதில் எளிமை விஷயத்தில் அமெரிக்கா தான் முதலிடத்தில் இருப்பதாக உலக வங்கி வரிசைப்படுத்துகிறது. 1973 மற்றும் 2003 க்கு இடையே, சராசரி அமெரிக்கருக்கான ஒரு வருட வேலையானது 199 மணி நேரங்கள் அதிகரிப்பை கண்டிருக்கிறது. இதன் ஒரு பகுதியாக, உலகின் மிக அதிக தொழிலாளர் உற்பத்தித் திறனில் தனது முதலிடத்தை அமெரிக்கா தொடர்ந்து பராமரிக்கிறது.ஆயினும், ஒரு மணி நேரத்துக்கான உற்பத்தித் திறனில் 1950 ஆம் ஆண்டுகள் தொடங்கி 1990 ஆம் ஆண்டுகளின் ஆரம்பம் வரை அது கொண்டிருந்த தலைமையிடம் இப்போது அதன் வசம் இல்லை; நார்வே, பிரான்ஸ், பெல்ஜியம், மற்றும் லக்சம்பர்க் தொழிலாளர்கள் ஒரு மணி நேரத்துக்கான உற்பத்தித் திறனில் இப்போது கூடுதல் திறம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். ஐரோப்பாவுடன் ஒப்பிடுகையில், அமெரிக்காவின் சொத்து மற்றும் கார்பரேட் வருவாய் வரி விகிதங்கள் பொதுவாக அதிகமாக இருக்கின்றன, உழைப்பு மற்றும், குறிப்பாக, நுகர்வு வரி விகிதங்கள் குறைவாக இருக்கின்றன.

வருவாய் மற்றும் மனித மேம்பாடு

அமெரிக்க ஐக்கிய நாடுகள் 
1979 மற்றும் 2005 ஆம் ஆண்டுக்கு இடையே மேல்தட்டின் 1% மற்றும் நான்கு குவின்டைல்களுக்கு வரிக்கு பிந்தைய வீட்டு வருவாயில் பணவீக்கத்திற்கு சரிசெய்த சதவீத அதிகரிப்பு (மேல் 1% பேரின் ஆதாயங்கள் கீழ் பட்டையால் பிரதிபலிக்கப்படுகிறது; கீழ் குவின்டைல் மேல் பட்டையால்)

அமெரிக்க கணக்கெடுப்பு அமைப்பின் கூற்றுப்படி, வரிக்கு முந்தைய சராசரி வீட்டு வருமானம் 2007 ஆம் ஆண்டில் 50,233 டாலர்கள். இந்த சராசரி மேரிலாண்டில் 68,080 டாலர்கள் என்பதில் இருந்து மிசிசிபியில் 36,338 டாலர்கள் என்பது வரை பரவெல்லை கொண்டிருக்கிறது. கொள்முதல் திறன் இணை பரிவர்த்தனை விகிதங்களை பயன்படுத்தி, ஒட்டுமொத்த சராசரி காண்கையில் முன்னேறிய நாடுகளின் மிகவும் வசதியான பிரிவுக்கு ஒத்து இருக்கிறது. 20 ஆம் நூற்றாண்டின் மத்தியில் கடுமையாகச் சரிவுற்ற வறுமை விகிதங்கள் 1970 ஆம் ஆண்டுகளின் ஆரம்பம் தொட்டு நிலைப்பட்டுள்ளது, ஒவ்வொரு ஆண்டும் 11-15% அமெரிக்கர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கிறார்கள், 58.5% பேர் தங்களது 25 முதல் 75 வயதுக்குள்ளான வாழ்க்கையில் குறைந்தது ஒரு வருடத்தையேனும் வறுமையில் கழிக்கிறார்கள். 2007 ஆம் ஆண்டில், 37.3 மில்லியன் அமெரிக்கர்கள் வறுமையில் வாழ்ந்தார்கள். அமெரிக்க வசதி நிலை என்பது முன்னேறிய நாடுகளில் மிகவும் கண்ணியமானதாகத் திகழ்கிறது, ஒப்பீட்டு வறுமை மற்றும் முழு வறுமை இரண்டுமே பணக்கார நாடுகளுக்கான சராசரியை விட மிகவும் குறைந்ததாக உள்ளது. அமெரிக்க வசதி நிலையானது வயது மூத்தவர்களுக்கு இடையில் வறுமையைக் குறைப்பதில் நன்கு செயல்படுகிற நிலையில், " இளைஞர்கள் ஒப்பீட்டளவில் குறைந்த உதவியையே பெறுகிறார்கள். இருபத்தியோரு தொழில்மய நாடுகளில் சிறுவர்களின் நலன் குறித்து ஆய்வு செய்த 2007 ஆம் ஆண்டு யூனிசெப் ஆய்வு ஒன்று அமெரிக்காவுக்கு கடைசிக்கு முந்தைய இடத்தை அளித்தது.

உற்பத்தித் திறனில் வலுவான அதிகரிப்பு, குறைந்த வேலைவாய்ப்பின்மை, மற்றும் குறைவான பணவீக்கம் ஆகியவை இருந்தபோதிலும் 1980 ஆம் ஆண்டு தொடங்கி வருவாய் லாபங்கள் முந்தைய தசாப்தங்களைக் காட்டிலும் மெதுவானதாக இருக்கிறது, குறைந்த பரவலுடையதாக இருக்கிறது, மற்றும் அதிகரித்த பொருளாதார பாதுகாப்பின்மை உடன் வருவதாக இருக்கிறது. 1947 ஆம் ஆண்டுக்கும் 1979 ஆம் ஆண்டுக்கும் இடையே, உண்மையான சராசரி வருவாய் அனைத்து தரப்பினருக்கும் 80%க்கும் மேல் அதிகரித்தது, ஏழை அமெரிக்கர்களின் வருமானம் பணக்காரர்களினதை விடவும் துரிதமாய் அதிகரித்தது. சராசரி வீட்டு வருமானம் 1980 ஆம் ஆண்டு தொடங்கி அனைத்து தரப்பினருக்கும் அதிகரித்தது, வீட்டில் இரண்டு பேரும் வேலைக்கு செல்வது, பாலின இடைவெளி குறைந்தது, நீண்ட வேலை நேரங்கள் ஆகியவை தான் இதற்கு முக்கிய காரணங்களாக அமைந்தன, ஆனால் வளர்ச்சி குறைந்து மேல் தட்டை நோக்கி சாய்வு கொண்டிருக்கிறது. (வரைபடத்தை காணவும்). 2005 ஆம் ஆண்டின் மொத்த அறிவித்த வருவாயில் மேலிருக்கும் 1%-21.8% பேரினது வருவாயின் பங்களிப்பு 1980 தொடங்கி இரட்டிப்பாகி இருக்கிறது, இது முன்னேறிய நாடுகளில் மிகப்பெரும் வருவாய் ஏற்றத்தாழ்வை கொண்டிருக்கும் நாடாக அமெரிக்காவை ஆக்கியிருக்கிறது. மேலிருக்கும் 1% 2005 பேர் மொத்த ஐக்கிய வரிகளில் 27.6% ஐ செலுத்துபவர்களாக இருக்கிறார்கள்; மேலிருக்கும் 10% பேர் 54.7% ஐ செலுத்துகிறார்கள். வருவாயைப் போலவே சொத்தும் அங்கங்கு குவிந்து காணப்படுகிறது: வயதுக்கு வந்தவர்களில் வசதி படைத்த 10% பேர் நாட்டின் வீட்டு சொத்துகளில் 69.8% ஐ கொண்டிருக்கிறார்கள், இது முன்னேறிய நாடுகளில் இரண்டாவது பெரிய பங்களிப்பாக இருக்கிறது. மேலிருக்கும் 1% மொத்த சொத்துகளில் 33.4% ஐ கொண்டிருக்கிறார்கள்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

அமெரிக்க ஐக்கிய நாடுகள் 
நிலவில் மனிதன் முதலில் கால் வைக்கும் நிகழ்வில் விண்வெளி வீரர் எட்வின் ஆல்ட்ரின், 1969

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி அறிவியல் ஆராய்ச்சியிலும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளிலும் அமெரிக்கா முன்னணியில் திகழ்ந்து வருகிறது. 1876 ஆம் ஆண்டில் தொலைபேசிக்கான முதல் அமெரிக்க காப்புரிமை அலெக்சாண்டர் கிரஹாம் பெல் பெற்றார். தாமஸ் எடிசனின் ஆய்வகமானது போனோகிராப், முதல் நெடுநேரம் எரியும் லைட் பல்ப், மூவி கேமரா ஆகியவற்றை உருவாக்கியது. நிக்கோலா தெஸ்லா மாறுதிசை மின்னோட்டம், ஏசி மோட்டார், ரேடியோ ஆகியவற்றை உருவாக்கினார். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ரான்சம் ஈ. ஓல்ட்ஸ் மற்றும் ஹென்றி ஃபோர்டின் தானுந்து நிறுவனங்கள் தொகுப்புவரிசையை(Assembly Line) ஊக்கப்படுத்தின. 1903 ஆம் ஆண்டில் ரைட் சகோதரர்கள், முதலாவது கட்டுப்படுத்தக்கூடிய காற்றை விட கனமான உந்துசக்தியில் இயங்கும் விமானத்தை உருவாக்கினர். 1930 ஆம் ஆண்டுகளில் நாசிசத்தின் எழுச்சியானது, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், என்ரிக்கோ பெர்மி உள்ளிட்ட பல ஐரோப்பிய விஞ்ஞானிகளை அமெரிக்காவுக்கு குடியேறச் செய்தது. இரண்டாம் உலகப் போர் சமயத்தில், மன்ஹாட்டன் திட்டம் அணு ஆயுதங்களை உருவாக்கி, அணு ஆயுதக் காலத்தை கொண்டுவந்தது. விண்வெளிப் போட்டியானது ராக்கெட் தொழில்நுட்பம், பொருளறிவியல், கம்யூட்டர்களில் துரித முன்னேற்றங்கள் ஆகியவற்றை கொண்டுவந்தது. ARPANET மற்றும் அதன் தொடர்ச்சியான இன்டர்னெட் ஆகியவற்றை அமெரிக்கா பெருமளவில் உருவாக்கியது. இன்று, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிதியில் பெருமளவு, 64%, தனியார் துறையில் இருந்து வருகிறது. அறிவியல் ஆராய்ச்சி ஆய்வுகள் மற்றும் தாக்க காரணியில் அமெரிக்கா முன்னணியில் உள்ளது. உயர்ந்த நிலை தொழில்நுட்ப நுகர்வு பொருட்களை அமெரிக்கர்கள் கொண்டிருக்கிறார்கள், அத்துடன் ஏறக்குறைய பாதி அமெரிக்க வீடுகள் அகலக்கற்றை இணைய அணுகல் கொண்டிருக்கின்றன. மரபணு மாற்றிய உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதிலும் உருவாக்குவதிலும் இந்த நாடு முதன்மையானதாக இருக்கிறது; உயிரிதொழில்நுட்ப பயிர்கள் பயிரிட்டிருக்கும் நாடும் அமெரிக்கா ஆகும்.

