நிப்பூர்

நிப்பூர் (Nippur) (சுமேரியம்: நிப்ரு), அக்காதியம்: நிப்பூர்) சுமேரியாவின் பண்டைய அண்மைக் கிழக்கின் நகரங்களில் ஒன்றாகும்.

நிப்பூர்
நிப்பூர்
நிப்பூர் கோயிலின் சிதிலமடைந்த மேடை மீது, அமெரிக்கத் தொல்லியலாளர்கள் கிபி 1900ல் செங்கற்களால் கட்டிய சுவர்
நிப்பூர் is located in ஈராக்
நிப்பூர்
Shown within ஈராக்
இருப்பிடம்நுஃபார், அல் குவாதிசியா ஆளுனரகம், ஈராக்
பகுதிமெசொப்பொத்தேமியா
ஆயத்தொலைகள்32°07′35.2″N 45°14′0.17″E / 32.126444°N 45.2333806°E / 32.126444; 45.2333806
வகைதொல்லியல் களம்

இந்நகரம் சுமேரியர்களின் கடவுளான மழை மற்றும் அண்டத்தின் ஆட்சியாளரான கடவுள் என்லிலுக்கு சிறப்பிடம் தருகிறது.

பண்டைய நிப்பூர் நகரத்தின் தொல்லியல் களங்கள், தற்கால ஈராக் நாட்டின் அல் குவாதிசியா ஆளுனரகத்தின், நுஃபார் சிற்றூரில் உள்ளது.

அமைவிடம்

டைகிரிஸ் ஆற்றின் கரையில், பாக்தாத் நகரத்திலிருந்து தென்கிழக்கில் 160 கிமீ தொலைவில் பண்டைய நிப்பூர் தொல்லியல் நகரம் உள்ளது.

வரலாறு

நிப்பூர் நகரம் தனது சொந்த அரசியல் மேலாதிக்கத்தை என்றும் பேணியதில்லை. ஆனால் ஊர், பாபிலோன், ஈலம் போன்ற மற்ற நகர ஆட்சியாளர்களின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டது. நிப்பூர் நகரம் என்லில் கடவுளின் கோயில் அமைந்திருந்ததால் புனித நகரமாக விளங்கியது.

சுமேரியாவின் கிஸ் நகர ஆட்சியாளர் என்லில் கடவுளுக்கான கோயிலை நிப்பூரில் முதலில் அமைத்தார்.

அக்காத், ஊர் மற்றும் மற்றும் பழைய பாபிலோனியப் பேரரசு காலத்தில்

நிப்பூர் 
பேரரசர் அம்முராபி காலத்திய பழைய பாபிலோனியப் பேரரசில் நிப்பூர் நகரம்

கிமு 3000ன் இறுதியில் கிழக்கு செமிடிக் மொழிகளில் ஒன்றான அக்காதியம் பேசிய அக்காடிய ஆட்சியாளர்கள் நிப்பூர் நகரத்தை கைப்பற்றினர்.

அக்காடியப் பேரரசு வீழ்ந்த காலத்தில் நிப்பூர் நகரத்திற்கு உரிய புனித நகரம் என்ற பெருமையை பாபிலோன் நகரத்திற்கு அளிக்கப்பட்டது.

அக்காடிய ஆக்கிரமிப்பிற்குப் பின், ஊர் நகர மூன்றாவது ஊர் வம்ச மன்னர் ஊர் நம்மு என்பவர் நிப்பூர் நகரத்தில் நரம் சின் மற்றும் ஊர் நம்மு கோயில்களை எழுப்பினார்.

பிந்தைய வரலாறு

கிமு 8ம் நூற்றாண்டில் நிப்பூர் நகரத்தை ஆட்சி செய்த புது அசிரியப் பேரரசர் இரண்டாம் சர்கோன் காலத்திய கல்வெட்டுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

புது அசிரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் செலூக்கியப் பேரரசு ஆட்சிக்காலத்தில் நிப்பூர் நகரத்தின் என்லில் தெய்வத்திற்கான கோயில், கோடையாக மாற்றபட்டது.

பின்னர் நிப்பூர் கோட்டைகளை கிமு 250ல் பார்தியர்கள் சீரமைத்தனர். சசானியப் பேரரசு காலத்தில் நிப்பூர் நகரம் பாழடைந்து, சிறு கிராமமாக நிப்பூர் நகரம் காட்சியளித்தது.

