கேழ்வரகு

Eleusine coracana.

கேழ்வரகு
கேழ்வரகு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
காமெனிலிட்டுகள்
வரிசை:
Poales
குடும்பம்:
போவாசியே
பேரினம்:
கேழ்வரகு
இருசொற்பெயர்

கேழ்வரகு (இலங்கை வழக்கு: குரக்கன், Finger millet, Eleusine coracana) ஆண்டுக்கொரு முறை விளையும் தானியப் பயிர் ஆகும். இதன் வேறு பெயர்கள் ஆரியம், ஆரியம், ராகி மற்றும் கேப்பை. எத்தியோப்பியாவின் உயர்ந்த மலைப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட இப்பயிர் ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்டது. கர்நாடகாவும், தமிழ்நாடும் கேழ்வரகு சாகுபடி செய்யும் முதன்மை மாநிலங்களாகும். இது தவிர ஆந்திரப்பிரதேசம், உத்திரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களிலும் கேழ்வரகு சாகுபடி செய்யப்படுகிறது.

இந்தியாவின் பழங்கால மனிதர்கள், காட்டுவகையான எல்லூசின் இண்டிகாவில் இருந்து பயிர் செய்யக் கூடிய எல்லூசின் கோரகானா வகையை தோன்ற வைத்துள்ளனர். ஆரியர்கள் இந்தியாவிற்கு வரும் முன்னரே, கேழ்வரகு கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. கேழ்வரகு முதலில் இந்தியாவில் தோன்றி, பின்னர் அரேபியாவிற்கும், ஆப்பிரிக்காவிற்கும் சென்றடைந்துவிட்டதாகவும் டிகண்டோல்(1886) கூறுகிறார். தென்னிந்தியாவில் இது அதிகம் பயிர் செய்யப்படுவதால், இவ்விடம் முதல் நிலைத் தோற்ற இடமாக இருக்கக் கூடும் என்கிறார். எனினும், கேழ்வரகு ஆபிசீனியாவில் (எத்தியோப்பியா) தோன்றியிருக்கும் என்கிறார் வாவிலோ(1951). கேழ்வரகு முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றி பின்னர் சோபியன் வழியாக இந்தியாவை சென்றடைந்திருக்கும் என்று மெஹ்ரா(1963), கூறுகிறார். எல்லூசின் கோரகானாவின் முந்தைய தலைமுறை எல்லூசின் இண்டிகா என்று கருதப்படுகிறது.

கேழ்வரகு வெப்ப மண்டலம் மற்றும் மித வெப்ப மண்டலப் பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது. இந்தியாவில் அதிகமாக பயிர் செய்யப்படுவதோடு ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், இலங்கை, மலேசியா, சீனா மற்றும் ஜப்பானில் பயிர் செய்யப்படுகிறது. இந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிசா, குஜராத், மஹாராஷ்டிரா மற்றும் உத்திரபிரதேசம் மற்றும் இமாச்சலபிரதேசம் மலைப்பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகிறது.

மருத்துவ பயன்கள்

  • ட்ரிப்டோஃபேன் (Tryptophan) என்னும் அமினோ அமிலம் பசி உணர்வை குறைத்து, உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும். சேதமடைந்த திசுக்களை சரி செய்வதிலும், உடலின் நைட்ரஜன் நிலையை சமன்படுத்தவும் உதவுகிறது.
  • கால்சியம் அதிகம் நிறைந்து இருப்பதால், எலும்புகள் வலுப்படும்.
  • தாவர வகை இரசாயன கலவைகள் (Phytochemical Compounds) சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
  • லெசித்தின் (Lecithin) மற்றும் மெத்தியோனைன் (Methionine) போன்ற அமினோ அமிலங்கள் (Amino acids), கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, கொழுப்பின் அளவை குறைக்கிறது.
  • இரும்புச்சத்து ரத்தசோகையை குணப்படுத்துகிறது.
  • உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும்.
  • குடலுக்கு வலிமை அளிக்கும்.
  • உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா மற்றும் புது தாய்மார்களுக்கு பால் சுரக்காமல் இருத்தல் போன்ற அனைத்து நோய்களும் குணமாகும்.

