மிளகாய்

See text

மிளகாய்
மிளகாய்
Red bell pepper fruit and longitudinal section
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
[Eudicots]
தரப்படுத்தப்படாத:
[Asterids]
வரிசை:
[Solanales]
குடும்பம்:
துணைக்குடும்பம்:
[Solanoideae]
சிற்றினம்:
[Capsiceae]
பேரினம்:
Capsicum

இனம் (உயிரியல்)

மிளகாய் (Capsicum) என்பது காய்கறிகளில் ஒன்றாகும். இது மொளகாய், முளகாய் எனப் பல்வேறாக அழைக்கப்படுகிறது. பச்சை மிளகாய், மிளகாய் இனத்தைச் சேர்ந்தது. இது சோலன்கே (Solanaceae) குடும்பத்தைச் சேர்ந்த தாவரம் ஆகும். இவ்வகையான மிளகாய் காரத்தை அதிகரிக்க உணவிலும் மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இவை 6000 வருடங்களுக்கு முன்பே உணவில் பயன்படுத்தப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பச்சை மிளகாயின் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் இந்தியாவின் பங்கு முக்கியமானது.

கார அளவுகள்

உலகெங்கிலும் மிளகாய்களை வகைப்படுத்த சுகோவில் அளவு (Scoville Units) எனப்படும் முறையே பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது.

இனிப்பு மிளகாய்

இனிப்பு வகை மிளகாய்களின் காரத் தன்மை 0 முதல் 1000 சுகோவில் அளவு வரை இருக்கும். குடை மிளகாய், பிமென்டோ, இனிப்பு பனானா, மெக்ஸி குடை மிளகாய் மற்றும் செர்ரி மிளகாய் ஆகியவை இனிப்பு வகையை சார்ந்தவை.

மிதமான கார மிளகாய்

மிதமான கார வகை மிளகாய்களின் காரத் தன்மை 1000 முதல் 3000 சுகோவில் அளவு வரை இருக்கும். ஆன்சோ, பசில்லா, எஸ்பனோலா, சண்டியா மற்றும் கஸ்காபெல் ஆகியவை மிதமான கார வகையை சார்ந்தவை.

இடைப்பட்ட கார மிளகாய்

இடைப்பட்ட கார வகை மிளகாய்களின் காரத் தன்மை 3000 முதல் 6000 சுகோவில் அளவு வரை இருக்கும். அலபீனோ மற்றும் மியாசால் ஆகியவை இடைப்பட்ட கார வகையைச் சார்ந்தவை.

கார மிளகாய்

கார வகை மிளகாய்களின் காரத் தன்மை 5000 முதல் 100,000 சுகோவில் அளவு வரை இருக்கும். செர்ரானோ, கயேன், டபாஸ்கோ, பிக்வின் மற்றும் தாய்லாந்து மிளகாய் ஆகியவை கார வகையைச் சார்ந்தவை.

அதீத கார மிளகாய்

அதீத கார வகை மிளகாய்களின் காரத் தன்மை 80,000 முதல் 300,000 சுகோவில் அளவு வரை இருக்கும். ஆபெர்னரோ மற்றும் ஸ்காட்ச் பானெட்டு ஆகியவை அதீத கார வகையை சார்ந்தவை.

ஊட்டச்சத்து விவரம்

Peppers, hot chili, red, raw
உணவாற்றல்166 கிசூ (40 கலோரி)
8.8 g
சீனி5.3 g
நார்ப்பொருள்1.5 g
0.4 g
1.9 g
உயிர்ச்சத்துகள்அளவு
%திதே
உயிர்ச்சத்து ஏ
(6%)
48 மைகி
(5%)
534 மைகி
உயிர்ச்சத்து பி6
(39%)
0.51 மிகி
உயிர்ச்சத்து சி
(173%)
144 மிகி
கனிமங்கள்அளவு
%திதே
இரும்பு
(8%)
1 மிகி
மக்னீசியம்
(6%)
23 மிகி
பொட்டாசியம்
(7%)
322 மிகி
நீர்88 g
Capsaicin0.01g – 6 g
சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன
Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம்

சிகப்பு நிறத்தில் இருக்கும் மிளகாயில் வைட்டமின் சியும் சிறிய அளவிளான கரோடீன் (carotene – provitamin A) பொருளும் உள்ளது. மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில் உள்ள மிளகாயில் இரண்டுமே குறைந்த அளவில் உள்ளது.