போக்குவரத்து

அமெரிக்க ஐக்கிய நாடுகள் 
மாநிலங்களுக்கிடையிலான நெடுஞ்சாலை அமைப்பு

2003 ஆம் ஆண்டில், 1000 அமெரிக்கர்களுக்கு 759 வாகனங்கள் இருந்தன. ஆனால் 2004 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தில் 1000 பேருக்கு 472 வாகனங்களே இருந்தன. தனிநபர் வாகனங்களில் சுமார் 40% வேன்கள், விளையாட்டு பயன்பாடு வாகனங்கள் (SUV) அல்லது இலகுரக டிரக்குகள். சராசரி அமெரிக்க மனிதர் (அனைத்து ஓட்டுநர்கள் மற்றும் ஓட்டுநரல்லாதவர்கள்) ஒவ்வொரு நாளும் சராசரியாக பயணத்தில் வாகனம் ஓட்டுவதில் 29 மைல்கள் (47 km) பயணிக்கிறார்கள் . அமெரிக்காவின் நகரங்களுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து ஒப்பீட்டளவில் பலவீனமானது. மொத்த அமெரிக்க வேலைப் போக்குவரத்திலும் வெறும் 9% மட்டுமே பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துகிறார்கள், இது ஐரோப்பாவில் 38.8% ஆக இருக்கிறது. மிதிவண்டி பயன்பாடு என்பது மிக குறைவாக, ஐரோப்பிய அளவுகளுக்கு மிகவும் குறைந்ததாக இருக்கிறது. பயணிகள் விமானத் துறை முழுக்க தனியார் வசமே இருக்கிறது, அதேசமயம் அநேக பெரிய விமானநிலையங்கள் அரசுக்கு சொந்தமானவை. சுமக்கும் பயணிகளின் அளவில் உலகின் ஐந்து மிகப்பெரிய விமானசேவை நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களே: அமெரிக்கன் ஏர்லைன்ஸ் முதலிடம். உலகின் முப்பது பரபரப்பு மிகுந்த பயணிகள் விமானநிலையங்களில் பதினாறு அமெரிக்காவில் இருக்கின்றன, பட்டியலில் முதலிடம் பிடிக்கும் ஹார்ட்ஸ்பீல்டு-ஜாக்சன் அட்லாண்டா சர்வதேச விமானநிலையம் (ATL) உட்பட.

எரிசக்தி

அமெரிக்காவின் எரிசக்தி சந்தை ஒரு ஆண்டிற்கு 29,000 டெராவாட் அவர்ஸ் (Terawatthour) (ஆக்கசக்தி மணிகள்). தனிநபர் எரிசக்தி நுகர்வு என்பது வருடத்திற்கு 7.8 டன் கச்சா எண்ணெய்க்கு சமமானதாக இருக்கிறது. ஒப்பீட்டில் ஜெர்மனியில் 4.2 டன்களாகவும் கனடாவில் 8.3 டன்களாகவும் இருக்கிறது. 2005 ஆம் ஆண்டில், 40% எரிசக்தி பெட்ரோலியத்தில் இருந்தும், 23% நிலக்கரியில் இருந்தும், 22% இயற்கை எரிவாயுவில் இருந்தும் கிடைத்தது. எஞ்சியவை அணு சக்தி மூலமாகவும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலமாகவும் கிடைக்கின்றது. அமெரிக்கா உலகின் மிகப்பெரும் பெட்ரோலிய நுகர்வு நாடாக இருக்கிறது. பல தசாப்தங்களாக, பல பிற முன்னேறிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் அணு சக்தி என்பது குறைவாகவே தயாரிக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டில், பல்வேறு புதிய அணு உலைகளுக்கான ஆரம்பக் கட்ட வேலைகளை அரசு செய்தது.

மக்கள் வாழ்க்கை கணக்கியல்

அமெரிக்க ஐக்கிய நாடுகள் 
கவுன்டி வாரியாக பெரிய பழங்குழுக்கள், 2000

அமெரிக்க மக்கள்தொகையில் சுமார் 11.2 மில்லியன் மக்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று, அமெரிக்காவுக்கு சட்டவிரோத புலம்பெயர்வு அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு அமைப்பு தெரிவிக்கிறது. சீனா மற்றும் இந்தியாவை அடுத்து உலகின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட மூன்றாவது நாடாக அமெரிக்கா திகழ்கிறது. இதன் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 0.89%, ஒப்பிடுகையில் ஐரோப்பிய ஒன்றியத்தினது 0.16%. பிறப்பு விகிதம் பிறப்பு விகிதம் ஆயிரம் பேருக்கு 14.16, இது உலக சராசரியை விட 30% குறைவு, அல்பேனியா மற்றும் அயர்லாந்து தவிர்த்து வேறெந்த ஒரு ஐரோப்பிய நாட்டினதை விடவும் இது அதிகமாகும். அமெரிக்க நிரந்தரக் குடியுரிமை அட்டை 2008 நிதி ஆண்டில், 1.1 மில்லியன் குடியேற்றத்தினருக்கு சட்டப்பூர்வ குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க சட்டப்பூர்வ நிரந்தர குடியுரிமைவாசிகள்: 2008” இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக மெக்சிகோ புதிய குடியேற்றவாசிகளுக்கான பிரதான மூலமாக இருக்கிறது; 1998 முதல் சீனா, இந்தியா, மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் அதிக எண்ணிக்கையிலான மக்களை அனுப்பும் நாடுகளில் தலைமை நான்கில் இருக்கின்றன. அமெரிக்காவில் மட்டுமே மிக அதிக அளவிலான மக்கள்தொகை அதிகரிப்புகளை மதிப்பிடும் ஒரே தொழில்மய நாடாகும்.

அமெரிக்கா ஒரு பன்முக மக்கள்தொகை அமைப்பைக் கொண்டுள்ளது - முப்பத்தோரு பழமையான குழுக்கள் ஒரு மில்லியன் உறுப்பினர்களுக்கும் அதிகமாய்க் கொண்டுள்ளன. வெள்ளை அமெரிக்கர்கள்தான் மிகப்பெரிய இன குழு ஆவார்கள், ஜெர்மன் அமெரிக்கர்கள், ஐரிஷ் அமெரிக்கர்கள், மற்றும் ஆங்கில அமெரிக்கர்கள் ஆகியோர் நாட்டின் நான்கு மிகப்பெரும் பழமைக் குழுக்களில் மூன்றை கொண்டுள்ளார்கள். ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் தான் நாட்டின் மிகப்பெரிய இன சிறுபான்மையினர் மற்றும் மூன்றாவது பெரிய பழைமை குழுவாவர். ஆசிய அமெரிக்கர்கள் நாட்டின் இரண்டாவது பெரிய இன சிறுபான்மையினராக இருக்கிறார்கள்; இரண்டு மிகப்பெரிய ஆசிய அமெரிக்க பழமைக் குழுக்களாக சீனர் மற்றும் பிலிப்பைன்சினர் உள்ளனர். 2007 ஆம் ஆண்டில், அமெரிக்க மக்கள்தொகையில் ஏதேனும் வகை அமெரிக்க இந்தியர்கள் அல்லது அலாஸ்கா பூர்வீக குலத்தை (முழுக்க இத்தகைய குலத்தில் இருந்து மட்டும் 2.9 மில்லியன் பேர்) சேர்ந்தவர்கள் சுமார் 4.5 மில்லியன் பேர் இருந்தனர் மற்றும் 1மில்லியன் பேருக்கும் அதிகமானோர் ஏதேனும் வகை ஹவாய் பூர்வீகத்தினராகவோ அல்லது பசிபிக் தீவு குலத்தை சேர்ந்தவர்களாகவோ (முழுக்க இவர்கள் மட்டும் 0.5 மில்லியன்) இருந்தனர்.

