வளமான பிறை பிரதேசம்

வளமான பிறை பிரதேசம் (Fertile Crescent) பண்டைய அண்மை கிழக்கில் சந்திர பிறை வடிவத்தில் அமைந்த தற்கால எகிப்து, இஸ்ரேல், லெபனான், ஜோர்டான் சிரியா, ஈராக், தெற்கு துருக்கி, மேற்கு ஈரான், உள்ளிட்ட வளமான பிரதேசங்களைக் குறிக்கும்.

சில வரலாற்று அறிஞர்கள் வளமான பிறை பிரதேசத்தில் சைப்பிரஸ் தீவுப் பகுதியையும் சேர்த்துக் கொள்கின்றனர்.

வளமான பிறை பிரதேசம்
பண்டைய அண்மைக் கிழக்கில் சைப்பிரசு உள்ளிட்ட வளமான பிறை பிரதேசம்

வரலாறு மற்றும் தொல்லியல் அறிஞர்கள், வளமான பிறை பிரதேசத்தை உலக நாகரிகத்தின் தொட்டில் என்று அழைக்கின்றனர். வளமான பிறை பிரதேசத்தில் நைல் ஆறு, புறாத்து ஆறு, டைகிரிசு ஆறு, ஜோர்தான் ஆறு போன்ற என்றும் வற்றாத ஆறுகள் பாய்வதால், இப்பகுதியில் மக்கள் முதன்முதலில் பெரும் அளவில் வேளாண்மைத் தொழில் செய்யத் துவங்கினர். ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்கும், உழவிற்கும், உணவிற்கும், உடைக்கும் பயன்படுத்தினர். தெய்வங்களுக்கு சுட்ட செங்கற்லால் கோயில், அரண்மனை கட்டிடங்களை எழுப்பினர். இதன் விளைவாக வளமான பிறை பிரதேசத்தில், கிமு 4500-இல் முதன்முதலில் சுமேரியா நாகரீகம் தோன்றியது.இப்பிரதேசத்தில் முதன் முதலாக புதிய தொழில் நுட்ப முன்னேற்றங்களாக ஆப்பெழுத்துக்கள், எழுத்துக் கலை, வேளாண் நீர் பாசானம், வண்டிச் சக்கரங்கள், கண்ணாடி மட்பாண்டங்கள், சுமேரிய மொழி, சுமேரியச் சமயம் மற்றும் சுமேரிய கடவுள்கள் தோன்றியது.

வளமான பிறை பிரதேசம்
கிமு 9,000-இல் வளமான பிறை பிரதேசத்தில் ஆற்று நீர்பாசான பரவல்

பெயர்க் காரணம்

வளமான பிறை பிரதேசம் 
1916-இல் ஜேம்ஸ் ஹென்றி அறிமுகப்படுத்திய வளமான பிறை பிரதேசத்தின் வரைபடம்

ஜேம்ஸ் வென்றி என்ற தொல்லியல் அறிஞர் வளமான பிறை பிரதேசம் என்ற சொற்றொடரை 1914-இல் தான் எழுதிய ஐரோப்பிய வரலாறு (European History (1914) மற்றும் பண்டையக் காலங்கள், பண்டைய உலகின் துவக்க வரலாறு (Ancient Times, A History of the Early World) (1916) போன்ற நூல்களில் அறிமுகப்படுத்தினார்.


வளமான பிறை பிரதேசம் 
கிமு 7,500-இல் வளமான பிறை பிரதேசத்தின் மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலத்தில், வளமான பிறை பிரதேசத்தில் மக்கள் குடியேறாத மெசொப்பொத்தேமியா பகுதி
வளமான பிறை பிரதேசம் 
வளமான பிறை பிரதேசம் 
Göbekli Tepe
கிமு 9,000 காலத்திய கோபேக்லிக் தொல்லியல் மேடு, வளமான பிறை பிரதேசத்திற்குட்பட்ட தற்கால தென் துருக்கி]

வளமான பிறை பிரதேசத்தின் பண்பாடு, மக்கள் & இராச்சியங்கள்

வளமான பிறை பிரதேசத்தில் உபைது பண்பாடு, உரூக் பண்பாடு, கிஷ் பண்பாடு, ஹுரியப் பண்பாடு, ஹலாப் பண்பாட்டுக் காலத்தில் ஹுரியத் மக்கள், அசிரிய மக்கள், இட்டைட்டு மக்கள், அமோரிட்டு மக்கள்,சால்டியர்கள், பிலிஸ்தியர்கள், காசிட்டு மக்களின் கீழ்கண்ட நகர இராச்சியங்கள் இருந்தது. அவைகள்;

  1. அக்காடியப் பேரரசு
  2. இட்டைட்டு பேரரசு
  3. எப்லா இராச்சியம்
  4. மாரி இராச்சியம்
  5. பழைய அசிரியப் பேரரசு
  6. மத்திய அசிரியப் பேரரசு
  7. புது அசிரியப் பேரரசு
  8. மூன்றாவது ஊர் வம்சம்
  9. முதல் பாபிலோனியப் பேரரசு
  10. புது பாபிலோனியப் பேரரசு
  11. மித்தானி இராச்சியம்
  12. எகிப்தின் துவக்ககால இராச்சியம்
  13. எகிப்தின் மத்தியகால இராச்சியம்
  14. பழைய எகிப்து இராச்சியம்
  15. புது எகிப்து இராச்சியம்
  16. அகாமனிசியப் பேரரசு
  17. செலூக்கியப் பேரரசு
  18. பார்த்தியப் பேரரசு
  19. சாசானியப் பேரரசு

