சிரியாக் மொழி

சிரியாக் மொழி (ஆங்கில மொழி: Syriac language), (Syriac: ܠܸܫܵܢܵܐ ܣܘܼܪܝܵܝܵܐ‎), (/ˈsɪriæk/சிரியன் அரமேக், சிரியே-அரமேக் மற்றும் பண்டைய சிரியாக் ܠܫܢܐ ܥܬܝܩܐ இதன் இலக்கியம் மற்றும் வழிபாட்டு முறைகளில் மட்டும்) என்பது பண்டைய மெசொப்பொத்தேமியா மற்றும் பண்டைய மத்திய கிழக்கு எகிப்தில் பரவலாகப் பேசப்பட்ட, ஆபிரிக்க-ஆசிய மொழிக் குடும்பத்தின் செமிடிக் கிளையைச் சேர்ந்த அரமேயம் மொழி வகையைச் சார்ந்தது.

சிரியாக்
சிரியாக் மொழி
சிரியாக் எழுத்துக்களின் வரிவடிவம்
உச்சரிப்புlɛʃˈʃɑːnɑː surˈjɑːjɑː
பிராந்தியம்மெசொப்பொத்தேமியா (பண்டைய ஈராக்கு), கேரளம், வடகிழக்கு சிரியா, தென்கிழக்கு துருக்கி, வடமேற்கு ஈரான், லெபனான், கிழக்கு அரேபியா, வளமான பிறை பிரதேசம்
ஊழிகிபி 1-ஆம் நூற்றாண்டு ;
13 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு ஒரு வட்டார மொழியாகக் குறைந்து, வடகிழக்கு புதிய-அரமேயம் மற்றும் மத்திய புதிய-அரமேயம் மொழிகளாக உருப்பெற்றது.
ஆபிரிக்க-ஆசிய மொழிகள்
சிரியாக் அரிச்சுவடி
மொழிக் குறியீடுகள்
ISO 639-2syc
ISO 639-3syr
மொழிக் குறிப்புclas1252
இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தால், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.
சிரியாக் மொழி
இந்தக் கட்டுரை சிரியாக் அரிச்சுவடி கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ தெரியலாம். சிரியாக் எழுத்துக்கள் பதிலாக தெரியலாம்.

வரலாறு

சிரியாக் மொழி என்பது சிரியக் கிறித்தவம், கிழக்கு அசிரியன் திருச்சபை, அசிரியன் மரபுவழி திருச்சபை, அசிரியன் பெந்தகொசுத்தே திருச்சபை, பழமையான கிழக்கு அசிரியன் திருச்சபை, சிரியக் கத்தோலிக்க திருச்சபை, மாரோநைட் திருச்சபை, இந்திய புனிதர் தோமா கிறித்தவ திருச்சபை போன்றவைகள் அதிகமாகச் சிரியாக் என்ற அரமேயம் மொழியை புனிதமாக கருதி மத சடங்குகளில் பயன்படுத்துகின்றன. இயேசு கிறிசுது மற்றும் அவரைப் பின்பற்றுபவர்களின் மொழி இந்த அரமேயம் என்னும் சிரியாக் மொழியாகும். சிரியாக் மொழியில் கிழக்கு சிரியாக் மொழி மற்றும் மேற்கு சிரியாக் மொழி என இரண்டு வகைகள் உள்ளன, இது ஆறாம் நூற்றாண்டில் சிரியாக் தேவாலயத்தில் பிளவு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆறாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து இரண்டாக வளர்ந்தது. அராபியர்களின் மொழியாகவும், சிறிதளவு பெர்சியர்களின் மொழியாகவும் இருந்த சிரியாக் மொழி, அரபு மொழியின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியது. எட்டாம் நூற்றாண்டில் அரபு மொழி பொது மொழியாக மாறியதால், சிரியாக் மொழியானது, கிறிஸ்தவ மதவழிபாட்டு மொழியாகக் குறைக்கப்பட்டது. தற்போது இது முக்கியமாக கேரளம், சிரியா, துருக்கி, ஈராக், ஈரான், பாலஸ்தீனம் மற்றும் பிற நாடுகளில் பரவியுள்ள சிரியாக் திருச்சபைகளின் வழிபாட்டு மொழியாக உள்ளது. இருப்பினும், அசிரிய சமூகத்தில் இன்னும் சிரியாக் மொழியைத் தங்கள் தாய்மொழியாகப் பயன்படுத்துபவர்களும் உள்ளனர். மேலும் அரபு மொழி மற்றும் எபிரேயம் மொழி போலவே, சிரியாக் மொழியும் வலமிருந்து இடமாக எழுதப்பட்டுள்ளது.