இனம்/குலம் (2007)
வெள்ளையர் 80.0%
ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் 12.8%
ஆசியர்கள் 4.4%
பூர்வீக அமெரிக்கர்கள் மற்றும் அலாஸ்கா பூர்விகத்தினர் 1.0%
பூர்வீக ஹவாய் தீவினர் மற்றும் பசிபிக் தீவினர் 0.2%
பலஇனத்தவர் 1.6%
(ஏதேனும் இனத்தை சேர்ந்த ) ஹிஸ்பானிக் அல்லது லத்தினோ 15.1%

எசுப்பானிய மற்றும் லத்தீன் அமெரிக்கர்களின் (இந்த பதங்கள் அதிகாரப்பூர்வமாக ஒன்றோடொன்று மாற்றிக்கொள்ளலாம்.) மக்கள்தொகை வளர்ச்சி ஒரு பெரும் மக்கள் சமூகவியல் போக்காகும். எசுப்பானிய வம்சாவளியை சேர்ந்த 45.4 மில்லியன் அமெரிக்கர்கள் ஒரு தனித்துவமான "இனத்தை" பங்களிப்பதாக மக்கள்தொகை கணக்கெடுப்பு அமைப்பால் அடையாளம் காணப்பட்டுள்ளது; 64% ஹிஸ்பானிக் அமெரிக்கர்கள் மெக்சிகோ வம்சாவளியினர். 2000 மற்றும் 2007 ஆம் ஆண்டுக்கு இடையில், நாட்டின் ஹிஸ்பானிக் மக்கள்தொகை 27% உயர்ந்தது, அதே சமயத்தில் ஹிஸ்பானியர் அல்லாத மக்கள்தொகை வெறும் 3.6% மட்டுமே வளர்ந்தது. இந்த வளர்ச்சியில் பெரும்பகுதி குடியேற்றத்தால் நிகழ்ந்ததாகும்; 2007 ஆம் ஆண்டில், அமெரிக்க மக்கள்தொகையில் 12.4% வெளிநாட்டில் பிறந்தவர்கள், அதில் 54% பேர் லத்தீன் அமெரிக்காவில் பிறந்தவர்கள். குழந்தைப்பேறும் ஒரு காரணியாக இருக்கிறது; சராசரி ஹிஸ்பானிக் பெண் ஒருவர் தனது வாழ்நாளில் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுக்கிறாள். ஒப்பீட்டளவு மகப்பேறு விகிதம் ஹிஸ்பானியர் அல்லாத கறுப்பின பெண்களிடையே 2.2 ஆகவும் ஹிஸ்பானியர் அல்லாத வெள்ளை இன பெண்களிடையே 1.8 சதவீதமாகவும் (இடப்பெயர்ச்சி விகிதமான 2.1 க்கு கீழே) இருக்கிறது. சிறுபான்மையினர் (மக்கள்தொகை கணக்கெடுப்பு அமைப்பின் வரையறை படி, ஹிஸ்பானியர் அல்லாத, பல இன வெள்ளையர் அல்லாத அனைவரும்) மக்கள்தொகையில் 34% ஆக இருக்கிறார்கள்; இவர்கள் 2042 வாக்கில் பெரும்பான்மையினர் ஆகி விடுவர் என மதிப்பிட்டுள்ளது.

மக்கள் தொகை மிகுந்த இடங்கள்
நிலை உள்நகரம் மாநகர மக்கள்தொகை மாநகரப் புள்ளிவிபரப் பகுதி வலயம்
அமெரிக்க ஐக்கிய நாடுகள் 
நியூயோர்க் நகரம்

அமெரிக்க ஐக்கிய நாடுகள் 
லொஸ் ஏஞ்சல்ஸ்
1 நியூயோர்க் நகரம் 19,015,900 நியூ யோர்க்-வடக்கு நியூ ஜேர்சி-லோங் தீவு, NY–NJ–PA MSA வடகிழக்கு
2 லொஸ் ஏஞ்சல்ஸ் 12,944,801 லொஸ் ஏஞ்சல்ஸ்–லோங் கடற்கரை–சன்டா அனா, CA MSA மேற்கு
3 சிகாகோ 9,504,753 சிகாகோ–ஜோலியட்–நேப்பர்வில்லே, IL–IN–WI MSA நடுமேற்கு
4 டாலஸ் 6,526,548 டாலஸ்–ஃபோர்ட்வேர்த்–ஆலிங்டன், TX MSA தெற்கு
5 ஹியூஸ்டன் 6,086,538 ஹியூஸ்டன்–சுகர்லான்ட்–பேடவுன், TX MSA தெற்கு
6 பிலடெல்பியா 5,992,414 பிலடெல்பியா-கம்டன்–வில்மிங்டன், PA–NJ–DE–MD MSA வடகிழக்கு
7 வாசிங்டன், டி. சி. 5,703,948 வாசிங்டன்–ஆர்லிங்டன்–அலெக்சாந்திரியா, DC–VA–MD–WV MSA தெற்கு
8 மயாமி 5,670,125 மயாமி–Fort Lauderdale–Pompano Beach, FL MSA தெற்கு
9 அட்லான்டா 5,359,205 அட்லான்டா–Sandy Springs–Marietta, GA MSA தெற்கு
10 பாஸ்டன் 4,591,112 பாஸ்டன்–கேம்பிரிட்ஜ்–குயின்சி, MA–NH MSA வடகிழக்கு
2011 ஐ.அ. மக்கள்தொகை கணக்கெடுப்பைத் தழுவியது

79% அமெரிக்கர்கள் நகர்ப்புற பகுதிகளில் (கணக்கெடுப்பு அமைப்பின் வரையறை படி, புறநகர் பகுதிகளும் இதில் அடக்கம்) வாழ்கிறார்கள்; இதில் சுமார் பாதியளவினர் 50,000 க்கும் அதிகமாக மக்கள்தொகை கொண்ட நகரங்களில் வசிக்கிறார்கள். மக்கள்தொகை வரிசையில் அமெரிக்க நகரங்களின் பட்டியல் 2006 ஆம் ஆண்டில், 254 இடங்கள் 100,000 க்கும் அதிகமாக மக்கள்தொகை கொண்டவையாக இருந்தன, ஒன்பது நகரங்களிலும் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கிறார்கள், நான்கு உலக நகரங்கள் (நியூயார்க் நகரம், லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ, மற்றும் ஹவுஸ்டன் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்டுள்ளன. அமெரிக்க மெட்ரோபொலிடன் புள்ளிவிவரப் பகுதிகளின் அட்டவணை 1 மில்லியனுக்கு அதிகமான மக்கள்தொகையுடன் ஐம்பது மெட்ரோபொலிட்டன் பகுதிகள் இருக்கின்றன. ஐம்பது வேகமாய் வளரும் மெட்ரோ பகுதிகளில், இருபத்தி-மூன்று மேற்கிலும் இருபத்தி ஐந்து தெற்கிலும் உள்ளன. அட்லாண்டா, டல்லாஸ், ஹவுஸ்டன், பீனிக்ஸ் மற்றும் கலிபோர்னியாவின் இன்லாண்ட் எம்பயர் ஆகிய மெட்ரோ பகுதிகள் அனைத்தும் 2000 மற்றும் 2006 ஆம் ஆண்டிற்கு இடையே மில்லியனில் நான்கில் மூன்று பங்கிற்கும் அதிகமாக மக்கள்தொகையில் உயர்வை கண்டுள்ளன.

மொழி

மொழிகள் (2005)
ஆங்கில மொழி (மட்டும்) 216.2 மில்லியன்
ஸ்பானிய மொழி, கிரியோல் உள்பட 32.2 மில்லியன்
சீன மொழி 2.3 மில்லியன்
பிரெஞ்சு மொழி், கிரியோல் உள்பட 1.9 மில்லியன்
டகலாக் மொழி 1.4 மில்லியன்
வியட்நாமிய மொழி 1.1 மில்லியன்
செருமன் 1.1 மில்லியன்

ஆங்கிலம் பயன்பாட்டு தேசிய மொழியாகும். ஐக்கிய மட்டத்தில் அதிகாரப்பூர்வ மொழி ஒன்றும் இல்லை என்றாலும், அமெரிக்க இயல்புபடுத்தும் அவசியப்பாட்டு சட்டங்கள் போன்ற சில சட்டங்கள் ஆங்கிலத்தை தரப்படுத்துகின்றன. 2005 ஆம் ஆண்டில், ஐந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்ட, சுமார் 216 மில்லியன் பேர், அல்லது மக்கள்தொகையில் 81% பேர் வீடுகளில் ஆங்கிலத்தை மட்டும் பேசுபவர்களாக இருந்தனர். மக்கள்தொகையில் 12% பேர் வீடுகளில் பேசும் மொழியாக இருக்கும் ஸ்பானிய மொழி பொதுவான புழக்கத்தில் இருக்கும் இரண்டாம் பெரிய மொழியாகவும், பரந்த அளவில் பயன்படும் அந்நிய மொழியாகவும் இருக்கிறது. ஆங்கிலத்தை குறைந்தபட்சம் இருபத்தி எட்டு மாநிலங்களிலேனும் உள்ளபடியே அதிகாரப்பூர்வ மொழியாக மாற்றுவதற்கு அமெரிக்கர்கள் சிலர் பரிந்துரைக்கின்றனர். ஹவாய் அரசு சட்டத்தின் படி ஹவாயில் ஹவாய் மொழி மற்றும் ஆங்கிலம் அதிகாரப்பூர்வ மொழிகளாக இருக்கின்றன. நியூ மெக்சிகோ ஆங்கிலம் மற்றும் ஸ்பேனிஷையும், லூசியானா ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சையும் பயன்படுத்துவதற்கான சட்டங்களை கொண்டிருக்கின்றன என்றாலும் இரண்டு மாநிலங்களிலுமே அதிகாரப்பூர்வ மொழி என்று எதுவும் இல்லை. கலிபோர்னியா போன்ற பிற மாநிலங்கள் நீதிமன்ற படிவங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட அரசு ஆவணங்களை ஸ்பேனிஷ் வடிவத்திலும் வெளியிட கட்டாயமாக்கியிருக்கின்றன. பல தீவுக்குட்பட்ட பிராந்தியங்கள் ஆங்கிலத்துடன் சேர்த்து தங்களது பூர்வீக மொழிகளுக்கும் அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கியுள்ளன: சமோவ மொழி மற்றும் கமாரோ மொழி முறையே அமெரிக்க சமோ மற்றும் குவாம் மூலம் அங்கீகாரம் பெற்றிருக்கிறது; வடக்கு மரியானா தீவுகள் கரோலினியன் மற்றும் கமாரோவுக்கு அங்கீகாரமளித்துள்ளது; பூர்டோ ரிகோவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஸ்பேனிஷ் இருக்கிறது.