சாகுபடி முறை

கேழ்வரகு பயிரை ஈரப்பதம் இருக்கும் பட்சத்தில் ஆண்டு முழுவதும் பயிரிடலாம். வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப மண்டலப் பயிராக இருப்பதால், மலைச்சரிவுகள் மற்றும் சமவெளிப் பகுதிகளில் வெற்றிகரமாக சாகுபடி செய்யலாம். கடின வகைப் பயிர் என்பதால் மானாவாரி மற்றும் தமிழ்நாட்டின் பாசனப் பயிர் என இருமுறையிலும் பயிர் செய்யலாம். கேழ்வரகு பயிருக்கு அதிக மழை நல்லதல்ல. கதிர் முதிரும் போது மழையிருக்கக் கூடாது. நல்ல வடிகால் வசதியுடைய, போதுமான அளவு நீர் தேக்கத் தன்மையுடைய, வண்டல் மண், கேழ்வரகு சாகுபடிக்கு ஏற்றது. சிறிதளவு நீர் தேக்கத்தையும் கூட தாங்கும் தன்மை பெறுவதற்கு போதுமான அளவு வடிகால் வசதியுடைய களிமண்ணிலும் கேழ்வரகு சாகுபடி செய்யலாம்.

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Tags:

கேழ்வரகு மருத்துவ பயன்கள்கேழ்வரகு சாகுபடி முறைகேழ்வரகு இவற்றையும் பார்க்ககேழ்வரகு உசாத்துணைகேழ்வரகு வெளி இணைப்புகள்கேழ்வரகு

🔥 Trending searches on Wiki தமிழ்:

அங்குலம்சச்சின் டெண்டுல்கர்பனையானைகருப்பசாமிதிரவ நைட்ரஜன்காயத்ரி மந்திரம்அமேசான்.காம்தங்க மகன் (1983 திரைப்படம்)தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்இராவண காவியம்கி. ராஜநாராயணன்மெய்யெழுத்துதிருமலை (திரைப்படம்)கடையெழு வள்ளல்கள்சன்ரைசர்ஸ் ஐதராபாத்சொல்பகிர்வுசீவக சிந்தாமணிநீர் மாசுபாடுசங்ககாலத் தமிழக நாணயவியல்இன்ஸ்ட்டாகிராம்நம்ம வீட்டு பிள்ளைஐம்பெருங் காப்பியங்கள்இரவீந்திரநாத் தாகூர்கருட புராணம்சப்ஜா விதைஇந்தியப் பிரதமர்புதுக்கவிதைதமிழில் கணிதச் சொற்கள்சே குவேராநாடோடிப் பாட்டுக்காரன்மாணிக்கவாசகர்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்விஷால்சங்கம் (முச்சங்கம்)திருப்பரங்குன்றம் முருகன் கோவில்அகத்தியர்ஆறாம் பத்து (பதிற்றுப்பத்து)இலக்கியம்திரு. வி. கலியாணசுந்தரனார்கடவுள்தமிழ் நாடக வரலாறுபாலை (திணை)ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்மணிமேகலை (காப்பியம்)செக் மொழிபவன் கல்யாண்மு. கருணாநிதிஅறுபது ஆண்டுகள்முடக்கு வாதம்திருமூலர்சூளாமணிஅணி இலக்கணம்கணியன் பூங்குன்றனார்நவக்கிரகம்ஜெயம் ரவிஇயற்கை2024 இந்தியப் பொதுத் தேர்தல்இராமலிங்க அடிகள்நீர்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்கண்ணதாசன்புதுச்சேரிஇலட்சம்சேக்கிழார்மயில்இதயம்நரேந்திர மோதிதமிழ் நீதி நூல்கள்சட்டம்பல்லாங்குழிதமிழ்விடு தூதுகாடுகள்ளுபக்கவாதம்வெந்து தணிந்தது காடுமக்களாட்சிவேற்றுமை (தமிழ் இலக்கணம்)🡆 More