தலைமை அமைச்சர்

தலைமை அமைச்சர் அல்லது பிரதமர் (Prime minister) என்பவர் நாடு ஒன்றின் அமைச்சரவையின் தலைவர் ஆவார்.

பெரும்பாலும் தலைமை அமைச்சரே அமைச்சரவையின் உறுப்பினர்களை தேர்வு செய்வதும் நீக்குவதுமான பணிகளை செய்வார். மேலும் அரசில் உறுப்பினர்களுக்கான பதவிகளை வகுப்பதும் இவரே. பெரும்பாலும் தலைமை அமைச்சர் அமைச்சரவைத் தலைவராக இருப்பார். ஒருசில அமைப்புகளில் தலைமை அமைச்சர் என்பவர் உள்நாட்டு சேவைகள் மற்றும் நாட்டின் தலைவரின் கட்டளைகளை செயல்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஒரு அதிகாரியாவார்.

வெஸ்ட்மினிஸ்டர் அமைப்பை மாதிரியாக கொண்டு உருவாக்கப்பட்ட நாடாளுமன்ற அமைப்புகளில் தலைமை அமைச்சர் அரசின் தலைவராவார். அவருக்கே அனைத்து செயல்பாடுகளையும் செயலாக்கும் அதிகாரம் உள்ளது. இத்தகைய நாடாளுமன்ற அமைப்புகளில் நாட்டின் தலைவர் (குடியரசுத்தலைவர்) பெரும்பாலும் பெயரளவிற்கான அதிகாரங்களை கொண்டிருக்கிறார்.ஒரு சில சிறப்பு அதிகாரங்களை தவிர நாட்டின் தலைவருக்கு எத்தகைய செயலாக்குதல் அதிகாரமும் இல்லை.

பெரும்பாலான அமைப்புகளில் தலைமை அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும் தலைமை அமைச்சர் மசோதாக்கள் சட்டப்படி நிறைவேறுவதை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பில் உள்ளவராவார். மேலும் தலைமை அமைச்சர் தன்கீழ் ஒருசில முக்கியமான அமைச்சுகளை வைத்துக்கொள்வார். எடுத்துக்காட்டாக இந்திய தலைமை அமைச்சர் திட்டமிடுதல் துறை, அணுசக்தி மற்றும் விண்வெளி ஆகிய துறைகளை தன் கீழ் வைத்துள்ளார்.

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

புனித ஜார்ஜ் கோட்டைதேர்தல்கோயம்புத்தூர்மழைநீர் சேகரிப்புவரலாற்றுவரைவியல்முதல் மரியாதைராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்மரகத நாணயம் (திரைப்படம்)வீரமாமுனிவர்நயினார் நாகேந்திரன்பெண்வேதம்வெண்பாபுறநானூறுசித்தர்தாயுமானவர்முலாம் பழம்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்அனுஷம் (பஞ்சாங்கம்)கேள்விஅம்மனின் பெயர்களின் பட்டியல்நேர்பாலீர்ப்பு பெண்மதுரைதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்காளை (திரைப்படம்)திருவரங்கக் கலம்பகம்திராவிடர்வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்உலா (இலக்கியம்)அன்புமணி ராமதாஸ்நெடுநல்வாடைதமிழர் உலோகத் தொழில்நுட்பம்தமிழ் விக்கிப்பீடியாதீரன் சின்னமலைபத்துப்பாட்டுபாலின விகிதம்தரணிபூனைகுறவஞ்சிபடையப்பாஅயோத்தி இராமர் கோயில்ரஜினி முருகன்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்திருமால்ரெட் (2002 திரைப்படம்)பெரியபுராணம்மூலம் (நோய்)சிற்பி பாலசுப்ரமணியம்இந்தியப் பிரதமர்இராவணன்அகரவரிசைசெண்டிமீட்டர்குணங்குடி மஸ்தான் சாகிபுகர்மாஆறுமதராசபட்டினம் (திரைப்படம்)பலாதமிழ் மன்னர்களின் பட்டியல்திருநெல்வேலிஅகமுடையார்வடலூர்உடுமலை நாராயணகவிஆயுள் தண்டனைகடலோரக் கவிதைகள்விஸ்வகர்மா (சாதி)கருப்பைசுற்றுச்சூழல் பாதுகாப்புதிராவிட இயக்கம்திருத்தணி முருகன் கோயில்முதுமொழிக்காஞ்சி (நூல்)குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்நிதி ஆயோக்ஓரங்க நாடகம்தமிழ்நாடு அமைச்சரவைதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்இராமர்தெலுங்கு மொழிநவதானியம்இனியவை நாற்பது🡆 More