தொல்லியல்

நிப்பூர் 
வணங்கி நிற்கும் பெண் சிலை, நிப்பூர் தொல்லியல் களம், காலம் கிமு 2600 - கிமு 2500

நிப்பூர் தொல்லியல் களத்தில் 30 மீட்டர் உயரம் கொண்ட பெரிய மண்மேடு கண்டெடுக்கப்பட்டது. இதனை அரேபியர்கள் நூப்பர் என்றனர். இத்தொல்லியல் களத்தை 1851ல் சர் ஆஸ்டின் ஹென்றி லயர்டு என்பவர் முதலில் அகழாய்வு செய்தார். 1889 - 1890களில் ஐக்கிய அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழக்கத்தின் தொல்லியல் அறிஞர்கள் மீண்டும் விரிவாக அகழாய்வு செய்தனர்.

சிகாகோ கீழ்திசை நிறுவத்தினர் நிப்பூர் தொல்லியல் களத்தை 1948 முதல் 1990 வரை 19 முறை அகழாய்வு செய்தனர். நிப்பூர் தொல்லியல் களத்தில் ஏழு களிமண் சவப்பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டது. அவைகள் பிலடெல்பியா பல்கலைக்கழகத்தின் அருங்காட்சியகத்தின் உள்ளது.

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

நிப்பூர் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
நிப்பூர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

நிப்பூர் அமைவிடம்நிப்பூர் வரலாறுநிப்பூர் தொல்லியல்நிப்பூர் இதனையும் காண்கநிப்பூர் அடிக்குறிப்புகள்நிப்பூர் மேற்கோள்கள்நிப்பூர் வெளி இணைப்புகள்நிப்பூர்அக்காதியம்சுமேரிய மொழிசுமேரியாபண்டைய அண்மை கிழக்கின் நகரங்கள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ராஜா ராணி (1956 திரைப்படம்)தமிழ் இணைய மாநாடுகள்நவதானியம்நீர் பாதுகாப்புநேர்பாலீர்ப்பு பெண்பணவீக்கம்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்பாட்டாளி மக்கள் கட்சிமு. மேத்தாகாடழிப்புஇந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்உரிச்சொல்ராமராஜன்வழக்கு (இலக்கணம்)திருமூலர்ஈரோடு தமிழன்பன்கல்வெட்டுசெயற்கை மழைதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்முல்லைக்கலிஅன்மொழித் தொகைமணிமேகலை (காப்பியம்)கருச்சிதைவுதிணை விளக்கம்வீரமாமுனிவர்ஜலியான்வாலா பாக் படுகொலைஅணி இலக்கணம்உவமையணிதமிழ்ப் புத்தாண்டுபிளாக் தண்டர் (பூங்கா)மங்காத்தா (திரைப்படம்)இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்உலர் பனிக்கட்டிஅகரவரிசைஇந்தியாவில் இட ஒதுக்கீடுபாரத ஸ்டேட் வங்கிஉடன்கட்டை ஏறல்முடக்கு வாதம்கம்பராமாயணத்தின் அமைப்புஅரண்மனை (திரைப்படம்)ஆண்டுதர்மா (1998 திரைப்படம்)கட்டுரைஇரட்டைக்கிளவிபூலித்தேவன்பூக்கள் பட்டியல்கண்டம்எங்கேயும் காதல்நுரையீரல் அழற்சிதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்ஜெ. ஜெயலலிதாசினேகாவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)திருநங்கைமியா காலிஃபாஇன்ஸ்ட்டாகிராம்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370திராவிசு கெட்வேளாண்மைபெரியாழ்வார்வரிசையாக்கப் படிமுறைஅறுவகைப் பெயர்ச்சொற்கள்கள்ளழகர் கோயில், மதுரைநாயன்மார்வேதநாயகம் பிள்ளைகார்த்திக் (தமிழ் நடிகர்)திருப்பாவைகுலசேகர ஆழ்வார்மென்பொருள்ரோசுமேரிகம்பராமாயணம்வளைகாப்புஉயர் இரத்த அழுத்தம்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்தற்குறிப்பேற்ற அணிதிவ்யா துரைசாமிதூது (பாட்டியல்)கேள்விகடலோரக் கவிதைகள்🡆 More