அரசியல்சட்ட முடியாட்சி

அரசியல்சட்ட முடியாட்சி அல்லது அரசியலமைப்புக்குட்பட்ட முடியாட்சி (Constitutional monarchy) அல்லது குறுகிய முடியாட்சி (limited monarchy) என்பது, ஒரு வகையான அரசியல் முறைமை.

இதில், எழுதப்பட்ட அல்லது எழுதப்படாத அரசியல்சட்டத்துக்கு அமைய அரசன் அல்லது அரசி நாட்டின் தலைவராக இருப்பார். இது முழுமையான முடியாட்சியில் இருந்தும் வேறு பட்டது. முழுமையான முடியாட்சியில் அரசன் அல்லது அரசியிடமே கட்டற்ற அரசியல் அதிகாரம் இருக்கும் என்பதுடன் அவர்கள் எந்த அரசியல் சட்டத்துக்கும் கட்டுப்பட்டவர்கள் அல்ல.

பெரும்பாலான அரசியல்சட்ட முடியாட்சிகள் நாடாளுமன்ற முறையைக் கைக்கொள்கின்றன. இம்முறையில், அரசர் ஒரு சடங்குமுறையான ஆட்சித் தலைவராக இருப்பார். நேரடியாக அல்லது மறைமுகமாக மக்களால் தெரிவு செய்யப்படும் ஒருவர் பிரதம அமைச்சராக இருப்பார். உண்மையான அரசியல் அதிகாரத்தை இவரே செயல் படுத்துவார். கடந்த காலங்களில், அரசர்கள் பாசிச இத்தாலி, பிராங்கோயிய எசுப்பெயின் போன்ற பாசிச, குறைப் பாசிச அரசியல் சட்டங்களுடனும், இராணுவ வல்லாண்மைகளுடனும் சேர்ந்து இயங்கியுள்ளனர்.

தற்காலத்தில் ஆசுத்திரேலியா, பெல்சியம், கம்போடியா, கனடா, டென்மார்க், சப்பான், லக்சம்பர்க், மலேசியா, நெதர்லாந்து, நார்வே, எசுப்பெயின், சுவீடன், தாய்லாந்து, ஐக்கிய இராச்சியம் என்பன அரசியல்சட்ட முடியாட்சி முறையைக் கைக்கொள்ளும் நாடுகள் ஆகும்.

மேற்கோள்கள்

Tags:

அரசன்அரசியல்சட்டம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ் தேசம் (திரைப்படம்)இம்மையிலும் நன்மை தருவார் கோயில்வீரப்பன்பறம்பு மலைதனிப்பாடல் திரட்டுமாத்திரை (தமிழ் இலக்கணம்)இல்லுமினாட்டிகிறிஸ்தவம்தமிழர் கப்பற்கலைமலைபடுகடாம்நரேந்திர மோதிஅப்துல் ரகுமான்வாணிதாசன்கிராம்புநல்லெண்ணெய்திருப்பூர் குமரன்விளம்பரம்நற்றிணைஆழ்வார்கள்சுற்றுலாமுருகன்நவரத்தினங்கள்வெள்ளியங்கிரி மலைபயில்வான் ரங்கநாதன்காற்றுகாந்தள்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்சங்கம் (முச்சங்கம்)முதலாம் உலகப் போர்பிரீதி (யோகம்)சாகித்திய அகாதமி விருதுபெருஞ்சீரகம்இந்தியப் பிரதமர்காளமேகம்ஜவகர்லால் நேருமருதமலைகட்டபொம்மன்அஜித் குமார்ஆப்பிள்சோமசுந்தரப் புலவர்கலிப்பாதிருவோணம் (பஞ்சாங்கம்)பாலின விகிதம்சேரர்கடலோரக் கவிதைகள்காரைக்கால் அம்மையார்சின்ன வீடுதேவகுலத்தார்யாழ்படையப்பாதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்பெண்வேற்றுமைத்தொகைவிராட் கோலிமே நாள்இலங்கைவைகைகேள்விசுடலை மாடன்தமிழ்நாட்டின் நகராட்சிகள்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்பகத் பாசில்சாத்துகுடிபெண்ணியம்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிசிற்பி பாலசுப்ரமணியம்குமரகுருபரர்ஜெயம் ரவிஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)திருவாசகம்ஜெயகாந்தன்வளைகாப்புபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்நீதிக் கட்சிதமிழர் தொழில்நுட்பம்மகாபாரதம்விசாகம் (பஞ்சாங்கம்)அவுரி (தாவரம்)🡆 More