ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா

விக்டோரியா (அலெக்சாண்ட்ரினா விக்டோரியா, Alexandrina Victoria, மே 24, 1819 – சனவரி 22, 1901) பெரிய பிரித்தானியாவும், அயர்லாந்தும் இணைந்த ஐக்கிய இராச்சியத்தின் அரசியாக 1837 ஆம் ஆண்டு சூன் 20 ஆம் நாள் முதலும், பிரித்தானிய இந்தியாவின் முதல் பேரரசியாக 1876 மே 1 ஆம் நாள் முதலும் இறக்கும் வரையில் இருந்தவர்.

இவரது ஆட்சிக்காலம் 63 ஆண்டுகளும் 7 மாதங்கள். இது இதுவரை பிரித்தானியாவை ஆண்ட எவரது ஆட்சிக் காலத்தையும் விடக் கூடியது ஆகும். இவரது ஆட்சிக் காலத்தை மையமாகக் கொண்ட ஒரு காலப்பகுதி விக்டோரியா காலப்பகுதி எனப்படுகிறது.

விக்டோரியா
ஐக்கிய இராச்சியத்தின் அரசியும், இந்தியாவின் பேரரசியும் (more...)
ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா
ஆட்சி 20 சூன் 1837 – 22 சனவரி 1901
(63 ஆண்டுகள், 216 நாட்கள்)
முடிசூடல் 28 சூன் 1838
முன்னிருந்தவர் வில்லியம் IV
பின்வந்தவர் எட்வார்ட் VII
உடனுறை துணை ஆல்பர்ட் (சாக்சே-கோபர்க்-கோத்தா)
பிள்ளைகள்
விக்டோரியா, ஜேர்மன் பேரரசி
எட்வார்ட் VII
அலிஸ், ஹேசேயின் கிராண்ட் டியூச்சஸ்
ஆல்பிரட், டியூக், சாக்சே-கோபர்க்-கோத்தா
ஹெலனா, இளவரசி கிறிஸ்டியன் ஷெல்ஸ்விக்-ஹொல்ஸ்டீன்
Louise, Duchess of Argyll
Arthur, Duke of Connaught
லியோபோல்ட், டியூக் அல்பனி
Beatrice, Princess Henry of Battenberg
முழுப்பெயர்
Alexandrina Victoria
பட்டங்கள்
HM The Queen
HRH Princess Alexandrina Victoria of Kent
வேந்திய மரபு House of Hanover
வேந்தியப் பண் பிரித்தானிய நாட்டுப்பண்
தந்தை Edward Augustus, Duke of Kent
தாய் விக்டோரியா (சக்சே-கோபர்க்-சால்பெல்ட்)
பிறப்பு (1819-05-24)24 மே 1819
கென்சிங்டன் மாளிகை, இலண்டன்
திருமுழுக்கு 24 சூன் 1819
கென்சிங்கன் மாளிகை, இலண்டன்
இறப்பு 22 சனவரி 1901(1901-01-22) (அகவை 81)
ஆஸ்போர்ன் மாளிகை, வைட்டுத் தீவு, ஐக்கிய இராச்சியம்
அடக்கம் 4 பெப்ரவரி 1901
புரொக்மோர், விண்ட்சர், பேர்க்ஷயர், ஐக்கிய இராச்சியம்


ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா
ராணி விக்டோரியா சிலை, பெங்களூர் தமிழ் கல்வெட்டு

விக்டோரியா ஆட்சிப் பொறுப்பு ஏற்ற காலத்திலேயே ஐக்கிய இராச்சியம் அரசியல்சட்ட முடியாட்சி ஆகிவிட்டது. இதில் அரசியோ அரசனோ மிகக் குறைந்த அரசியல் அதிகாரத்தையே கொண்டிருந்தனர். எனினும் விக்டோரியா ஒரு மிக முக்கியமான குறியீட்டு நபர் என்னும் நிலையில் மிகத் திறமையாகவே பணியாற்றி வந்தார். இவரது காலம் தொழிற் புரட்சியின் உயர்நிலையாகும். இது ஐக்கிய இராச்சியத்தில், சமூக, பொருளியல், தொழில்நுட்ப வளர்ச்சிகளை ஏற்படுத்தியது. இவருடைய காலத்திலேயே பிரித்தானியப் பேரரசு பெரிதும் விரிவடைந்து அதன் உச்ச நிலையை எட்டியதுடன், அக்காலத்தின் முன்னணி உலக வல்லரசு ஆகவும் திகழ்ந்தது.

இவர் முழுவதுமாக ஜெர்மானிய வழியினர். மூன்றாம் ஜார்ஜின் பேத்தியும், இவருக்கு முன் ஆட்சியில் இருந்த நான்காம் வில்லியத்தின் பெறாமகளும் ஆவார். இவர் தனது காலத்தில் தனது ஒன்பது பிள்ளைகளுக்கும், 42 பேரப் பிள்ளைகளுக்கும், ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் திருமணம் செய்து வைத்ததன் மூலம், ஐரோப்பாவை ஒன்றிணைத்தார். இது அவருக்கு, "ஐரோப்பாவின் பாட்டி" என்னும் பட்டப் பெயரை ஈட்டிக் கொடுத்தது. இவர் புனித ரோமன் பேரரசின், பேரரசியான மரியா தெரேசாவின் இரண்டு விட்ட சகோதரியும் ஆவார்.