மதம்

அமெரிக்க ஐக்கிய நாடுகள் 
ஒரு தெற்கத்திய ஞானஸ்நான திருச்சபை; அநேக அமெரிக்கர்கள் கிறிஸ்தவராக அடையாளம் காண்கின்றனர்

அதிகாரப்பூர்வமாக அமெரிக்கா ஒரு மதச்சார்பற்ற நாடு; அமெரிக்க அரசியல்சட்டத்தின் முதல் திருத்தம் மதத்தினை சுதந்திரமாய் பின்பற்ற பாதுகாப்பளிப்பதோடு எந்த மதரீதியான ஆட்சியை ஆமோதிபபதையும் தடை செய்கிறது. 2002 ஆம் ஆண்டு ஆய்வு ஒன்றில், மதம் "தங்கள் வாழ்வில் ஒரு வெகு முக்கியமான பாத்திரத்தை ஆற்றியதாக" 59% அமெரிக்கர்கள் தெரிவித்ததார்கள், இது வேறு எந்த பணக்கார நாட்டினதை விடவும் மிக அதிக எண்ணிக்கையாகும். அமெரிக்காவில் கிறித்தவம் 2007 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு படி, வயதுக்கு வந்தோரில் 78.4% பேர் தங்களை கிறிஸ்தவர்களாக அடையாளப்படுத்திக் கொண்டனர், புரொட்டஸ்டன்ட்வாதம் இது 1990 இல் இருந்த 86.4% என்பதில் இருந்து சரிவு கண்டிருக்கிறது. ரோமன் கத்தோலிக்கர்கள் 23.9% ஆகவும், [[சீர்திருத்தத் திருச்சபை |புரொட்டெஸ்டன்ட்கள்]] 51.3% ஆகவும் இருந்தனர். மக்கள்தொகையில் 26.3% ஆக இருக்கும் வெள்ளை எவாஞ்சலிகள் நாட்டின் மிகப்பெரும் மதக்குழு வகையினர் என்று இந்த ஆய்வு வகைப்படுத்துகிறது; மற்றுமொரு ஆய்வு அனைத்து இனங்களையும் சேர்ந்த மொத்த எவாஞ்சலிகல்கள் 30-35% இருப்பர் என மதிப்பிடுகிறது. 2007 ஆம் ஆண்டு கிறிஸ்தவரல்லாத மொத்த மதத்தினர் எண்ணிக்கை 4.7 சதவீதமாக உயர்வு கண்டிருந்தது, இது 1990 ஆம் ஆண்டில் 3.3% ஆக இருந்தது. கிறிஸ்தவ மதம் அல்லாதவற்றில் முன்னணியில் இருப்பது ஜூதாயிசம் (1.7%), புத்த மதம் (0.7%), இசுலாம் (0.6%), இந்து மதம் (0.4%), மற்றும் ஒன்றுபட்ட பிரபஞ்சவாதம் (0.3%). தங்களை கடவுள்மறுப்பாளர்களாக, நாத்திகர்களாக, அல்லது வெறுமனே தங்களுக்கு மதமில்லை என்பவர்களாக கூறிக் கொள்வோர் எண்ணிக்கை 1990 ஆம் ஆண்டில் 8.2% ஆக இருந்து, 2007 ஆம் ஆண்டில் 16.1% ஆக அதிகரித்துள்ளது, இங்கிலாந்து (2005: 44%) மற்றும் ஸ்வீடன் (2005: 85%) போன்ற தொழில்மயத்திற்கு பிந்தைய நாடுகளைக் காட்டிலும் இது குறிப்பிடத்தக்க மட்டத்திற்கு குறைவானதாகும், ஆனால் இது உலகளாவிய விகிதத்தை விட (2005: 12%) அதிகமானது.

கல்வி

அமெரிக்க ஐக்கிய நாடுகள் 
மொன்ரோ நகரியம், நியூ செர்சி பள்ளி
அமெரிக்க ஐக்கிய நாடுகள் 
சுமார் 80% அமெரிக்க கல்லூரி மாணவர்கள் வர்ஜீனியா பல்கலைக்கழகம் போன்ற பொதுப் பல்கலைக்கழகங்களில் பயில்கிறார்கள், தாமஸ் ஜெபர்சனால் நிறுவிய ஒரு உலக மரபு மையம்.

அமெரிக்க பொதுக் கல்வி மாநில மற்றும் பிராந்திய அரசாங்கங்கள் மூலம் இயங்குகிறது, அமெரிக்க கல்வித் துறை மூலம் ஐக்கிய உதவிகள் மீதான கட்டுப்பாடுகள் வழியாக இது கட்டுப்படுத்துகிறது. அநேக மாநிலங்களில் சிறுவர்கள் ஆறு அல்லது ஏழு வயது தொடங்கி (பொதுவாக, கின்டர்கார்டன் அல்லது முதலாம் வகுப்பு) அவர்களுக்கு பதினெட்டு வயதாகும் வரை (பொதுவாக 12 ஆம் வகுப்பு, அவர்களது உயர்நிலைப் பள்ளியின் நிறைவு) பள்ளிக்கு செல்கிறார்கள்; சில மாநிலங்கள் சிறுவர்களை பதினாறு அல்லது பதினேழு வயதில் வெளியேற அனுமதிக்கின்றன. திருச்சபை பள்ளி சுமார் 12% சிறுவர்கள் திருச்சபை அல்லது பிரிவுகளினுடையதல்லாத தனியார் பள்ளிகளில் பயில்கின்றன. சுமார் 2% சிறுவர்களுக்கு அதிகமானவர்கள் மட்டும் வீட்டிலேயே கல்வி பயில்கிறார்கள். உயர்கல்விக்கான அமெரிக்க நிறுவனங்களின் பட்டியல் அமெரிக்கா பல போட்டித்திறன் மிகுந்த தனியார் மற்றும் அரசாங்கத்தினுடைய உயர்கல்விக்கான கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ளது, அத்துடன் திறந்த அனுமதிக் கொள்கைகளுடனான பிராந்திய சமுதாயக் கல்லூரிகளும் உள்ளன. இருபத்தி ஐந்து அல்லது அதை விட வயது மிகுந்த அமெரிக்கர்களில், 84.6% பேர் உயர்நிலைப் பள்ளியில் தேறியவர்கள், 52.6% ஏதேனும் கல்லூரி கல்வி பெற்றவர்கள், 27.2% ஒரு இளநிலைப் பட்டத்தையும் 9.6% பேர் பட்டதாரிகளாகவும் இருக்கிறார்கள். அடிப்படை எழுத்தறிவு விகிதம் சுமார் 99% ஆக இருக்கிறது. ஐக்கிய நாடுகள் அவை அமெரிக்காவுக்கு 0.97 கல்விக் குறியீடை அளித்து உலகில் அதற்கு 12வது இடத்தை இணைந்து பெறச் செய்துள்ளது.

சுகாதாரம்

அமெரிக்காவின் சராசரி ஆயுள் காலமான பிறப்பு சமயத்தில் 77.8 வருடங்கள் என்பது மேற்கு ஐரோப்பாவின் ஒட்டுமொத்த அளவை விட ஒரு வருடம் குறைவானது, நார்வே, சுவிட்சர்லாந்து, மற்றும் கனடாவை விடவும் மூன்று முதல் நான்கு வருடங்கள் குறைவானதாகும். கடந்த இரண்டு தசாப்தங்களில், சராசரி ஆயுள்கால வரிசைப்பட்டியலில் நாட்டின் இடம் உலக அளவில் 11ம் இடத்தில் இருந்து 42வது இடத்திற்கு சரிந்துள்ளது. குழந்தை இறப்பு இதேபோல் ஆயிரம் பேருக்கு 6.37 என்கிற விகிதத்தில் உள்ளது. குழந்தை இறப்பு விகிதமும் அமெரிக்காவை 221 உலக நாடுகளில் 42வது இடத்தில் அனைத்து மேற்கு ஐரோப்பா நாடுகளுக்கும் பிந்தைய இடத்தில் நிறுத்துகிறது. அமெரிக்காவின் புற்றுநோயில் பிழைப்போர் விகிதம் உலகில் மிகப் பெரியதாக உள்ளது. வயதுக்கு வந்த குடிமக்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கினர் குண்டாகவும், இன்னொரு பங்கினர் உடல் எடை மிகுந்தவர்களாகவும் உள்ளனர், தொழில்மய உலகப் பகுதிகளில் மிக அதிகமான அளவுகொண்ட உடல்பெருக்க விகிதம் கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் இரட்டிப்பாகியுள்ளது. உடல்பெருக்கம் தொடர்பான இரண்டாம் வகை நீரிழிவு நோயானது அமெரிக்க சுகாதார வல்லுநர்களால் தொற்றுநோயாக கருதப்படுகிறது. அமெரிக்காவின் விடலைப் பருவ கர்ப்ப விகிதம் 1,000 பெண்களுக்கு 79.8 ஆக இருக்கிறது, இது பிரான்ஸ் அளவைக் காட்டிலும் ஏறக்குறைய நான்கு மடங்கும், ஜெர்மனி அளவைக் காட்டிலும் ஐந்து மடங்கும் அதிகமாகும். விருப்பத்தின் பேரில் கருத்தடை சட்டப்பூர்வமானதாகும், பெரும் சர்ச்சைக்குள்ளானதாகும். பல மாநிலங்கள் இந்த நடைமுறைகளுக்கு பொது நிதியை தடை செய்கின்றன, காலம் தள்ளிய கருத்தடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கின்றன, சிறுமிகளுக்கு பெற்றோர் அறிவிப்பை கோருகின்றன, காத்திருக்கும் காலத்தையும் கட்டாயமாக்குகின்றன. கருத்தடை விகிதம் வீழ்ச்சியுறுகிற சமயத்திலும், உயிருடன் பிறக்கும் 1,000 குழந்தைகளுக்கு கருத்தடை செய்யும் விகிதம் 241, மற்றும் 15-44 வயதுக்குட்பட்ட பெண்கள் 1,000 பேருக்கு 15 பேர் என்கிற கருத்தடை விகிதமும் அநேக மேற்கத்திய நாடுகளை விட அதிகமானதாகும்.

