உருசியாவின் இரண்டாம் அலெக்சாந்தர்

இரண்டாம் அலெக்சாந்தர் (Alexander II, உருசியம்: Алекса́ндр II Никола́евич, அலெக்சாந்தர் II நிக்கலாயெவிச்; 29 ஏப்ரல் 1818 29 ஏப்ரல் 1818 – 13 மார்ச் 1881) உருசியப் பேரரசராக 1855 மார்ச் 2 முதல் 1881 மார்ச் 13 இல் அவர் கொலை செய்யப்படும் வரை பதவியில் இருந்தவர்.

இவர் போலந்து மன்னராகவும், பின்லாந்து இளவரசராகவும் இருந்தார்.

இரண்டாம் அலெக்சாந்தர்
Alexander II
உருசியாவின் இரண்டாம் அலெக்சாந்தர்
உருசியப் பேரரசர்
ஆட்சிக்காலம்2 மார்ச் 1855 – 13 மார்ச் 1881
முடிசூடல்7 செப்டம்பர் 1856
முன்னையவர்முதலாம் நிக்கலாசு
பின்னையவர்மூன்றாம் அலெக்சாந்தர்
பிறப்பு(1818-04-29)29 ஏப்ரல் 1818
கிரெம்லின், மாஸ்கோ, உருசியப் பேரரசு
இறப்பு13 மார்ச்சு 1881(1881-03-13) (அகவை 62)
குளிர்கால அரண்மனை, சென் பீட்டர்ஸ்பேர்க், உருசியப் பேரரசு
புதைத்த இடம்
பீட்டர், பவுல் பேராலயம், சென். பீட்டர்சுபர்க், உருசியா
துணைவர்
  • மரியா அலெக்சாந்திரொவ்னா (எசேயின் மரீ) (1841-1880, இறப்பு)
  • இளவரசி கேத்தரின் தொல்கொருக்கோவா
குழந்தைகளின்
பெயர்கள்
  • இளவரசி அலெக்சாந்திரா
  • இளவரசர் நிக்கலாசு
  • உருசியாவின் மூன்றாம் அலெக்சாந்தர்
  • இளவரசர் விளாதிமிர்
  • இளவரசர் அலெக்சி
  • இளவரசி மரியா
  • இளவரசர் செர்கே
  • இளவரசர் பவுல்
  • இளவரசர் ஜார்ஜ் யுர்யேவ்சுக்கி
  • இளவரசி கேத்தரின் யுரியேவ்சுக்கயா
பெயர்கள்
அலெக்சாந்தர் நிக்கொலாயெவிச் ரொமானொவ்
மரபுஓல்சுடைன்-கோட்டோர்ப்-ரொமானொவ் மாளிகை
தந்தைஉருசியாவின் முதலாம் நிக்கலாசு
தாய்அலெக்சாந்திரா பியோதரவ்னா (புருசியாவின் சார்லட்)
மதம்உருசிய மரபுவழித் திருச்சபை
கையொப்பம்இரண்டாம் அலெக்சாந்தர் Alexander II's signature

அலெக்சாந்தரின் மிக முக்கியமான சீர்திருத்தம் உருசியாவின் பண்ணையடிமைகளை 1861 ஆம் ஆன்டில் விடுவித்தமை ஆகும். இதற்காக அவர் "விடுதலை பெற்றுக் கொடுத்த அலெக்சாந்தர்" (Alexander the Liberator; உருசியம்: Алекса́ндр Освободи́тель) எனப் போற்றப்படுகிறார். நீதித்துறை அமைப்பை மறுசீரமைத்தல், தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் நீதிபதிகளை நியமித்தல், உடல் ரீதியான தண்டனைகளை ஒழித்தல், உள்ளூர் சுயாட்சியை செம்சுத்துவோ அமைப்பு மூலம் ஊக்குவித்தல், உலகளாவிய இராணுவ சேவையை அமுல்படுத்தல், நிலப்பிரபுக்களின் சில சலுகைகளை முடிவுக்குக் கொண்டுவருதல், பல்கலைக்கழகக் கல்வியை ஊக்குவித்தல் போன்ற பல சீர்த்திருத்தங்களைக் கொண்டு வந்தார். 1866 இல் அலெக்சாந்தர் மீது நடத்தப்பட்ட ஒரு படுகொலை முயற்சிக்குப் பிறகு, அவர் இறக்கும் வரை சற்று தீவிரமான பிற்போக்குத்தனமான நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டார்.

அலெக்சாந்தரின் வெளியுறவுக் கொள்கையை எடுத்துக் கொண்டால், உருசியாவின் கட்டுப்பாட்டில் இருந்த அலாஸ்காவை 1867 இல் ஐக்கிய அமெரிக்காவிற்கு விற்றமையைக் குறிப்பிட்டுக் கூறலாம். மற்றொரு போர் ஒன்று ஏற்படும் இடத்து, உருசியாவின் தொலைதூர குடியேற்றப் பகுதி பிரித்தானியாவின் பிடிக்குள் செல்வதைத் தடுக்கும் பொருட்டு இந்த முடிவுக்கு அவர் வந்தார். இந்தக் கொள்முதல் மூலம் அமெரிக்காவிற்கு 586,412 சதுர மைல் (1,518,800 சதுரகிமீ) புதிய நிலப்பரப்பு 7.2 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் (ஒரு ஏக்கருக்கு 4.7 காசுகள்) சேர்ந்தது.

