புது அசிரியப் பேரரசு

புது அசிரியப் பேரரசு (Neo-Assyrian Empire) இரும்புக் காலத்தில் மெசொப்பொத்தேமியாவை மையக் கொண்டு, கிமு 911 முதல் 609 முடிய ஆட்சி செய்த, பண்டைய உலகின் பெரும் பேரரசுகளில் ஒன்றாகும்.

இது அசிரியாவின் இறுதிப் பேரரசாகும். இப்பேரரசின் புகழ்பெற்ற பேரரசர் அசூர்பனிபால் ஆவார்.

புது அசிரியப் பேரரசு
𒆳𒀸𒋩𒆠
māt Aššur (Akkadian)
கிமு 911–கிமு 609
புதிய அசிரியப் பேரரசும் அதன் விரிவாக்கப் பகுதிகளும்
புதிய அசிரியப் பேரரசும் அதன் விரிவாக்கப் பகுதிகளும்
தலைநகரம்கிமு 911ல் அஸ்கூர்
கிமு 879ல் நிம்ருத்
கிமு 706ல் துர்ஷர்ருக்கின்
கிமு 705ல் நினிவே
கிமு 612ல் ஹர்ரன்
பேசப்படும் மொழிகள்அக்காதியம்
அரமேயம்
சுமேரிய மொழி (புழக்கத்தில் மறைந்துவிட்டது)
சமயம்
அசிரிய-பாபிலோனிய சமயம்
அரசாங்கம்முடியாட்சி
அசிரியாவின் மன்னர் 
• கிமு 911–891
இரண்டாம் ஆதாத் நிராரி (முதல்)
• கிமு 612–609
இரண்டாம் அசூர்-உப்பல்லித் (இறுதி)
வரலாற்று சகாப்தம்இரும்புக் காலம்
• இரண்டாம் அதாத்-நிராரி
கிமு 911
• நினிவே போர்
கிமு 612
• ஹர்ரான் முற்றுகை
கிமு 609
பரப்பு
கிமு 6701,400,000 km2 (540,000 sq mi)
முந்தையது
பின்னையது
புது அசிரியப் பேரரசு [[மத்திய அசிரியப் பேரரசு]]
புது அசிரியப் பேரரசு 25வது எகிப்திய வம்சம்
புது அசிரியப் பேரரசு [[சமாரியாவின் இசுரயேல் அரசு]]
புது அசிரியப் பேரரசு [[ஈலாம்]]
[[மீடியாப் பேரரசு]] புது அசிரியப் பேரரசு
[[புது பாபிலோனியப் பேரரசு]] புது அசிரியப் பேரரசு
26வது எகிப்திய வம்சம் புது அசிரியப் பேரரசு
தற்போதைய பகுதிகள்புது அசிரியப் பேரரசு ஈராக்
புது அசிரியப் பேரரசு சிரியா
புது அசிரியப் பேரரசு இசுரேல்
புது அசிரியப் பேரரசு துருக்கி
புது அசிரியப் பேரரசு எகிப்து
புது அசிரியப் பேரரசு சூடான்
புது அசிரியப் பேரரசு சவூதி அரேபியா
புது அசிரியப் பேரரசு யோர்தான்
புது அசிரியப் பேரரசு ஈரான்
புது அசிரியப் பேரரசு குவைத்
புது அசிரியப் பேரரசு லெபனான்
புது அசிரியப் பேரரசு சைப்பிரசு
புது அசிரியப் பேரரசு பலத்தீன்

பல வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப் படி, உலக வரலாற்றில் முதல் உண்மையான பேரரசாக அசிரிய மக்களின் இப்புதிய பேரரசு விளங்கியது. அசிரியர்கள், முதலில் இரும்பு ஆயுதங்களுடன், போரில் தந்திரோபாயங்களுடன் போரிட்டதால், அசிரியர்களை போரில் எளிதில் வெல்ல இயலவில்லை.