அமெரிக்க ஐக்கிய நாடுகள் 
ஹவுஸ்டனில் இருக்கும் டெக்சாஸ் மெடிக்கல் சென்டர், உலகின் மிகப்பெரும் மருத்துவ மையம்

அமெரிக்க சுகாதார பாதுகாப்பு அமைப்பு வேறு எந்த நாட்டினை விட அதிகமான தொகை செலவிடுகிறது, தனிநபருக்கான செலவின அடிப்படையிலும் சரி மொத்த உள்நாட்டு உற்பத்தி சதவிகித அடிப்படையிலும் சரி. 2000 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு பொறுப்புணர்வில் முதலிடத்தை அமெரிக்க சுகாதார அமைப்புக்கு அளித்தது, ஆனால் ஒட்டுமொத்த செயல்பாட்டில் 37வது இடமளித்தது. மருத்துவத்துறை புதுப்படைப்புகளில் அமெரிக்கா முன்னணியில் திகழ்கிறது.2004 ஆம் ஆண்டில், உயிரிமருத்துவ ஆராய்ச்சியில் தனிநபருக்கான செலவினத்தில் ஐரோப்பாவைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக தொழில்துறை அல்லாத பிரிவு செலவளித்தது.

மற்ற அனைத்து முன்னேறிய நாடுகள் போல் அல்லாமல், அமெரிக்காவில் சுகாதார பாதுகாப்பு எல்லை உலகபரவல் இன்றி இருக்கிறது. 2004 ஆம் ஆண்டில், தனியார் காப்பீடு நிறுவனத்தினர் தனிநபர் சுகாதார செலவினங்களில் 36% செலவிட்டனர், தனியார் கைகளில் இருந்தான தொகை 15% செலவுக்கு உதவியது, ஐக்கிய, மாநில, மற்றும் பிராந்திய அரசாங்கங்கள் 44%க்கு செலவிட்டன. 2005 ஆம் ஆண்டில், 46.6 மில்லியன் அமெரிக்கர்கள், மக்கள்தொகையில் 15.9% பேர், காப்பீடு இன்றி இருந்தனர், இது 2001 ஆம் ஆண்டின் அளவைக் காட்டிலும் 5.4 மில்லியன் அதிகமாகும். இந்த அதிகரிப்புக்கான முக்கிய காரணம் பணியமர்த்துபவர்கள் ஆதரவிலான சுகாதார காப்பீடு கொண்ட அமெரிக்கர்களின் எண்ணிக்கையில் நிகழ்ந்த சரிவே ஆகும். காப்பீடு இல்லாத மற்றும் போதிய காப்பீடு இல்லாத அமெரிக்கர்கள் என்பது - இவர்களின் எண்ணிக்கை மதிப்பீடுகள் பரந்த அளவில் வேறுபடுகின்றன - ஒரு பெரும் அரசியல் பிரச்சினையாக இருக்கிறது. 2006 ஆம் ஆண்டில், ஒட்டுமொத்த சுகாதார காப்பீட்டை கட்டாயமாக்கிய முதல் மாநிலமாக மசாசூட்ஸ் ஆனது.

குற்றம் மற்றும் சட்ட அமலாக்கம்

அமெரிக்க ஐக்கிய நாடுகள் 

சட்ட அமலாக்கம் என்பது அமெரிக்காவில் பிராந்திய போலிசார் மற்றும் ஷெரிப் துறைகளின் பிரதான பொறுப்பாக உள்ளது, மாநில போலிசார் அகன்ற சேவைகளை வழங்குகின்றனர். ஐக்கிய பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) மற்றும் அமெரிக்க மார்ஷல்கள் சேவை ஆகியவை சிறப்பு கடமைகளை செயல்படுத்துகின்றன. ஐக்கிய மட்டத்தில் ஏறக்குறைய ஒவ்வொரு மாநிலத்திலும், நீதி வழங்கல் ஒரு பொது சட்ட அமைப்பின் கீழ் நடைபெறுகிறது. அநேக குற்ற வழக்குகளை மாநில நீதிமன்றங்கள் விசாரிக்கின்றன; சில குறிப்பிட்ட வகை குற்றங்களையும் மற்றும் மாநில அமைப்புகளில் வரும் மேல்முறையீடுகளையும் ஐக்கிய நீதிமன்றங்கள் கையாளுகின்றன.

முன்னேறிய நாடுகளில், வன்முறைக் குற்ற அளவுகளில் சராசரிக்கும் அதிகமான அளவை அமெரிக்கா கொண்டுள்ளது, குறிப்பாக உயர்ந்த அளவு துப்பாக்கி வன்முறை மற்றும் கொலைக்குற்றங்கள் நிகழ்கின்றன. 2007 ஆம் ஆண்டில், 100,000 பேருக்கு 5.6 கொலைகள் நிகழ்ந்தன, இது அண்டை நாடான கனடாவைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமான அளவாகும். 1991 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளுக்கு இடையே 42% வரை சரிவு கண்ட அமெரிக்க கொலைக்குற்ற விகிதம் பின் தொடர்ந்து ஏறக்குறைய சீராக இருக்கிறது. துப்பாக்கி வைத்திருக்கும் உரிமை என்பது சர்ச்சைக்குரிய அரசியல் விவாதமாய் இருக்கிறது.

ஆவணப்படுத்திய சிறைக்கைதிகள் விகிதம் மற்றும் மொத்த சிறைவாசிகள் எண்ணிக்கையில் உலகின் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா ஆகும். 2008 ஆம் ஆண்டு துவக்கத்தில், 2.3 மில்லியன் பேருக்கும் அதிகமானோர் சிறையிலிருந்தனர், இது வயதுக்கு வந்த 100 பேருக்கு 1 என்பதை விட அதிகமாகும். இப்போதைய விகிதம் 1980 ஆம் ஆண்டு அளவைக் காட்டிலும் ஏழு மடங்கு அதிகமாகும். வெள்ளை இன ஆண்களைக் காட்டிலும் ஆறு மடங்கு அதிகமாகவும் ஹிஸ்பானிக் ஆண்களை விட மூன்று மடங்கு அதிகமாகவும் ஆப்பிரிக்க அமெரிக்க ஆண்கள் சிறைப்படுகிறார்கள். 2006 ஆம் ஆண்டில், அமெரிக்க சிறைவைப்பு விகிதம் அடுத்த உயர்ந்த விகிதத்தில் இருக்கும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) நாடான போலந்தைக் காட்டிலும் மூன்று மடங்கிற்கும் அதிகமாக இருந்தது. நாட்டின் உயர்ந்த சிறைவைப்பு விகிதத்திற்கான முக்கிய காரணம் தண்டனையளித்தலும் மருந்துக் கொள்கைகளுமாகும். அநேக மேற்கு நாடுகளில் தடை செய்தபோதும், மரண தண்டனை என்பது அமெரிக்காவில் முப்பத்தி ஆறு மாநிலங்களில் குறிப்பிட்ட ஐக்கிய மற்றும் ராணுவக் குற்றங்களுக்கு அளிக்கப்படுகிறது. 1976 ஆம் ஆண்டில், அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நான்கு ஆண்டு நிறுத்திவைப்புக்கு பிறகு மீண்டும் மரண தண்டனையை மறுகொணர்வு செய்த பின், 1,000 க்கும் அதிகமான முறை இத்தண்டனைகளை வழங்கியுள்ளது. பாகிஸ்தான் 2006 ஆம் ஆண்டில், உலகில் அதிகமாக மரணதண்டனை அளித்த நாடுகளின் வரிசையில் அமெரிக்கா ஆறாவது இடம் பிடித்தது, சீனா, ஈரான், பாகிஸ்தான், ஈராக், மற்றும் சூடான் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து. நியூ ஜெர்சி 2007 ஆம் ஆண்டில், 1976 சுப்ரீம் கோர்ட் முடிவுக்கு பிறகு சட்டப்பூர்வமாக மரண தண்டனையை தடை செய்யும் முதல் மாநிலமாக நியூ மெக்சிகோ ஆனது, அதனைத் தொடர்ந்து 2009 ஆம் ஆண்டில் நியூ மெக்சிகோ இதனை அமல்படுத்தியது.

கலாச்சாரம்

அமெரிக்க ஐக்கிய நாடுகள் 
அமெரிக்க கலாச்சார அடையாளங்கள்: ஆப்பிள் பை, பேஸ்பால், மற்றும் அமெரிக்க கொடி

அமெரிக்கா ஒரு பல கலாச்சார தேசம், பரந்த வகையான இனக் குழுக்கள், மரபுகள், மற்றும் மதிப்பீடுகளின் தாயகமாக உள்ளது. "அமெரிக்க" இனம் என்ற ஒன்று இல்லை; இப்போது சிறு பூர்வீக அமெரிக்கர்கள் அல்லது பூர்வீக ஹவாய் தீவு மக்களைத் தவிர, ஏறக்குறைய எல்லா அமெரிக்கர்கள் அல்லது அவர்களது முன்னோர்களுமே கடந்த ஐந்து நூற்றாண்டுகளில் புலம் பெயர்ந்தவர்களே. அநேக அமெரிக்கர்கள் பின்பற்றும் கலாச்சாரமான - பிரதான அமெரிக்க கலாச்சாரம் - மேற்கத்திய கலாச்சாரம் என்பது பெரும்பாலும் ஐரோப்பிய புலம் பெயர்ந்தவர்களின் மரபுகளோடு சேர்ந்து, ஆப்பிரிக்காவில் இருந்தான அடிமைகள் மூலம் வந்த மரபுகள் போன்ற இன்னும் பல பிற ஆதாரங்களைக் கொண்டு தோன்றியது. ஆசியாவில் இருந்தான மிகச் சமீபத்திய புலம் பெயர்வு, குறிப்பாக லத்தீன் அமெரிக்காவில் இருந்தானது, ஒருதன்மையுற்ற கொதிக்கும் பாத்திரம் என்றும் புலம் பெயர்ந்தவர்களும் அவர்களின் வாரிசுகளும் தங்களின் தனித்துவ கலாச்சார பண்புகளை பாதுகாக்கும் இருதன்மைவாய்ந்த சாலட் பாத்திரம் என்று இரண்டு வகையாகவும் திரியும் ஒரு கலாச்சார கலப்புக் கோர்வையாக உள்ளது.

