நாடாளுமன்ற உறுப்பினர்

நாடாளுமன்ற உறுப்பினர் (Member of Parliament) என்பவர் ஒரு நாட்டின் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு வாக்காளர்களின் பதிலாள் (பிரதிநிதி) ஆவார்.

பல நாடுகளில் இந்தச் சொல் மக்களவை உறுப்பினர்களை மட்டுமே குறிக்கும். மேலவை உறுப்பினர்கள் செனட்டர்கள் என்றோ பிரபுக்கள் என்றோ அழைக்கப்படுவர். ஒரே அரசியல் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அக்கட்சியின் நாடாளுமன்றக் கட்சியை அமைப்பார்கள். ஆங்கிலச் சுருக்கமான "எம். பி." (MP) என்பது ஊடகங்களில் மற்றும் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது.

வெஸ்ட்மினிஸ்டர் முறை

அயர்லாந்து

ஆஸ்திரேலியா

இந்தியா

இந்தியாவில் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களைக் குறிக்கும்.

மக்களவை, மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் 542 உறுப்பினர்களையும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்றது. மக்களவைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும்.மாநிலங்களவையின் 233 உறுப்பினர்கள் மாநில-பிரதேச சட்டப்பேரவைகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்கள். இவர்கள் ஆறு வருடங்களுக்கு பணிபுரிவார்கள். மூன்றில் ஒரு பகுதி மாநிலங்களவை உறுப்பினர்கள் இரு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தலுக்கு செல்ல வேண்டியிருக்கும்.

மக்களவையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கைப் பெற்ற கட்சி அல்லது கூட்டணி அரசு அமைக்கும் உரிமையைப் பெறுகிறது. அமைச்சரவை நாடாளுமன்றத்திற்கு, அதிலும் குறிப்பாக மக்களவைக்கு, கடமையுற்றது.

இலங்கை

இலங்கையில் இலங்கை நாடாளுமன்றத்திற்கு மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் கட்சிகளால் அவர்கள் பெற்ற வாக்குகளின் விகிதத்திற்கேற்ப நியமிக்கப்படும் உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர் என அறியப்படுகின்றனர். பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற கட்சி அல்லது கூட்டணி அரசு அமைக்கிறது.

இலங்கை நாடாளுமன்றம் 6 ஆண்டுகளுக்கு ஒரு தடவை, சர்வசன வாக்குரிமை மூலம் தெரிவு செய்யப்படும் 225 உறுப்பினர்கள் அடங்கிய ஒற்றைச் சபை கொண்ட (unicameral) ஒரு சட்டவாக்க மன்றமாகும். இதில் 196 உறுப்பினர்கள் மாவட்டவாரியாகவும், 29 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் மூலமும் திருத்தப்பட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவ (proportional representation) முறையில் நடைபெறும் பொதுத்தேர்தலில் தெரிவு செய்யப்படுவர். இந்த திருத்தப்பட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் விசேட பண்புகளாவன, ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் அதிக வாக்குகள் பெறும் கட்சிக்கு மேலதிகமான உறுப்பினர் வழங்கப்படுவதும், வாக்காளர்கள் வேட்பாளர்களுக்கு மூன்று வரையான விருப்பத்தேர்வு வாக்குகளை அளிக்ககூடியமையும் ஆகும்.

ஐக்கிய ராச்சியம்

கனடா

கென்யா

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் மக்களால் நேரடியாகத் தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், எதிர்கட்சியால் நியமிக்கப்படும் தொகுதியில்லா உறுப்பினர்கள் மற்றும் அரசியல் சார்பில்லா பொதுமக்களிலிருந்து நியமிக்கப்படும் உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக அறியப்படுவர்.

சிம்பாப்வே

நவூரு

நியூசிலாந்து

பங்களாதேசம்

பாகிஸ்தான்

பாகிஸ்தானில் பாகிஸ்தானின் தேசிய அவை(குவாமி அவை)யின் உறுப்பினர்களைக் குறிக்கிறது.தேசிய அவை இசுலாமாபாத்தில் அமைந்துள்ளது.

