உருசியாவின் முதலாம் நிக்கலாசு

முதலாம் நிக்கலாசு (Nicholas I, உருசியம்: Николай I Павлович, ஒ.பெ நிக்கலாய் I பாவ்லவிச்; 6 சூலை 1796 – 2 மார்ச் 1855) உருசியப் பேரரசராக 1825 முதல் 1855 வரை பதவியில் இருந்தவர்.

இதே வேளையில் இவர் போலந்து மன்னராகவும், பின்லாந்து இளவரசராகவும் இருந்தார்.

முதலாம் நிக்கலாசு
Nicholas I
உருசியாவின் முதலாம் நிக்கலாசு
உருசியப் பேரரசர்
ஆட்சிக்காலம்1 திசம்பர் 1825 – 2 மார்ச் 1855
முடிசூடல்3 செப்டம்பர் 1826
முன்னையவர்முதலாம் அலெக்சாந்தர்
பின்னையவர்இரண்டாம் அலெக்சாந்தர்
பிறப்பு(1796-07-06)6 சூலை 1796
கத்சீனா அரண்மனை, உருசியப் பேரரசு
இறப்பு2 மார்ச்சு 1855(1855-03-02) (அகவை 58)
குளிர்கால அரண்மனை, சென் பீட்டர்ஸ்பேர்க், உருசியப் பேரரசு
புதைத்த இடம்
பீட்டர், பவுல் பேராலயம், சென் பீட்டர்சுபர்க்
Consortஅலெக்சாந்திரா பியோதரவ்னா (புருசியாவின் சார்லட்) (தி. 13 சூலை 1817
குழந்தைகளின்
பெயர்கள்
  • இரண்டாம் அலெக்சாந்தர்
  • லூட்டர்ன்பர்க் இளவரசி மரியா
  • ஊட்டம்பர்க் அரசி ஒல்கா
  • இளவரசி அலெக்சாந்திரா
  • இளவரசர் கான்சுடன்டைன்
  • இளவரசர் நிக்கலாசு
  • இளவரசர் மைக்கெல்
பெயர்கள்
நிக்கலாசு பாவ்லவிச் ரொமானொவ்
மரபுஓல்சுடைன்-கோட்டொப்-ரொமானொவ் அரண்மனை
தந்தைஉருசியாவின் முதலாம் பவுல்
தாய்மரியா பியோதரவ்னா
மதம்உருசிய மரபுவழித் திருச்சபை

நிக்கலாசு இவருக்கு முன்னர் பேரரசராக இருந்த முதலாம் அலெக்சாந்தரின் தம்பி ஆவார். அலெக்சாந்தர் 1825 திசம்பரில் இறந்த சில நாட்களில் இடம்பெற்ற திசம்பர் கிளர்ச்சி என அழைக்கப்பட்ட இராணுவக் கிளர்ச்சி தோல்வியுற்ற போதிலும், மரபுரிமைக்கிணங்க முதலாம் நிக்கலாசு பேரரசராக முடிசூடினார். முதலாம் நிக்கலாசு ஒரு புறத்தே புவியியல் விரிவாக்கம், பொருளாதார வளர்ச்சி மற்றும் பாரிய தொழில்மயமாக்கல் போன்றவற்றால் குறிப்பிடத்தக்கவராக இருந்தாலும், மறுபுறத்தே நிர்வாகக் கொள்கைகளை மையப்படுத்துதல், கருத்து வேறுபாட்டை அடக்குதல் ஆகியவற்றின் மூலம் சர்ச்சைக்குரிய பிற்போக்குவாதியாகவும் அடையாளப்படுத்தப்பட்டார். இவரது திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியானதாக இருந்தது. இவருக்கு ஏழு பிள்ளைகள், அனைவரும் வளர்ந்து பெரியவர்களானார்கள்.

முதலாம் நிக்கலாசு தனது பதவிக்காலத்தில் ஒரு சுயாதீனமான கிரேக்க அரசை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தார், 1826-1828 உருசிய-பாரசீகப் போரின்போது கஜார் பாரசீகத்தில் இருந்து ஜடார் மாகாணத்தையும் மீதமுள்ள இன்றைய ஆர்மீனியா மற்றும் அசர்பைஜானையும் கைப்பற்றியதன் மூலம் காக்கேசியாவை மீளக்கைப்பற்ற முடிந்தது. 1828-1829 உருசிய-துருக்கியப் போரையும் வெற்றிகரமாக முடித்தார். இருப்பினும், பின்னர், உருசியாவை 1853–1856 கிரிமியப் போருக்கு செல்ல வைத்தார். இது அங்கு பேரழிவைத் தந்தது. "முதலாம் நிக்கலாசின் ஆட்சி உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கையில் ஒரு பேரழிவுகரமான தோல்வி" என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். அவரது இறப்பிற்கு முன்னதாக, உருசியப் பேரரசு 20 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் (7.7 மில்லியன் சதுர மைல்கள்) அதன் புவியியல் உச்சநிலையை அடைந்தது,

நிக்கலாசு 1855 மார்ச் 2 ஆம் நாள், கிரிமியப் போர்க் காலத்தில் சென் பீட்டர்ஸ்பேர்க், குளிர்கால அரண்மனையில் நுரையீரல் அழற்சியினால் இறந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் வதந்திகள் பரவின. அவரது உடல் சென் பீட்டர்சுபர்க் பீட்டர், பவுல் பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

குடும்பம்

முன்னோர்

வாரிசுகள்

முதலாம் நிக்கலாசிற்கு மனைவி அலெக்சாந்திரா பியோதரவ்னாவிடம் இருந்து ஏழு சட்டபூர்வமான பிள்ளைகள்