பிரதமர் பட்டியல்

விக்டோரியா மாகாராணியின் ஆட்சி காலத்தில் பிரித்தானியாவில் பிரதமராக பணிபுரிந்தவர்கள் பதினோரு நபர்கள் ஆவர்.அவர்களின் ஆட்சிக்கால்மும் வருடமும்,

வருடம் பிரதமர்
1835 விஸ்கவுன்ட் மெல்பர்ன்
1841 சர் ராபர் பீல்
1846 லார்ட் ஜான் ரூசெல்
1852 ஏர்ல் ஆஃப் தெர்பாய்
1852 அபர்டீன்
1855 விஸ்கவுன்ட் பால்மெர்ஸ்டன்
1858 ஏர்ல் ஆஃப் தெர்பாய்
1859 விஸ்கவுன்ட் பால்மெர்ஸ்டன்
1865 ஏர்ல் ரஸ்ஸெல்
1866 ஏர்ல் ஆஃப் தெர்பாய்
1868 பெஞ்சமின் திஸ்ராலி
1868 வில்லியம் க்ளாடு ஸ்டோன்
1874 பெஞ்சமின் திஸ்ராலி
1880 வில்லியம் க்ளாடு ஸ்டோன்
1885 மார்கஸ் சேலிஸ்பரி
1886 வில்லியம் க்ளாடு ஸ்டோன்
1886 மார்கஸ் சேலிஸ்பரி
1892 வில்லியம் க்ளாடு ஸ்டோன்
1894 ஏர்ல் ஆஃப் ரோஸ்பெரி
1895 மார்கஸ் சேலிஸ்பரி

ஆட்சி

63 ஆண்டுகள், ஏழு மாதங்கள் இரண்டு நாட்களுக்கு விக்டோரியா மகாராணி பிரிட்டனையும் அதன் காலனிகளையும் ஆண்டார். உலகில் மிக அதிக நாள் ராணியாக இருந்த வரலாற்றையும் இவர் படைத்துள்ளார்.

இறப்பு

விக்டோரியா மகாராணி 22 சனவரி 1901 அன்று தனது 81 ஆவது அகவையில் ஓஸ்பர்ன் இல்லத்தில் இறந்து பிப்ரவரி 4, 1901 அன்று அவரின் இறுதி ஊர்வலம் நடந்தது.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா பிரதமர் பட்டியல்ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா ஆட்சிஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா இறப்புஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா மேற்கோள்கள்ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா வெளியிணைப்புகள்ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா1819183718761901சனவரி 22சூன் 20பிரித்தானிய இந்தியாபெரிய பிரித்தானிய மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்மே 1மே 24விக்டோரியா காலப்பகுதி

🔥 Trending searches on Wiki தமிழ்:

காதலுக்கு மரியாதை (திரைப்படம்)திராவிட மொழிக் குடும்பம்விண்டோசு எக்சு. பி.சாகித்திய அகாதமி விருதுகலாநிதி மாறன்இனியவை நாற்பதுகார்லசு புச்திமோன்நிலாகாரைக்கால் அம்மையார்பெயர்ச்சொல்வெ. இராமலிங்கம் பிள்ளைசெக் மொழிஉலகம் சுற்றும் வாலிபன்சீரகம்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்ஆண்டு வட்டம் அட்டவணைதஞ்சைப் பெருவுடையார் கோயில்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)வெ. இறையன்புசங்ககால மலர்கள்கார்த்திக் (தமிழ் நடிகர்)இந்திய தேசியக் கொடிமியா காலிஃபாவெள்ளியங்கிரி மலைதமிழ் இலக்கணம்வடலூர்நன்னன்தமிழ்நாடு அமைச்சரவைதமிழ் இலக்கியப் பட்டியல்கன்னத்தில் முத்தமிட்டால்தைப்பொங்கல்பறவைக் காய்ச்சல்புதிய ஏழு உலக அதிசயங்கள்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்அயோத்தி தாசர்தமிழிசை சௌந்தரராஜன்நெல்கண்ணகிபோக்கிரி (திரைப்படம்)திருக்குர்ஆன்நவதானியம்தமிழ் எண்கள்பஞ்சாயத்து ராஜ் சட்டம்நிதி ஆயோக்இராமாயணம்அறுபடைவீடுகள்நிணநீர்க்கணுபீப்பாய்தமிழர் அணிகலன்கள்அட்சய திருதியைசித்ரா பௌர்ணமிநாயன்மார் பட்டியல்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)மறைமலை அடிகள்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைபோதைப்பொருள்ரோகிணி (நட்சத்திரம்)நிணநீர்க் குழியம்ஏப்ரல் 25மொழிகிராம்புகள்ளழகர் கோயில், மதுரைஅரண்மனை (திரைப்படம்)பிரசாந்த்கலிங்கத்துப்பரணிஇந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்தேம்பாவணிவெட்சித் திணைபாலை (திணை)ஆசிரியர்குடும்பம்தெலுங்கு மொழிகுகேஷ்இந்திய ரிசர்வ் வங்கிஅரச மரம்சூர்யா (நடிகர்)சிந்துவெளி நாகரிகம்🡆 More