புவியியற்பரம்பல்

சிரியாக் மொழி 
ஒருகாலத்தில் வளமான பிறை பிரதேசம் மற்றும் கிழக்கு அரேபியாவில் முக்கிய மொழியாக இருந்த போதிலும் , சிரியாக் மொழி இப்போது நினிவே சமவெளியில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களான துர் அப்டின், கபூர் சமவெளிகள், மோசுல் , அர்பில் மற்றும் கிர்குக் நகரங்களிலும் அதைச் சுற்றியுள்ள நகரங்களிலும் மட்டுமே உள்ளது.

சிரியாக் மொழி என்பது எடெசாவில் உள்ள அரமேயம்மின் உள்ளூர்வட்டாரப் பேச்சுமொழியாக இருந்தது, மேலும் கிழக்கத்திய தேவாலயம் மற்றும் சிரியாக் ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தின் செல்வாக்கின் கீழ் அதன் தற்போதைய வடிவத்தில் உருவானது. அரபு மொழி ஆதிக்கம் செலுத்தும் மொழியாக மாறுவதற்கு முன்பு, மத்திய கிழக்குப் பகுதி, நடு ஆசியாப் பகுதி மற்றும் இந்தியாவின் மலபார் கடற்கரைப் பகுதிகளில் வசிக்கும் கிறிஸ்தவ சமூகங்களில் சிரியாக் ஒரு முக்கிய மொழியாக இருந்ததுடன், இன்றுவரையிலும் சிரியா கிறித்தவர்களிடையே அப்படியே உள்ளது. என பிரித்தானியாவில் உள்ள ஆட்ரியனின் சுவர்களில், உரோமைப் பேரரசுசின் அரமேயம் மொழி பேசும் வீரர்களால் எழுதப்பட்ட கல்வெட்டெழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

சிரியாக் மொழி 
Wiki
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் சிரியாக் மொழிப் பதிப்பு

Tags:

சிரியாக் மொழி வரலாறுசிரியாக் மொழி புவியியற்பரம்பல்சிரியாக் மொழி மேற்கோள்கள்சிரியாக் மொழி வெளியிணைப்புகள்சிரியாக் மொழிஅரமேயம்ஆங்கில மொழிஆபிரிக்க-ஆசிய மொழிகள்உதவி:IPA/Englishஎகிப்துசெமித்திய மொழிகள்மெசொப்பொத்தேமியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய தேசிய சின்னங்கள்மாரியம்மன்தமிழ்த்தாய் வாழ்த்துஇளையராஜாதிருமூலர்இந்திரா காந்திகுணங்குடி மஸ்தான் சாகிபுபிரியங்கா காந்திஅமெரிக்க ஐக்கிய நாடுகள்தெலுங்கு மொழிரயத்துவாரி நிலவரி முறைஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்கமல்ஹாசன்இலட்சம்சென்னை உயர் நீதிமன்றம்வளையாபதிநெசவுத் தொழில்நுட்பம்ஜெ. ஜெயலலிதாபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பதிற்றுப்பத்துகடலோரக் கவிதைகள்மதுரை வீரன்தமிழ் தேசம் (திரைப்படம்)காவிரிப்பூம்பட்டினம்நன்னூல்புதுச்சேரிதிருப்பதிகன்னியாகுமரி மாவட்டம்மு. கருணாநிதிபாரத ஸ்டேட் வங்கிநீர் பாதுகாப்புவானிலைதிரிகடுகம்திருச்சிராப்பள்ளிஸ்ரீலீலாஇந்திய நிதி ஆணையம்வாதுமைக் கொட்டைஆசாரக்கோவைசினேகாஅபினிசிலப்பதிகாரம்ஆறுமுக நாவலர்எஸ். ஜானகிகூகுள்வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனைநிறைவுப் போட்டி (பொருளியல்)மயில்ஸ்ரீஇரசினிகாந்துவடிவேலு (நடிகர்)இராவண காவியம்தமிழில் கணிதச் சொற்கள்பெரும்பாணாற்றுப்படைஸ்டீவன் ஹாக்கிங்சூரியக் குடும்பம்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005இரட்சணிய யாத்திரிகம்இணையம்சுடலை மாடன்இதயம்கணியன் பூங்குன்றனார்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024விஜயநகரப் பேரரசுஇடலை எண்ணெய்இளங்கோவடிகள்சித்தர்கள் பட்டியல்நிணநீர்க்கணுபிள்ளைத்தமிழ்எட்டுத்தொகைகபிலர் (சங்ககாலம்)தமிழ் நீதி நூல்கள்மங்கலதேவி கண்ணகி கோவில்முல்லைப்பாட்டுபொன்னியின் செல்வன்புரோஜெஸ்டிரோன்தமிழர் பண்பாடுதர்மா (1998 திரைப்படம்)🡆 More