பெயர் பிறப்பு இறப்பு குறிப்புகள்
இரண்டாம் அலெக்சாந்தர் 29 ஏப்ரல் 1818 13 மார்ச் 1881 திருமணம்: 1841, எசேயின் இளவரசி மரீ, வாரிசு உண்டு
இளவரசி மரியா நிக்கலாயெவ்னா 18 ஆகத்து 1819 21 பெப்ரவரி 1876 திருமணம்: 1839, லியூக்டன்பர்கின் மூன்றாம் இளவரசர் மாக்சிமிலியன்; வாரிசு உண்டு
இளவரசி ஒல்கா நிக்கலாயெவ்னா 11 செப்டம்பர் 1822 30 அக்டோபர் 1892 திருமணம்: 1846, ஊட்டர்ம்பர்க் இளவரசர் சார்லசு; வாரிசு உண்டு.
இளவரசி அலெக்சாந்திரா நிக்கலாயெவ்னா 24 சூன் 1825 10 ஆகத்து 1844 திருமணம்: 1844, எசே-காசெல் இளவரசர் பிரெடெரிக் வில்லியம்; வாரிசு உண்டு
இளவரசர் கான்சுடன்டீன் நிக்கலாயெவிச் 21 செப்டம்பர் 1827 25 சனவரி 1892 திருமணம்: 1848, சாக்சி-ஆல்ட்டன்பர்க் இளவரசி அலெக்சாந்திரா; வாரிசு உண்டு
இளவரசர் நிக்கலாசு நிக்கலாயெவிச் 8 ஆகத்து 1831 25 ஏப்ரல் 1891 திருமணம்: 1856, ஓல்டன்பர்க் இளவரசி அலெக்சாந்திரா பெத்ரோவ்னா; வாரிசு உண்டு
இளவரசர் மைக்கேல் நிக்கலாயெவிச் 25 அக்டோபர் 1832 18 திசம்பர் 1909 திருமணம்: 1857, பாடெனின் இளவரசி செசிலி; வாரிசு உண்டு

இவற்றையும் பார்க்க

குறிப்புகள்

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்

உருசியாவின் முதலாம் நிக்கலாசு
ஆல்சுடைன்-கோத்தர்ப்-ரொமானொவ் மாளிகை
Cadet branch of the ஓல்டன்பர்க் மாளிகை
பிறப்பு: 6 சூலை 1796 இறப்பு: 2 மார்ச் 1855
அரச பட்டங்கள்
முன்னர்
முதலாம் அலெக்சாந்தர்
போலந்து மன்னர்
1825–1830
காலியாக உள்ளது
நவம்பர் எழுச்சி
உருசியப் பேரரசர்
பின்லாந்து இளவரச்ர்

1825–1855
பின்னர்
இரண்டாம் அலெக்சாந்தர்
காலியாக உள்ளது
நவம்பர் எழுச்சி
போலந்து மன்னர்
1831–1855

Tags:

உருசியாவின் முதலாம் நிக்கலாசு குடும்பம்உருசியாவின் முதலாம் நிக்கலாசு இவற்றையும் பார்க்கஉருசியாவின் முதலாம் நிக்கலாசு குறிப்புகள்உருசியாவின் முதலாம் நிக்கலாசு உசாத்துணைகள்உருசியாவின் முதலாம் நிக்கலாசு வெளி இணைப்புகள்உருசியாவின் முதலாம் நிக்கலாசுஉருசியப் பேரரசுஉருசியம்பின்லாந்துபோலந்துயூலியின் நாட்காட்டி

🔥 Trending searches on Wiki தமிழ்:

அன்புமணி ராமதாஸ்மயக்க மருந்துதமிழ் நீதி நூல்கள்சிறுநீர்ப்பாதைத் தொற்றுதாய்ப்பாலூட்டல்பௌத்தம்விசாகம் (பஞ்சாங்கம்)கடல்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்ஸ்ரீலீலாஇராசாராம் மோகன் ராய்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிதமிழக மக்களவைத் தொகுதிகள்திருநெல்வேலிவேலு நாச்சியார்அருணகிரிநாதர்பட்டினத்தார் (புலவர்)சமரச சுத்த சன்மார்க்க சங்கம்திருவள்ளுவர்முதுமொழிக்காஞ்சி (நூல்)அளபெடைகவலை வேண்டாம்அய்யா வைகுண்டர்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்ஆனைக்கொய்யாஇயற்கை வளம்ஆண்டுவெ. இராமலிங்கம் பிள்ளைஆளி (செடி)இன்குலாப்ஔவையார் (சங்ககாலப் புலவர்)பெண்களுக்கு எதிரான வன்முறைகாடுவெட்டி குருபடையப்பாகல்லணைகுண்டூர் காரம்நீதி இலக்கியம்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்விண்ணைத்தாண்டி வருவாயாஅமலாக்க இயக்குனரகம்ஜோதிகாகருத்தரிப்புசிலம்பம்திருநங்கைஉயர் இரத்த அழுத்தம்பனிக்குட நீர்காம சூத்திரம்காச நோய்மதுரை வீரன்அறுவகைப் பெயர்ச்சொற்கள்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்ஆயுள் தண்டனைதெருக்கூத்துதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்திருமுருகாற்றுப்படைசிலப்பதிகாரம்பெண்கட்டுரைதமிழர்பதிற்றுப்பத்துபெயர்ச்சொல்எங்கேயும் காதல்செயற்கை நுண்ணறிவுசிதம்பரம் நடராசர் கோயில்பழனி முருகன் கோவில்கவிதைசச்சின் டெண்டுல்கர்திரிசாதமிழர் கட்டிடக்கலைஅக்கிதிரிகடுகம்முருகன்அகத்தியர்போயர்புனித யோசேப்புகுண்டலகேசிமுலாம் பழம்திருப்பூர் குமரன்🡆 More