துவக்ககால தானியங்கள் & வளர்ப்பு விலங்குகள்

வரலாற்றுக்கு முந்திய காலத்தில் 14,400 ஆண்டுகளுக்கு முன் விதைகளற்ற அத்திப் பழ மரங்க ஜோர்தான் சமவெளியில் வளர்க்கப்பட்டது. 9,000 ஆண்டுகளுக்கு முன்னரே கோதுமை, சோளம் போன்ற தானியங்கள் சிரியாவில் பயிரிடப்பட்டது. வளமான பிறை பிரதேசத்தில் பூனைகள் வீட்டு வளர்ப்பு விலங்காக வளர்க்கப்பட்டது. மேலும் கால்நடைகள், ஆடு, மாடு, பன்றி, வாத்து போன்றவைகள் வீட்டு வளர்ப்பு விலங்குகளாக வளர்க்கப்பட்டது. வேட்டைத் தொழிலிருந்து மக்கள் வேளாண்மைத் தொழிலுக்கு மாறத் தொடங்கினர்.

மொழிகள்

வளமான பிறை பிரதேசத்தில் பல்வேறுபட்ட மொழிகள் பேசப்பட்டது. மொசப்பத்தேமியாவின் கீழ்ப்பகுதிகளில் பேசப்பட்ட செமிடிக் மொழிகளுக்கும், மேட்டு நிலங்களில் பேசப்பட்ட ஈலமைட்டு மொழி, காசிட்டு மொழி, ஹுர்ரோ-உராத்தியன் மொழிகளுக்கும் தொடர்பில்லாமல் இருந்ததது. வள பிறை பிரதேசத்தில் பேசப்பட்ட பிற மொழிகள்:

வளமான பிறை பிரதேசத்தின் பண்டைய நகரங்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

ஆதார நூற்பட்டியல்

வெளி இணைப்புகள்



Tags:

வளமான பிறை பிரதேசம் பெயர்க் காரணம்வளமான பிறை பிரதேசம் வளமான பிறை பிரதேசத்தின் பண்பாடு, மக்கள் & இராச்சியங்கள்வளமான பிறை பிரதேசம் துவக்ககால தானியங்கள் & வளர்ப்பு விலங்குகள்வளமான பிறை பிரதேசம் மொழிகள்வளமான பிறை பிரதேசம் வளமான பிறை பிரதேசத்தின் பண்டைய நகரங்கள்வளமான பிறை பிரதேசம் இதனையும் காண்கவளமான பிறை பிரதேசம் மேற்கோள்கள்வளமான பிறை பிரதேசம் ஆதார நூற்பட்டியல்வளமான பிறை பிரதேசம் வெளி இணைப்புகள்வளமான பிறை பிரதேசம்இஸ்ரேல்ஈராக்ஈரான்எகிப்துசிரியாசைப்பிரஸ்ஜோர்டான்துருக்கிபண்டைய அண்மை கிழக்குலெபனான்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இராமர்முடியரசன்முதலாம் இராஜராஜ சோழன்பச்சைக்கிளி முத்துச்சரம்முகலாயப் பேரரசுஇலட்சத்தீவுகள்சேமிப்புவிசயகாந்துகலைஞர் மகளிர் உரிமைத் தொகைவிஜயநகரப் பேரரசுபெண் தமிழ்ப் பெயர்கள்பள்ளர்பாலை (திணை)சிந்துவெளி நாகரிகம்பொதுவுடைமைஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்இந்திய மக்களவைத் தொகுதிகள்தமிழ் எண்கள்சுயமரியாதை இயக்கம்இராமலிங்க அடிகள்தொல். திருமாவளவன்சூரைஜீரோ (2016 திரைப்படம்)பெரியபுராணம்கண்டம்திருப்பூர் குமரன்திருநங்கைதஞ்சாவூர்சித்தர்செஞ்சிக் கோட்டைபோயர்தமிழ்ஒளிஜிமெயில்மூகாம்பிகை கோயில்பனைதமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்உணவுவாட்சப்குகேஷ்ஸ்ரீலீலாஅணி இலக்கணம்ஆண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005மாநிலங்களவைசெயங்கொண்டார்உலர் பனிக்கட்டிபொன்னியின் செல்வன்சேரர்இந்திய உச்ச நீதிமன்றம்தமிழர் நிலத்திணைகள்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)தமிழ்நாடு காவல்துறைகபிலர் (சங்ககாலம்)இளையராஜாகிரியாட்டினைன்அரிப்புத் தோலழற்சியோனிசிவம் துபேஇதயம்பிள்ளைத்தமிழ்நருடோதிருவாசகம்ஏப்ரல் 25நாட்டு நலப்பணித் திட்டம்சிவனின் 108 திருநாமங்கள்தமன்னா பாட்டியாமரங்களின் பட்டியல்திணையும் காலமும்பிள்ளையார்நெடுநல்வாடைஇந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்இந்திய தேசியக் கொடிதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024அங்குலம்புறப்பொருள்ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்மருதமலை முருகன் கோயில்புனித ஜார்ஜ் கோட்டை🡆 More