1871 இல் பிரான்சின் மூன்றாம் நெப்போலியன் வீழ்ச்சி அடைந்த போது, அலெக்சாந்தர் அமைதி விரும்பி பிரான்சிலிருந்து விலகிச் சென்றார், 1872 ஆம் ஆண்டில் செருமனி மற்றும் ஆஸ்திரியாவுடன் இணைந்ததன் மூலம் ஐரோப்பியத் திரத்தன்மையை உறுதிப்படுத்தினார். அமைதியான வெளியுறவுக் கொள்கை இருந்தபோதிலும், அவர் 1877-78 இல் உதுமானியப் பேரரசுடன் ஒரு சிறிய போரை நடத்தினார், சைபீரியா மற்றும் காக்கேசியாவில் விரிவாக்கத்தைத் தொடர்ந்தார், துர்கெசுத்தானைக் கைப்பற்றினார். 1878 இல் ஆறு பேரரசுகளின் பெர்லின் மாநாட்டின் முடிவுகளால் ஏமாற்றமடைந்தாலும், அலெக்சாந்தர் அதன் உடன்படிக்கைக்குக் கட்டுப்பட்டார். 1863 சனவரியில் போலந்தில் இடம்பெற்ற எழுச்சி அவருக்கு மிகப் பெரும் உள்நாட்டு சவாலாக அமைந்தது. இவ்வெழுச்சியின் விளைவாக அவர் தனி அரசியலமைப்பின் மூலம் ஆளப்பட்டு வந்த அந்நிலத்தை நேரடியாக உருசியாவுடன் இணைத்தார். புதிய புரட்சி இயக்கங்களின் எழுச்சியை எதிர்கொள்ள கூடுதல் நாடாளுமன்ற சீர்திருத்தங்களை முன்மொழிந்த வேளையில் அலெக்சாந்தர் 1881 இல் நரோத்னயா வோல்யா (மக்கள் நலம்) என்ற தீவிரவாத அமைப்பினரால் படுகொலை செய்யப்பட்டார்.

வம்சம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

உருசியப் பேரரசுஉருசியம்பின்லாந்துபோலந்துயூலியின் நாட்காட்டி

🔥 Trending searches on Wiki தமிழ்:

பால்வினை நோய்கள்இந்தியன் (1996 திரைப்படம்)உமறு இப்னு அல்-கத்தாப்நியூயார்க்கு நகரம்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்இரவு விடுதிபூப்புனித நீராட்டு விழாஆடுஜீவிதம் (திரைப்படம்)திருவண்ணாமலைதங்கம் தென்னரசுபால் கனகராஜ்மருத்துவம்இரட்டைக்கிளவிநாயன்மார்ஆற்றுப்படைசைவ சமயம்சங்க காலம்வால்ட் டிஸ்னிசீரடி சாயி பாபாகருப்பை வாய்ஆ. ராசாதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்குறுந்தொகைஒற்றைத் தலைவலிதிருநெல்வேலி மக்களவைத் தொகுதிமனத்துயர் செபம்உட்கட்டமைப்புபாரிமார்பகப் புற்றுநோய்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்மதுராந்தகம் தொடருந்து நிலையம்மரபுச்சொற்கள்தேசிக விநாயகம் பிள்ளைவரைகதைமத்திய சென்னை மக்களவைத் தொகுதிபி. காளியம்மாள்மேழம் (இராசி)பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்கபிலர் (சங்ககாலம்)திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்ம. கோ. இராமச்சந்திரன்ஐராவதேசுவரர் கோயில்பிரெஞ்சுப் புரட்சிபாரதிய ஜனதா கட்சிபுகாரி (நூல்)மீன்ஆறுமுக நாவலர்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்உரிச்சொல்தமிழக வெற்றிக் கழகம்சங்க இலக்கியம்புவிவெப்பச் சக்திமுரசொலி மாறன்கணினிபல்லவர்சட் யிபிடிபழமொழி நானூறுபூரான்சித்திரைஇடைச்சொல்பரதநாட்டியம்அல்லாஹ்கணியன் பூங்குன்றனார்நவரத்தினங்கள்கிறித்தோபர் கொலம்பசுகிரிமியா தன்னாட்சிக் குடியரசுஎஸ். ஜெகத்ரட்சகன்விவிலிய சிலுவைப் பாதைதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்பசுமைப் புரட்சிசிங்கப்பூர் உச்ச நீதிமன்றம்தமிழச்சி தங்கப்பாண்டியன்சேலம் மக்களவைத் தொகுதிமருதமலைமு. கருணாநிதிதமிழர் நிலத்திணைகள்வாய்மொழி இலக்கியம்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்🡆 More