மலேசியா

மால்டா

பிற முறைகள்

நாடாளுமன்ற உறுப்பினர் என்பதை வெஸ்ட்மினிஸ்டர் நாளுமன்ற முறையைப் பயன்படுத்தாத பிற மக்களாட்சிகளின் பதிலாட்களுக்கு அவர்களின் சொற்களுக்கிணையான மொழிபெயர்ப்பாகக் கொள்ளலாம். காட்டாக, பிரான்சில் டெபுட்(Deputé ) என்றும் பிரேசில் மற்றும் போர்த்துக்கல்லில் Diputado, Deputado என்றும் செருமனியில் Mitglied des Bundestages (MdB) என்றும் அழைக்கப்படுகின்றனர்.

ஆஸ்திரியா

இசுரேல்

இத்தாலி

சுவீடன்

மசிடோனிய குடியரசு

தாய்லாந்து

துருக்கி

நெதர்லாந்து

நோர்வே

பல்கேரியா

போலந்து

ஜெர்மனி

லெபனான்

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Tags:

நாடாளுமன்ற உறுப்பினர் வெஸ்ட்மினிஸ்டர் முறைநாடாளுமன்ற உறுப்பினர் பிற முறைகள்நாடாளுமன்ற உறுப்பினர் சான்றுகள்நாடாளுமன்ற உறுப்பினர் வெளி இணைப்புகள்நாடாளுமன்ற உறுப்பினர்நாடாளுமன்றம்மேலவை

🔥 Trending searches on Wiki தமிழ்:

சீரடி சாயி பாபாதங்கம்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்கட்டுரைவாதுமைக் கொட்டைபழனி முருகன் கோவில்சிலிக்கான் கார்பைடுபூக்கள் பட்டியல்திருப்பதிநேர்பாலீர்ப்பு பெண்இலிங்கம்சுரதாதமிழ் மன்னர்களின் பட்டியல்ரஜினி முருகன்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்சுடலை மாடன்வானிலைபி. காளியம்மாள்அக்பர்பெருங்கடல்பத்துப்பாட்டுஇந்திய ரிசர்வ் வங்கிபணவீக்கம்கிராம ஊராட்சிஜவகர்லால் நேருமதயானைக் கூட்டம்ஔவையார் (சங்ககாலப் புலவர்)தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021காம சூத்திரம்யானைதமிழர் பண்பாடுகொன்றை வேந்தன்ஊராட்சி ஒன்றியம்யாவரும் நலம்நயன்தாராமுகம்மது நபியின் இறுதிப் பேருரைதிருப்போரூர் கந்தசாமி கோயில்முக்குலத்தோர்ஐரோப்பாஇராபர்ட்டு கால்டுவெல்பாடுவாய் என் நாவேகீர்த்தி சுரேஷ்கோத்திரம்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்கடையெழு வள்ளல்கள்சங்க இலக்கியம்சேக்கிழார்சு. வெங்கடேசன்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005சப்தகன்னியர்முத்துக்கு முத்தாக (திரைப்படம்)கஞ்சாஇந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019இந்தியக் குடியரசுத் தலைவர்மஞ்சும்மல் பாய்ஸ்வயாகராவரைகதைஇறைமைராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்தமிழ் எண்கள்தங்கம் (திரைப்படம்)ஹிஜ்ரத்ஸ்ரீலீலாஎலுமிச்சைலைலத்துல் கத்ர்சிவாஜி (பேரரசர்)தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்அறிவியல்பொதுவாக எம்மனசு தங்கம்பழமுதிர்சோலை முருகன் கோயில்கடலூர் மக்களவைத் தொகுதிசுக்ராச்சாரியார்சிவன்பாரதிய ஜனதா கட்சிநன்னீர்இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராமுகலாயப் பேரரசு🡆 More