கிமு பத்தாம் நூற்றாண்டில் புது அசரியப் பேரரசின் மன்னர் இரண்டாம் அதாத் நிராரி காலத்தில் அசிரியா உலகின் சக்தி வாய்ந்த அரசுகளில் ஒன்றாக விளங்கியது.

புது அசிரியப் பேரரசர்கள் பண்டைய அண்மைக் கிழக்கு பகுதிகள், கிழக்கு மத்தியதரைக் கடற்பரப்புகள், அனத்தோலியா, காக்கேசியா, அராபியத் தீபகற்பம் மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா பகுதிகளை கைப்பற்றியதுடன், தங்களது பலமிக்க போட்டி அரசுகளான பாபிலோன், ஈலாம், பாரசீகம், லிடியா, உரார்த்து, சிம்மெரியர்கள், சமாரியா, யூத அரசு, சால்டியா, கானான் மற்றும் எகிப்து இராச்சியங்களைக் கைப்பற்றி ஆண்டனர்.

பழைய அசிரிய இராச்சியத்திற்குப் (கிமு 2025–1378) பின் தோன்றிய மத்திய அசிரியப் பேரரசுக் (கிமு 1365–1050) பின் புது அசிரியப் பேரரசு பெரும் நிலப்பரப்புகளுடன் கிமு 911 முதல் கிமு 609 ஆண்டது. இப்பேரரசில் ஆட்சி மொழியாக அக்காடியன் மொழியுடன், பழைய அரமய மொழியும் இருந்தது.

நினிவே போர்

கிமு 612-இல் புது அசிரியப் பேரரசிடமிருந்து நினிவே நகரத்தைக் கைப்பற்றுவதற்கு நடந்த போராகும். இப்போரின் முடிவில் மீடியர்கள் மற்றும் பாபிலோனியர்கள் 750 எக்டேர் பரப்பளவு கொண்ட உலகின் பெரும் நகரங்களில் ஒன்றான நினிவே நகரத்தை கைப்பற்றினர். இப்போரின் முடிவில் புது அசிரியப் பேரரசு நலிவுறத் தொடங்கியதுடன், புது பாபிலோனியப் பேரரசு எழுச்சியுறத் துவங்கியது.

கிமு 627ல் புது அசிரியப் பேரரசர் அசூர்பர்னிபாலின் இறப்பிற்குப் பின்னர், அசிரியாவில் நடைபெற்ற உள்நாட்டுப் போர்களால், பேரரசு சிதறுண்டது.

கிமு 616ல் பாரசீக மன்னர் பாபிலோன், சால்டியா மற்றும் சிதியர்களுடன் கூட்டு சேர்ந்து, புது அசிரியப் பேரரசு-எகிப்திய பேரரசுகளுடன் போரிட்டனர். ஹர்ரன் நகரத்தின் வீழ்ச்சிக்குப் பின், புது அசரியப் பேரரசு, தனது விரிவாக்கப் பகுதிகளை இழந்து, தனது இராச்சியத்தை அசிரியாவில் மட்டும் நிலைநாட்டிக் கொண்டனர்.

புது அசிரியப் பேரரசு வீழ்ச்சியுற்றாலும், அசிரியர்களில் வரலாறு தொடர்ந்தது. தற்காலத்திலும் ஈரான், ஈராக் போன்ற நாடுகளில் அசிரியா மக்கள் வாழ்கின்றனர்.

அசிரியாவின் வீழ்ச்சிக்குப் பின்

கிமு 609ல் இறுதி அசிரியப் பேரரசரின் புது அசிரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின், அசிரியப் பகுதிகளை புது பாபிலோனியப் பேரரசு, பண்டைய எகிப்து, மீடியா பேரரசும், கிமு 550ல் அகாமனிசியப் பேரரசும், பின்னர் சாசானியப் பேரரசும் கைப்பற்றி ஆண்டனர்.