படத்தொகுப்பு

பல வேறுபட்ட மிளகாய் வகைகள் உள்ளன. மிளகாய்த் தாவரத்தின் காய்களே பயன்படுபவை. அந்தக் காய்கள் நீளமானவை, குறிகியவை, அகன்றவை, ஒடுங்கியவை, வட்டமனவை என பல்வேறு வடிவங்களில் இருப்பதுடன், காரத் தன்மையிலும் வேறுபடுகின்றன.

வகைகள்

  • குடை மிளகாய்
  • பிமென்டோ மிளகாய்
  • ரெல்லானோ மிளகாய்
  • இனிப்பு பனானா மிளகாய்
  • பொப்பிலானோ/ஆன்சோ மிளகாய்
  • பெர்முடா கார மிளகாய்
  • ஆர்டேகா மிளகாய்
  • பப்பிரிகா மிளகாய்
  • கார பனானா மிளகாய்
  • ரோகோடில்லோ மிளகாய்
  • அலபீனோ மிளகாய்
  • கயன் மிளகாய்
  • டபாஸ்கோ மிளகாய்
  • செர்ரானோ மிளகாய்
  • சில்டிபின் மிளகாய்
  • ஆபெர்னரோ மிளகாய்
  • ரொகோடோ மிளகாய்
  • தாய்லாந்து மிளகாய்

இந்திய வகைகள்

  • சன்னம் மிளகாய்
  • LC 334 மிளகாய்
  • படகி மிளகாய்
  • அதிசய கார மிளகாய்
  • ஜுவலா மிளகாய்

குறிப்புகளும் மேற்கோள்களும்

வெளி இணைப்புகள்

மிளகாய் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
மிளகாய்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

மிளகாய் கார அளவுகள்மிளகாய் ஊட்டச்சத்து விவரம்மிளகாய் படத்தொகுப்புமிளகாய் வகைகள்மிளகாய் இந்திய வகைகள்மிளகாய் குறிப்புகளும் மேற்கோள்களும்மிளகாய் வெளி இணைப்புகள்மிளகாய்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆற்றுப்படைஜன கண மனநவரத்தினங்கள்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்கர்மாதமிழ்நாடு காவல்துறைபாரத ரத்னாதமிழ்ப் புத்தாண்டுஅண்ணாமலையார் கோயில்சரண்யா துராடி சுந்தர்ராஜ்அமெரிக்க ஐக்கிய நாடுகள்பண்பாடுதற்கொலை முறைகள்கோத்திரம்பிரெஞ்சுப் புரட்சிரயத்துவாரி நிலவரி முறைமரகத நாணயம் (திரைப்படம்)நெல்லிஉருசியாதமிழ் மன்னர்களின் பட்டியல்பதினெண்மேற்கணக்குசஞ்சு சாம்சன்போக்குவரத்துபெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவுஆறுமுக நாவலர்ஐ.எசு.ஓ 3166-1 ஆல்ஃபா-2மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்தொல்காப்பியம்தமிழச்சி தங்கப்பாண்டியன்கிராம நத்தம் (நிலம்)சோழர்வாட்சப்மாதேசுவரன் மலைஅனுமன்செஞ்சிக் கோட்டைஅகத்தியமலைதிருநெல்வேலிபச்சைக்கிளி முத்துச்சரம்ரஜினி முருகன்சப்தகன்னியர்தமிழர் நிலத்திணைகள்விழுப்புரம் மக்களவைத் தொகுதிஅம்பேத்கர்பசுபதி பாண்டியன்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்நான் அவனில்லை (2007 திரைப்படம்)வேற்றுமையுருபுவிஜய் (நடிகர்)போதி தருமன்கீர்த்தி சுரேஷ்தமிழர் அளவை முறைகள்சூரியக் குடும்பம்உவமையணிகல்லணைஅரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)மொழிபெயர்ப்புகண்ணப்ப நாயனார்கள்ளுதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்உரிச்சொல்தமிழ்நாடு அமைச்சரவைஇந்தியாஉன்னாலே உன்னாலேதென்காசி மக்களவைத் தொகுதிதமிழ் இலக்கணம்ஹஜ்மதுரைசத்குருகரணம்மதராசபட்டினம் (திரைப்படம்)கொன்றை வேந்தன்எங்கேயும் காதல்சு. வெங்கடேசன்இரட்டைக்கிளவிஇரசினிகாந்துடாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்இயேசுவின் சாவுகண்டம்🡆 More