கீர்ட் ஹோப்ஸ்டீட் மேற்கொண்ட கலாச்சார பரிமாண ஆய்வின் படி, ஆய்வு செய்த அனைத்து நாடுகளிலும் அமெரிக்கா மிக உயர்ந்த தனித்தன்மைவாத மதிப்பெண்களைப் பெற்றதாகும். வர்க்கமற்ற சமுதாயம் முக்கியமான கலாச்சாரம் அமெரிக்கா ஒரு வர்க்கமற்ற சமூகம் என்பதை உறுதிப்படுத்துவதாக இருந்தாலும், சமூகமயமாக்கல் சமூகவயமாக்கம், மொழி, மற்றும் மதிப்பீடுகளைப் பாதிக்கும் நாட்டின் சமூக வர்க்கங்களுக்கு இடையே குறிப்பிடத்தகுந்த வித்தியாசங்களை அறிஞர்கள் அடையாளம் காண்கின்றனர். அமெரிக்க நடுத்தர வர்க்கம் அமெரிக்க நடுத்தர மற்றும் வல்லுநர் வர்க்கம் நவீன பெண்ணியம், சுற்றுச்சூழலியம், மற்றும் பன்முககலாச்சாரவாதம் போன்ற பல சமகால சமூக போக்குகளுக்கு துவக்கமளித்திருக்கின்றன. அமெரிக்கர்களின் சுய பிம்பங்கள், சமூக பார்வைகள், மற்றும் கலாச்சார எதிர்பார்ப்புகள் அவர்களின் பணிகளுடன் மிக நெருக்கமான அளவில் பிணைந்துள்ளது. சராசரி ஜோ அமெரிக்கர்கள் பெருமளவில் சமூகபொருளாதார மேம்பாட்டை மதிக்கிறவர்களாக இருக்கும் சமயத்தில், சாதாரணமானவராக அல்லது சராசரியாக இருப்பது பொதுவாக ஒரு நேர்மறை மனோநிலையாக காண்கிறது. அமெரிக்க கனவு அமெரிக்க கனவு, அல்லது அமெரிக்கர்கள் மிக உயர்ந்த சமூக செயல்பாட்டுத்திறன் கொண்டவர்கள் என்கிற புரிதலானது, புலம் பெயர்வோரை ஈர்ப்பதில் முக்கிய பங்காற்றுகிறது, சில ஆய்வாளர்கள், மேற்கு ஐரோப்பா மற்றும் கனடாவைக் காட்டிலும் அமெரிக்காவின் சமூக செயல்பாட்டுத் திறனை குறைவாகவே காண்கிறார்கள்.

பெண்கள் இப்போது பெரும்பாலும் வீட்டிற்கு வெளியில் வந்து வேலை பார்ப்பதோடு இளங்கலைப் பட்டங்களை பெற்ற பெருமையுடன் ஜொலிக்கிறார்கள்.. 2005 ஆம் ஆண்டில், 28% வீட்டினர் திருமணமான குழந்தையற்ற தம்பதிகளாக இருந்தனர், இது ஒரு மிக பொதுவானவொரு ஏற்பாடு. ஒரே பாலின திருமணம் சர்ச்சைக்குரியதாக உள்ளது. பல மாநிலங்களும் திருமணத்திற்கு பதிலாக மக்கள் சங்கமத்தை அனுமதிக்கின்றன. 2003 ஆம் ஆண்டு முதல், நான்கு மாநில சுப்ரீம் நீதிமன்றங்கள் ஓர்-பாலின திருமணம் மீதான தடைகளை அரசியல்சட்டத்தை மீறியதாக தீர்ப்பளித்த்துள்ளார்கள், பன்னிரண்டு மாநிலங்களுக்கும் அதிகமான இடங்களின் வாக்காளர்கள் இந்த பழக்கத்தின் மீதான அரசியல்சட்ட தடைகளுக்கு ஒப்புதலளித்திருக்கிறார்கள்.2009 ஆம் ஆண்டில், சட்டப்பூர்வ நடவடிக்கை மூலம் ஓர்-பாலின திருமணத்தை அனுமதிக்கும் முதல் மாநிலங்களாக வெர்மான்ட் மற்றும் மெய்ன் ஆயின.

ஊடகத்துறை

திரைப்படத்துறை

அமெரிக்க ஐக்கிய நாடுகள் 
ஹாலிவுட்

தாமஸ் எடிசனின் கைனடோஸ்கோப்பைப் பயன்படுத்தி உலகின் முதல் வர்த்தகரீதியான நகரும் பட கண்காட்சி நியூயார்க் நகரத்தில் 1894 ஆம் ஆண்டு நடந்தது. அடுத்த ஆண்டு புரொஜெக்டரிலான படமும் அதே நியூயார்க்கில் முதல் வர்த்தகரீதியான திரையிடலைக் கண்டது, அடுத்து வந்த தசாப்தங்களில் ஒலிப் பட மேம்பாட்டில் அமெரிக்கா முன்னணி வகித்தது. 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல், அமெரிக்க திரைப்படத் துறை பெருமளவில் கலிபோர்னியாவின், ஹாலிவுட்டைச் சுற்றியே இருந்தது. சினிமாவின் இலக்கணத்தை மேம்படுத்தியதில் இயக்குநர் டி.டபிள்யூ. கிரிப்த் மையமாகத் திகழ்ந்தார், மற்றும் ஓர்சன் வெல்ஸின் சிட்டிசன் கேன் (1941) என்னும் திரைப்படம் அனைத்து காலங்களிலுமான மிகச் சிறந்த படமாக பல சமயங்களில் மேற்கோள் காட்டப்படுகிறது. ஜான் வேன் மற்றும் மர்லின் மன்றோ போன்ற அமெரிக்க திரை நடிகர்கள் மக்கள் மனதில் அழியாத சித்திரங்களானார்கள், தயாரிப்பாளரும்/தொழில்முனைவோருமான வால்ட் டிஸ்னி அனிமேஷன் திரைப்படம் மற்றும் திரைப்பட விநியோகம் இரண்டிலுமே முன்னணியில் திகழ்ந்தார். ஹாலிவுட்டின் பெரும் சினிமா ஸ்டுடியோக்கள் ஸ்டார் வார்ஸ் (1977) மற்றும் டைட்டானிக் (1997), போன்ற வரலாற்றில் வர்த்தக ரீதியாக மிகப் பெரும் வெற்றிகளைக் குவித்த அநேக திரைப்படங்களை உருவாக்கியுள்ளன, இன்று ஹாலிவுட் தயாரிப்புகள் உலக சினிமா துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

அமெரிக்க ஐக்கிய நாடுகள் 

தொலைக்காட்சித்துறை

அமெரிக்கர்கள் மிக அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பவர்களாக இருக்கிறார்கள், மேலும் சராசரியாக அன்றாடம் பார்க்கும் நேரமும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. 2006 இல் ஒரு நாளுக்கு ஐந்து மணி நேரம் செலவழிப்பதாக ஓர் ஆராய்ச்சி கூரியது. அமெரிக்கர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டரை மணி நேரத்திற்கும் அதிகமாக வானொலி கேட்கிறார்கள். வெப் போர்ட்டல்கள் மற்றும் வலை தேடல் பொறிகள் தவிர, மிகப் பிரபலமாய் இருக்கும் இணையத்தளங்களாய் இருப்பவை ஃபேஸ்புக், யூட்யூப், மைஸ்பேஸ், விக்கிப்பீடியா, கிரெய்க்ஸ்லிஸ்ட், மற்றும் இபே ஆகியவை.

இசை

ஆப்பிரிக்க அமெரிக்க இசையின் சந்தமிகு எழுத்துநடை பாணிகள் அமெரிக்க இசையை பெருமளவு ஆழமாய் பாதித்திருப்பதோடு அதனை ஐரோப்பிய மரபுகளில் இருந்து வித்தியாசப்படுத்துகின்றன. ப்ளூஸ் போன்ற கிராமியப் பதங்களில் இருந்தான கூறுகளும் இப்போது பழைய-இசை என்று கருதப்படும் இசையும் எடுத்து உலகளாவிய ரசிகர்களுடனான வெகுஜன வகைகளாக உருமாற்றம் பெற்றிருக்கின்றன. 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் லூயிஸ் ஆர்ம்ஸ்ட்ராங் மற்றும் ட்யூக் எலிங்டன் போன்ற புதுமையாளர்கள் மூலம் ஜாஸ் உருவானது. நாட்டு இசை, ரிதம் அன் ப்ளூஸ், மற்றும் ராக் அன் ரோல் ஆகியவை 1920 ஆம் ஆண்டுகள் மற்றும் 1950 ஆம் ஆண்டுகளுக்கு இடையே எழுந்தன. 1960 ஆம் ஆண்டுகளில் கிராமிய மறுமலர்ச்சியில் இருந்து எழுச்சியுற்ற பாப் டைலான் அமெரிக்காவின் மிகப்பெரும் பாடலாசிரியர்களில் ஒருவராக ஆனார், ஜேம்ஸ் பிரவுன் ஃபங்க் உருவாக்கத்திற்கு இட்டுச் சென்றார்.ஹிப் ஹாப் மற்றும் வீட்டு இசை ஆகியவை சமீபத்திய அமெரிக்க படைப்புகள் ஆகும். எல்விஸ் ப்ரெஸ்லி, மைக்கேல் ஜாக்சன், மற்றும் மடோனா ஆகிய அமெரிக்க பாப் பாடகர்கள் உலகளாவிய பிரபலங்களாக ஆகியிருக்கிறார்கள்.

