யூலியன் நாட்காட்டி

யூலியன் நாட்காட்டி அல்லது சூலியன் நாட்காட்டி (Julian calendar) என்பது கிமு 46 இல் யூலியஸ் சீசரினால் அறிமுகப்படுத்தப்பட்டு கிமு 45 இல் பயன்பாட்டுக்கு வந்த நாட்காட்டியாகும்.

இது உரோமில் பயன்பாட்டில் இருந்த நாட்காட்டி முறையில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக வானியல் அறிஞர் அலெக்சாந்திரியாவின் சொசிசெனசு என்பவரின் கருத்துக்கமைய சராசரி வெப்ப வலய சூரிய ஆண்டுக்கு அமைய அமைக்கப்பட்டது. அது 12 மாதங்களையும் 365 நாட்களையும் கொண்ட சாதாரண ஆண்டையும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவரியில் மேலதிக ஒரு நாளைக் கொண்ட நெட்டாண்டையும் கொண்டிருந்தது. ஆகவே யூலியன் சராசரி ஆண்டு 365.25 நாட்களாகும்.

வெப்ப வலய சூரிய ஆண்டு உண்மையில் 365.25 நாட்களை விட 11 நிமிடங்கள் குறைவானதாகும். யூலியன் நாட்காட்டியில் இந்த மேலதிகமான 11 நிமிடங்கள் ஒவ்வொரு நான்கு நூற்றாண்டுகளிலும் 3 நாட்களை அதிகமாகத் தருகிறது. இதனால் யூலியன் நாட்காட்டி காலப்போக்கில் கைவிடப்பட்டு பதிலாக கிரெகொரியின் நாட்காட்டி பயன்பாட்டுக்கு வந்தது. இந்த 3 நாள் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, கிபி 16ம் நூற்றாண்டளவில், சில நாட்காட்டி நாட்கள் அகற்றப்பட்டு கிரெகோரியன் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம், கிரெகோரியன் நாட்காட்டியில் நான்கு நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை மூன்று நெட்டாண்டு நாட்கள் அகற்றப்பட்டன.

20ம் நூற்றாண்டு வரை யூலியன் நாட்காட்டி சில நாடுகளில் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. ஆனாலும் தற்போது அனேகமாக அனைத்து நாடுகளிலும் கிரெகோரியின் நாட்காட்டியே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை, கீழைத்தேய கத்தோலிக்கத் திருச்சபைகள் மற்றும் சீர்திருத்தத் திருச்சபைகள் கிரெகோரியன் நாட்காட்டியைப் பயன்படுத்துகின்றன. ஆனாலும், கிழக்கு மரபுவழி திருச்சபை உயிர்த்த ஞாயிறு போன்ற புனித நாட்களைக் கணக்கிடுவதற்கு யூலியன் நாட்காட்டியையே பயன்படுத்துகின்றது. வட ஆப்பிரிக்காவின் பெர்பெர் மக்கள் யூலியன் நாட்காட்டியையே தற்போதும் பயன்படுத்துகின்றனர்.

மேற்கோள்கள்

Tags:

அலெக்சாந்திரியாஉரோம்கிமுஜூலியஸ் சீசர்நெட்டாண்டுபிப்ரவரிவானியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்து சமய அறநிலையத் துறைஆரணி மக்களவைத் தொகுதிமஞ்சும்மல் பாய்ஸ்கொல்லி மலைதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உப்புச் சத்தியாகிரகம்ஆத்திசூடிதிருப்பூர் மக்களவைத் தொகுதிதிருச்சிராப்பள்ளிநவதானியம்பகுஜன் சமாஜ் கட்சிஇரண்டாம் உலகப் போர்வினையெச்சம்விடுதலை பகுதி 1கா. ந. அண்ணாதுரைதாமரைவிளக்கெண்ணெய்செயற்கை மழைகேரளம்ஆய கலைகள் அறுபத்து நான்குதங்கம்சிலப்பதிகாரம்சித்தர்மங்காத்தா (திரைப்படம்)சுற்றுச்சூழல்பால காண்டம்சிதம்பரம் மக்களவைத் தொகுதிசூரரைப் போற்று (திரைப்படம்)உத்தரப் பிரதேசம்இதயம்தமிழ்நாடுசாகித்திய அகாதமி விருதுபணவீக்கம்புதன் (கோள்)கன்னியாகுமரி மாவட்டம்பலாதமிழ் விக்கிப்பீடியாமூவேந்தர்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்யாதவர்பரிதிமாற் கலைஞர்கைப்பந்தாட்டம்சௌந்தர்யாஐக்கிய அரபு அமீரகம்இராவணன்வெள்ளி (கோள்)பிலிருபின்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்தீபிகா பள்ளிக்கல்வேதம்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்இந்திய தேசிய சின்னங்கள்நீதி இலக்கியம்கம்பர்சிறுதானியம்அகத்தியர்இடைச்சொல்அழகர் கோவில்தமிழ்நாட்டின் மக்கள்தொகை பரம்பல்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்தொல். திருமாவளவன்தமிழ் எண் கணித சோதிடம்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்பொன்னியின் செல்வன்காமம்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைசட் யிபிடிபீனிக்ஸ் (பறவை)ஹாட் ஸ்டார்இந்திய உச்ச நீதிமன்றம்இந்திய செஞ்சிலுவைச் சங்கம்தமிழக மக்களவைத் தொகுதிகள்இணையம்முகம்மது நபிமதுரை வீரன்பிரேமலுகுருதி வகைஇந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பட்டியல்🡆 More