பாக்கித்தான் அரசு: விக்கிமீடியப் பகுப்பு

பாக்கித்தான் அரசு (Government of Pakistan, உருது: حکومتِ پاکستان) கூட்டாட்சி நாடாளுமன்ற அரசியலமைப்பைக் கொண்டுள்ளது. குடியரசுத் தலைவர் நாட்டுத் தலைவராகவும் நேரடியாக அல்லாது தேர்ந்தெடுக்கப்படும் பிரதமர் அரசுத் தலைவராகவும் உள்ளனர்.

பாக்கித்தான் அரசு: விக்கிமீடியப் பகுப்பு
பாக்கித்தானின் நிலப்படம் - 2002.

நாட்டை ஆள வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமையைப் பின்பற்றும் இந்த அரசு முதன்மையாக செயலாட்சி, சட்டவாக்கம், நீதித்துறை கிளைகளைக் கொண்டுள்ளது. அரசியலமைப்பின்படி அனைத்து அதிகாரங்களும் நாடாளுமன்றம், தலைமை அமைச்சர் மற்றும் உச்ச நீதிமன்றத்தின்பாற் வழங்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தின் சட்டங்களும் திருத்தங்களும் இந்தக் கிளைகளுக்கிடையேயான அதிகாரப் பகிர்வை வரையறுத்துள்ளன; இவற்றின் அடுத்த நிலையிலான செயலாட்சியர் அமைப்புக்கள், துறைகள், கீழமை நீதிமன்றங்கள் ஆகியவற்றையும் உருவாக்கியுள்ளன. அரசியலமைப்பு அதிகாரத்தின்படி பாக்கித்தான் குடியரசுத் தலைவர் சட்டங்களுக்கு ஒப்புமையும் அவசரச் சட்டங்களின் அறிவித்தலையும் மேற்கொள்கிறார். இவர் அலங்கார நாட்டுத் தலைவராகவே உள்ளார்; தேர்தல்கள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் தலைமை அமைச்சர் செயலாட்சிப் பிரிவின் முதன்மை செயல் அலுவலராக செயல்படுகின்றார்; இவரே கூட்டாட்சியை நடத்தும் பொறுப்பைக் கொண்டவர். இரண்டு அவைகள் கொண்டா நாடாளுமன்றத்தில் கீழவை தேசிய சட்டப்பேரவை என்றும் மேலவை செனட் எனவும் அழைக்கப்படுகின்றன. நீதித்துறையில் உச்ச நீதிமன்றம், நான்கு மாகாண உயர்நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்களும் உள்ளன;தவிர தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றம், இசுலாமியச் சட்ட முறைமை நீதிமன்றங்கள், பசுமைத் தீர்ப்பாயங்களும் உள்ளன. அனைத்து நீதி மன்றங்களும் உச்ச நிதிமன்றத்திற்கு கீழானவை.

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்மழைநீர் சேகரிப்புதசாவதாரம் (இந்து சமயம்)நாலாயிர திவ்வியப் பிரபந்தம்அம்மனின் பெயர்களின் பட்டியல்ஜன கண மனகருக்கலைப்புபட்டா (நில உரிமை)விவேகானந்தர்மார்பகப் புற்றுநோய்தமிழ்நாடு காவல்துறைகுறவஞ்சிகேரளம்தமிழ் எழுத்து முறைஹரி (இயக்குநர்)ஜே பேபிஇந்திய தேசிய காங்கிரசுஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்விடுதலை பகுதி 1வெந்தயம்ஆய்த எழுத்து (திரைப்படம்)வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)பெயர்ச்சொல்ஐம்பூதங்கள்சட் யிபிடிதொல்லியல்காற்றுபெரும்பாணாற்றுப்படைஅம்பேத்கர்இந்திய நாடாளுமன்றம்வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்ஒற்றைத் தலைவலி108 வைணவத் திருத்தலங்கள்தமிழ்நாடு அமைச்சரவைர. பிரக்ஞானந்தாமனித வள மேலாண்மைகவிதைஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)சிறுத்தைமனித உரிமைபாரதிதாசன்மருதம் (திணை)பறையர்இந்தியக் குடியரசுத் தலைவர்தொலைக்காட்சிசேரன் செங்குட்டுவன்சாத்துகுடிஇரட்டைக்கிளவிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)வேற்றுமையுருபுதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்நாம் தமிழர் கட்சிசடுகுடுகிராம நத்தம் (நிலம்)பனைகாம சூத்திரம்திராவிட முன்னேற்றக் கழகம்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்சன்ரைசர்ஸ் ஐதராபாத்நாடகம்பரதநாட்டியம்புதன் (கோள்)கலாநிதி மாறன்செக் மொழிவனப்புசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்திருவரங்கக் கலம்பகம்தமிழ் எண்கள்கணையம்பஞ்சாங்கம்தினமலர்திருவள்ளுவர்சூரரைப் போற்று (திரைப்படம்)ஆழ்வார்கள்லிங்டின்இந்திய ரிசர்வ் வங்கிஉரைநடை🡆 More