அமெரிக்க ஐக்கிய நாடுகள் 

இலக்கியம், தத்துவம், மற்றும் கலை

அமெரிக்க ஐக்கிய நாடுகள் 
எழுத்தாளர் ஜேக் கெரொக், பீட் தலைமுறையின் சிறந்த பிரபலங்களுள் ஒருவர்

பதினெட்டாவது மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், அமெரிக்க கலை மற்றும் இலக்கியமானது பெரும்பாலும் ஐரோப்பியத் தாக்கத்துடன் இருந்தது. நதேனியல் ஹாதோர்ன், எட்கர் ஆலன் போ, மற்றும் ஹென்ரி டேவிட் தொரோ போன்ற எழுத்தாளர்கள் 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஒரு தனித்துவமான அமெரிக்க இலக்கிய மரபை நிறுவினார்கள். மார்க் ட்வெயின் மற்றும் கவிஞர் வால்ட் விட்மேன் நூற்றாண்டின் இரண்டாம் பாதியின் பெரும் புள்ளிகளாக இருந்தார்கள்; தனது வாழ்நாளில் அடையாளமற்றராக இருந்த எமிலி டிகின்சன், இப்போது ஒரு அடிப்படையான அமெரிக்க கவிஞராக அறியப்படுகிறார். ஹெர்மன் மெல்வில்லியின் மோபி-டிக் (1851), ட்வெயினின் தி அட்வென்சர்ஸ் ஆஃப் ஹகிள்பெரி ஃபின் (1885), மற்றும் எஃப்.ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரால்டின் தி கிரேட் கேட்ஸ்பை (1925) - ஆகிய படைப்புகளைப் மகத்தான அமெரிக்க நாவல் எனக் கூறலாம்.

பதினொரு அமெரிக்க குடிமக்கள் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றனர். மிக சமீபமாக 1993 ஆம் ஆண்டில், டோனி மோரிசன் பெற்றார். 1954 ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்ற எர்னஸ்ட் ஹெமிங்வே, பல சமயங்களில் இருபதாம் நூற்றாண்டின் மிகவும் செல்வாக்குள்ள எழுத்தாளர்களில் ஒருவராய் அழைக்கப்படுகிறார். மேற்கத்திய மற்றும் குற்றப்பின்னணி கற்பனைக்கதைகள் ஒத்த இலக்கிய வகைகள் அமெரிக்காவில் வளர்ச்சியுற்றன. பீட் தலைமுறை எழுத்தாளர்கள், ஜான் பார்த், தாமஸ் பைன்கான், மற்றும் டான் டிலிலோ போன்ற பின்நவீனத்துவ எழுத்தாளர்கள், புதிய இலக்கிய அணுகுமுறைகளுக்கு கதவுகளைத் திறந்து விட்டார்கள்.

ரால்ப் வால்டோ எமர்சன் மற்றும் தொரோ தலைமையிலான எண்ணஇணைப்பு தத்துவவாதிகள் முதல் பெரும் அமெரிக்கத் தத்துவ இயக்கத்தை நிறுவினார்கள். உள்நாட்டுப் போருக்குப் பிறகு, சார்லஸ் சான்டர்ஸ் பியர்ஸ் மற்றும் அவருக்குப் பின் வில்லியம் ஜேம்ஸ் மற்றும் ஜான் டெவெ ஆகியோர் நடைமுறையியல் தத்துவத்தின் உருவாக்கத்தில் தலைமை வகித்தனர். 20 ஆம் நூற்றாண்டில், W.V.குவின் மற்றும் ரிச்சார்டு ரோர்டி ஆகியோரது படைப்புகள் அனலடிக் தத்துவத்தை அமெரிக்க தத்துவவியலாளர்களின் முன்னால் கொண்டுவந்தன. அய்ன் ரான்டின் புறநிலைவாதம் பரவலாக புகழ் பெற்றது.

காட்சிக் கலையில், ஹட்சன் ஆற்றுப் பள்ளி ஐரோப்பிய இயற்கைவாத வழி வந்த இயக்கமாக அமைந்தது. 1913 ஆம் ஆண்டில் நியூயார்க் நகரில் நடந்த ஐரோப்பிய நவீனக் கலைக் கண்காட்சியான ஆர்மரி ஷோ பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியதோடு அமெரிக்க கலை உலகை மாற்றியமைத்தது. ஜார்ஜியா ஓ'கெபெ, மார்ஸ்டன் ஹார்ட்லி, மற்றும் பிறர் புதிய பாணிகளைப் பரிசோதித்து, ஒரு மிகவும் தனித்துவம் மிகுந்த உணர்திறனை வெளிப்படுத்தினார்கள்.ஜேக்சன் போலாக் மற்றும் வில்லியம் டி கூனிங்கின் பண்பியல் வெளிப்பாட்டியல் மற்றும் ஆன்டி வரோல் மற்றும் ராய் லிச்டென்ஸ்டீன் ஆகியோரின் பாப் கலை போன்ற பெரும் கலை இயக்கங்கள் பெருமளவு அமெரிக்காவில் உருவாகின. நவீனத்துவம் மற்றும் பின்நவீனத்துவத்தின் அலையானது பிராங்க் லாயிட் ரைட், பிலிப் ஜான்சன், மற்றும் பிராங்க் ஜெரி ஆகிய அமெரிக்க கட்டிட வல்லுநர்களுக்கு புகழ் சேர்த்தது.

அமெரிக்க ஐக்கிய நாடுகள் 
நியூயார்க் நகரின் பிராட்வே தியேட்டர் மாவட்டம், பல பிரபல நிகழ்ச்சிகளை நடத்திய இடம்

அமெரிக்க நாடகக் கலையை வளர்த்தவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் இம்ப்ரசாரியோ பி.டி. பார்னம், இவர் 1841 இல் ஒரு குறைவான மன்ஹாட்டன் பொழுதுபோக்கு வளாகத்தை செயல்படுத்த துவங்கினார்.ஹாரிகன் மற்றும் ஹார்ட்டின் குழு 1870 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதி துவங்கி நியூயார்க்கில் பல தொடர்ச்சியான பிரபல இசைக் காமெடி நிகழ்ச்சிகளை தயாரித்தது. 20 ஆம் நூற்றாண்டில், நவீன இசை வடிவம் பிராட்வேயில் எழுச்சியுற்றது; இர்விங் பெர்லின், கோல் போர்ட்டர், மற்றும் ஸ்டீபன் சோந்தீன் ஆகிய இசைக் குழு இசையமைப்பாளர்களின் பாடல்கள் பாப் தரநிர்ணயங்களாக ஆகியுள்ளன. நாடக ஆசிரியரான ஈஜென் ஓ'நெல் 1936 ஆம் ஆண்டில் நோபல் இலக்கிய பரிசை வென்றார், பல புலிட்சர் விருதுகளை வென்ற டென்னெஸ் வில்லியம்ஸ், எட்வர்டு ஆல்பி, மற்றும் ஆகஸ்டு வில்சன் ஆகியோரும் பிற புகழ்பெற்ற அமெரிக்க நாடகத்துறையினரில் அடக்கம்.

அந்த சமயத்தில் அதிகம் புகழ்பெறாது போனாலும், 1910 ஆம் ஆண்டுகளின் சார்லஸ் இவ்ஸ்யின் படைப்பு மரபுவழி இசையின் முதல் பெரும் அமெரிக்க இசைத்தொகுப்பாளராக அவரை நிறுவியது; ஹென்றி கோவெல் மற்றும் ஜான் கேஜ் ஆகிய பிற பரிசோதனையாளர்கள் மரபுவழி இசைத்தொகுப்புக்கு ஒரு அமெரிக்க அணுகுமுறையை அளித்தனர். ஆரான் காப்லேண்ட் மற்றும் ஜார்ஜ் கெர்ஷ்வின் ஆகியோர் வெகுஜன மற்றும் மரபு இசைக்கான ஒரு தனித்துவமான பகுப்பாய்வை அளித்தனர். இசடோரா டங்கன் மற்றும் மார்தா கிரஹாம் ஆகிய நடன இயக்குநர்கள் நவீன நடனத்தை உருவாக்க உதவினர், ஜார்ஜ் பலான்சின் மற்றும் ஜெரோம் ராபின்ஸ் ஆகியோர் 20 ஆம் நூற்றாண்டு பாலேயில் முன்னணி வகித்தனர். புகைப்படத்திற்கான நவீன கலை ஊடகத்தில் அமெரிக்கர்கள் வெகு காலமாகவே முக்கியத்துவம் பெற்றிருந்தனர், ஆல்பிரட் ஸ்டீகிளிட்ஸ், எட்வர்டு ஸ்டீசென் மற்றும் அன்செல் ஆடம்ஸ் ஆகியோர் முக்கிய புகைப்பட மேதைகளில் அடக்கம். செய்தித்தாளின் காமிக் துண்டு மற்றும் காமிக் புத்தகம் இரண்டும் அமெரிக்க கண்டுபிடிப்புகளே. காமிக் புத்தக சூப்பர்ஹீரோக்களில் முதன்மையானவரான சூப்பர்மேன் ஒரு அமெரிக்க அடையாளமாகவே ஆகியிருக்கிறார்.