புது அசிரியப் பேரரசின் முக்கிய ஆட்சியாளர்கள்

புது அசிரியப் பேரரசு 
பேரரசர் திக்லாத் - மூன்றாம் பைல்செர், கிமு 745 - 727
புது அசிரியப் பேரரசு 
பேரரசர் அசூர்பனிபால் கிமு 669 - 627
புது அசிரியப் பேரரசு 
ஈராக்கின் துர்-சருக்கின் தொல்லியல் களத்தில் கண்டெடுத்த லம்மசு சிற்பம், புது அசிரியப் பேரரசுக் காலம், கிமு 721–705, சிக்காகோ ஓரியண்டல் கழகம், சிக்காகோ பல்கலைக்கழகம்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

ஆதாரங்கள்

  • Roux, Georges (1982) Ancient Iraq, (Penguin, Harmondsworth)

வெளி இணைப்புகள்

Tags:

புது அசிரியப் பேரரசு நினிவே போர்புது அசிரியப் பேரரசு அசிரியாவின் வீழ்ச்சிக்குப் பின்புது அசிரியப் பேரரசு புது அசிரியப் பேரரசின் முக்கிய ஆட்சியாளர்கள்புது அசிரியப் பேரரசு இதனையும் காண்கபுது அசிரியப் பேரரசு மேற்கோள்கள்புது அசிரியப் பேரரசு ஆதாரங்கள்புது அசிரியப் பேரரசு வெளி இணைப்புகள்புது அசிரியப் பேரரசுஅசிரியாஅசூர்பனிபால்இரும்புக் காலம்மெசொப்பொத்தேமியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

முருகன்ஈரோடு தமிழன்பன்கருச்சிதைவுபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்சித்ரா பௌர்ணமிபெண்சீரகம்இந்திய தேசிய காங்கிரசுஜலியான்வாலா பாக் படுகொலைதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்மழைதிருமலை நாயக்கர் அரண்மனைரோசுமேரிகுறிஞ்சி (திணை)இலவங்கப்பட்டைதிருமுருகாற்றுப்படைதலைவி (திரைப்படம்)இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்தமிழ் மாதங்கள்திருக்குறிப்புத் தொண்ட நாயனார்தமிழ்நாடுமருதமலை (திரைப்படம்)தாவரம்நாயக்கர்மறவர் (இனக் குழுமம்)கரிகால் சோழன்பறவையோகிமுகம்மது நபிபள்ளர்கா. ந. அண்ணாதுரைஅண்ணாமலை குப்புசாமிஆண்டாள்தமிழ்பழனி முருகன் கோவில்சாகித்திய அகாதமி விருதுகுடும்பம்இடைச்சொல்பட்டினப் பாலைதிரு. வி. கலியாணசுந்தரனார்பல்லவர்உணவுந. பிச்சமூர்த்திமு. மேத்தாவிஜயநகரப் பேரரசுமாசாணியம்மன் கோயில்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்அன்னி பெசண்ட்வேற்றுமையுருபுமனித வள மேலாண்மைதிருக்குர்ஆன்தற்கொலை முறைகள்இரத்தக்கழிசல்தமிழக மக்களவைத் தொகுதிகள்கொன்றை வேந்தன்கஞ்சாமென்பொருள்வரலாறுதன்வினை / பிறவினை வாக்கியங்கள்நுரையீரல் அழற்சிதமிழர் நெசவுக்கலைநற்றிணைதமிழ் எண்கள்மகாபாரதம்மாதேசுவரன் மலைதிரிகடுகம்நினைவே ஒரு சங்கீதம்ராஜசேகர் (நடிகர்)கண்ணாடி விரியன்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்திருவாசகம்நன்னூல்புரோஜெஸ்டிரோன்இந்தியாவில் இட ஒதுக்கீடுவெந்து தணிந்தது காடுமுத்தரையர்திருமணம்பார்க்கவகுலம்பறையர்🡆 More