உணவு

அமெரிக்க ஐக்கிய நாடுகள் 
மெக்சிகோ மற்றும் சைனீஸ் அடிப்படை உணவுகளுடனான உணவகங்கள் கொண்ட ஒரு அமெரிக்கன் ஸ்டிரிப் மால்

பிரதான அமெரிக்க சமையல் கலை பிற மேற்கத்திய நாடுகளில் உள்ளதை ஒத்து இருக்கின்றன. கோதுமை தான் பிரதான உணவு தானியமாக இருக்கிறது. வான்கோழி, வெள்ளை-வால் மான் , உருளைக்கிழங்குகள், இனிப்பு உருளைக்கிழங்குகள், மக்காச்சோளம், ஸ்குவாஷ், மற்றும் மேபிள் சாறு ஆகியவற்றை மரபான அமெரிக்க சமையல்முறைகள் பயன்படுத்துகின்றன. இவை பூர்வீக அமெரிக்கர்கள் மற்றும் ஆரம்பகால ஐரோப்பிய குடியேற்றவாசிகளின் தனித்துவமான உணவுவகைகளாகும். மெதுவாக சமைத்த பன்றி மற்றும் மாட்டுக்கறி பார்பெக்யூ, நண்டு கேக்குகள், உருளைக்கிழங்கு சிப்ஸ், சாக்கலேட் சிப் குக்கிகள் ஆகியவை சிறப்பு உணவுகள். ஆப்பிரிக்க அடிமைகள் உருவாக்கிய சோல் ஃபுட் தெற்கத்திய மற்றும் பிற இடங்கில் உள்ள பல ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் இடையே பிரபலமான உணவாக விளங்குகிறது. லூசியானா கிரியோல், கஜுன், மற்றும் டெக்ஸ்-மெக்ஸ் (Tex-Mex) ஆகிய கலப்பு சமையல் வகைகளும் முக்கியத்துவம் பெற்றவை. ஆப்பிள் பை, பொறித்த கோழி, பிட்சா, ஹம்பர்கர்கள், மற்றும் ஹாட் டாக் ஆகியவை பல்வேறு புலம் பெயர்ந்தவர்களிடம் இருந்து பெற்ற சிறப்பு உணவுவகைகள். பிரெஞ்சு ஃபிரைஸ், பரிடோஸ் மற்றும் டகோஸ் போன்ற மெக்சிகன் டிஷ்கள் மற்றும் இத்தாலிய மூலங்களில் இருந்து சுதந்திரமாக பெற்ற பாஸ்தா வகை டிஷ்கள் ஆகியவை பெருமளவில் நுகரப்படுகின்றன.

அமெரிக்கர்கள் பெரும்பாலும் தேநீரைக் காட்டிலும் காபியையே விரும்புகிறார்கள். ஆரஞ்சு சாறு மற்றும் பாலை சர்வ இடங்களிலும் காலை உணவு பானங்களாக மாற்றியதில் அமெரிக்க தொழில்களின் விளம்பரம் தான் பெருமளவு பொறுப்பு வகிக்கிறது. 1980கள் மற்றும் 1990களில், அமெரிக்கர்களின் கலோரி அருந்துகை 24% ஆக உயர்ந்தது; துரித உணவு கடைகளில் அடிக்கடி உணவு அருந்துவது சுகாதார அதிகாரிகள் அமெரிக்க "உடல்பருமன் தொற்று" என்றழைப்பதுடன் தொடர்புபட்டதாய் இருக்கிறது. மிகவும் இனிப்பேற்றிய மதுபானம் பரவலாக பிரபலமுற்று இருக்கின்றன; சராசரி அமெரிக்கரின் கலோரி உள்ளெடுப்பில் 9% சர்க்கரை பானங்களின் பங்காக இருக்கிறது.

விளையாட்டு

அமெரிக்க ஐக்கிய நாடுகள் 
ஒரு கல்லூரி கால்பந்து அணியின் குவார்ட்டர்பேக் பாஸ் செய்ய பார்க்கிறார்

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி துவங்கி, பேஸ்பால் தான் தேசிய விளையாட்டாகக் கருதப்படுகிறது; அமெரிக்கன் கால்பந்து, கூடைப்பந்து, மற்றும் ஐஸ் ஹாக்கி ஆகியவை நாட்டின் பிற முன்னணி தொழில்முறை குழு விளையாட்டுகளாகும். மேலும் கல்லூரி கால்பந்து மற்றும் கூடைப்பந்து பெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்களை ஈர்க்கின்றன. பல்வேறு அளவீடுகளின் அடிப்படையில் கால்பந்து தான் இப்போது பார்வையாளர்களிடம் மிகப் பிரபலமான விளையாட்டாக இருக்கிறது. குத்துச்சண்டை குதிரைப் பந்தயம் மற்றும் கோல்ப் ஆகியவை ஒரு சமயத்தில் மிகவும் பிரபல தனிநபர் விளையாட்டுகளாக இருந்தன, ஆனால் அவையெல்லாம் பந்தய வாகன போட்டி மற்றும் நாஸ்கார்(NASCAR) ஆகிய விளையாட்டுகளிடம் ஒளியிழந்து விட்டன. இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் கால்பந்து விளையாடுவதை பரவலாக விரும்புகிறார்கள். டென்னிஸ் மற்றும் பல வெளிப்புற விளையாட்டுகளும் பிரபலமானதாகவே இருக்கின்றன.

பல பெரும் அமெரிக்க விளையாட்டுகள் ஐரோப்பிய வழக்கங்களில் இருந்து பிறந்தவையாக இருக்க, கூடைப்பந்து, கைப்பந்து, ஸ்கேட்போர்டிங், ஸ்னோபோர்டிங், மற்றும் சியர்லீடரிங் ஆகியவை அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட விளையாட்டுக்களாகும். லெக்ராஸ் மற்றும் சர்பிங் ஆகியவை மேற்கத்திய தொடர்புக்கு முந்தைய காலத்தின் பூர்வீக அமெரிக்கர் மற்றும் பூர்வீக ஹவாய் நடவடிக்கைகளில் இருந்து பிறந்தவை. அமெரிக்காவில் எட்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுள்ளன. கோடை ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்கா 2,301 பதக்கங்களை வென்றுள்ளது, குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், இது அதிகமாய் வென்ற பட்டியலில் இரண்டாவதாகும்.

காட்சிகள்

குறிப்புகள்

மேற்கோள்கள்

நூற்பட்டியல்

இணையத்தள மூலங்கள்

புற இணைப்புகள்

Tags:

அமெரிக்க ஐக்கிய நாடுகள் வாழ்விட வரலாறுஅமெரிக்க ஐக்கிய நாடுகள் அரசும், குடிகளும்அமெரிக்க ஐக்கிய நாடுகள் பொருளாதாரமும், உலக அணுகுமுறையும்அமெரிக்க ஐக்கிய நாடுகள் பெயர் வரலாறுஅமெரிக்க ஐக்கிய நாடுகள் புவியியல்அமெரிக்க ஐக்கிய நாடுகள் வரலாறுஅமெரிக்க ஐக்கிய நாடுகள் அரசியல்அமெரிக்க ஐக்கிய நாடுகள் அரசியல் பிரிவுகள்அமெரிக்க ஐக்கிய நாடுகள் வெளியுறவு மற்றும் ராணுவம்அமெரிக்க ஐக்கிய நாடுகள் பொருளாதாரம்அமெரிக்க ஐக்கிய நாடுகள் மக்கள் வாழ்க்கை கணக்கியல்அமெரிக்க ஐக்கிய நாடுகள் கலாச்சாரம்அமெரிக்க ஐக்கிய நாடுகள் காட்சிகள்அமெரிக்க ஐக்கிய நாடுகள் குறிப்புகள்அமெரிக்க ஐக்கிய நாடுகள் மேற்கோள்கள்அமெரிக்க ஐக்கிய நாடுகள் நூற்பட்டியல்அமெரிக்க ஐக்கிய நாடுகள் புற இணைப்புகள்அமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்காக்கள்உருசியாஐக்கிய அமெரிக்க மாநிலம்கியூபாதொல்குடி அமெரிக்கர்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதிநியூயார்க்கு நகரம்பகாமாசுபரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்வட அமெரிக்காவாசிங்டன், டி. சி.

🔥 Trending searches on Wiki தமிழ்:

மனித எலும்புகளின் பட்டியல்இயோசிநாடிகே. என். நேருஒன்றியப் பகுதி (இந்தியா)அண்ணாமலையார் கோயில்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)சங்க இலக்கியம்இளையராஜா இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்சென்னைபக்கவாதம்திரு. வி. கலியாணசுந்தரனார்பதிற்றுப்பத்துரோசுமேரிமோனைமுலாம் பழம்சிதம்பரம் மக்களவைத் தொகுதிஇசுலாம்பிரேமலதா விஜயகாந்த்புதுமைப்பித்தன்இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பட்டியல்இராமர்2024 ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்ஓ. பன்னீர்செல்வம்கஜினி (திரைப்படம்)மரவள்ளிபரகலா பிரபாகர்மருது பாண்டியர்எஸ். ஜெகத்ரட்சகன்சிவகங்கை மக்களவைத் தொகுதிபுதன் (கோள்)தனுசு (சோதிடம்)மூலிகைகள் பட்டியல்வடிவேலு (நடிகர்)பிள்ளைத்தமிழ்மீனா (நடிகை)ஏற்காடுமக்களாட்சிசூல்பை நீர்க்கட்டிசேது (திரைப்படம்)ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்ஆடு ஜீவிதம்ஆனந்த விகடன்திருவள்ளூர் மக்களவைத் தொகுதிஅம்பிகா (நடிகை)ஜெயகாந்தன்கடிதம்விளம்பரம்கவுண்டர்முருகன்பெ. ஜான் பாண்டியன்பாவலரேறு பெருஞ்சித்திரனார்விக்ரம்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)இந்திய ரிசர்வ் வங்கிகா. ந. அண்ணாதுரையாழ்காவிரி ஆறுபழமொழி நானூறுபம்மல் சம்பந்த முதலியார்வல்லினம் மிகும் இடங்கள்சீரடி சாயி பாபாஇயற்கைவேற்றுமை (தமிழ் இலக்கணம்)விராட் கோலிகணபதி பி. ராஜ் குமார்புதுச்சேரிதேசிக விநாயகம் பிள்ளைசித்தர்கள் பட்டியல்கருப்பை நார்த்திசுக் கட்டிஆடுஜீவிதம் (திரைப்படம்)தமிழக வெற்றிக் கழகம்காடுவெட்டி குருமலைபடுகடாம்தேனி மக்களவைத் தொகுதிகாரைக்கால் அம்மையார்தமிழ்நாடு மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல்கம்பராமாயணம்புதிய மன்னர்கள்பீனிக்ஸ் (பறவை)🡆 More